இல்லம் > ALL POSTS, சென்னை > நான் பார்த்த சென்னை (காட்சி 12)

நான் பார்த்த சென்னை (காட்சி 12)


மஹாபலிபுரம்
mahabalipuram
கடற்கரையோரம் ஓர் புராதன சிற்பக்கலையை பார்க்க விரும்பினால் இது தான் உங்களின் சரியான தேர்வாக இருக்கும்.மஹாபலிபுரம் என்ற பெயருடன் தற்போது அறியப்படும் ‘மாமல்லபுரம்’ நகரம் சென்னையை ஒட்டி தெற்கே காஞ்சிபுரம் மாவட்டத்தின் அங்கமாக வீற்றிருக்கிறது. இந்நகரம் 7 ம் நூற்றாண்டில் பல்லவ வம்சத்தின் துறைமுக நகரமாகவும் சிற்பக்கலை கேந்திரமாகவும் மஹோன்னத கீர்த்தியுடன் திகழ்ந்திருக்கிறது என்று இங்குள்ளவர்கள் கூறுகின்றார்கள். இன்று தமிழ்நாட்டின் மிக முக்கியமான சிற்பக்கலை சார்ந்த வரலாற்று சுற்றுலாத்தலமாக உலகளாவிய அளவில் புகழ் பெற்றிருக்கும் இந்த நகரம் சர்வதேச ‘யுனெஸ்கோ’ அமைப்பின் மூலம் உலகப்பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
பெயர்க்காரணம்
மஹாபலி என்னும் அசுரகுல அரசன் இப்பகுதியை புராண காலத்தில் ஆண்டு வந்ததாகவும் பின்னர் மஹாவிஷ்ணு அவனை வதம் செய்ததாகவும் ஐதீகக்கதைகள் கூறுகின்றன.
எனவே இவ்வூருக்கு மஹாபலிபுரம் என்ற ஆதிப்பெயர் இருந்து வந்தததாக நம்பப்படுகிறது. மஹேந்திரவர்ம பல்லவரின் மகனாகிய முதலாம் நரசிம்மருக்கு மாமல்லர் என்ற பெயர் உண்டு.
ஒரு துறைமுக நகராக விளங்கிய இந்த நகரை கலைநகராக மாற்றிய அவரது பெயரே பின்னாளில் மாமல்லபுரம் என்று இதற்கு வழங்கப்பட்டதாக கருதப்படுகிறது. ‘மல்லை’ என்ற பெயரிலும் தற்போது இது சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது.
வரலாற்றுப்பின்னணி
திராவிட பூமியில் சேர, சோழ, பாண்டியர்களுக்கு அடுத்தபடியாக பல்லவ ராஜவம்ச மன்னர்கள் 3ம் நூற்றாண்டிலிருந்தே பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில் தமிழ் நாட்டின் வடகோடியை ஆண்டு வந்துள்ளனர்.
இந்த வம்சத்தின் வழித்தோன்றல்களாக வந்த பிற்காலப்பல்லவர்கள் காலத்தில்தான் இந்த மாமல்லபுரம் ஒரு முக்கிய நகரமாக உருமாறி கோலோச்சியிருக்கிறது.
மஹேந்திரவர்ம பல்லவர் மற்றும் நரசிம்மவர்ம பல்லவர் ஆகிய இரு மன்னர்கள் இன்றும் நாம் மாமல்லபுரத்தில் காணும் சிற்பக்கலை பொக்கிஷங்களின் பின்னணியோடு நெருங்கிய தொடர்புடையவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் காலத்தில் கலை, இலக்கியம், கவிதை, நாடகம் போன்ற கலைகள் யாவும் போற்றி வளர்க்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
நிஜக்கதையா, வரலாறா, கற்பனையா என்றெல்லாம் பிரித்தறிய முடியாத வண்ணம் தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர் கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் எனும் அற்புதமான புதினத்தின் ‘கதைக்களத்தில்’ மாமல்லபுரம் இடம் பெற்றிருப்பதை வாசித்தவர் அறிவர்.
அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிகழ்வுகள் வெறும் கற்பனையாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை இந்த நகரில் மிச்சமிருக்கும் சிற்பச்சான்றுகள் உரைக்கின்றன. மற்ற எல்லா தமிழ் நகரங்களையும் போன்றே தொகுக்கப்படாத வரலாறும், எழுதப்படாத கீர்த்தியும்தான் மாமல்லபுரத்திற்கும் என்றாலும், இங்கு வரலாறு கல்லில் வடிக்கப்பட்ட கம்பீர கலைச்சின்னங்களில் பிரம்மாண்டமாக வாழ்கிறது.
இதுதான் மாமல்லபுரத்தின் பெருமை. எனவே, கலாரசிகர்களுக்கு நவீன இரைச்சல்களை விலக்கி உளிகளின் ஓசையையும், பல்லவ மன்னர்களின் நோக்கையும் கற்பனை செய்வதில் நிச்சயம் சிரமம் இருக்க முடியாது.
சூழலை முயன்று விலக்கி சிற்பக்கலை நேர்த்தியை தரிசிக்க வேண்டியிருப்பது காலத்தின் கட்டாயமன்றி வேறில்லை. எனினும் காலத்தை ஊடறுத்து நம் முன் மௌனக்கதை பேசும் மாமல்லபுரம் சிற்பப்படைப்புகள் நம்மை பெருமையுடன் கண் கலங்க சக்தி கொண்டவை -அதாவது வரலாற்றுக்கண் கொண்டு நோக்கும்போது.
ஒரு மஹோன்னத பாரம்பரிய ஸ்தலமாக இந்த நகரை போற்றி பாதுகாத்து அதை அவ்வண்ணமே பார்வையாளர்களும் அணுக தார்மீக நெறியூக்கம் செய்ய இயலாத மாயச்சூழலில், வரலாற்று சின்னங்களும் அவை வீற்றிருக்கும் ஏதோ ஒரு வகையில் பொலிவிழந்து காட்சியளிப்பது ஒரு இமாலய சோகம்.
யாவும் விட்டுச்சென்றனர் நம் முன்னோர், எனில் அவற்றை எவ்வகையில் நாம் காக்கின்றோம் என்பதே பெரும்பான்மை தமிழ் உள்ளங்களில் ஊமைக்கேள்வியாய் வீற்றிருக்கிறது.
18ம் நூற்றாண்டு வரையில் மஹாபலிபுரத்தின் வரலாற்று கலைச்சின்னங்கள் வெளியுலகிற்கு தெரிந்திருக்கவேயில்லை. ஏனெனில் இந்த படைப்புகளை ரகசியமாக உருவாக்குவதென்பதும் முதலாம் நரசிம்மர் மற்றும் ராஜசிம்மர் ஆகியோரது நோக்கமாக இருந்திருக்கிறது.
வரலாற்றுச்சின்னங்கள், கோயில்கள் மற்றும் சிற்பப்படைப்புகள்
கலை ரசிகர்கள் மற்றும் வரலாற்றுப்பிரியர்களை பிரமிக்க வைக்கும் ஏராளமான அம்சங்கள் மாமல்லபுரத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள சின்னங்களை மண்டபங்கள், கோயில்கள், ரதக்கோயில்கள் என்று பல வகையாக பிரிக்கலாம்.
பஞ்ச பாண்டவ ரதங்கள், வராக மண்டபம் மற்றும் கடற்கரை கோயில் ஆகியவை இங்குள்ள குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். மேலும், மாமல்லபுரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் சோழமண்டல் கலைக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
கடற்கரையை ஒட்டியே மாமல்லபுரம் கலை நகரம் பல்லவ மன்னர்களால் எழுப்பப்பட்டிருப்பது இதன் மற்றொரு விசேஷ அம்சமாகும். வெளிநாட்டுப்பயணிகள் பலர் இந்த கடற்கரையில் காலை முதல் மாலை வரை ஓய்வெடுப்பதையும், நகர் முழுதும் சுற்றித்திரிவதையும் பயணிகள் பார்க்க முடியும். நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் ஒரு துர்க்கையம்மன் கோயிலும் அமைந்துள்ளது.
இங்கு பல அழகிய சிலைகளை பார்க்கலாம். புலிக்குகை மற்றும் முதலைப்பண்ணை போன்றவை பயணிகள் விரும்பக்கூடிய இதர சிற்றுலாத்தலங்களாக அமைந்துள்ளன.
மாமல்லபுரத்திற்கு எப்படி செல்லலாம்?
சென்னைக்கு மிக அருகாமையிலும் பாண்டிச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் பாதையிலும் அமைந்துள்ளதால் மிக சுலபமாக இந்த வரலாற்று நகருக்கு விஜயம் செய்யலாம். செங்கல்பட்டு வரை ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்து அல்லது டாக்சி மூலமாகவும் இங்கு வரலாம்.

எனக்கு மிகவும் பிடித்த இடம் என்று இதைக்கூறுவேன்.எனது உறவினர்களுக்கும் மஹாபலிபுரம் மிகவும் பிடித்தமான இடம் என்று கூறுவார்கள்.இந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு எனது நன்றிகள்.

நான் பார்த்த சென்னை (காட்சி 13) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, சென்னை
  1. 3:44 பிப இல் 2015/07/27

    ஆஹா.. மகாபலிபுரம் வரலாறு முழுதும் இப்பதிவை படித்து அறிந்தேன்! ஊர் சுற்றி பார்த்தால் , உன்னை மாதிரி சுற்றி பார்க்க வேண்டும்! பலே பிரபு 🙂

    Liked by 1 person

    • 4:23 பிப இல் 2015/08/02

      உங்கள் பாராட்டுக்கு நன்றி அக்கா. பல விடயங்களை மேலோட்டமாக அறிந்து கொள்ள முடியாது.உலகின் பல விடயங்கள் அதைப் பற்றிய வரலாறுகளை அறியும் போது மட்டுமே முழுமை பெறும்.எமது தமிழர்களின் வரலாற்றுப் பொக்கிஷங்கள் இவ்வாறு தான் புதையுண்டு கிடக்கின்றன.

      நன்றி அக்கா.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி மஹா மேடம்.

      Liked by 1 person

      • 5:29 பிப இல் 2015/08/04

        சென்னை பற்றிய பதிவு தொகுப்பை வெளியிட்ட பின்னே , பழந்தமிழர் வரலாறு , அவர்களின் வாழ்க்கை முறைகள் பற்றி ஒரு தொகுப்பை வெளியிடு பிரபு 🙂

        Liked by 1 person

      • 1:19 பிப இல் 2015/08/22

        நிச்சயமாக அக்கா.

        உங்கள் வருகைக்கும்
        கருத்துக்கும் நன்றி
        நன்றி மஹா அக்கா.

        Liked by 1 person

  2. 2:18 பிப இல் 2015/08/11

    மிக விரிவாக எழுதப் பட்டது.
    வாசித்து மகிழ்ந்தேன் பிரபு.
    . தொடரட்டும் எழுத்துப் பயணம்.

    Liked by 1 person

    • 1:17 பிப இல் 2015/08/22

      நீங்களும் ஒருமுறை சென்று பாருங்கள் சகோதரி.நன்றி சகோதரி.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

      Like

    • 1:23 பிப இல் 2015/08/22

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

      Like

  3. 1:04 பிப இல் 2015/08/22

    அழகாக பார்க்க ஆவலைத்தூண்டும் வகையில் படிக்க உற்சாகமாக இருக்கிரது. நேரில் பார்த்திருப்பினும், திரும்பவும் பார்க்க ஆவலைத் தூண்டுகிறது. அன்புடன்

    Liked by 1 person

    • 1:23 பிப இல் 2015/08/22

      உற்சாகம் அளிக்கும் கருத்துக்கு நன்றி அம்மா.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி சொல்லுகிறேன்.

      Like

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக