இல்லம் > ALL POSTS, சென்னை > நான் பார்த்த சென்னை (காட்சி 8)

நான் பார்த்த சென்னை (காட்சி 8)


சென்னையில் நான் பார்த்த,கேட்ட ,அறிந்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.சென்னை பல விடயங்களை தன்னுள் புதைத்து வைத்துள்ளதை அங்கு சென்று அறிந்தால் மட்டுமே விளங்கிக் கொள்ளலாம்.சென்னையில் நான் பலருடன் உரையாடியிருக்கின்றேன்.அவை உண்மையானவையாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.நான் அறிந்த,தெரிந்த சில விடயங்களைக் கூறுகின்றேன்.

முதலில் சென்னையை பார்ப்பவர்கள் தமிழர்களின் தலைநகரம் என்று கருதுவார்கள்.ஆனால் உண்மையில் தமிழர்கள் 50 விழுக்காடுக்கும் குறைவாகவே சென்னையில் வாழ்கிறார்கள். மலையாளிகள்,தெலுங்கர்கள் போன்ற வேற்று இனத்தவர்களே மிகுதி 50 விழுக்காட்டையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.கன்னட இனத்தவர்கள் மிகக் குறைவாக வாழ்கின்றார்கள்.வெளி மாநில தொழிலாளர்கள் மிக அதிகமாகவே தொழில் புரிகின்றனர்.

Chennai

சென்னையில் பெண்கள் பெரும்பாலும் வீடுகளிலும் சேலைதான் அணிகின்றனர். ஆனால்,யாழ்ப்பாணத்தில் வெளியில் செல்வதென்றால் மட்டுமே சேலை அணிவார்கள். பெண்களும் சரி,ஆண்களும் சரி உந்துருளியில் செல்லும் போது தலைக்கவசம் அணிவதே இல்லை. பதிலாக,வெளிப்புற தூசு,வாகனப் புகையில் இருந்து பாதுகாப்பதற்காக பெண்கள் ஒருவித கைக்குட்டை வடிவிலான துணியை தலையைச் சுற்றி அணிகிறார்கள்.

Chennai

பொதுவாக சென்னை ஆண்கள் திருமணம் தொடர்பாக இருவேறு மனநிலையில் இருக்கின்றனர்.ஒருசாரார் சென்னைக்கு வெளியே பெண் எடுப்பதை விரும்புகின்றனர். நவீன சென்னை பெண்களின் ஆண் ஆதிக்கத்தை எதிர்க்கும் அல்லது சமஉரிமை கோரும் பண்புகள் இவர்களுக்கு சலனத்தை அல்லது சினத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

இன்னொரு சாரார் சென்னை பெண்களை விரும்புகின்றனர்.சென்னைக்கு வெளியே பெண் எடுத்தால் அவருக்கு சமையல் மட்டுமே தெரியும்,வெளி உலகம் தெரியாது, வெளி உலகம் தெரியாத பெண்ணுக்கு சென்னையில் மதிப்பு கிடையாது,பிள்ளைகளை வளர்ப்பது சிரமம் போன்ற பல காரணங்கள் இதில் காணப்படுகின்றன.

Chennai

சென்னையில் வெயில் மிக அதிகம்.சென்னைக்கு வந்த எவரும் கதைக்கும் முதல் விடயம்,”என்ன வெயில் இப்படிக் கொளுத்துதே”.ஆனால் மழை அதைவிட மோசம் என்று சென்னை வாசிகள் கூறுகின்றனர்.மழை வந்தால் சென்னை நரகமாக காட்சியளிக்கும் என்கிறார்கள் அனுபவித்த பலர். பாம்புகளும் கூடவே வருமாம்.

Chennai

சென்னையில் நாய்த் தொல்லையும் அதிகம்.என்னுடன் வந்த உறவினர் கடி வாங்கியது தனிக் கதை. அதிகமான கட்டாக் காலி நாய்கள் திரிகின்றன.இரவில் சிறிய ஒழுங்கைகளில் நடமாடுவதென்றால் நான்கு பேரை கூடிச் செல்ல வேண்டும்.இல்லாவிட்டால் நாயிடம் கண்டிப்பாக கடி வாங்க வேண்டி வரும்.

Chennai

காய்கறி,பழங்கள் தவிர சென்னையில் பொருட்களின் விலை மிக அதிகம். தொழிலாளர்களுக்கான ஊதியமும் இங்கு குறைவு.தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்பவர்கள் கை நிறைய சம்பாதிக்கிறார்கள்.

Chennai

==============================================================================================================================

நான் பார்த்த சென்னை (காட்சி 9) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, சென்னை குறிச்சொற்கள்:
  1. chollukireen
    4:20 பிப இல் 2015/04/20

    vநீங்கள் பார்த்த கேட்ட சென்னைக் காட்சிகள் அசலான செய்தி. அதுவும் தற்கால படித்த பெண்களின் மனப்போக்கும் உண்மைதான் நானும் இவைகளையெல்லாம் கேள்விப்பட்டேன். படித்த பெண்களை விவாகம் செய்து கொடுக்கும்போது வரதக்ஷிணை என்று கையில் பணம் கொடுக்கும்
    வழக்கம் மிகவும் குறைந்துள்ளது. பெண் கிடைப்பது தான் கஷ்டம் என்கிரார்கள்.
    ஒழுங்கைகள் என்றால் குறுகிய சந்துகளா? பாவாடை தாவணி இல்லை..
    ஸல்வார் கம்மீஸ்தான் இளைஞிகளின் ட்ரஸ். நல்ல ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளீர்கள். மிகவும் பிடித்திருந்தது. சென்னையினின்றும் ஒரு வாரத்திற்கு முன்புதான் வந்தேன், அன்புடன்

    Liked by 1 person

    • 6:16 பிப இல் 2015/04/22

      “ஒழுங்கைகள் என்றால் குறுகிய சந்துகளா? ”

      ஓம் என்று சொல்லுகிறேன்.

      “மிகவும் பிடித்திருந்தது.”

      மிகவும் மகிழ்ச்சி அம்மா.

      “சென்னையினின்றும் ஒரு வாரத்திற்கு முன்புதான் வந்தேன்”

      அப்படியா…இறைவன் அருள் உங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்.

      அன்புடன் பிரபு.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி சொல்லுகிறேன்.

      Like

  2. அறிவு
    7:52 பிப இல் 2015/04/21

    நல்லா எழுதுறீங்க சகோ.உங்கள் தமிழ்ப் பற்று வியக்க வைக்கின்றது.
    வாழ்த்துக்கள்.

    Liked by 1 person

    • 6:18 பிப இல் 2015/04/22

      மிக்க மகிழ்ச்சி சகோ.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி அறிவு.

      Like

  3. 11:45 முப இல் 2015/04/24

    பிரபு.. சென்னையை நான் விரும்பியதே இல்லை! நான் தமிழ்நாட்டு கிராமத்தில் பிறந்தவள்! சென்னையில் எல்லா வசதிகளும் நிறைந்து வழிந்தாலும் , என்னை எந்த விதத்திலும் அது ஈர்த்ததே இல்லை! உங்களின் இந்த தொடரை படித்து தான் சென்னையை ஓரளவு தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன் 🙂

    Liked by 1 person

  4. 3:11 பிப இல் 2015/04/25

    “சென்னையை நான் விரும்பியதே இல்லை!”
    ஆச்சரியமாக இருக்கின்றது மேடம்.

    “நான் தமிழ்நாட்டு கிராமத்தில் பிறந்தவள்! ”

    பலரும் கிராமத்தில் வசிப்பதையே விரும்புகின்றனர்.

    எனக்கு தமிழ் நாட்டில் பல இடங்களை சுற்றிப் பார்க்க ஆசை.நேரம் கிடைப்பது தான் குதிரைக் கொம்பாக இருக்கின்றது.நீங்கள் கூறிய குஜராத் மாநிலத்திற்கு இந்த வருட கடைசியில் போவதாக உத்தேசம்.

    “உங்களின் இந்த தொடரை படித்து தான் சென்னையை ஓரளவு தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறேன் ”

    வியப்பு கலந்த மகிழ்ச்சி மேடம்.உங்கள் படைப்புத் திறனுக்கு முன்னால் நான் நிற்க முடியாது.உங்கள் படைப்புக்கள் தாமதமாக வந்தாலும் திரைப்பட நெறியாள்கையாளர் (இயக்குனர்)சங்கர் அவர்களின் பிரமாண்டத்துடன் தான் வெளிவரும்.உங்களை அதிகமாக புகழ்வதாக தவறாக கருத வேண்டாம். எனக்கு ஒரு குணம் உண்டு.நியாயமான பாராட்டுக்கு தகுதியானவர்களை மட்டுமே நான் புகழ்வேன்.

    உங்கள் வருகைக்கும்
    கருத்துக்கும்
    நன்றி மஹா மேடம்.

    Like

  5. 2:57 முப இல் 2015/04/26

    மிக நன்று பிரபு. ரசித்தேன்.
    முழுவதையும் வாசிக்கப் போகிறேன்.

    Liked by 1 person

    • 1:30 பிப இல் 2015/04/28

      நன்றி சகோதரி.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

      Like

  6. 5:08 பிப இல் 2015/06/09

    நல்ல பல அரிய தகவல்கள்
    மிக்க நன்றி பிரபு.
    வேதா. இலங்காதிலகம்.

    Liked by 1 person

    • 12:38 பிப இல் 2015/06/10

      நன்றி சகோதரி.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

      Like

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக