தொகுப்பு

Archive for the ‘அவலம்’ Category

இலங்கைத் தமிழ் மாணவர்களின் துயரத்தைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத சூர்யா!


இலங்கையை விட்டு தமிழகத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு ஏதிலி முகாமில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் மாணவ மாணவிகளுக்கு அகரம் அறக்கட்டளை உதவி புரிந்து வருகின்றது.

குறித்த மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் மாணவர்கள் தமது கஷ்டங்களை சொல்லும் போது அகரம் அறக்கட்டளை உரிமையாளர்களான சூர்யா மற்றும் சிவகுமார் உட்பட பலர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

********************************************************************************************

பிரிவுகள்:ALL POSTS, அவலம், சினிமா குறிச்சொற்கள்:

யானையை உண்ணும் மனிதர்கள்


தலைப்பை பார்க்கும் போதே தலை சுத்துகின்றதா?! கீழே உள்ள படங்களை பாருங்கள்.இன்னும் சுத்தும்.

சிம்பாவே நாட்டில் வறுமை அதிகம்.ஒரு யானை இறந்து விட்டால் ஊர் மக்கள் ஒன்று கூடி அந்த யானையை பங்கு போட்டு வீட்டுக்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிடுவார்கள். சுவாரசியம் என்ன தெரியுமா?!இதன் சுவை கோழிக்கறியின் சுவை போலவே இருக்குமாம்.

பிரிவுகள்:ALL POSTS, அவலம், உலகம், புகைப்படங்கள் குறிச்சொற்கள்:,

வன்னியில் போர் அழிவைப் பார்த்து அதிர்ந்துபோன துடுப்பாட்ட வீரர்கள்


இலங்கை துடுப்பாட்ட  அணி வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோருடன் முன்னாள் இங்கிலாந்து அணி வீரர்கள் இயன் பொத்தம் மற்றும் மைக்கல் வோன் ஆகியோர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வடக்கில் மாங்குளம் பிரதேசத்துக்குச் சென்றிருந்தனர்.

“பவுண்டேஷன் ஒஃப் குட்னஸ்’ என்ற அமைப்பொன்றின் மூலம் இலங்கை துடுப்பாட்ட  அணி வீரர்கள் ஆரம்பித்துள்ள சமுகப் பணியின் ஒரு கட்டமாக அவர்களின் பயணம் அமைந்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு சிறார்களிடம் துடுப்பாட்ட  திறமைகளை ஊக்குவிப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்ற தொனிப்பொருளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இயன் பொத்தம், வடக்கில் போரினால் ஏற்பட்டுள்ள அழிவுகளைப் பார்த்துத் தான் அதிர்ந்து போனேன். இவ்வாறான அழிவு ஏற்பட்டிருக்கும் என நான் கனவில் கூட நினைத்துப்பார்க்க வில்லை.இவர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.இங்குள்ள வீடுகள் முற்றாக தரைமட்டமாகியிருக்கின்றது. மிகப்பெரிய பரந்த வெளியாக எல்லாம் காட்சியளிக்கின்றது.அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைக் காணவில்லை. இன்னும் பதினைந்து ஆண்டுகளில் இவர்களை முரளி,சங்கா போன்ற சிறந்த துடுப்பாட்ட வீரர்களாக பார்க்க விரும்புகிறேன்.
வடக்குச் சிறார்களிடமுள்ள திறமைகள் தம்மைக் கவர்ந்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த முப்பது வருடங்களாக தெற்கில் மக்கள் அனுபவித்த வசதிகள் வடக்கு,கிழக்கு மக்கள் அனுபவிக்கவில்லை என  இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்தார். அந்த வசதிகளை அவர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பது தமது கடமையென்றும் அவர் கூறினார்.

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள இலங்கைக்கு  மேற்குலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்று நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான முரளிதரன் கூறினார்

இந்த உதவிகள் மூலம் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏதேனும் நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கவலை


obama

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையில் நடக்கும் மோதலில் அகப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலைமை குறித்து தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

இன்று வெள்ளை மாளிகையில் அவர் ஆற்றிய செய்தி ஊடகங்களுக்கான உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் தம்வசம் உள்ள ஆயுதங்களை களைந்து தாம் பிடித்து வைத்திருக்கும் பொதுமக்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ள ஒபாமா அவர்கள், அங்குள்ள மனித அவலத்துக்கு தீர்வுகாண இலங்கை அரசாங்கம் பல நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.

”விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை கைவிட்டு, தம்வசம் உள்ள மக்களை வெளியேறிச் செல்ல அனுமதிக்க வேண்டும். மக்களை பலவந்தமாக படைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதும் மற்றும் அவர்களை மனித கேடயமாக பயன்படுத்துவதும் மிகவும் கண்டிக்கத்தக்கவையாகும். இப்படியான நடவடிக்கைகள் அவற்றைச் செய்வோரை தனிமைப்படுத்த மாத்திரமே உதவும்.” என்றார் ஒபாமா.

அதேவேளை இந்த மனித அவலத்தை ஒழிக்க இலங்கை அரசாங்கமும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கிறார்.

முதலாவதாக பல நூற்றுக்கணக்கான உயிர்களையும், மருத்துவமனைகளையும் பலிகொண்ட கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை அரசாங்கம் நிறுத்த வேண்டும். மோதல் பகுதியில் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற தனது உறுதிமொழியை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும்.

இரண்டாவதாக, மோதல் பகுதியில் அகப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்களது உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்கு உதவக்கூடிய உதவிகளை வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் உதவிக்குழுக்களை உள்ளே செல்ல அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.

அத்துடன், மூன்றாவதாக இந்த மோதலில் இடம்பெயர்ந்துள்ள ஒரு இலட்சத்து தொண்ணூறாயிரம் மக்களுக்கு உதவுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையையும், செஞ்சிலுவைச் சங்கத்தையும் அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.” என்றார் அதிபர் ஒபாமா.

இலங்கை மக்கள் துயருறுகின்ற இந்த வேளையில், அவர்களுக்கு உதவுவதற்கு சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட அமெரிக்க தயாராக இருக்கிறது. நாம் இனிமேலும் தாமதிக்கலாம் என்று நான் கருதவில்லை. அங்கு மேலும் மனிதாபிமான அவலங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு நாம் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் வந்துள்ளது.” என்றார் ஒபாமா.

”இவற்றுக்கு எல்லாம் அப்பால், இலங்கை மக்கள் எல்லாரையும் அங்கீகரித்து, அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலான நிரந்தர சமாதனம் ஒன்று இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதிகரிக்கின்ற மனித இழப்புகளும், மறுவாழ்வு முகாம்களில் போதுமான வசதிகள் இல்லாமையும், இலங்கையில் மக்கள் எதிர்பார்க்கின்ற அமைதியை பெறுவதை மேலும் கடினமாக்கவே உதவும்.” என்று கூறினார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

பிரிவுகள்:ALL POSTS, அரசியல், அவலம், உலகம், ஊடகம் குறிச்சொற்கள்:,

இலங்கை நிலவரம் குறித்து சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார் ஒபாமா


white-house

இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க அரசின் பல்வேறு துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆலோசனை நடத்தியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அரசின் பல்வேறு துறைகளின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனையில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம், பென்டகன் தேசிய பாதுகாப்பு கவுன்சில், யுஎஸ் எய்ட், மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இலங்கை விவகாரத்தை அமெரிக்க அரசு தீவிரமாக கருதுவதையே இந்த அவசர கூட்டம் எடுத்துக் காட்டுவதாக வெள்ளை மாளிகை வட்டாரம் தெரிவிக்கிறது.

அதிபர் ஒபாமா இலங்கை நிலவரம் குறித்து தினசரி ஆராய்ந்து, அவதானித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிவுகள்:ALL POSTS, அரசியல், அவலம், உலகம் குறிச்சொற்கள்:,

இலங்கைத்தமிழர்களுக்காக பிறந்தநாள் கொண்டாட்டம் ரத்து: நடிகர் அஜீத்


asal-picajith1

இலங்கை தமிழர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ள நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று நடிகர் அஜீத் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீபத்தில் தொடங்கப்பட்ட ‘அசல்’ திரைப்பட தொடக்க விழாவில் நேரில் கலந்து கொண்டும், தொலைபேசி மூலமாகவும், தலைமை இயக்கத்தின் மூலமாகவும் வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி.

வரும் மே 1 ந் தேதி எனது பிறந்தநாள் வருவதையொட்டி எனது ரசிகர்கள் அனைவரும் அந் நாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருவதாக ஒரு செய்தி என் கவனத்திற்கு வந்தது. உங்கள் அன்புக்கு நன்றி.

நான் உங்கள் உற்சாகத்திற்கு தடை போடுவதாக எண்ண வேண்டாம். இலங்கையில் நம் சக தமிழர்கள் இன்னல்களுக்கும், இடர்ப்பாடு களுக்கும் இடையே சிக்கித் தவிக்கின்ற இந்த நேரத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடுவது மனித நேயத்திற்கு முரண்பாடானது என்று கருதுகிறேன்.

மேலும் பொதுத் தேர்தல் நடந்து கொண்டிருக்கிற இந்நேரத்தில் நம்மால் எந்தவிதமான இடையூறும் இருந்து விடக் கூடாது என கருதுகிறேன்.

இலங்கை விடயம் குறித்து ஹிலாரி கிளின்டன் நோர்வே வெளியுறவு அமைச்சருடன் ஆலோசனை


hilary-clinton1

இலங்கையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மனிதாபிமான பிரச்சினை குறித்து நோர்வே வெளியுறவு அமைச்சர் ஜோனஸ் கார் ஸ்டோருடன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் இருவரும் இனைந்து ஊடகவியலாளர்களை சந்தித்தனர். இதன்போது ஹிலாரி கிளிண்டன் கூறுகையில், “எங்களது பேச்சின்போது பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

இலங்கை பிரச்சினை குறித்தும் விவாதித்தோம்.இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு எட்ட நோர்வே எடுத்து வரும் அயராத முயற்சிகள் குறித்து கலந்துரையாடினோம்.இதுதவிர ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு, புவி தட்பவெப்ப மாற்றம் குறித்தும் விவாதித்தோம்” என தெரிவித்தார். 2002ம் ஆண்டு இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட நோர்வே அனுசரணை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில்,5-குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை:மனைவி வேறு ஒருவருடன் ஓடி விட்டதால் ஆத்திரம்


shootஅமெரிக்காவில் தெற்கு சியாட்டில் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் ஹரிசன்.இவரது மனைவி ஏஞ்சலா,இவர்களுக்கு மேக்சின் (16),சமந்தா(14),ஜோமி(11),ஹீதர்(8),ஜேம்ஸ்(7)ஆகிய 5-குழந்தைகள் இருந்தனர்.ஜேம்ஸ் ஹாரிசனுக்கும் ஏஞ்சலாவுக்கும் கடந்த சில மாதங்களாக தகராறு இருந்து வந்தது.ஏஞ்சலா வேறு ஒரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் அடிக்கடி தம்பதியரிடையே சண்டை ஏற்பட்டது.

நேற்று முன்தினம் அந்த வாலிபருடன் ஏஞ்சலா ஓடிவிட்டார்.இதனால் ஜேம்ஸ் ஹாரிசன் ஆத்திரமும்,வேதனையும் அடைந்தார்.நேற்று அவர் தன் 5-மகன்-மகள்களுடன் காரில் வெளியில் சென்றார்.அவ்பர்ன் என்ற பகுதியில் பூங்கா ஒன்றியல் காரை நிறுத்திய அவர்,தன் கைத்துப்பாக்கியால் 5-பேரையும் சுட்டார்.சம்பவ இடத்திலேயே 5-பேரும் பலியானார்கள்.

பிறகு ஜேம்ஸ் ஹாரிசன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் சியாட்டில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கடந்த மாதம் அலபாமா,கலிபோர்னியா, நியூயார்க், வடக்கு கரோலினா மாகாணங்களில் அடுத்தடுத்து ஒரே சமயத்தில் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த பரபரப்பு ஓய்வதற்குள் மீண்டும் ஒரே குடும்பத்தில் 6-பேர் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி விட்டனர்.

பிரிவுகள்:ALL POSTS, அவலம், உலகம், குழந்தை குறிச்சொற்கள்:

இதோ அயல்தேசத்து ஏழைகளின் கண்ணீர் அழைப்பிதழ்!


தூக்கம் விற்ற காசுகள்
இருப்பவனுக்கோ வந்து விட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!

விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகின்றது!

நாங்கள்; பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்…
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்…?

தூக்கம் விற்ற காசில்தான்…
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலே …
இளமை கழிக்கின்றோம்!

எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்…
ஒரு விமானப்பயனத்தூனூடே
விற்றுவிட்டு

கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந் தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!

மர உச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்கமுடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை!

அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!

பழகிய வீதிகள்பழகிய நண்பர்கள்
கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவு
நேர கனவுக்குள் வந்து வந்து
காணாமல் போய்விடுகிறது!

நண்பர்களோடு ஆற்றில்
விறால் பாய்ச்சல்
மாட்டுவண்டிப் பயணம்
நோன்புநேரத்துக் கஞ்சி

கிட்டிப்புல் கரம் கபடி சீட்டு என
சீசன் விளையாட்டுக்கள்!

ஒவ்வொரு
ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து…
விளையாடி மகிழ்ந்த உள்ளுர்
உலகக்கோப்பை கிரிக்கெட்!

இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்…
விசாவும் பாஸ்போட்டும் வந்து…
விழிகiளை நனைத்து விடுகிறது.!

வீதிகளில் ஒன்றாய்
வளர்ந்;த நண்பர்களின் திருமணத்தில்!
திராஒளன் அடித்து
மாப்பிள்ளை அலங்காரம்!

கூடிநின்று கிண்டலடித்தல்!
கல்யாணநேரத்து பரபரப்பு!

பழையசடங்குகள்
மறுத்துப்போராட்டம்!
பெண்வீட்டார் மதிக்கவில்லை
எனகூறி வறட்டு பிடிவாதங்கள்!

சாப்பாடு பரிமாறும் நேரம்…
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!
மறுவீடு சாப்பாட்டில்
மணமகளின் ஜன்னல் பார்வை!

இவையெதுவுமே கிடைக்காமல்
கண்டிப்பாய் வரவேண்டும்
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக
சங்கடத்தோடு…!

ஒரு
தொலைபேசி வாழ்த்தூனூடே…
தொலைந்துவிடுகின்றது
எங்களின் நீ…ண்ட நட்பு!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து
ஏழைகள்தான்!

காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்…
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்

அரபிக்கடல் மட்டும்தான்…
ஆறுதல் தருகிறது!

ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்…
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே…
கரைந்துவிடுகிறார்கள்!
இறுதிநாள் நம்மிக்கையில்தான்…
இதயம் சமாதானப்படுகிறது!

இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப்பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்…

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு…
முதல் பார்வை… முதல் கழிவு…
இவற்றின் பாக்கியத்தை
றியாழும் தினாரும்
தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை…
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் அழும் சப்தம்
யாருக்கு கேட்குமோ?

ஓவ்வொறு முறை ஊருக்கு
வரும்பொழுதும்…
பெற்றகுழந்தையின்
வித்தியாசப்பார்வை…
நெருங்கியவர்களின்… திடீர்மறைவு

இப்படி
புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்…
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு…
மீண்டும்

அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்…

தங்கையின் திருமணமும்…
வீட்டு கஸ்டங்களும்…
பொருளாதாரமும் வந்து…
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு!

பிரிவுகள்:ALL POSTS, அவலம், உலகம் குறிச்சொற்கள்:

காஸா பகுதியில் இஸ்ரேல் இரண்டாவது நாளாகத் தாக்குதல்:இதுவரை 296-பேர் பலி


story_israel_blast_gi1காஸா பகுதியில் ஹமாஸ் வளாகங்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து இரண்டாவது நாளாக வான் வழியாகத் தாக்குதல் நடத்தியது.இத்தாக்குதல்களில் இதுவரை 296-பாலஸ்தீனியர்கள் பலியாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் இந்த இரண்டு நாள் தாக்குதலின்போது பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது 80-ராக்கெட்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

அவற்றில் இரு ராக்கெட்டுகள் காஸாவிலிருந்து 30-கிலோமீட்டர் தொலைவிலுள்ள அஷ்தாத் துறைமுகம் அருகே விழுந்தன.இத்தாக்குதலில் யாருக்கும் பாதிப்பில்லை என இஸ்ரேலின் அவசரகால சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனிய தீவிரவாதிகள் மீது தரைவழியாகவும் தாக்குதல் நடத்த காஸா எல்லையை நோக்கி கூடுதல் பீரங்கிகள் மற்றும் ராணுவ டாங்குகளை இஸ்ரேல் அரசு அனுப்பி வருகிறது.

பிரிவுகள்:ALL POSTS, அரசியல், அவலம், உலகம் குறிச்சொற்கள்:,
%d bloggers like this: