நான் பார்த்த சென்னை (காட்சி 13)
அண்ணா நூற்றாண்டு நூலகம்
சென்னையில் நான் பார்த்து வியந்த மற்றொரு இடம் அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழக மக்களால் அன்புடன் “அண்ணா” என்றழைக்கப்படும் முன்னாள் தமிழக முதலமைச்சர் சி. என். அண்ணாதுரையின் 102வது பிறந்த தினத்தை முன்னிட்டு, 2010ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் தேதியன்று அந்நாள் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டதாக இங்குள்ள நினைவுக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் பெரிய நூலகங்களில் முதன்மையான நூலகமாக அண்ணா நூற்றாண்டு நூலகம் திகழ்வதாக இங்கு பணி புரியும் கோவிந்தன் கூறினார். கால்கோள் விழா முன்னாள் தமிழக முதல் அமைச்சர் மு.கருணாநிதியால் 2008ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16ஆம் நாள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டதாக மேலும் கூறினார்.
நூல்கள் மற்றும் கற்பதில் அண்ணா கொண்ட பற்று மற்றும் தீராத ஆர்வத்தை மரியாதை செய்யும் பொருட்டும், அவரது நூற்றாண்டை நினைவுறுத்தும் விதமாகவும் “அண்ணா நூற்றாண்டு நூலகம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.
3.75 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள நூலகம் தரைத்தளம் நீங்கலாக 8 தளங்களைக் கொண்டது. தற்சமயம் பல்வேறு துறை சார்ந்த 5 லட்சம் புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நூலகம், மிகவும் குறுகிய காலத்தில் 12 லட்சம் புத்தகங்களாக அதிகரிக்கும் நோக்கத்துடன் இயங்குகிறது. இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
நூலகத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக “உலக இணைய மின் நூலகத்துடன்” (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 31 மாவட்ட நூலகங்களையும் கன்னிமரா நூலகத்துடன் (இந்த நூலகம் பற்றி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.) இணைக்கும் கணினி இணைப்பு தற்போது செயலாக்கத்தில் உள்ளது. இந்த அனைத்து இணைப்புகளும் “அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன்” இணைக்கப்படும்.
விடுமுறை நாள்களில் சென்னைவாசிகளின், சென்னைக்கு வந்து செல்வோரின் பயனுள்ள பொழுதுபோக்காக அறிவுப்பசிக்கு விருந்தாக அமைந்துள்ளதே கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். சிறுவர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், பெரியவர்கள், வயதானவர்கள் என்ற அனைத்துத் தரப்பினரையும் தன்னகத்தே ஈர்க்கும் தனிச்சிறப்புடன் திகழ்கிறது.
உலக டிஜிட்டல் நூலகத்துடன் இணைப்புப் பெறப்பட்டுள்ளதால் உலகிலுள்ள புகழ்பெற்ற பல நூலகங்களில் உள்ள தகவல்களைச் சேகரிக்க முடியும். பழைமையான ஓலைச் சுவடிகள், அரிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், வரைபடங்-களுக்கு யுனெஸ்கோவின் உலக டிஜிட்டல் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட கணினிகள் உள்ளன. மொத்தத்தில் அறிவுப் புரட்சிக்கு வித்திடும்வகையில் அமைக்கப்-பட்டுள்ளது.
இந்த நூலகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. எட்டு அடுக்குகள். ஒவ்வொன்றிலும் அருமையான புத்தகங்கள். மருத்துவமா,பொறியியலா, ஆங்கில இலக்கியமா, கணிப்பொறியியலா, எந்தத் துறையில் நூல் வேண்டும்? ஒரு தளத்திற்கு எழுபதாயிரம் முதல் எண்பதாயிரம் புத்தகங்கள். மொத்தம் ஆறு லட்சம் நூல்கள். குழந்தைகளுக்கென்று தனிப்பகுதி. பத்திரிகைகளுக்குத் தனிப் பகுதி. ஒரு முறை சென்று சுற்றிப்பார்த்து வந்தாலே புத்தகத்தின் அருமை தெரிந்தவர்களுக்கு அப்பா, இவ்வளவு பெரிய நூலகமா, இவ்வளவு வசதிகளுடனா என்ற மலைப்பு ஏற்பட்டுவிடுகிறது. எட்டாவது அடுக்கில் மட்டும் நிர்வாகம். பிற அடுக்குகளில் எல்லாம் நல்ல நல்ல புத்தகங்கள்.
ஒவ்வொரு கட்டிடத்திற்கும் செல்ல படிகள், தானியங்கி (லிஃப்ட்), நகர்வுதளம் (எஸ்கலேட்டர்) உள்ளது. நாளிதழ்கள், சஞ்சிகைகள் என பொது நூல்களுக்கான தளமும் அங்கு உள்ளது. 2-வது தளத்தில் தமிழ் நூல்களும், 3-வது தளத்தில் ஆங்கில நூல்களும், 4-வது தளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல்வேறு மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. 5-வது தளத்தில் பத்திரிகைகளின் பழைய பதிப்புகளும், 6-வது தளத்தில் அரசு ஆவணங்களும், 7-வது தளத்தில் நன்கொடையாளர்கள் கொடுத்த நூல்கள் மற்றும் காணொளி, ஒலித் தொகுப்புகளும் இடம் பெற்றுள்ளன. புகைப்படத் தொகுப்புகளும், பிறவும் 8-வது மாடியில் அமைந்திருக்கின்றன.அனைவரும் செல்ல வேண்டிய மிக முக்கியமான இடம் இந்த அண்ணா நூற்றாண்டு நூலகம்.
நான் பார்த்த சென்னை (காட்சி 14) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.
அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டுரை படித்த பிறகுதான் எனக்கு இவ்வளவு விஷயங்களா என்று பிரமிக்க வைக்கிறது. எவ்வளவு முறை சென்னை போயிருக்கிறேன். இவ்வளவு விஷயங்கள் தெரியாது. பார்ப்பதைவிட எவுதியுள்ளது இன்னும் பிரமிப்பாக இருக்கிரது. மிகவும் ஒத்தாசையான கட்டுரை. அன்புடன்
LikeLiked by 1 person
மிக்க நன்றி அம்மா.உங்கள் உற்சாகம் ஊட்டும் கருத்துக்கு நன்றி சொல்லுகிறேன்.
அன்புடன்…….பிரபு.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி சொல்லுகிறேன்.
LikeLike
மிக அழகான கட்டிடம். நல்ல பதிவு…
மிக்க நன்றி…
LikeLiked by 1 person