தொகுப்பு
TeeJay யின் புதிய பாடல் வானவில்
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் பாடல் TeeJay யின் வானவில்.அதன் Official Teaser தற்போது வெளியாகியுள்ளது.அனைவரையும் மிக வெகுவாக கவரும் வகையில் வானவில் பாடலும், TeeJay யின் குரலும் அருமையாக உள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த “முட்டு முட்டு’ என்ற பாடல்
இன்று இளைஞர்கள் அதிகம் வாயில் முணு முணுக்கும் பாடல் என்ன தெரியுமா? “முட்டு முட்டு’ என்ற பாடல் தான்.Youtube வலைத் தளத்தில் இந்த பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை இன்னும் சில நாட்களில் 5 மில்லியனைத் தொட்டு விடும். இந்த பாடல் ஈழத் தமிழர் கள் பெருமைப் பட வேண்டிய ஒரு பாடல். காரணம் இந்தப் பாடலை பாடியவர்கள்,நடித்தவர்கள், இயக்கியவர், இசையமைப்பாளர் உட்பட அனைவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.
இந்த பாடலை பாடிய TeeJay உலகப் புகழ் பெற்றவர் என்பது ஈழத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரும் விடயம்.ஈழத் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த TeeJay க்கு
வாழ்த்துக்கள் .
ஹாலிவுட்டில் ஜாக்சன் உடல் அடக்கம்!
ஹாலிவுட் ஹில்ஸ் கல்லறை வளாகத்திலேயே மைக்கேல் ஜாக்சனின் உடலை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் ஒருமனதாக தீர்மானித்துள்ளனராம். ஜாக்சன் இறந்து கிட்டத்தட்ட 6 வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. இன்னும் அவரது உடல் நிரந்தரமாக அடக்கம் செய்யப்படாமல் உள்ளது. தற்காலிக கல்லறையில்தான் அவரது உடலை வைத்துள்ளனர்.
ஜாக்சன் உடலை அடக்கம் செய்யும் இடத்தை முடிவு செய்வதில் அவரது குடும்பத்தினரிடையே இரு வேறு கருத்துக்கள் இருந்தன.
அண்ணன் ஜெர்மைன் ஜாக்சன், ஜாக்சனின் நெவர்லேன்ட் பண்ணை இல்ல வளாகத்திலேயே உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இதற்கு ஜாக்சனின் தாயார் காத்தரீன் ஒத்துக் கொள்ளவில்லை.
2005ம் ஆண்டு சிறார்களுடன் பாலியல் தொடர்புகளை வைத்துக் கொண்டதாக ஜாக்சன் மீது பெரும் வழக்கு தொடரப்பட்டது. இதனால் நெவர்லேன்ட் இல்லத்தை விட்டு விலகியிருந்தார் ஜாக்சன். அந்த இல்லத்திற்குப் போகவே அவர் விரும்பாமல் இருந்தார். எனவே அந்த இடத்தி்ல ஜாக்சனை அடக்கம் செய்யக் கூடாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.
இதனால் குடும்பத்தினரிடையே இடத்தை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் தற்போது காத்தரீன் கருத்தை ஏற்றுக் கொள்வது என்ற முடிவுக்கு குடும்பத்தினர் வந்துள்ளனர்.
இதையடுத்து ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியில் உள்ள பாரஸ்ட் லான் நினைவுப் பூங்கா என்ற கல்லறை வளாகத்தில் ஜாக்சனின் உடலை நிரந்தரமாக அடக்கம் செய்யவுள்ளனர்.
இங்கு உடலை அடக்கம் செய்வது தொடர்பான விண்ணப்பம் கொடுக்கப்பட்டு விட்டதாம். இதையடுத்து ஜாக்சனின் உடலை இங்கு அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளில் பாரஸ்ட் லான் கல்லறை நிர்வாகம் இறங்கியுள்ளது.
பாரஸ்ட் லான் பகுதியில்தான் பல்வேறு ஹாலிவுட் பிரபலங்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஜாக்சனின் பாட்டியைக் கூட 1990ம் ஆண்டு இங்குதான் அடக்கம் செய்தனர்.
இதற்கிடையே, ஜாக்சனின் உடலில் 3வது முறையாக பிரேதப் பரிசோதனை செய்ய முடியுமா என்று அவரது தாயார் காத்தரீன், லாஸ் ஏஞ்சலெஸ் துணை மருத்துவ அதிகாரி டாக்டர் பால் லினெக்கியிடம் கோரினாராம்.
ஆனால், ஏற்கனவே 2 முறை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதால், அவரது உடல் கிட்டத்தட்ட குத்திக் குதறப்பட்டதைப் போலாகி விட்டது. அவரது உடல் உறுப்புகள் கிட்டத்தட்ட கலந்து போய் விட்டன. எது எது எந்தப் பகுதி என்று தெரியாத அளவுக்கு சதைக் கோளங்கள் கலந்து போய் விட்டன. எனவே 3வது பிரேதப் பரிசோதனைக்கு வாய்ப்பில்லை என்று கூறி விட்டாராம் லினெக்கி.
இதுகுறித்து லினெக்கி கூறுகையில், கிட்டத்தட்ட ஜாக்சனின் உடலை துண்டு துண்டாக வெட்டி எடுத்து விட்டார்கள். 2 முறை பிரேதப் பரிசோதனை செய்ததால் உடல் உறுப்புகள் சிதிலமடைந்து போய் விட்டன. இன்னொரு சோதனைக்கு ஏற்ற நிலையில் உடல் இல்லை என்றார்.
நெவர்லேன்ட் இடம் மாறுகிறது.
இதற்கிடையே, ஜாக்சனின் நெவர்லேன்ட் பண்ணை வீட்டை அப்படியே இடம் மாற்றி லாஸ் வேகாஸுக்குக் கொண்டு போகப் போகிறார்களாம்.
நெவர்லேன்ட் வீட்டில் உள்ள அசையும் பொருட்களை பெயர்த்தெடுத்து அதை லாஸ் வேகாஸ் கொண்டு சென்று அங்கு அதை பொருத்தி, பிரமாண்ட சுற்றுலாத் தலம் போல அமைக்கவுள்ளனராம்.
எனது மகன் தமிழிலும் பாடுவார்… -ஏ.ஆர்.ரஹ்மான்
ஆகஸ்ட் 7- ந்தேதி இந்த ஆடியோ வெளியிடப்படுகிறது. இந்த ஆகஸ்ட் 7 ரஹ்மான் தனது நிர்வாகத்தின் கீழ் கே.எம் என்ற இசைப்பள்ளியை திறந்த தினம். இதன் ஓராண்டு நிறைவு விழாவில்தான் இந்த இசை ஆல்பத்தை வெளியிட முடிவெடுத்திருக்கிறது சரிகம. இது பற்றிய அறிவிப்பு விழாவில் கலந்து கொண்டார் ரஹ்மான். இவருடன் ஸ்ருதி கமல், நடிகை ஆன்ட்ரியா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
இசைப்புயலிடம், உங்கள் மகன் இந்தியில் பாடியிருக்கிறாராமே? அவரை தமிழில் பாட வைப்பீர்களா? என்று கேட்கப்பட்டது. லேசாக சிரித்தபடி பதிலளித்த ரஹ்மான் அவரு இப்போ குழந்தை பருவத்தில் இருக்கார். மியூசிக்கெல்லாம் அவருக்கு தெரியாது. ஆனாலும், தமிழில் பாடுவார் என்றார். தனது இசை பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரை தான் இசையமைக்கும் படங்களில் பாட வைக்கும் எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ரஹ்மானுக்கு ராதாரவி கண்டணம்!
ஏஆர் ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கியிருக்கலாம். ஆனால் அவர் சினிமாவுக்கு அறிமுகமானது கவிதாலயா மூலம்தானே தவிர ஸ்லம்டாக் மில்லியனேர் மூலமல்ல. ஆனால் அவர் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை இழுத்தடிக்கிறார், அவமதிக்கிறார். இதற்காக அவரை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார் ராதாரவி.
‘மண்டபம்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிலிம்சேம்பர் திரையரங்கில் நேற்று காலை நடந்தது. பாடல்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் வெளியிட, நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி பெற்றுக்கொண்டார்.
விழாவில், ராதாரவி பேசியதாவது:
தமிழ்நாட்டில் சமீபகாலமாக தமிழ் படங்களுக்கு தியேட்டர்கள் கொடுப்பதில்லை. தமிழ்நாட்டில் தமிழ் படங்களை திரையிட தியேட்டர்கள் முன்னுரிமை தரவேண்டும். இந்தி படங்கள் வருகிறது என்று, தமிழ் படம் திரையிடுவதை தவிர்க்கக் கூடாது.
தமிழ் படங்களை திரையிடாத தியேட்டர்களை இழுத்து மூடவேண்டும். தமிழ்ப் படங்களுக்கு தியேட்டர் கொடுக்க மனமில்லாவிட்டால் அவற்றை குடோன்களாக ஆக்கிவிடுங்கள். வேறு எங்காவது போய் தியேட்டர் கட்டிக் கொள்ளுங்கள்.
சின்ன படங்களை திரையிடுவதற்கு பல தியேட்டர்கள் முன் வருவதில்லை. இதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சில சட்ட திட்டங்களை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.
தமிழ் பெயர்கள்
சில நடிகர்-நடிகைகள், அம்மா, அப்பா சூட்டிய பெயர்களை மாற்றிவிட்டு, ‘நியூமராலஜி’படி பெயர் வைத்துக் கொள்கிறார்கள். தாய், தந்தையைவிட ‘நியூமராலஜி’ எந்த வகையில் சிறந்தது என்று தெரியவில்லை. இது ‘சோளி உருட்டுவதை நம்பி அரசியல் நடத்துவது’ போல் உள்ளது.
இப்போதெல்லாம் சில இசை அமைப்பாளர்கள் ‘டியூன்’ போடுவதற்காக வெளிநாடுகளுக்கு போகிறார்கள். கூடுவாஞ்சேரியிலும், மதுரையிலும் கிடைக்காத ‘டியூன்’களா வெளிநாடுகளில் கிடைக்கப் போகிறது. இதுபோல் ஒவ்வொரு ஏரியாவிலும் சினிமாவை கொலை செய்துகொண்டு இருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமானுக்கு கண்டனம்
ஏ.ஆர்.ரகுமான் தமிழ் படத்துக்கு இசை அமைத்துதான், இசையமைப்பாளராக அறிமுகமானார். அவருடைய முதல் படம் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ அல்ல. கவிதலாயா நிறுவனம் தான் அவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தது. ஆனால் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் பட உலகை அடியோடு புறக்கணிக்கிறார்.
அவர் ஆஸ்கார் விருது பெற்றதற்காக தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்த தேதி கேட்டோம். ஆனால் அவர் எங்களுக்கு தேதி தராமல், வேறு ஒரு மாநிலத்தில் பாராட்டு விழா நடத்த சம்மதித்து இருக்கிறார்.
இத்தனையையும் தாண்டி தமிழ் படத் தயாரிப்பாளர்கள் அவர் பின்னால் ஓடிக்கொண்டுதான் இருக்கிறார். அவரும் கண்டுகொள்வதில்லை. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன், என்றார்.
இளையராஜாவுக்கு கசந்துப்போன கவிஞர்கள்
ஒரு மாமாங்கத்துக்கு மேலாகிறது இளையராஜாவும் – வைரமுத்துவும் ‘டூ’விட்டு. ராஜாவும் – முத்துவும் இணைந்து பிறந்த பாடல்கள் ஒவ்வொன்றும் கற்கண்டு.
கருத்து மோதல் இருவரையும் எட்டி உதைக்க, வெவ்வேறு திசையில் பிரிந்துபோனார்கள். இப்போதுகூட இருவரையும் சேர்க்கும் முயற்சிகள் நடந்துவருகிறது. எனினும் அவரவர்களின் நிலை, நகர்த்தமுடியாத சிலையாகவே நீடிக்கிறது. இது உலகமறிந்த விஷயம்தான். ஆனால் இளையராஜா இப்போது எடுத்திருக்கும் முடிவுதான், ஒட்டுமொத்த கவிஞர்கள் மீது அவருக்கு கசப்பு ஏற்பட்டுவிட்டதோ என்ற சந்தேகத்தை வரவைக்கிறது.
வைரமுத்து இல்லாவிட்டாலும் மு.மேத்தா, பழனிபாரதி, அறிவுமதி, நா.முத்துக்குமார், சினேகன் என இளம் கவிஞர்களைக்கூட தன் மெட்டுக்கு எழுதச்சொல்லி ஊக்குவித்தவர், திடீரென எழுத்தாளர்களை கவிஞர்கள் இடத்தில் பொருத்தியுள்ளார். நடிகர் ஆர்யா தயாரித்துவரும் ‘படித்துறை’ படத்தில் இசைஞானிதான் இசை. பாலாவின் உதவியாளர் சுகா இயக்குகிறார்.
படத்தில் பாட்டெழுத யாரையெல்லாம் போடலாம் என இயக்குனர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, இளையராஜா சொன்ன லிஸ்ட் கேட்டு ஷாக்காகிவிட்டார் இயக்குனர். எழுத்துலகில் ஜாம்பவான்களாக விளங்கும் நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோரை பாட்டெழுத வைத்துள்ளாராம் ராஜா. இந்த மூவருமே இதுவரை பாடல் எழுதியதில்லை. எழுத்தாளர்களை பாடலாசிரியராக்கிய இளையராஜாவின் முடிவுதான், கவிஞர்கள் மீது அவருக்கு கசப்புணர்வு ஏற்பட்டுவிட்டதோ என்ற கேள்வியை எழுப்புகிறது.
மைக்கேல் ஜாக்சனின் 90 லட்சம் இசை ஆல்பம் விற்பனை
மைக்கேல்ஜாக்சனின் மரணத்துக்கு பிறகு அவருடைய இசை ஆல்பத்தை வாங்குவதில் மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதுவரை உலகம் முழுவதும் 90 லட்சம் ஆல்பங்கள் விற்பனையாகி உள்ளன. அமெரிக்காவில் மட்டும் 23 லட்சம் ஆல்பம் விற்றுள்ளது.
ஜாக்சன் ஆல்பம் உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. ஆல்பம் விற்பனை அதிகரித்து இருப்பதால் ஏராளமான ஆல்பத்தை தயாரிக்கும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
மைக்கேல் ஜாக்சன் இன்னும் சாகவில்லை!!
மைக்கேல் ஜாக்சன் இன்னும் சாகவில்லை. அவர் டிராமா போடுகிறார். அட்டகாசமாக அவர் திரும்பி வருவார் என்று கூறும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த நிலையில் ஜாக்சனின் ஆவியைப் பார்த்ததாக சில ரசிகர்கள் கூறியுள்ளனர்.
ஜாக்சனுக்குச் சொந்தமான நெவர்லேன்ட் பண்ணையில் ஜாக்சனின் ஆவி நடமாடியதைப் பார்த்ததாக இவர்கள் கூறுகிறார்கள்.
இதையடுத்து அதுகுறித்த செய்திகளைப் பார்ப்பதற்காக இணையதளங்களை மொய்த்து வருகின்றனர் ரசிகர்கள்.
ஜாக்சனின் பண்ணை வீட்டின் சுவரில் ஜாக்சனின் நிழல் உருவம் தென்பட்டு பின்னர் மறைந்து விட்டதாக இந்த ரசிகர்கள் சிஎன்என் தொலைக்காட்சியின் இன்சைட் நெவர்லன்ட் என்ற நிகழ்ச்சியின்போது தெரிவித்தனர்.
அந்த நிழல் உருவம் சுவரில் தோன்றி பின்னர் பண்ணை வீட்டின் காரிடார் வழியாக நடந்து போனதாகவும். அதன் பின்னர் அது மறைந்து விட்டதாம்.
அது நிச்சயம் ஜாக்சனின் ஆவியாகத்தான் இருக்க வேண்டும் எனவும் அந்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்து, நான்தான் ஜாக்சன் என்று யாரும் சொல்லிக் கொண்டு கிளம்பாமல் இருந்தால் சரி.
மைக்கேல் ஜாக்சன் வைரஸ் உஷார்
மைக்கேல் ஜாக்சன் எத்தனை பெரிய மனிதர் என்பதை இன்டெர்நெட் தெளிவாகவே புரிய வைத்துள்ளது. ஜாக்சன் மறைவை அடுத்து தேடல் உலகில் ஜாக்சன் தொடர்பான பதங்களே அதிக அளவில் தேடப்பட்டு வருகின்றன. முதல் நாள் அன்று இது உச்சத்தில் இருந்தது.
இதன் காரணமாக இண்டெர்நெட் முடிங்கிப்போகும் நிலை உண்டானது.
தொடர்ந்து ஜாக்சனே அதிகம் தேடப்படும் பெயராக இருக்கிறார்.
அது மட்டும் அல்ல ஜாக்சனின் பாடல்களும் அதிக அளவில் டவுண்லோடு செய்யப்பட்டு கேட்கப்படுகின்றன.
ஜாக்சனுக்கு பெரும் புகழ் தேடித்தந்த திரில்லர் ஆல்பம் இது வரை 26 லட்சம் முறை டவுண்லோடு ஆகியிருக்கிறதாம்.
ஜாக்சன் நினைவாக பல இனையதளங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஜாக்சன் மோகத்தை பயன்படுத்திக்கொண்டு வைரஸையும் கட்டவிழ்த்துவிட்ட்டுள்ளனர். ஆம் ஜாக்சனை நினைவு கூறுவோம் என பொருள்பட ஒரு இமெயில் உலா வருகிறதாம்.இந்த மெயில் உண்மையில் ஒரு வைரஸ். இதனை கிளிக் செய்தால் விபரீதம் ஏற்படலாம்.
ஜாக்சன் மீதான கவனத்தை பயன்படுத்திக்கொண்டு விஷமத்தனம் செய்யும் இந்த வைரசிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.
மைக்கேல் ஜாக்சன் புகழ் சொல்லும் பாடல்
Michael Jackson – Billie Jean / Motown 25 ( Moonwalk )
அண்மைய பின்னூட்டங்கள்