டிரான்ஸ்பார்மர் வெடிப்பது எதனாலே??
மிகச் சிறப்பான பதிவுகள் அனைவரையும் சென்றடைய வேண்டியது அவசியமாகும். என்னாலான சிறிய பங்களிப்பு.
இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்
டிரான்ஸ்பார்மர் யாவரும் அறிவர்! ஆங்காங்கே சாலைகளில் தென்படும் ஒரு பெரிய சாதனம்! இது ஏன் எப்போதாவது வெடிகுண்டு போல் வெடிக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னே, அதை எதற்காக உபயோகம் செய்கிறார்கள் , அது என்ன வேலை செய்கிறது என்பதனை ஒரு எட்டு எட்டி பார்த்து விட்டு வந்து விடுவோம்!
டிரான்ஸ்பார்மரை தமிழில் அழகாக மின்மாற்றி என்று அழைப்பர்! ஆம், அதன் பெயருக்கு தகுந்தாற் போல் , மின்சாரத்தை மாற்றி கொடுக்கின்றது! அவ்வாறு மின்சாரத்தை மாற்றி கொடுப்பதன் அவசியம் தான் என்ன என்ற சந்தேகம் தோன்றுகிறது அல்லவா?? அந்த சந்தேகத்தை முதலில் நிவர்த்தி செய்து விடுவோம்!
மின்சார வாரியம் , மின்சாரத்தை உற்பத்தி செய்து , அதை தனது வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்வதற்கு ,அதை உற்பத்தி ஆகும் இடத்திலிருந்து( வெகு தூரத்தில் இருந்து ) மின் கம்பிகளின் வழியே அனுப்ப வேண்டும்! அவ்வாறு மின்சாரத்தை மின் கம்பிகளின் வழியே அனுப்பும் போது, நம் வீடுகளுக்கு வழங்கப்படும் 230 வோல்ட் மின் அழுத்தத்தில் , மின்சாரத்தை அனுப்பினால் , மின்சக்தி விரயம்(Energy loss)ஏற்படும்!
அத்தகைய மின்சக்தி விரயத்தை தடுப்பதற்காக , மின்வாரியம் ,உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தை , உயர் மின்அழுத்தத்தில் , அதாவது பல ஆயிரம் வோல்ட் உயர் மின் அழுத்தத்தில்(High Voltage) , மின் கம்பிகளின் வழியே அனுப்புகின்றது! இவ்வாறு , உயர் மின் அழுத்தத்தில், அனுப்பப்படுகின்ற மின்சாரத்தை , அப்படியே நம்…
View original post 687 more words
அண்மைய பின்னூட்டங்கள்