என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…!
இந்த உலகம் மிகவும் சுவாரசியமானது.நாங்கள் எவ்வாறு உலகை அணுகுகிறோம் என்பதைப் பொறுத்து வாழ்வின் சுவாரசியங்கள் மாறுபடக்கூடும்.மிகவும் சுவாரசியமான சம்பவத்தைத் தான் கீழே உள்ள காணொளியில் பார்த்து மகிழப் போகிறீர்கள்.
அவ்வாறு என்ன தான் நடந்தது என்று யோசிக்கிறீர்களா?
ஒரு பெண்,அவர் துரித மகிழூந்து ஓடுவதில் புகழ் பெற்ற பந்தயக் காரர்.மூன்று தேர்வாளர்கள், ஓட்டுனர் உரிமம் வழங்கும் பயிற்சிப் பரீட்சையை மதிப்பிடும் பணியை மேற்கொள்பவர்கள். இவர்களுக்கு இடையில் நடந்த மிகவும் சுவாரசியமான சம்பவம் பற்றியதே இந்த காணொளி.
இந்தப் பெண் (புகழ் பெற்ற பந்தயக் காரர்) பழகுநர் ஆரம்பப் பயிற்சியை முடித்து, இறுதி ஓட்டுனர் உரிமம் வழங்கும் பயிற்சிப் பரீட்சைக்காக தோற்றும் மாணவி போல களமிறங்குகிறார். தேர்வாளர்களுக்கு இவர் யார் என்பது தெரியாது. இவர் ஒரு பழகுநர் ஆரம்பப் பயிற்சியை முடித்து, இறுதி ஓட்டுனர் உரிமம் வழங்கும் பயிற்சிப் பரீட்சைக்காக தோற்றும் மாணவி என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
தேர்வாளர்கள் தங்கள் கடமையை செய்ய வருகிறார்கள்.ஆரம்பத்தில் சாதாரண பழகுநர் போன்று தோற்றத்தை காண்பிக்கிறார் மாணவி.தேர்வாளர்கள் உங்களது பயிற்சி போதாது என்று இவரிடம் கூறுகிறார்கள்.நீங்கள் மீண்டும் பழகி விட்டு பரீட்சைக்கு வாருங்கள் என அவரிடம் கூற…,மாணவியின் (புகழ் பெற்ற பந்தயக் காரர்) அடுத்த கட்ட அசத்தல், கலக்கல், மிரள வைக்கும் சுவாரசிய காட்சிகள் ஆரம்பிக்கின்றன.
‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்று நீங்களும் இந்த மாணவியைப் (புகழ் பெற்ற பந்தயக் காரர்) பார்த்து கேட்கத் தான் போகிறீர்கள்.
சரி…. காணொளியைப் பார்ப்போமா!!!!!!!!!!!!
சகோதரா காணொளி பார்க்கும் ஆர்வம் இல்லை
பார்த்தேன்…
LikeLiked by 1 person