தொகுப்பு
கூகுள் எந்திர நாய் (ரோபோ நாய்)
தொழில்நுட்பங்களில் முன்னணியில் திகழும் கூகுள் நிறுவனம்,நான்கு கால்களில் மேடுபள்ளங்கள் நிறைந்த கடினமான பகுதிகளில் கூட நடந்து செல்லகூடிய திறன் படைத்ததாக எந்திர நாயை (ரோபோ நாய்) உருவாக்கியுள்ளது.இந்த எந்திர நாயின் பெயர் எல்.எஸ் 3 . அதாவது லெக்ட் ஸ்குவாட் சப்போர்ட் சிஸ்டம்(Legged Squad Support System) என்பதன் சுருக்கம்.
வீரர்களின் ஆயுதங்களை தூக்கிச்செல்வது, மற்ற கனமான பொருட்களை சுமந்து செல்வது ஆகிய பணிகளை இதனால் செய்ய முடியும்.
போர்க்களம் மற்றும் மீட்பு பணிகளுக்கான இடங்களில் இந்த ரோபோ நாய் அச்சமின்றி நடந்து சென்று சொன்ன வேலையை செய்யும். மேலும் கீழே விழுந்தாலும் தானாக சமாளித்து நிற்கும் தன்மை கொண்டது.
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வேலைப்பளு காரணமாக, நான் பார்த்த சென்னை (காட்சி 5) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.
செவ்வாய் கிரகத்தில் உறை பனி இருப்பது கண்டுபிடிப்பு
செவ்வாய் கிரகத்தில் உறை பனி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அறிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் அதி உறைநிலையிலான கார்பன் டை ஆக்சைடு அல்லது உறை பனி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் இருக்கும் உறை பனியானது -125 டிகிரி செல்சியலில் உறைந்துள்ளது.
இவ்வாறு இருந்தால் செவ்வாய் கிரகத்து மேகங்களில் கார்பன் டை ஆக்சைடு கலந்து இருப்பது உறுதியாகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
செவ்வாய் கிரகத்தின் தென் துருவப் பகுதியில் குளிர்காலத்தில் இத்தகைய பனிப்பொழிவும், உறைபனியும் ஏற்படுவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு செவ்வாய் கிரகம் பற்றிய நாசாவின் ஆய்வுகளிலும் இத்தகைய உறைபனி வடபகுதியில் கண்டறியப்பட்டது.
இத்தகைய உச்சகட்ட உறைபனி வெப்பநிலையானது அனேகமாக சூரியக் குடும்பங்களில் செவ்வாய் கிரகத்தில் மட்டும் தான் இருக்கக் கூடும் என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள்.
சரும அலர்ஜிக்கான சிகிச்சைகள்
சூரியனிடமிருந்து வரும் கதிர்கள் சருமத்தில் படுவதால், உடுத்தும் ஒரு வித ஆடையால், சில வகையான காய்கறிகளால் அலர்ஜி ஏற்படலாம்.
ஏனென்றால் சருமமானது மிகவும் உணர்ச்சியுள்ளது, அதில் எளிதாக அலர்ஜியானது வந்துவிடும். இத்தகைய சரும அலர்ஜியை குணப்படுத்த சரியான பராமரிப்பு இருந்தால் போதும். அதற்கு வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களை வைத்தே சரி செய்யலாம்.
தண்ணீர்: நிறைய தண்ணீர் குடிக்கவும். சரும அலர்ஜிக்கு தண்ணீர் தான் சிறந்த மருந்து. இது உடலில் உள்ள டாக்ஸினை நீக்குகிறது. இதனால் உடலில் சரும அலர்ஜி குணமடையும்.
எண்ணெய்: இரவில் தேங்காய் எண்ணெயை அலர்ஜி ஏற்படும் இடத்தில் தடவி விட்டு விட வேண்டும். இரு ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல். மேலும் உடுத்தும் உடையை காட்டனாக இருந்தால், எந்த ஒரு அலர்ஜியும் வராது.
எலுமிச்சைப் பழச்சாறு: அலர்ஜி உள்ள இடத்தில் பஞ்சால் எலுமிச்சைப் பழச்சாற்றை தொட்டு தடவினால், அலர்ஜி போய்விடும். வேண்டுமென்றால் படுக்கும் முன் எலுமிச்சைப் பழச்சாற்றை, தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வந்தால், அலர்ஜி போய்விடும்.
வேப்ப இலை: இரு ஒரு சிறந்த ஆன்டி-பாக்டீரியல் மற்றும் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. சருமத்தில் அலர்ஜி குணமடைய, வேப்ப இலையை 6-8 மணிநேரம் நீரில் ஊற வைத்து, பிறகு பேஸ்ட் போல் செய்து, சருமத்தில் தடவி 30-45 நிமிடம் ஊற விட்டு, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
கசகசா: கசகசாவை அரைத்து, சிறிது எலுமிச்சை சாற்றுடன் கலந்து சருமத்தில் தடவினால், அலர்ஜி போய்விடும்.
குளித்தல்: சருமத்தில் ஏற்படும் அலர்ஜியை போக்க வேண்டுமேன்றால் நன்கு குளிக்க வேண்டும். அதுவும் சூடான நீரிலோ அல்லது வெதுவெதுப்பான நீரிலோ குளிக்க கூடாது. இது மேலும் சருமத்தில் பிரச்சனையை உருவாக்கும். குளிர்ந்த நீரில் குளித்தால் அலர்ஜி உள்ள இடத்தில் தோன்றும் அரிப்பு வராமல் ரிலாக்ஸாக இருக்கும்.
ஆகவே சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டால், இவ்வாறெல்லாம் செய்து குணப்படுத்தலாம். இவ்வாறு செய்தும் சரியாகவில்லை என்றால் மருத்துவரை அணுகுவதே நல்லது.
ஐஸ்கிரீம் {குளிர்களி} சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காத ஆட்களே இல்லை இருக்க மாட்டார்கள். ஆனால் பிடிக்கும் என்று அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை தான் அதிகரிக்கும்.
ஆகவே கட்டுப்பாட்டோடு அதை சாப்பிட வேண்டும். சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட விடமாட்டார்கள்.
இதற்கு காரணம் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் பல் சொத்தையாகி விடும் அல்லது சளி பிடிக்கும் என்பதால். ஆனால் ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது.
1. ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. எப்படியென்றால் ஐஸ்கிரீமை பால் கொண்டு செய்வதால் தான். இதை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைவதோடு, உடலுக்கு சக்தியையும் தருகிறது.
2. ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால் அது பற்களை பாதுகாப்பதுடன், ஈறுகளும் நன்கு வலுவடைகிறது.
3. சொக்லேட் ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் சிறந்தது. பொதுவாக சொக்லேட் சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லது. அதிலும் சொக்லேட் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் சரியாகிவிடும்.
4. ஒரு கரண்டி ஐஸ்கிரீமில் வைட்டமின் ஏ, டி, கே மற்றும் பி12 ஆகியவை உள்ளது. ஆகவே இதை சாப்பிட்டால் பார்வைக் கோளாறு, சிறுநீரக கோளாறு போன்றவை சரியாகும். மேலும் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதிலுள்ள வைட்டமின் பி12 நினைவு ஆற்றலை அதிகப்படுத்தும்.
5. ஐஸ்கிரீமில் உடலுக்கு தேவையான புரோட்டீன் இருக்கிறது. இதனால் உடலுக்கு தினமும் தேவை, ஏனென்றால் உடலில் உள்ள தசைத் திசுவை தினமும் சரிசெய்ய தேவைப்படுகிறது.
6. சில ஐஸ்கிரீமானது கொழுப்பு குறைவாக உள்ள பாலாடையால் ஆனது. இப்படிப்பட்ட ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
ஆகவே ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு நல்லது என்று புரிந்து கொண்டீர்களா, ஐஸ்கிரீமை சாப்பிடலாம்.
ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். தினமும் சாப்பிட முடியவில்லை என்றாலும், வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுங்கள். இதனால் உடலானது ஆரோக்கியமாக இருக்கும்.
இருதயத்தில் ஏற்படும் அடைப்பு குறித்த சில தகவல்கள்
இருதயம் நம் உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியான ஒன்று. இருதயம் நன்றாக இயங்கினால் மட்டுமே நாம் வளமாக வாழ முடியும்.
இருதயமானது ஒரு தசையும், நாணும் இணைந்த ஒரு உறுப்பு, இதில் நான்கு அறைகள் உள்ளது.
இந்த நான்கு அறைகள் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது. இதில் உள்ள இரத்த நாளங்களில் கொழுப்புப் படிந்து(Atherosclerosis) சிறியதாகும் பட்சத்தில் இருதயம் தனக்குத் தேவையான உணவு கிடைக்காமல் தவிக்கும். அந்தத் தவிப்பே நெஞ்சு வலியாக உருவெடுக்கிறது.
புகை பிடிப்பது இருதய இரத்தநாளங்களை தடிக்கச் செய்து அவை குறுகி விரியும் தன்மையையும் மிகவும் பாதிக்கும். கொழுப்பு படிவது நாளங்கள் எல்லாவற்றையும் பாதித்தாலும் ஓரிரு இடங்களில் மிகவும் குறுகும்(critical stenosis) பட்சத்தில் நெஞ்சுவலி அல்லது திடீரென்று இரத்த அடைப்பு ஏற்பட்டாலும் மாரடைப்பு (Heart attack/ Myocardial infarction) வருகிறது.
நாளங்களில் 50 சதவீதத்திற்கு மேலே அடைப்பு இருந்தாலே சிகிச்சை தேவை. அவற்றிற்கு குறைவாக இருந்தால் உணவு மற்றும் மருந்தினால் குணப்படுத்தலாம்.
உணவில் கொழுப்பு மற்றும் உப்பைக் குறைப்பது, நீரிழிவு நோய் இருந்தால் அதைக் கட்டுப்பாட்டில் வைப்பது, கொழுப்பை குறைக்க மருந்து சாப்பிட்டுவது, ஆரோக்கியமாக உடற்பயிற்சி செய்வது போன்றவை மிக முக்கியம்.
ஆக இரண்டிற்கும் மேற்பட்ட நாளங்களில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாகக் குறுகி இருந்தால் மருந்தாலும், உணவாலும் கட்டுப்படுத்துவது கடினம். குறுகிய நாளங்களை பைபாஸ் (Coronary Artery Bypass Graft (CABG)) சிகிச்சையோ, அஞ்சியோப்லாச்ட்டியோ(angioplasty) செய்து இரத்த ஓட்டத்தை மீண்டும் பெருகச் செய்ய வேண்டும்.
கொட்டாவி
கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக் காற்றை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே வேளையில் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலில் இருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவிடுவதுமான செயலைக் குறிக்கும்.
ஒருவருடன் நாங்கள் உரையாடும் போது அந்த நபர் கொட்டாவி விட்டால் அவர் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்று நினைப்போம்.அவர் எங்களை அலட்சியப்படுத்துகிறார் என்று எங்களுக்குள் எண்ணிக் கொள்வோம்.
ஆனால் உண்மை அதுவல்ல.அவர் எங்கள் பேச்சை உன்னிப்பாக அவதானிக்கிறார் என்பதே அர்த்தம்.எனவே இனி யாராவது கொட்டாவி விட்டால் மகிழ்ச்சியடையுங்கள்.
புதிய ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது?
சில நபர்கள் வெகு சீக்கிரமாக சோர்வடைந்து விடுவர். அதிக வேலைப்பளு, தூக்கமின்மை போன்ற காரணங்களால் சோர்வு ஏற்படுகிறது.
தூக்கமின்மை: குழந்தைகளுக்கு எட்டு முதல் பத்து மணி நேரமும், பெரியவர்களுக்கு ஆறு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவசியம்.
தூக்கத்தில் மூச்சுவிட மறத்தல்: இந்த நிலை மிகவும் குண்டான, புகை பழக்கம் உள்ளவர்களுக்கு வரும். உறக்கத்தில் அடிக்கடி மூச்சு நின்று நின்று வருவதால் இவர்கள் நாள் முழுதும் சோர்வாகவே இருப்பார்கள். எட்டு மணி நேரம் தூங்கினாலும் இரண்டு மணி நேரம் தூங்கிய உணர்வே இருக்கும்.
மாறுபட்ட உணவு: காலை உணவு சாப்பிடாமல் இருத்தல், சரிவிகித உணவு உண்ணாமை, நேரம் தவறி சாப்பிடுதல், அதிகபடியான அசைவ உணவு, உணவு அலர்ஜி இதற்கு மருத்துவம் கட்டாய காலை உணவு, பழங்கள், அளவுடன் அசைவம், அலர்ஜி உள்ள உணவை தவிர்த்தல்.
ரத்த சோகை: பெண்களுக்கு, குழந்தைகளின் சோர்வுக்கு மிக முக்கிய காரணம் இதற்கு இரும்புச் சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.
தேநீர்: கொஞ்சம் கொஞ்சமாக நிறைய தடவை குடிக்கும் தேநீர் ரீ போன்றவை முதலில் ஒரு தற்காலிக உற்சாகம் தந்து பின் இறுதியில் சோர்வையே தரும்.
நீரிழிவு நோய்: 35 வயதை கடந்தாலே இதுவும் ஒரு சோர்வுக்கு ஒரு காரணம்.
உடலில் நீர், உப்பு பற்றாகுறை: போதிய அளவில் நீர் குடிக்காமல் இருப்பது மற்றும் வியர்வையில் நீர், உப்பு இழப்பு இதற்குரிய மருத்துவம். ஒரு நாளைக்கு 3 லிட்டர் நீர் குடித்து வர வேண்டும்.
உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக்கும் குங்குமப்பூ
குங்குமப்பூவில் உள்ள மூலப்பொருள்கள் மூளை உள்பட உடல் உறுப்புகள் அனைத்தையும் சுறுசுறுப்பாக்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
குங்குமப்பூவுக்கு பல மருத்துவ குணங்கள் இருப்பது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கனடாவின் அல்பர்ட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சிரிஸ் போவர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வு சமீபத்தில் நடந்தது.
உடல் உறுப்புகள் குறிப்பாக மூளையின் செயல்பாட்டை குங்குமப்பூ துரிதப்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது. குங்குமப்பூவில் உள்ள பொருள்கள் மூளையில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் பாதுகாப்பதால் மூளை செயல்பாடு அதிகரிப்பதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இதனால் நரம்பு மண்டலமும் வலுவடையும் என்கின்றனர். இதுபற்றி அவர்கள் மேலும் கூறுகையில், மூளை செல்கள் பாதிப்படைவதால் ஏற்படும் நிலை மைலின் எனப்படுகிறது. இந்த நிலையில் நரம்புகளைச் சுற்றி ஒரு மெல்லிய திரை போன்ற கவசம் உருவாகும்.
இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். வில் உள்ள பொருள்கள் இந்த திரை போன்ற கவசம் உருவாகாமல் தடுக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு குங்குமப்பூ கலந்த மருந்து கொடுக்கும்போது, பாதிப்பில் இருந்து அவர்கள் விடுபட முடிகிறது. மூளை செல்களை குங்குமப்பூ பாதுகாக்கிறது. நரம்பு மண்டலத்துக்கும் வலு சேர்க்கிறது என்றனர்.
20 நொடிகளில் கண்ணின் நிறத்தை மாற்றலாம்
விரைவில் அதுவும் சாத்தியம் ஆகும். முழுக்க முழுக்க கணணி உதவியுடன் இந்த சிகிச்சை நடக்கிறது என்றார்.
அண்மைய பின்னூட்டங்கள்