இல்லம் > ALL POSTS, சென்னை > நான் பார்த்த சென்னை (காட்சி 11)

நான் பார்த்த சென்னை (காட்சி 11)


chennai1

‘கைதி கிச்சன்’

சென்னை சென்றால் கண்டிப்பாக மறக்காமல் செல்ல வேண்டிய மிகவும் முக்கிய இடம் இது என்றால் யாரும் மறுக்க மாட்டார்கள்.அது என்ன?அது தான் ‘கைதி கிச்சன்’.என்னது ‘கைதி கிச்சன்’ ஆ ஆ ஆ….என்று யோசிக்கிறீர்களா. தப்பே இல்லை,யோசிக்க விட்டால் தான் பிரச்சனை. புதுமைகளுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை உணர்ந்து, மக்கள் செல்ல பயப்படும் அல்லது விரும்பாத ஒரு இடத்தை செயற்கையாக உருவாக்கி வெற்றியும் கண்டிருக்கிறார் இதன் உரிமையாளர்.

சென்னை, மயிலாப்பூரில் உள்ள ‘கைதி கிச்சன்’ செல்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் என்பது நிச்சயம்.தமிழ் நாட்டைச் சேர்ந்த நண்பர் ஒருவர் தான் இதைப்பற்றி எனக்குச் சொன்னார்.நான் நம்பவில்லை.அழைத்தே சென்று விட்டார்.நான் சிறைச்சாலைக்கு வந்து விட்டேனோ என்று ஆரம்பத்தில் யோசித்தேன்.பிறகு வியப்புடன் நம்பினேன்.என்ன நீங்களும் நம்பவில்லைத் தானே!!!!நம்பித் தான் ஆகனும்.

chennai

முழுக்க முழுக்க சிறை போன்ற அமைப்பில் உள்ள இந்த உணவகத்தின் வாசல், வேலூர் ஜெயில் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பரிமாறும் “கைதி” கணேசன் சொன்னார். மன்னிக்கவும் திரு.கணேசன் சொன்னார். உணவகத்தில், சிறைக்கூண்டில் (செல்லுக்குள்) அமர்ந்துதான் உண்ண வேண்டும். போலீஸ்(காவல்துறை) உடை அணிந்தவர்தான் கேள்வி (ஆர்டர்) எடுப்பார். உணவு பரிமாறுபவர், கைதி உடையில் இருப்பார். ஆங்காங்கே கைவிலங்குகள், துப்பாக்கிகள் என்று அசத்தியுள்ளனர் ‘கைதி கிச்சன்’ நிர்வாகத்தினர்.

‘கைதி கிச்சன்’ முழுமையான சைவ உணவகம். சைவத்தில் இத்தனை வகைகளா என்று ஆச்சரியப்பட வைப்பது இன்னுமொரு ஆச்சர்யம். உணவகத்தில் மெக்ஸிகன், மங்கோலியன், பர்மீஸ், தந்தூரி, சைனீஸ், இத்தாலியன், நார்த் இந்தியன் என அனைத்து வகை உணவுகளும் உண்டு. லிட்டி சொக்கா, பர்மீஸ் கௌசுவே, மங்கோலியன் சூப், க்ரீக் காட்டேஜ் சீஸ் சத்தே, தந்தூரி ஸ்மோக்கி பார்பிக்யு இவை எல்லாம் விசேட உணவுகள்.வாடிக்கையாளர்கள் இவற்றை எல்லாம் வாய்விட்டுப் பாராட்டிச் செல்வதுடன், சிறைக்கூண்டில் (ஜெயில் செல்லில்) புகைப்படம் எடுத்துக் கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். மதியத்தைவிட, இரவு நேரங்களில்தான் களை கட்டுகிறதாம் கூட்டம்.

என்ன!இப்பவே செல்லத் தயாரா?!இந்த உணவகத்தைப் பற்றித் தெரியாதவர்களை அழைத்துச் செல்லும் போது விபரமாக சொல்லி அழைத்துச் செல்லுங்கள்.ஹி..ஹி…ஹி……

நான் பார்த்த சென்னை (காட்சி 12) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, சென்னை குறிச்சொற்கள்:
  1. 4:40 பிப இல் 2015/07/09

    கைதி கிச்சனா, கிச்சன் கைதிகளாக நாம் போக வேண்டுமா? அட கேள்விப் பட்டது கூட இல்லையே!கைதி கிச்சனில் சாப்பிட்டு விட்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் வீட்டில் உங்களைக் கைது செய்து விடப்போகிரார்கள்.. சாப்பாடெல்லாம் அருமையா. கிச்சனுக்கு இன்னும் வருபவர்கள் அதிகமாகிவிடும். நல்ல செய்தி. பெயர் காலத்திற்கேற்ப என்ன நவீனம். அன்புடன்

    Liked by 2 people

    • 2:12 பிப இல் 2015/07/27

      கேள்விப் பட்டதே இல்லையா!சாப்பாடெல்லாம் அருமை அம்மா.மிகவும் சுவையாக இருக்கின்றது.நன்றி அம்மா.அன்புடன் பிரபு……..

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி சொல்லுகிறேன்.

      Like

  2. 12:55 முப இல் 2015/07/27

    சரி போய் பார்ப்போம்….இந்தியா போனால்
    மிக நன்றாக எழுதப்பட்டுள்ளது.
    மிக்க நன்றி பிரபு…

    Liked by 1 person

    • 2:09 பிப இல் 2015/07/27

      கண்டிப்பாக போய் பாருங்கள்.

      நன்றி சகோதரி.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

      Like

  1. No trackbacks yet.

கோவை கவி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி