தொகுப்பு

பதிவர் தொகுப்புகள்

நான் பார்த்த சென்னை (காட்சி 17)


திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு இடம் என்று கூறினால் அது மிகையல்ல. அன்பும் சகோதரத்துவமும் நிறைந்த எழில் மிகும் நகரம் இந்த திருவண்ணாமலை. சட்டம் ஒழுங்கை பின்பற்றுவதில் இந்த ஊருக்கு ஒரு பிரச்சனையும் இல்லையாம்.இங்கே சட்டப் பிரச்சனை இருப்பதாக கேள்விப்படுவதும் அரிதாம்.பிரச்சனைகள் இன்றி வாழ வேண்டும் என்கிற நோக்கத்தோடு இருக்கும் பக்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்கின்றனர். ஆண்டுதோறும் இவ்விடத்திற்கு வருகை தரும் பக்தர்களையும் இவர்கள் வரவேற்கிறார்கள்.

இந்த நகரம் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. வாயு. காற்று, நீர் மற்றும் நிலம் ஆகிய பஞ்ச பூதங்களை சிதம்பரம், ஸ்ரீ காலஹஸ்தி, திருவாணைக்கோவில் மற்றும் காஞ்சீபுரம் ஆகிய ஊர்கள் பிரதிபலிக்கின்றன.
இந்த நகரத்தில் ஆண்டுதோறும் நான்கு பிரம்மோத்சவங்கள் கொண்டாடப்படுகின்றன. நவம்பர்/டிசம்பர் மாதங்களில் கொண்டாடப்படும் பிரம்மோத்சவம் மிகவும் புகழ்வாய்ந்தது.
தமிழ் நாள்காட்டியில் இவை கார்த்திகை மாதத்தை குறிக்கின்றது. இந்த விழா பத்து நாட்களுக்கு கொண்டாடப்படுவதோடு, கடைசி நாள் கார்த்திகை தீப திருவிழாவாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த கடை நாள் கொண்டாட்டத்தின் போது, பக்தர்கள் மூன்று டன் வெண்ணெய்யை உள்ளட்டக்கிய ஒரு பெரிய பாத்திரத்தில் விளக்கு கொழுத்துகிறார்கள். இந்த பாத்திரம் ஆணைமலை குன்றின் உச்சியில் வைக்கப்படுகின்றது.

அருணாச்சலேஷ்வரா கோவில், ரமணா ஆசிரமம், விருபாக்‌ஷா குகை மற்றும் சேஷாத்ரி ஸ்வாமிகள் ஆசிரமம் ஆகியவை தென்னிந்திய இந்துக்கள் இடையே சமயச் சிறப்பு வாய்ந்த முக்கிய இடங்கள் ஆகும்.

பாரம்பரியமும், திருவிழாக்களும்!

ஒவ்வொரு பௌர்னமி நாளன்றும் சிவபெருமானை வழிபடுவதற்காக பக்தர்கள் வெறும் காலோடு ஆணைமலை குன்றை சுற்றி நடக்கிறார்கள். 14 கி.மீ. கூர்மையான கற்கள் நிறைந்த இந்த பாதையில் நடப்பதன் மூலம், சிவபெருமான் மீது உள்ள தங்கள் பக்தியை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

தமிழ் நாள்காட்டியின் படி வருடாந்தர சித்ராபௌர்னமியின் போது உலகெங்கும் இருந்து தங்கள் வேண்டுதல்களை செலுத்துவதற்காக, பக்தர்கள் இவ்விடத்தில் குவிகின்றனர்.
இங்கு கொண்டாடப்படும் மற்றும் ஒரு புகழ்வாய்ந்த பண்டிகை கார்த்திகை மகா தீபம். வட ஆற்காட்டிலும் இந்த பண்டிகை அதிக பக்தியோடும், சிறப்போடும் கொண்டாடப்படுகின்றது.
5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட திருவண்ணாமலையில், திருவிழா காலத்தில் 86 பக்தகோடிகளின் சங்கமத்தை காணலாம். 2900 அடி உயரத்தில் திருவண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுவதை காண்பதற்கு இரண்டு கண்கள் போதாது!
மகாதீபம் ஏற்றப்பட்ட பிறகு பத்து நாட்களுக்கு விழா தொடர்ந்து நடைபெறுகின்றது. கார்த்திகை மகாதீபத்தின் போது திரளான பக்தகோடிகள் வருகை தந்தபோதிலும், இதுவரை இந்த பட்டணத்தில் எவ்வித சட்டம் ஒழுங்கு சீர்கேடும் நடைபெற்றது இல்லை.

அமைதியும் சமாதானமும் நிறைந்த ஊர்!

திருவண்ணாமலை ஒரு சிற்றூர். சமய உணர்வு உள்ளவர்கள் தவிற தமிழகத்திற்கு வெளியே இருக்கிறவர்கள் இதை குறித்து கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். பண்டிகைகளும், சடங்குகளும் அதிக பக்தியோடும், எவ்வித பிரச்சனைகளும் இல்லாமலும் மக்களால் கொண்டாடப்படுகின்றது.
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும், சிறியோருக்கும், பெரியோருக்கும் இது பாதுகாப்பான நகரம் ஆகும். இங்கே பதிவுசெய்யப்பட்டுள்ள விபத்துகள் மற்றும் திருட்டுக்களின் எண்ணிக்கை, நாட்டின் குற்ற விகிதத்தோடு ஒப்பிடப்பட்டால் மிகவும் குறைவானது.
மக்கள் இசைவோடு வாழ்ந்து, தங்கள் தொழில்களை இயன்றவரை அமைதியாக செய்கின்றனர். இந்த பட்டணத்தை பெங்களூரோடு இணைக்கின்ற முக்கிய சாலைகளிலேயே இந்த நகரத்தின் தொழில் மையங்கள் இருக்கின்றன.

அணுகுதலும், வானிலையும்!

இந்த நகரத்தின் மையப் பகுதியில் ரயில் நிலையம் இருக்கின்றது. இந்நகருக்கு நெருக்கமான விமான நிலையம் சென்னை சர்வதேச விமானநிலையம் ஆகும். ஆனால், சாலை வழியாக பயணம் செய்வதே இந்த பட்டணத்தை அடைய சிறந்த வழி.
உஷ்ணமான கோடை வெயிலையும், மிதமான மழைப்பொழிவையும், மென்மையான குளிர்காலத்தையும் இந்நகரம் பெற்று இருக்கிறது.

நான் பார்த்த சென்னை (காட்சி 18) விரைவில் வெளியாகும்.

பிரிவுகள்:prabuwin

நான் பார்த்த சென்னை (காட்சி 16)


கடலூர்

கடலூர்_மாவட்ட_வட்டங்கள்

கடலூர் நகரம் வங்காள விரிகுடாவின் கரைகளில் வேகமாக வளர்ந்து வரும் பெருநகரம் ஆகும். தமிழ் மொழியில் ‘கடலின் நகரம்’ என்று பொருள் தரும் கடலூரில் சுற்றிப் பார்க்கத் தகுந்த பல்வேறு அழகிய கடற்கரைகள் அமைந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஆலயங்களுக்காகவும் பெயர்பெற்ற இடம் கடலூர் நகரம் . இது பழைய கடலூர் (ஓல்டு டவுன்) மற்றும் புதிய கடலூர் (நியூ டவுன்) என்று இரண்டு வகை நிர்வாகப் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

திருப்பாதிரிப்புலியூர் என்ற புதிய கடலூர் நகரத்தை கெடிலாம் நதி பாய்ந்து தனியாக பிரிக்கிறது. முகலாயர்களின் ஆட்சிக் காலத்தின் போது இஸ்லாமாபாத் என்றழைக்கப்பட்ட இந்த நகரத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கையும் கணிசமாக காணப்படுகின்றன. மேலும் கடலூர் நகரம் 1748 முதல் 1752-ஆம் ஆண்டுகள் வரை ஆங்கிலேயர்களின் சொத்துக்களை வைக்கும் தலைநகரமாக விளங்கி வந்தது.
கடலூரில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
கடலூர் நகரம் சைவ மற்றும் வைணவ கோவில்களுக்காக புகழ் பெற்று விளங்கும் தலமாகும். இங்குள்ள சில முக்கிய கோவில்களாக பாதாளீஸ்வரர் கோவில், திருவாகீந்திரபுரம் கோவில், மங்களபுரீஸ்வரர் கோவில், சுடர்கொழுந்தீஸ்வரர் கோவில் ஆகியவை அறியப்படுகின்றன.
இங்கிருக்கும் பல்வேறு கடற்கரைகளும் சுற்றுலாப் பயணிகளை சுண்டியிழுக்கும் இடங்களாக இருக்கின்றன. தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய கடற்கரையான சில்வர் பீச் கடலூருக்கு மிக அருகில் உள்ளது, செயிண்ட் டேவிட் கோட்டை மற்றும் கார்டன் ஹவுஸ் ஆகிய இடங்கள் அவற்றினுடைய கட்டிடக்கலை மற்றும் வரலாற்று முக்கியத்துவங்களுக்காக பார்க்க வேண்டிய இடங்களாகும்.
சதுப்பு நில பகுதிகளுக்காகவும், நீர் விளையாட்டுகளுக்காகவும் புகழ் பெற்று விளங்கும் பிச்சாவரம் கடலூரில் தான் உள்ளது. இது மாங்குரோவ் காடுகளின் தொடர்ச்சியாக இருக்குமிடமாகும்.
கடலூருக்கு அருகிலிருக்கும் சில தீவுகள் பறவைப் பிரியர்களை ஈர்ப்பதில் பெரிதும் பங்கு வகிக்கின்றன. இங்கிருக்கும் படகு வசதிகள் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதி அளிப்பதாகவும், புதியதோர் அனுபவத்தை ஏற்படுத்தி கொடுப்பதாகவும் உள்ளது.
கடலூரில் உள்ள பிற சுற்றுலாத் தலங்களாக நிலக்கரி சுரங்கங்கள், கெடிலாம் கேஸில், கேப்பர் மலைகள், சிதம்பரம் மற்றும் ஸ்ரீ முஷ்ணம் ஆகிய இடங்கள் இருக்கின்றன.
26 டிசம்பர் 2004-ல் ஏற்பட்ட சுனாமி அலைகளில் கடுமையான தாக்குதலுக்குள்ளான பின்னரும் கடலூர் சாகாவரம் பெற்ற நகரமாக மீண்டும் உயிர்த்தெழுந்து வளர்ந்து வந்திருக்கிறது.
வரலாற்றின் பாதையில் கடலூர்
வரலாற்றில் கடலூர் மாவட்டம் ‘சோழநாடு’ மற்றும் ‘நடுநாடு’ ஆகிய பகுதிகளை கொண்டிருந்தது. அந்த காலங்களிலிருந்தே இது துறைமுக நகரமாக இருந்து வந்தது. இந்த நகரம் டச்சுக்காரர்கள், போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கியலேயர்களால் வரலாற்றில் ஆளப்பட்டு வந்திருக்கிறது.
1758 ஆம் ஆண்டு பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்களின் கடற்படைகளுக்கிடையில் ஒரு பெரும் போர் ஒன்று கடலூரில் நிகழ்ந்தது. அமெரிக்க சுதந்திரப் போர் மற்றும் இரண்டாவது ஆங்கிலேய-மைசூர் போர் ஆகியவை நடந்து கொண்டிருந்த போது அதன் தாக்கம் கடலூரின் அமைதியையும் பாதித்தது.
இறுதியாக ஒரு அமைதி உடன்படிக்கையின் படி கடலூர் ஆங்கிலேயர்களின் வசம் ஒப்படைக்கப்பட்டது. கடலூரின் சில பகுதிகள் இன்றும் இந்த காலனிய ஆட்சியின் சுவடுகளை தாங்கி நின்று கொண்டிருக்கின்றன. ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட சில கல்வி நிறுவனங்கள் இன்றும் கடலூரில் செயல்பட்டு வருகின்றன.
கடலூரை அடையும் வழிகள்
இந்நகரம் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தின் மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி விமான நிலையம் கடலூருக்கு மிக அருகில் இருக்கிறது, சென்னை விமான நிலையம் மிக அருகில் இருக்கும் சர்வதேச விமான நிலையமாகவும் இருக்கிறது.
கடலூரில் உள்ள இரண்டு ரயில் நிலையங்கள் இந்நகரை பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கின்றன. தேசிய நெடுங்சாலை 45A-ல் அமைந்துள்ள கடலூர் சாலைவழியே மிகச்சிறந்த இணைப்பை பெற்றுள்ள நகரமாகும்.
கடலூரின் பருவநிலை
மித வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ள கடலூரில் பருவநிலையும் மிதமானதாக இருக்கும். குளிர்காலம் நிலவும் அக்டோபர் முதல் மார்ச் மாதங்களில் கடலூருக்கு வருவது நல்ல அனுபவத்தை கொடுக்கும். இந்த நேரத்தில் வெப்பநிலை மிகவும் ரம்மியமானதாக இருப்பதால் பயணிகள் நல்ல சூழலை எதிர் கொள்ள முடியும்.

நான் பார்த்த சென்னை (காட்சி 17) விரைவில் வெளியாகும்.

பிரிவுகள்:prabuwin

நான் பார்த்த சென்னை (காட்சி 15)


திருத்தணி – அழகன் முருகனின் ஆனந்தச் சிரிப்பு  (85 km – 2Hrs, 5 min)

திருத்தணி

தமிழ் கடவுளான முருக பெருமானின் அறுபடை வீடுகளில் திருத்தணியும் ஒன்று. இந்துக் கடவுளான முருகன் வாசம் செய்யும் இந்த திருத்தணி தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.
திருத்தணியின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் இங்கு அமைந்திருக்கும் திரு சுப்பிரமணியசுவாமி ஆலயம் ஆகும். இந்த ஆலயத்திற்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். மேலும் சுற்றலா வருவோருக்கு விருந்தாக இங்கு பாயும் நந்தி ஆறும் இருக்கிறது.
குமர தீர்த்தா அதாவது சரவண பொய்கை என்று அழைக்கப்படும் புனித தீர்த்த குளமும் திருத்தணியில் அமைந்துள்ளது. இந்த சரவண பொய்கை ஏராளமான சக்திகளை தன்னுள் கொண்டிருக்கிறது என்று முருக பக்தர்கள் நம்புகின்றனர். முருகப் பெருமான் தீய எதிரிகளுக்கு எதிராக போரிட்டு வென்ற ஆறு இடங்களில் ஒரு இடமாக திருத்தணி நம்பப்படுகிறது.
முருகனின் மற்ற ஐந்து புனித தலங்களாக பழனியில் அமைந்திருக்கும் தண்டாயுதபாணி ஆலயம், திருச்செந்தூரில் அமைந்திருக்கும் செந்தில் ஆண்டவர் ஆலயம், திருப்பரங்குன்றத்தில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி ஆலயம், சுவாமி மலையில் அமைந்திருக்கும் சுவாமிநாத சுவாமி ஆலயம் மற்றும் பழமுதிர் சோலையில் அமைந்திருக்கும் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் போன்றவை உள்ளன.
இந்த ஆறு புண்ணிய தலங்களுக்கும் சென்று வேண்டி வந்தால் இறைவன் சுப்பிரமணிய சுவாமியின் அபரிவிதமான அருளைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது.
திருத்தணியில் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தைத் தவிர்த்து சந்தன வேணுகோபாலபுரம் ஆலயமும் கண்டிப்பாக பார்க்க வேண்டியது. இந்த ஆலயத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
வேலூர்

வேலூர்இந்த தங்கக்கோயிலில் வீற்றுள்ள மஹாலட்சுமி தேவியின் விக்கிரகம் ஆன்மீக யாத்ரீகர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். வில்லபாக்கம், வள்ளிமலை, பாலாமதி, விரிச்சிபுரம், மேட்டுகுளம், மொர்தானா அணை மற்றும் பூமாலை வணிக வளாகம் போன்றவையும் வேலூரின் இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அமைந்துள்ளன.
அசம்ஷன் கதீட்ரல் மற்றும் 150 வருடங்கள் பழமையான செயிண்ட் ஜான் சர்ச் போன்றவை வேலூர் நகரத்தின் முக்கியமான கிறித்துவ தேவாலயங்களாக அறியப்படுகின்றன.
இந்தியாவிலேயே பிரசித்தமான ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம் ஒன்றும் வேலூர் நகரத்தில் இயங்குகிறது. சிஎம்சி என்று பிரசித்தமாக அழைக்கப்படும் வேலூர் மருத்துவக்கல்லூரி அல்லது கிறிஸ்டியன் மெடிகல் காலேஜ் வேலூரின் மற்றொரு அடையாளமாக திகழ்கிறது.
மேலும், வேலூருக்கு அருகிலுள்ள ஜவ்வாது மலைப்பகுதியில் அமிர்தி ஆற்றங்கரையில் அமிர்தி விலங்கியல் பூங்கா எனும் மற்றொரு முக்கியமான சுற்றுலாத்தலமும் அமைந்துள்ளது.
காவலூர் வானோக்கு மையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய வானியல் தொலைநோக்கியை கொண்டுள்ளது. பூமத்தியரேகைக்கு அருகில் அமைந்துள்ளதால் இந்த மையத்தில் பல முக்கியமான வானியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நான் பார்த்த சென்னை (காட்சி 16) விரைவில் வெளியாகும்.

பிரிவுகள்:prabuwin

நான் பார்த்த சென்னை (காட்சி 14)


என்ன வலைத் தளத்தில் ஆளையே காணவில்லை என்று பார்த்தீர்களா…கொஞ்சம் வேலை அதிகம் அது தான்…..

சரி சென்னைக்குப் போவோமா……

சென்னையில் இருந்து 200 கிமீ அருகாமையில் இருக்கும் சுற்றுலா தளங்கள்.

பழவேற்காடு (55 km – 1Hr, 10 min)

காஞ்சிபுரம் (72 km – 1Hr, 25 min)

வேடந்தாங்கல் (79 km – 1Hr, 40 min)

திருத்தணி (85 km – 2Hrs, 5 min)

வேலூர் (140 km – 2Hrs, 20 min)

கடலூர் (183 km – 3Hrs, 10 min)

திருவண்ணாமலை (188 km – 3Hrs, 10 min)

பழவேற்காடு (55 km – 1Hr, 10 min)

பழவேற்காடு (ஆங்கிலம்: Pulicat) (Pazhaverkadu) தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை மாநகரத்தில் வடக்கு கடலோரத்தில் அமைந்துள்ள ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராகும். சென்னையிலிருந்து 60 கிமீ தொலைவிலும் எலவூரிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பழவேற்காடு ஏரியையும் வங்காள விரிகுடாவையும் பிரிக்கும் ஸ்ரீஹரிகோட்டா தீவில் அமைந்துள்ளது. இங்கு உள்ள பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

பழவேற்காடு

சுற்றுலாப் பயணிகளின் மத்தியில் பழவேற்காடு இரு விஷயங்களுக்காக மிகவும் அறியப்படுகிறது. அவை பழவேற்காடு ஏரி மற்றும் பழவேற்காடு பறவைகள் சரணாலயம் ஆகியவையாகும்.
பழவேற்காட்டிலுள்ள இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்பு நீர்நிலை ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாக இருக்கிறது.
இந்த நீர்நிலையின் தண்ணீர் நன்னீரை விட அதிகமான உப்புத் தன்மையுடன் இருந்தாலும், இது கடல் நீர் கிடையாது. இந்த புவியியலமைப்பில் உள்ள பழவேற்காடு பறவைகள் சரணாலயம் பறவைகள் சீசனில் பல்வேறு இடம் பெயரும் பறவைகளுக்கு அடைக்கலம் தந்து வருகிறது.
இந்த ஏரிக்கு வரும் பல்வேறு வகையான பறவைகளின் காரணமாக, பறவைகளை கவனிப்பது இங்கு வருபவர்களின் விருப்பமான பொழுதுபோக்காக உள்ளது.
பழவேற்காட்டில் டச்சு சர்ச், டச்சு கல்லறை, கலங்கரை விலக்கம், சிந்தாமணீஸ்வரர் கோவில் மற்றும் பெரிய பள்ளிவாசல் ஆகிய எண்ணற்ற கண்கவரும் சுற்றுலாத்தலங்கள் உள்ளன.
காஞ்சிபுரம் – காஞ்சி காமாட்சியின் நகரம்

தன் பழங்காலப் பெருமையை இன்றும் தக்க வைத்துக்கொண்டிருக்கும் தமிழக நகரம் என்று பார்த்தால், அது புராதனமான காஞ்சிபுரம் நகரம் மட்டுமேயாகும். இந்நகரம், பல கோயில்களை கொண்டுள்ளதனால் மட்டுமல்ல, இது பல்லவ மன்னர்களின் தலைநகரமாகவும் இருந்த காரணத்தினாலும், பெரும் புகழ் பெற்றுள்ளது. இன்றும், சில சமயங்களில் இதன் பழைய பெயர்களான “காஞ்சியம்பதி” என்றும் “கொஞ்சிவரம்” என்றும் அழைக்கப்படுகிறது.வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், இந்நகரை “ஆயிரம் கோயில்களின் நகரம்” என்றே அறிந்து வைத்துள்ளனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து சுமார் 72 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்நகரத்திற்கு செல்வது எளிது.

காஞ்சிபுரம்

வேடந்தாங்கல் – உலகமே பறவைகள்! பறவைகளே உலகம்!

தமிழ் நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தின் அருகாமையில் ஒரு சிறிய குக்கிராமத்தில் அமைந்துள்ள வேடந்தாங்கல் ஒரு சிறப்புவாய்ந்த பறவைகள் சரணாலயமாக அறியப்படுகிறது.
வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயம் (அதிகாரப்பூர்வமாக ஏரிகள் பறவைகள் சரணாலயம்) நாட்டில் உள்ள மிகவும் பழமையான சரணாலயங்களில் ஒன்றாக திகழ்கிறது.
அது எவ்வாறு சிறந்த நிலையில் உள்ளது என்பதை 250 ஆண்டுகளுக்கு முன் இருந்து உள்ளூர் மக்களால் பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிற ஒன்று என்பதன் மூலம் அறியலாம்.
சரணாலயம் அமைந்துள்ள பகுதி சென்னையில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் 74 ஏக்கருக்கும் அதிகமான அளவில் பரவியுள்ளது. வேடந்தாங்கல் ஒரு அற்புதமான சாலை இணைப்பை பெற்றிருக்கிறது.

வேடந்தாங்கல்
சென்னையில் இருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள் வேடந்தாங்கலை அடைய முடியும். சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதி நில உரிமையாளர்கள் மற்றும் உள்ளூர் அரசர்களால் வேட்டையாடும் பகுதியாக உபயோகப்படுத்தப்பட்டு வந்தது என்பதாக வரலாறு சொல்லுகிறது.
இந்த இடத்தின் பெயர் வரலாற்று உண்மையை உறுதிப்படுத்துகிறது. தமிழ் வார்த்தையான வேடந்தாங்கல், “வேட்டையாடும் களம்” என்ற பொருள்பட மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
வேடந்தாங்கல் பகுதியில் இடம்பெயர்ந்து வரும் பல்வேறு வகையான பறவைகளை ஈர்க்க சிறிய ஏரிகள் கொண்ட கட்டமைப்பாக அமைந்துள்ளது. வேடந்தாங்கல் பகுதியில் பறவை இனங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இது ஒரு பறவை சரணாலயமாக மாற்றப்பட்டது.
வேடந்தாங்கல் பகுதியை பறவைகள் சரணாலயம் என அறிவித்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அரசாணை வெளியிடப்பட்டது, அன்று முதல் இக்கிராமம் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாறியது.
பல்வேறு வகையான பறவை இனங்களுக்கு புகலிடமாக உள்ள வேடந்தாங்கல், புலம் பெயர்ந்து வரும் பறவை இனங்களான பின்டைல், நீல வண்ண இறகு பறவை, கார்கனெய், சாம்பல் வாலாட்டி, மற்றும் பொதுவான சாண்ட்பைப்பர் போன்ற பறவை இனங்களுக்கு இனவிருத்தி கால புகலிடமாக அமைந்துள்ளது.
வேடந்தாங்கலில் இருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கரிகில்லி பறவைகள் சரணாலயம். சுற்றுலா பயணிகள் ஒரே நாளில் இரண்டு பறவைகள் சரணாலயத்தையும் சுற்றி பார்க்குமாறு திட்டமிட்டுகொள்ளலாம்.

என்ன……போக இப்போதே தயாரா…..

நான் பார்த்த சென்னை (காட்சி 15) விரைவில் வெளியாகும்.

பிரிவுகள்:prabuwin

நான் பார்த்த சென்னை (காட்சி 13)


அண்ணா நூற்றாண்டு நூலகம்

anna-library

சென்னையில் நான் பார்த்து வியந்த மற்றொரு இடம் அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழக மக்களால் அன்புடன் “அண்ணா” என்றழைக்கப்படும் முன்னாள் தமிழக முதலமைச்சர் சி. என். அண்ணாதுரையின் 102வது பிறந்த தினத்தை முன்னிட்டு, 2010ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் தேதியன்று அந்நாள் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டதாக இங்குள்ள நினைவுக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் பெரிய நூலகங்களில் முதன்மையான நூலகமாக அண்ணா நூற்றாண்டு நூலகம் திகழ்வதாக இங்கு பணி புரியும் கோவிந்தன் கூறினார். கால்கோள் விழா முன்னாள் தமிழக முதல் அமைச்சர் மு.கருணாநிதியால் 2008ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16ஆம் நாள் அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கப்பட்டதாக மேலும் கூறினார்.

நூல்கள் மற்றும் கற்பதில் அண்ணா கொண்ட பற்று மற்றும் தீராத ஆர்வத்தை மரியாதை செய்யும் பொருட்டும், அவரது நூற்றாண்டை நினைவுறுத்தும் விதமாகவும் “அண்ணா நூற்றாண்டு நூலகம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

3.75 லட்சம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள நூலகம் தரைத்தளம் நீங்கலாக 8 தளங்களைக் கொண்டது. தற்சமயம் பல்வேறு துறை சார்ந்த 5 லட்சம் புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள நூலகம், மிகவும் குறுகிய காலத்தில் 12 லட்சம் புத்தகங்களாக அதிகரிக்கும் நோக்கத்துடன் இயங்குகிறது. இது தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

நூலகத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக “உலக இணைய மின் நூலகத்துடன்” (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் 31 மாவட்ட நூலகங்களையும் கன்னிமரா நூலகத்துடன் (இந்த நூலகம் பற்றி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.) இணைக்கும் கணினி இணைப்பு தற்போது செயலாக்கத்தில் உள்ளது. இந்த அனைத்து இணைப்புகளும் “அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன்” இணைக்கப்படும்.

விடுமுறை நாள்களில் சென்னைவாசிகளின், சென்னைக்கு வந்து செல்வோரின் பயனுள்ள பொழுதுபோக்காக அறிவுப்பசிக்கு விருந்தாக அமைந்துள்ளதே கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். சிறுவர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், பெரியவர்கள், வயதானவர்கள் என்ற அனைத்துத் தரப்பினரையும் தன்னகத்தே ஈர்க்கும் தனிச்சிறப்புடன் திகழ்கிறது.

உலக டிஜிட்டல் நூலகத்துடன் இணைப்புப் பெறப்பட்டுள்ளதால் உலகிலுள்ள புகழ்பெற்ற பல நூலகங்களில் உள்ள தகவல்களைச் சேகரிக்க முடியும். பழைமையான ஓலைச் சுவடிகள், அரிய நூல்கள், கையெழுத்துப் பிரதிகள், வரைபடங்-களுக்கு யுனெஸ்கோவின் உலக டிஜிட்டல் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட கணினிகள் உள்ளன. மொத்தத்தில் அறிவுப் புரட்சிக்கு வித்திடும்வகையில் அமைக்கப்-பட்டுள்ளது.

anna-library

இந்த நூலகம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. எட்டு அடுக்குகள். ஒவ்வொன்றிலும் அருமையான புத்தகங்கள். மருத்துவமா,பொறியியலா, ஆங்கில இலக்கியமா, கணிப்பொறியியலா, எந்தத் துறையில் நூல் வேண்டும்? ஒரு தளத்திற்கு எழுபதாயிரம் முதல் எண்பதாயிரம் புத்தகங்கள். மொத்தம் ஆறு லட்சம் நூல்கள். குழந்தைகளுக்கென்று தனிப்பகுதி. பத்திரிகைகளுக்குத் தனிப் பகுதி. ஒரு முறை சென்று சுற்றிப்பார்த்து வந்தாலே புத்தகத்தின் அருமை தெரிந்தவர்களுக்கு அப்பா, இவ்வளவு பெரிய நூலகமா, இவ்வளவு வசதிகளுடனா என்ற மலைப்பு ஏற்பட்டுவிடுகிறது. எட்டாவது அடுக்கில் மட்டும் நிர்வாகம். பிற  அடுக்குகளில் எல்லாம் நல்ல நல்ல புத்தகங்கள்.

ஒவ்வொரு கட்டிடத்திற்கும் செல்ல படிகள், தானியங்கி (லிஃப்ட்),  நகர்வுதளம் (எஸ்கலேட்டர்)  உள்ளது. நாளிதழ்கள், சஞ்சிகைகள் என பொது நூல்களுக்கான தளமும் அங்கு உள்ளது. 2-வது தளத்தில் தமிழ் நூல்களும், 3-வது தளத்தில் ஆங்கில நூல்களும், 4-வது தளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல்வேறு மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. 5-வது தளத்தில் பத்திரிகைகளின் பழைய பதிப்புகளும், 6-வது தளத்தில் அரசு ஆவணங்களும், 7-வது தளத்தில் நன்கொடையாளர்கள் கொடுத்த நூல்கள் மற்றும் காணொளி, ஒலித் தொகுப்புகளும் இடம் பெற்றுள்ளன. புகைப்படத் தொகுப்புகளும், பிறவும் 8-வது மாடியில் அமைந்திருக்கின்றன.அனைவரும் செல்ல வேண்டிய மிக முக்கியமான இடம் இந்த அண்ணா நூற்றாண்டு நூலகம்.

நான் பார்த்த சென்னை (காட்சி 14) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:prabuwin

அனைத்து தமிழ் மக்களுக்கும் சமர்ப்பணம்” on YouTube


Posted from WordPress for Android

பிரிவுகள்:prabuwin

ஏசி வாசிகள் கவனத்திற்கு..


மிகச்சிறப்பான இந்தப் பதிவு வியத்தகு விடயங்கள் பலவற்றை இலகுவாக விளங்க வைக்கின்றது.நன்றி திருமதி. மஹா.வி அக்கா.

இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்

images

வெயில் காலங்களில் , புழுக்கம் தாங்க முடியாமல் , ஏசி அறைகளில் தஞ்சம் புகுபவர்கள் ஏராளம்! அது என்ன ஏசி??  ஏசி என்ற ஆங்கில சொல்லை , அழகு தமிழில் , காற்றுச்சீரமைப்பி என்று சொல்ல வேண்டும்! ஆம் , நம் அறையில் உள்ள காற்றை , நாம் விரும்பும் வண்ணம் சீரமைத்து தருவதே இந்த ஏசியின் தலையாய வேலை! இந்த ஏசி என்பது யாது? அது  என்ன மாயம் , என்ன மந்திரம் செய்து , நமக்கு ஊட்டியில் இருப்பது போன்ற குளு குளு உணர்வை தருகிறது என்று ஐயம் தோன்றினால் மேற்கொண்டு படியுங்கள்.. உங்களுக்கு தான் இந்த பதிவு!

நிறைய வகையான ஏசிகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன..
அவை ,
1​) ஜன்னல் ஏசி(Window Ac)

ac2
2) பிளவு ஏசி(Split Ac)

ac3
3) கோபுர ஏசி(Tower Ac)

ac5
4) கேசட் ஏசி(Cassette Ac)

ac4
5) கன சதுர ஏசி(Cube Ac)

ac6

இடத்திற்கு , இடத்தின் வசதிக்கு தகுந்தாற் போல் , ஏசியின் எந்த  வகை என்று தீர்மானம் செய்யப்பட்டு ,நிறுவப்படுகிறது! என்ன தான் வகை வகையாக ஏசிகள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டாலும் , அவற்றின் உள்ளே , ஒரே மாதிரியான வேலை தான் நடக்கிறது! அப்படி என்ன தான் வேலை அதனுள்ளே நடக்கிறது என்பதனை தெரிந்து கொள்ளும் முன்னே , ஏசியின் உள்ளிருக்கும் பாகங்களை , அக்கு வேர் …

View original post 996 more words

பிரிவுகள்:prabuwin

இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை


banana

இரவு உணவுக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிடுவதை பலரும் பழக்கமாக கொண்டிருப்பார்கள்.

என்னதான் ருசியான உணவை சாப்பிட்டாலும், கடைசியில் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால்தான் பலருக்கு உணவு உண்டதற்கான திருப்தி கிடைக்கும்.

ஆனால், இரவில் வாழைப்பழத்தை சாப்பிடுவதால் சில உடல்நலப்பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

ஏனெனில், அதில் உள்ள Fructose என்ற சர்க்கரை சத்து கொழுப்பாக மாறி நமது உடலில் நிரந்தரமாக தங்கி விடும். இதன் காரணமாக உடலில் கலோரி அதிகமாகும். உடல் எடை அதிகரிக்கும்.

ஒரு சிலர் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதை பழக்கமாக கொண்டவர்கள் சாப்பிட்ட உடனே வாழைப்பழம் சாப்பிடக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம்.

இரவு உணவிற்குப் பின் வாழைப்பழம் சாப்பிடுவதால், சாப்பிட்ட உணவு விரைவாக செரிமானம் ஆகும், காலைக்கடன்களை எந்தவித சிரமமும் இல்லாமல் செய்ய முடியும்.

வயிற்று உபாதை காரணமாக காலைக்கடன்களை முடிக்க சிரமப்படுபவர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள்,பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு

வயதானவர்களும், நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

பிரிவுகள்:ALL POSTS குறிச்சொற்கள்:

பருவமழை என்பது யாதெனின்


பல வியத்தகு தகவல்களை உள்ளடக்கிய இந்தப் பதிவை “இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்” வலைப் பதிவிலிருந்து மீள் பிரசுரம் செய்கின்றேன்.இயற்கையை அறிபவனே/அறிபவளே வாழ்க்கையை ரசிக்கின்றான்/ரசிக்கின்றாள்.

நன்றி மஹா அக்கா.

இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்

rain

மழையை  விரும்பாதவர் இவ்வுலகில் யாவரும் இலர்! கார் மேகத்தை கண்டு விட்டாலே , மயில் தன் அழகிய தோகையை விரித்து நடனம் ஆடுமாம்! அது சரி , அது என்ன கார் மேகம்? கார் மேகம் என்றால் கருத்த மழை மேகம்! பொதுவாக , மேகம் , வெள்ளை நிறத்தில் அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும்! மழை காலங்களில் மட்டும் , இந்த மேகத்துக்கு யார் கருப்பு வண்ணம் அடித்து விடுகிறார்கள் என்ற ஐயம் மேலிடுகிறது அல்லவா! கார் வண்ண மேகத்தின் ரகசியத்தை முதலில் அறிந்து கொள்வோம்!

அதற்கு முன்னே ,மேகம் என்பது என்ன என்று முதலில் அறிந்து கொள்வோம். சிறு சிறு தண்ணீர் துளிகள் மற்றும் சிறு சிறு பனிக்கட்டி படிகங்களும் பெருந்திரலாக காற்றில் மிதப்பதே  மேகம்!சிறு சிறு தண்ணீர் துளிகளும் , பனிக்கட்டி படிகங்களும் எப்படி மேகமாக உருவாகுகிறது?? ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.. ஒரு கேள்வி எழுந்தால் , அதற்கு விடை இல்லாமலா இருக்கும்.. கேளுங்கள்.. சூரியனின் வெப்பத்தை தாங்க மாட்டாமல் , நிலத்தில் இருக்கும் தண்ணீர் , கடல் , குளம் , ஆறு ஆகியவற்றில் இருக்கும்  தண்ணீர்  , மரங்கள் , செடிகள் , கொடிகள் வெளியிடும் தண்ணீர் என்று அனைத்தும் ஆவியாகி விடுகின்றன.. இவ்வாறு ஆவியாகும் நீரில் , சிலது , விண்ணோக்கி பயணப்படுகின்றன !அவ்வாறு மேலெழும்பும் நீராவி , மேலே மேலே செல்ல செல்ல…

View original post 1,037 more words

பிரிவுகள்:prabuwin

நான் பார்த்த சென்னை (காட்சி 12)


மஹாபலிபுரம்
mahabalipuram
கடற்கரையோரம் ஓர் புராதன சிற்பக்கலையை பார்க்க விரும்பினால் இது தான் உங்களின் சரியான தேர்வாக இருக்கும்.மஹாபலிபுரம் என்ற பெயருடன் தற்போது அறியப்படும் ‘மாமல்லபுரம்’ நகரம் சென்னையை ஒட்டி தெற்கே காஞ்சிபுரம் மாவட்டத்தின் அங்கமாக வீற்றிருக்கிறது. இந்நகரம் 7 ம் நூற்றாண்டில் பல்லவ வம்சத்தின் துறைமுக நகரமாகவும் சிற்பக்கலை கேந்திரமாகவும் மஹோன்னத கீர்த்தியுடன் திகழ்ந்திருக்கிறது என்று இங்குள்ளவர்கள் கூறுகின்றார்கள். இன்று தமிழ்நாட்டின் மிக முக்கியமான சிற்பக்கலை சார்ந்த வரலாற்று சுற்றுலாத்தலமாக உலகளாவிய அளவில் புகழ் பெற்றிருக்கும் இந்த நகரம் சர்வதேச ‘யுனெஸ்கோ’ அமைப்பின் மூலம் உலகப்பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
பெயர்க்காரணம்
மஹாபலி என்னும் அசுரகுல அரசன் இப்பகுதியை புராண காலத்தில் ஆண்டு வந்ததாகவும் பின்னர் மஹாவிஷ்ணு அவனை வதம் செய்ததாகவும் ஐதீகக்கதைகள் கூறுகின்றன.
எனவே இவ்வூருக்கு மஹாபலிபுரம் என்ற ஆதிப்பெயர் இருந்து வந்தததாக நம்பப்படுகிறது. மஹேந்திரவர்ம பல்லவரின் மகனாகிய முதலாம் நரசிம்மருக்கு மாமல்லர் என்ற பெயர் உண்டு.
ஒரு துறைமுக நகராக விளங்கிய இந்த நகரை கலைநகராக மாற்றிய அவரது பெயரே பின்னாளில் மாமல்லபுரம் என்று இதற்கு வழங்கப்பட்டதாக கருதப்படுகிறது. ‘மல்லை’ என்ற பெயரிலும் தற்போது இது சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது.
வரலாற்றுப்பின்னணி
திராவிட பூமியில் சேர, சோழ, பாண்டியர்களுக்கு அடுத்தபடியாக பல்லவ ராஜவம்ச மன்னர்கள் 3ம் நூற்றாண்டிலிருந்தே பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில் தமிழ் நாட்டின் வடகோடியை ஆண்டு வந்துள்ளனர்.
இந்த வம்சத்தின் வழித்தோன்றல்களாக வந்த பிற்காலப்பல்லவர்கள் காலத்தில்தான் இந்த மாமல்லபுரம் ஒரு முக்கிய நகரமாக உருமாறி கோலோச்சியிருக்கிறது.
மஹேந்திரவர்ம பல்லவர் மற்றும் நரசிம்மவர்ம பல்லவர் ஆகிய இரு மன்னர்கள் இன்றும் நாம் மாமல்லபுரத்தில் காணும் சிற்பக்கலை பொக்கிஷங்களின் பின்னணியோடு நெருங்கிய தொடர்புடையவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் காலத்தில் கலை, இலக்கியம், கவிதை, நாடகம் போன்ற கலைகள் யாவும் போற்றி வளர்க்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
நிஜக்கதையா, வரலாறா, கற்பனையா என்றெல்லாம் பிரித்தறிய முடியாத வண்ணம் தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர் கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் எனும் அற்புதமான புதினத்தின் ‘கதைக்களத்தில்’ மாமல்லபுரம் இடம் பெற்றிருப்பதை வாசித்தவர் அறிவர்.
அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிகழ்வுகள் வெறும் கற்பனையாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை இந்த நகரில் மிச்சமிருக்கும் சிற்பச்சான்றுகள் உரைக்கின்றன. மற்ற எல்லா தமிழ் நகரங்களையும் போன்றே தொகுக்கப்படாத வரலாறும், எழுதப்படாத கீர்த்தியும்தான் மாமல்லபுரத்திற்கும் என்றாலும், இங்கு வரலாறு கல்லில் வடிக்கப்பட்ட கம்பீர கலைச்சின்னங்களில் பிரம்மாண்டமாக வாழ்கிறது.
இதுதான் மாமல்லபுரத்தின் பெருமை. எனவே, கலாரசிகர்களுக்கு நவீன இரைச்சல்களை விலக்கி உளிகளின் ஓசையையும், பல்லவ மன்னர்களின் நோக்கையும் கற்பனை செய்வதில் நிச்சயம் சிரமம் இருக்க முடியாது.
சூழலை முயன்று விலக்கி சிற்பக்கலை நேர்த்தியை தரிசிக்க வேண்டியிருப்பது காலத்தின் கட்டாயமன்றி வேறில்லை. எனினும் காலத்தை ஊடறுத்து நம் முன் மௌனக்கதை பேசும் மாமல்லபுரம் சிற்பப்படைப்புகள் நம்மை பெருமையுடன் கண் கலங்க சக்தி கொண்டவை -அதாவது வரலாற்றுக்கண் கொண்டு நோக்கும்போது.
ஒரு மஹோன்னத பாரம்பரிய ஸ்தலமாக இந்த நகரை போற்றி பாதுகாத்து அதை அவ்வண்ணமே பார்வையாளர்களும் அணுக தார்மீக நெறியூக்கம் செய்ய இயலாத மாயச்சூழலில், வரலாற்று சின்னங்களும் அவை வீற்றிருக்கும் ஏதோ ஒரு வகையில் பொலிவிழந்து காட்சியளிப்பது ஒரு இமாலய சோகம்.
யாவும் விட்டுச்சென்றனர் நம் முன்னோர், எனில் அவற்றை எவ்வகையில் நாம் காக்கின்றோம் என்பதே பெரும்பான்மை தமிழ் உள்ளங்களில் ஊமைக்கேள்வியாய் வீற்றிருக்கிறது.
18ம் நூற்றாண்டு வரையில் மஹாபலிபுரத்தின் வரலாற்று கலைச்சின்னங்கள் வெளியுலகிற்கு தெரிந்திருக்கவேயில்லை. ஏனெனில் இந்த படைப்புகளை ரகசியமாக உருவாக்குவதென்பதும் முதலாம் நரசிம்மர் மற்றும் ராஜசிம்மர் ஆகியோரது நோக்கமாக இருந்திருக்கிறது.
வரலாற்றுச்சின்னங்கள், கோயில்கள் மற்றும் சிற்பப்படைப்புகள்
கலை ரசிகர்கள் மற்றும் வரலாற்றுப்பிரியர்களை பிரமிக்க வைக்கும் ஏராளமான அம்சங்கள் மாமல்லபுரத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள சின்னங்களை மண்டபங்கள், கோயில்கள், ரதக்கோயில்கள் என்று பல வகையாக பிரிக்கலாம்.
பஞ்ச பாண்டவ ரதங்கள், வராக மண்டபம் மற்றும் கடற்கரை கோயில் ஆகியவை இங்குள்ள குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். மேலும், மாமல்லபுரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் சோழமண்டல் கலைக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
கடற்கரையை ஒட்டியே மாமல்லபுரம் கலை நகரம் பல்லவ மன்னர்களால் எழுப்பப்பட்டிருப்பது இதன் மற்றொரு விசேஷ அம்சமாகும். வெளிநாட்டுப்பயணிகள் பலர் இந்த கடற்கரையில் காலை முதல் மாலை வரை ஓய்வெடுப்பதையும், நகர் முழுதும் சுற்றித்திரிவதையும் பயணிகள் பார்க்க முடியும். நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் ஒரு துர்க்கையம்மன் கோயிலும் அமைந்துள்ளது.
இங்கு பல அழகிய சிலைகளை பார்க்கலாம். புலிக்குகை மற்றும் முதலைப்பண்ணை போன்றவை பயணிகள் விரும்பக்கூடிய இதர சிற்றுலாத்தலங்களாக அமைந்துள்ளன.
மாமல்லபுரத்திற்கு எப்படி செல்லலாம்?
சென்னைக்கு மிக அருகாமையிலும் பாண்டிச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் பாதையிலும் அமைந்துள்ளதால் மிக சுலபமாக இந்த வரலாற்று நகருக்கு விஜயம் செய்யலாம். செங்கல்பட்டு வரை ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்து அல்லது டாக்சி மூலமாகவும் இங்கு வரலாம்.

எனக்கு மிகவும் பிடித்த இடம் என்று இதைக்கூறுவேன்.எனது உறவினர்களுக்கும் மஹாபலிபுரம் மிகவும் பிடித்தமான இடம் என்று கூறுவார்கள்.இந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு எனது நன்றிகள்.

நான் பார்த்த சென்னை (காட்சி 13) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, சென்னை
%d bloggers like this: