நான் பார்த்த சென்னை (காட்சி 5)
தியாகராய நகர் அல்லது தி.நகர் என்பது சென்னையின் மிக முக்கியமான மற்றும் பெரிய பகுதி. இது ஒரு முக்கியமான வணிகப்பகுதி. நகரின் மையத்தில் அமைந்துள்ளது. திராவிட இயக்கத்தவரில் முக்கியமானவரும் நீதிக்கட்சியைத் ஆரம்பித்தவர்களில் ஒருவருமான சர் பி.தியாகராயாவின் நினைவாக இப்பெயர் இடப்பட்டதாக அங்குள்ளவர்கள் கூறினார்கள்.
பாண்டி பஜாரும், உஸ்மான் சாலையும், ரங்கநாதன் தெருவும் தான் தி.நகரின் மிக முக்கியமான வணிகமையங்கள். ஆடைகள், அணிவகைகள், விளையாட்டுப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் இங்கு மிகக்குறைந்த விலையில் கிடைக்கும். இப்பகுதியில், பல்வேறுவகைச் சேலைகள் உட்பட்ட ஆடைகள், தங்க, வைர நகைகள் முதலியவற்றுக்கான, பல மாடிகளைக் கொண்ட மிகப் பெரிய விற்பனை நிலையங்களுடன், நடைபாதைக் கடைகளும் போட்டி போட்டுக்கொண்டு செயற்படுவதைக் காணலாம். விடுமுறை நாட்களிலும், பொங்கல் போன்ற திருவிழாக் காலங்களிலும் இந்தப்பகுதியில் கூட்டம் நிரம்பி வழியும்.
திருமணம் முதலியவற்றுக்காக ஆடை அணிகள் வாங்குவதற்காகப் பலர் தொலை தூரங்களிலிருந்தும் இப் பகுதிக்கு வருகிறார்கள். இதனால் பல தங்கு விடுதிகளும், உணவு விடுதிகளும் இங்கே பெருமளவில் உள்ளன.தியாகராஜ நகரில் பல புத்தக வெளியீட்டு நிறுவனங்களும் உள்ளன.சரி, தி.நகர் பற்றிய அறிமுகத்தை தந்து விட்டேன்.சரி,நான் ஏன் தி.நகருக்கு வந்திருக்கிறேன் என்று கூறவில்லையே.ஓம்…ஓம்..நீங்கள் அனுமானிப்பது சரி.ஆடைகளை கொள்வனவு செய்யத் தான் வந்திருக்கின்றேன்.வளசரவாக்கத்தில் இருந்து அண்ணா பிரதான வீதி(சாலை) ஊடாக தி.நகரை 26 நிமிடத்தில் அடைய முடியும்.தூரம் 9.3 km.
எங்கே நல்ல துணி வகைகள் வாங்கலாம் என்று கேட்டால் தி.நகர் என்று சின்னப் பிள்ளையும் கையைக் காட்டிச் சொல்லுகின்றது.தி.நகர் சென்னையின் இதயம்.இந்தியாவின் மிகப் பிரபல்யம் வாய்ந்த ஆடையகங்கள் இங்கு தான் உள்ளது.போத்தீஸ் ,தி சென்னை சில்க்ஸ்,சரவணா ஸ்டோர்ஸ் போன்றவை அவற்றுள் சில.எல்லா ஆடையகங்களையும் ஒரு பார்வை பார்த்தேன்.நான் இப்பொழுது போத்தீஸ்க்கு முன்னால் நிற்கின்றேன்.இலங்கையில் HOUSE OF FASHIONS எவ்வாறு பிரமாண்டமானதோ அவ்வாறு தான் போத்தீஸ் உள்ளது.என்னடா முகப்பையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்,உள்ள போவன் என்று நீங்கள் சொல்லுவது எனக்கு கேட்கின்றது.
இவ்வளவு சனத்துக்கு நடுவில போறது பயங்கர கஷ்டமா இருக்கு.என்னடா கரைச்சலா போச்சு.இடமும் தெரியாது வலமும் தெரியாது.யாரிட்ட கேட்கலாம்.ம்..நேரா முகாமையாளரிடமே கேட்கலாம்.
வணக்கம் ஐயா!நான் இலங்கையில் இருந்து வந்திருக்கிறேன்.சில துணிவகைகள் கொள்வனவு செய்ய வேண்டும்.உதவி செய்வீர்களா.
முகாமையாளர்:இதோ,இப்ப கூப்பிடுறன் உதவியாளரை. முருகேசு..முருகேசு..
முருகேசு அரக்கப் பரக்க ஓடியாரார்.
இந்தா.இவர் நம்மட விருந்தாளி.இவருக்கு என்ன வேணுமோ எல்லாத்தையும் எடுத்துக் கொடு.
புடைவை, புடவை, அல்லது சேலை (அ) “‘சீலை'” (sari) என்பது, தெற்காசியப் பெண்கள் உடுத்தும் மரபுவழி ஆடையாகும்.
தமிழில் சேலை அல்லது புடவை என்றும், ஹிந்தி, குஜராத்தி, மராட்டி ஆகிய மொழிகளில் சாடி என்றும், கன்னடத்திலும், தெலுங்கிலும் முறையே சீரே, சீரா என்றும் அழைக்கப்படுகின்றது.
பொதுவாக இதன் நீளம் 4 – 5 யார் வரை இருக்கும். சில புடவைகள் 9 யார்கள் வரை இருப்பதுண்டு. பல நிறங்களிலும், பலவகையான வடிவுருக்களைத் தாங்கியும் வரும் புடவைகள், செவ்வக வடிவம் கொண்ட தைக்கப்படாத உடையாகும்.மடிப்புகளுடன் உடலை சுற்றியவாறு கிரேக்க பாணியில் உடுதபடுகிறது.பருத்தி நூல், பட்டு நூல், மற்றும் பலவிதமான செயற்கை இழைகளையும் கொண்டு நெய்யப்படுகின்ற புடவைகள், தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களின் மெல்லிய இழைகளைப் பயன்படுத்தி அழகூட்டப்படுவதுண்டு.
கீழே உள்ள தளத்தில் மிகவும் மலிவாக புடவைகளை வெறும் 100 ரூபாவில் பெற முடிகின்றது.ஆனால் வேறு தளங்களில் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது.மிகத் தரமான வேலைப் பாடுகள் அதில் இருப்பது தெரிகின்றது.தேவையான ஆடைகளை கொள்வனவு செய்து கொண்டிருக்கின்றேன்.
சிறிது நேரத்தில் முருகேசு எனக்கு சீனிப் பொங்கலும்,தேநீரும் கொண்டு வந்து தருகின்றார்.நன்றி முருகேசு.கிட்டத்தட்ட 120 பேர் பணி புரிவதாக சொன்னார்.சம்பளம் 8000 ரூபா என்றும் சொன்னார்.உண்மைத் தகவல் சரியாகத் தெரியவில்லை.அவர் சொன்னதை நான் சொல்லுகிறேன்.இலங்கைத் தமிழ் மக்களை விசாரித்தார்.அதற்கும் நன்றி முருகேசு.
Pothys
No 15, Nageswara Rao Road, Opp. Doraiswami Subway, T Nagar, Chennai, Tamil Nadu 600017, India
சென்னை வரும் எல்லோரும் ஒருமுறை செல்ல வேண்டிய ஆடையகம் போத்தீஸ்.
நான் பார்த்த சென்னை (காட்சி 6) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.
கடலலைகள் மாதிரி ஜனக்கூட்டத்தைப்பார்த்தாலே எந்த இடம் என்றுத் தெரிந்து விடுகிறது. . போத்தீஸில் விலைகூட நல்ல முறையில் என்று சொல்வார்கள். படிக்க ,பார்க்க,வாங்க என்ற உங்களின் கட்டுரையும் புதியவர்களுக்கு உதவும். புடவைகளின் ஸெக்க்ஷன். பர்ஸ் காலியாக வேண்டுமா. விதவித விதமான புடவை ஸெக்ஷனுக்குப் போய் வாருங்கள்.
அன்புடன்
LikeLiked by 1 person
மிகத் தரமான புடவைகள் போத்தீஸில் கிடைக்கின்றன.விலை தான் மிக அதிகம்.உங்கள் கருத்துக்கு நன்றி அம்மா.அன்புடன்….
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி சொல்லுகிறேன்.
LikeLike
உங்கள் பார்வையில் எங்களுடைய சென்னை பற்றி படிக்க ரொம்பவே ஆர்வமூட்டுவதாக இருக்கிறது பிரபு சார்! அடுத்த பதிவை ஆர்வமுடன் எதிர் பார்க்கிறேன் 🙂
LikeLiked by 1 person
அப்படியா மஹா மேடம்!அடுத்த பதிவை நாளை வெளியிடுவேன்.உங்களுடைய ஊக்கம் தரும் கருத்திற்கு நன்றி.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி மஹா மேடம்.
LikeLiked by 1 person
சென்னை வரும் எல்லோரும் ஒருமுறை செல்ல வேண்டிய
LikeLiked by 1 person
நன்றி சகோதரி.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி கோவை கவி.
LikeLike