இல்லம் > prabuwin > நான் பார்த்த சென்னை (காட்சி 9)

நான் பார்த்த சென்னை (காட்சி 9)


சென்னை ஜகந்நாத் கோயில்
 ஜகன்னாத் கோயில்

சென்னைக்கு சென்றால் பார்க்க வேண்டிய முக்கிய இடம் இதுவாகும்.கிழக்குக்கடற்கரை சாலையிலிருந்து கொஞ்சம் விலகி ரெட்டிகுப்பம் வீதியில் கானாத்தூர் கிராமப்பகுதியில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் ஜகந்நாதர், சுபத்ரா தேவி மற்றும் பலராமர் ஆகியோரின் சிலைகளை தரிசிக்கலாம். யோக நரசிம்மர், விநாயகர், விமலாதேவி மற்றும் கஜலட்சுமி ஆகியோரின் தரிசன மண்டபங்களும் இக்கோயிலில் காணப்படுகின்றன.

இக்கோயில் வெண் சலவைக்கற்களாலும், கருப்புப்பளிங்குகற்களாலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.   காஞ்சிபுரத்திலிருந்து கருங்கல்லும் ராஜஸ்தானிலிருந்து வெண் சலவைக்கற்களும் இக்கோயிலுக்காக வரவழைக்கப்பட்டிருக்கின்றன என்று கோயிலுக்கு வருபவர்கள் சொன்னார்கள்.தெளிவான உண்மை எனக்குத் தெரியாது.

ஜகன்னாத் கோயில்இங்கு ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் விக்கிரகங்கள் வேப்ப மரத்தின் மரத்துண்டுகளை கடைந்து உருவாக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார்கள்.பிரம்மாண்டமான பரப்பளவில் அழகாக பராமரிக்கப்படும் பசுமையான செடிகளையும் பலவண்ண மலர்களையும் கொண்டுள்ள நந்தவனத்தின் நடுவே இக்கோயில் வளாகம் அமைந்துள்ளது.நகர சந்தடியிலிருந்து விலகி அமைதியையும் ஆன்மீக சூழலையும் வழங்கும் அற்புத ஆன்மீகத் தலமாக இந்த ஜகன்னாத் கோயில் அமைந்துள்ளது.

கபாலீசுவரர் கோயில்

கபாலீசுவரர் கோயில்

சென்னையின் மைலாப்பூர் பிரதேசத்தில் இந்த கபாலீசுவரர் கோயில் அமைந்துள்ளது.இந்த கோயில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக கோயில் சிவாச்சாரியார் ஒருவர் கூறினார். வேண்டுவதை அருளும் ‘கற்பகாம்பாள்’ ஆக இங்கு பார்வதி தேவியார் வணங்கப்படுகிறார்.

சிற்பங்கள் நிறைந்த கோபுரம்ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொன்மையான கோயிலின் ஆதி அமைப்பானது 7ம் நூற்றாண்டில் கடற்கரையை ஒட்டி பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

சாந்தோம் சர்ச் உள்ள இடத்தில் வீற்றிருந்த கபாலீசுவரர் கோயிலின் ஆதி அமைப்பு போர்த்துகீசியர்களால் சிதைக்கப்பட்ட பிறகு தற்போது காணப்படும் கோயில் விஜயநகர மன்னர்களால் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று சிவாச்சாரியார் மேலும் கூறினார். இக்கோயிலின் கட்டுமானம் திராவிட பாணி கோயிற்கலை அம்சங்களையே தாங்கி நிற்பது குறிப்பிடத்தக்கது.

நான் பார்த்த சென்னை (காட்சி 10) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:prabuwin
  1. 5:48 பிப இல் 2015/06/08

    நலக்குறைவினால் பின்னூட்டங்கள் போடுவதில் சற்று சிரமம். அழகான ஜெகன்னாதர் கோவில். நான் போனதில்லை. ஆலய தரிசனம் அருமை. அன்புடன்

    Liked by 1 person

    • 12:29 பிப இல் 2015/06/10

      நன்றி அம்மா. நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.கருத்துப் பகிர்வுக்கு நன்றி அம்மா.அன்புடன் பிரபு.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி சொல்லுகிறேன்.

      Like

  2. 5:09 பிப இல் 2015/06/09

    நல்ல பல அரிய தகவல்கள்
    மிக்க நன்றி பிரபு.
    வேதா. இலங்காதிலகம்.

    Liked by 1 person

    • 12:31 பிப இல் 2015/06/10

      மிக்க நன்றி சகோதரி.கருத்துப் பகிர்வுக்கு நன்றி சகோதரி.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

      Like

  3. 10:58 முப இல் 2015/06/26

    நீ பார்த்த சென்னை , நான் பார்க்காத சென்னை பிரபு 🙂 அழகான புகைப்படங்கள் 🙂

    Liked by 1 person

    • 4:30 பிப இல் 2015/06/27

      நன்றி மஹா அக்கா.எதையும் அருகில் இருக்கும் போது அதன் அருமை தெரியாது என்று சொல்லுவார்கள். அதை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் தோன்றாது.நான் சுற்றுலாவாக சிங்கப்பூர் சென்ற போது யாழ்ப்பாணத்தில் எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து விட்டா அங்கு செல்கிறாய் என்று கேட்டார்கள்.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி மஹா மேடம்.

      Liked by 1 person

      • 11:36 முப இல் 2015/06/28

        நீ சொல்வது முற்றிலும் சரி தான் பிரபு! நீ ஒரு உலகம் சுற்றும் வாலிபன் போல… சிங்கப்பூர் சென்ற பயணக் குறிப்பு எதுவும் பதிவுகளாக வெளியிட்டு இருக்கிறாயா??

        Liked by 1 person

      • 12:22 பிப இல் 2015/06/29

        இன்னும் பதிவுகளாக வெளியிடவில்லை அக்கா. “நான் பார்த்த சென்னை” காட்சிகளை வெளியிட்ட பின்னர் “நான் பார்த்த சிங்கப்பூர்”காட்சிகளை வெளியிட எதிர்பார்க்கின்றேன்.

        Liked by 1 person

  4. 12:22 பிப இல் 2015/06/29

    இன்னும் பதிவுகளாக வெளியிடவில்லை அக்கா. “நான் பார்த்த சென்னை” காட்சிகளை வெளியிட்ட பின்னர் “நான் பார்த்த சிங்கப்பூர்”காட்சிகளை வெளியிட எதிர்பார்க்கின்றேன்.

    Like

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக