தற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன ???
தற்கொலை செய்யப் போறீங்களா.அப்ப இந்தப் பதிவப் பாருங்க. சந்தோசமா வாழுங்க.
நன்றி மகா அக்கா.
இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்
ஆத்திர அவசரத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் ஒன்று தான் இந்த தற்கொலை! அது என்ன தேங்காய் சட்னி செய்வது போல் அத்துணை சுலபமா?? தற்கொலை செய்ய முடிவெடுத்தவுடன் என்ன செய்யணும் என்று கூட சத்தியமாக எனக்கெல்லாம் தெரியாது! ஏதோ திரைப்படங்களை பார்க்க போய் , தூக்கு மாட்டி கொள்வது , தூக்க மாத்திரை சாப்பிடுறது , கையில் நரம்பை வெட்டி கொள்வது , மலை உச்சிக்கு சென்று குதிப்பது , நம் வாகனத்தை வேகமாக ஓட்டி சென்று எதிரே வரும் வாகனம் மீது மோத விடுவது, பூச்சி மருந்து , காலாவதியான மருந்து , பாத்ரூம் கிளீனர் , ஆசிட் ஆகியவற்றை குடிப்பது , நம்மை நாமே மண்ணென்னை ஊற்றி கொளுத்தி கொள்வது , ஆழமான நீர் நிலைகளில் சென்று விழுந்து உயிரை விடுவது போன்ற வழிகள் அரை குறையாய் தெரியும்! இப்படி அரைகுறையாக தெரிந்து கொள்வது தான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு… வாழ்க்கையை வாழ வழி தெரியாதோர் , சாவை அடைய வழி தேடுகின்றனர்! இத்தகைய மன நிலையில் உள்ளவரிடம் போய் .. ஏ.. பிளீஸ் பா.. தற்கொலை எல்லாம் செய்யனும்னு நினைக்காத.. அப்படி இப்படின்னு அறிவுரை கொடுத்தால் எல்லாம் வேலைக்கு ஆகாது! வாழ்க்கையை வாழ பயந்தவர்களுக்கு சாவின் மீது பயத்தை குடுக்க வேண்டும் .. அத்தகைய விழிப்புணர்ச்சியை மக்கள் மனதில் உண்டாக்கவே இந்த மிரட்டல் பதிவு! வேறு எந்த நோக்கமும்…
View original post 1,377 more words
தற்கொலை கூட ஒரு வியாதி தான். எனக்குத் தெரிந்தொருவர் மூன்று முறை முயற்சித்தார். பலன் அளிக்கவில்லை. தற்கொலை செய்பவர்கள் அந்தக் கணத்தை மட்டுமே நிறுத்தி ஒருமுறை சிந்தித்துப் பார்த்தால் புரியும் இதற்காகவா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டோம் என்று அவமானப் பட்டுப் போவார்
LikeLiked by 1 person
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சகோதரி.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி kowsy.
LikeLike