இல்லம் > ALL POSTS, சென்னை > நான் பார்த்த சென்னை (காட்சி 6)

நான் பார்த்த சென்னை (காட்சி 6)


police
சென்னையில் என்னை மிகவும் கவர்ந்த விடயம் அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் சுதந்திரம்.நான் சென்னையின் பல இடங்களையும் சுற்றிப் பார்த்திருக்கிறேன். எங்கும் நான் ராணுவத்தை காணவேயில்லை.ஆங்காங்கே போக்குவரத்து காவல்துறையினரை மட்டுமே கண்டேன்.மிகவும் சுதந்திரமாக கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பத்திரிகைகள் மிகவும் சுதந்திரமாக செயற்படுகின்றன.மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப் படுகின்றது.ஒரு மனிதனின் தேவைகளில் உணவு,உடை, உறையுள்,சுதந்திரம் என்பன மிக முக்கியமானவை. சென்னைக்கு வரும் எந்த யாழ்ப்பாணத் தமிழனும் அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கின்ற சுதந்திரத்தை இட்டு ஏக்கப் பெருமூச்சு விடவே செய்வான்.
chennai
ஆனால் பெண்கள் இங்கே சுதந்திரமாக இருக்கின்றார்கள் என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன்.நான் விருகம்பாக்கத்தில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றேன்.அங்கே பல சிறு வயதுடைய பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.அன்று ஞாயிற்றுக் கிழமை வேறு.
இரண்டு பெண்களுக்கு இடையில் இவ்வாறு உரையாடல் நடை பெறுகின்றது.

பெண்:அம்மாவுக்கு காய்ச்சல்.ஒருக்கா கதைக்க வேண்டும்.
பெண் :துரையிட்ட கேள்.
(அலைபேசி கூட இல்லாத ஏழைப் பெண்கள் இவர்கள்)
பெண்:அம்மா வேலை செய்யிற இடத்திற்கு ஒருக்கா பேசணும்(கதைக்கனும்)
முதலாளி:பொய் வேலையைப் பாரு.
பெண்:அம்மா காய்ச்சலிலும் வேலைக்குப் போயிருக்கு.ஒரு நிமிடம் பேசணும்.
முதலாளி;இந்தா பேசு.(அந்தப் பெண்ணின் கன்னத்தை முதலாளி கிள்ளுகிறார்.அந்தப் பெண் கதைத்துக் கொண்டு இருக்கும் போது கன்னத்தை எந்த வித தயக்கமும் இன்றி தடவுகிறார்.அந்தப் பெண் கையறு நிலையில் இருக்கிறார்.)

படபடப்புடன் கதைத்த(பேசிய) அந்தப் பெண் அலைபேசியை கொடுக்கிறார்.

ஏழைப் பெண்களின் நிலை இது தான்.இவ்வாறு எத்தனை பெண்களுக்கு நடக்கின்றதுவோ?! கடவுளுக்குத் தான் வெளிச்சம்.
police
இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள், நீங்கள் என்ன பூவா பறித்துக் கொண்டிருந்தீர்கள் என்று என்னைப் பார்த்து கேட்கலாம்.நான் கடுமையாக கோபம் அடைந்தேன். காவல்துறையிடம் முறையிடலாமா என்று எனது உறவினரிடம் கேட்டேன்.அந்தப் பெண் தனது வேலையை காப்பாற்றுவதற்காக, காவல்துறையிடம் அவ்வாறு நடக்க வில்லை என்று சொன்னால் என்ன செய்வாய் என்று கேட்டார்.அமைதியானேன்.
MTC-Bus-plying-in-Tambaram-to-Thiruvanmiyur-route-
பேரூந்துகளிலும் பெண்களின் நிலை அதோ கதி தான்.பெண்களிடம் தங்கள் கோழைத்தனத்தை காட்ட பலர் பேரூந்துகளையே பயன்படுத்துகிறார்கள்.அதுவும் இரவில் சென்னையில் பயணம் செய்வது என்றால் மிகவும் கடினம்.இரவில் மிக அதிகமான பயணிகள் பேரூந்துகளில் பயணிப்பதால் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.பேரூந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு உள்ள ஒரே ஆறுதல், இருக்கையில் ஒரு பெண்ணுக்கு அருகில் இருக்கை இருந்தாலும் ஒரு ஆண் அமர முடியாது என்பது தான்.
pleasure
ஒரு பெண் உந்துருளியில் சென்றால் அந்த பெண்ணை பின் தொடர்ந்து நான்கு உந்துருளிகளில் ஆண்கள் செல்கிறார்கள்.செல்வது மட்டுமில்லை கிண்டல் ,கேலி வேற.ஏன் ஒரு பெண் உந்துருளி ஓடக் கூடாதா.உண்மையை சொல்லப் போனால், உந்துருளியை பாதுகாப்பாக ஓட்டுபவர்கள் பெண்கள் என்று தான் சொல்ல வேண்டும்.


நான் பார்த்த சென்னை (காட்சி 7) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, சென்னை குறிச்சொற்கள்:
 1. chollukireen
  6:36 பிப இல் 2015/03/10

  எல்லாம் ஸரிதான் கடைசியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்று எழுதுகிறீர்களே. ஒருகுடம்பால் ஒரு துளி விஷம் கலக்கிறது. இதுஸரியில்லை. அதுவும் ஒழுங்காக வேண்டும். நான் சென்னை வந்துள்ளேன்.. யாருக்குப் பாதுகாப்பு வேண்டுமோ அவர்களுக்குக் கொடுத்தால்தாந் பூரண அழகு பெறும். அன்புடன்

  Liked by 1 person

 2. 12:24 பிப இல் 2015/03/11

  உண்மைதான் அம்மா.உங்கள் ஆதங்கம் எனக்கு நன்றாகவே விளங்குகின்றது. என்ன செய்வது?!பெண்களுக்குக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கின்றது.கடுமையான தண்டனைகள் மூலம் தான் இவ்வாறான அக்கிரமங்களை இல்லாது ஒழிக்க வேண்டும்.

  மரண தண்டனை வேண்டாம் என்று குரல் கொடுப்பவர்கள், தங்கள் வீட்டு பெண்ணுக்கு இவ்வாறு நடந்தால் மரண தண்டனை வேண்டாம் என்று சொல்லுவார்களா?!

  உங்கள் வருகைக்கும்
  கருத்துக்கும்
  நன்றி சொல்லுகிறேன்.

  Like

 3. 12:00 பிப இல் 2015/03/22

  உண்மை தான் பிரபு! நீ குறிப்பிட்டுள்ள அனைத்து கொடுமைகளும் பெண்களுக்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது! பெண்கள் தைரியமாக வளர்க்கப்பட வேண்டும்! நீ அடுத்த தடவை இந்தியா வந்தால் , குஜராத் என்ற பெயரில் ஒரு மாநிலம் உண்டு! அதை கண்டிப்பாக சுற்றி பார் ! பெண்கள் அங்கே மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுவர்! மேலும் eve teasing என்பது அறவே கிடையாது! தைரியமாக அந்நிய ஆண் அருகில் , பேருந்துகளில் அமரலாம்! நான் ரொம்பவே வியக்கும் மாநிலம் அது! சென்னையில் எல்லாம் இதை எதிர் பார்க்கவே முடியாது 😦

  Liked by 1 person

  • 8:34 பிப இல் 2015/03/22

   நிச்சயமாக குஜராத் மாநிலம் செல்வேன்.குஜராத் மாநிலம் பற்றி அறியாதவர்கள் ஆசியாவில் இருப்பார்களா என்பது சந்தேகமே!திரு.மோடி பிறந்து கோலோச்சிய மாநிலம் அல்லவா!
   அங்கு பெண்களுக்கு பாதுகாப்பு உண்டு என்பதை நீங்கள் சொல்லித்தான் அறிகின்றேன்.நான் ஆவணி மாதம் மீண்டும் இந்தியா செல்கின்றேன். காரணம்,தாஜ்மஹால் என்ற அதிசயத்தை பார்ப்பதற்காக நண்பர்களுடன் போகின்றேன்.கண்டிப்பாக குஜராத் மாநிலம் செல்வது என்று முடிவே பண்ணி விட்டேன்.

   நன்றி மஹா மேடம்.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி மஹா மேடம்.

   Like

 4. 4:55 பிப இல் 2015/06/09

  பெண்களின் நிலை பற்றி வாசித்தேன்.
  கவலை தான:.
  வேதா. இலங்காதிலகம்.

  Liked by 1 person

  • 12:36 பிப இல் 2015/06/10

   பெண்களுக்கு விடிவு காலம் எப்போது என்று தெரியவில்லை. அண்மையில் வித்தியாவிற்கு நடந்த கொடுமையைப் பார்த்தோம்.எதிர்ப்பைக் காட்டினோம். சிறிது காலத்தில் எல்லோரும் அதை மறந்தாலும் மறந்து விடுவார்கள்.பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை ஒன்றே நிரந்தரத் தீர்வு.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி கோவை கவி.

   Like

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: