தொகுப்பு

Archive for the ‘உலகம்’ Category

மாறி வரும் உலகம்!நிஜ திருமண தம்பதிகளின் திரைப்பட பாடல் வடிவிலான திருமண காணொளி.


பிரிவுகள்:ALL POSTS, உலகம், காணொளி

நான் பார்த்த சென்னை (காட்சி 5)


T_NAGAR

தியாகராய நகர் அல்லது தி.நகர் என்பது சென்னையின் மிக முக்கியமான மற்றும் பெரிய பகுதி. இது ஒரு முக்கியமான வணிகப்பகுதி. நகரின் மையத்தில் அமைந்துள்ளது. திராவிட இயக்கத்தவரில் முக்கியமானவரும் நீதிக்கட்சியைத் ஆரம்பித்தவர்களில் ஒருவருமான சர் பி.தியாகராயாவின் நினைவாக இப்பெயர் இடப்பட்டதாக அங்குள்ளவர்கள் கூறினார்கள்.

பாண்டி பஜாரும், உஸ்மான் சாலையும், ரங்கநாதன் தெருவும் தான் தி.நகரின் மிக முக்கியமான வணிகமையங்கள். ஆடைகள், அணிவகைகள், விளையாட்டுப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் இங்கு மிகக்குறைந்த விலையில் கிடைக்கும். இப்பகுதியில், பல்வேறுவகைச் சேலைகள் உட்பட்ட ஆடைகள், தங்க, வைர நகைகள் முதலியவற்றுக்கான, பல மாடிகளைக் கொண்ட மிகப் பெரிய விற்பனை நிலையங்களுடன், நடைபாதைக் கடைகளும் போட்டி போட்டுக்கொண்டு செயற்படுவதைக் காணலாம். விடுமுறை நாட்களிலும், பொங்கல் போன்ற திருவிழாக் காலங்களிலும் இந்தப்பகுதியில் கூட்டம் நிரம்பி வழியும்.
திருமணம் முதலியவற்றுக்காக ஆடை அணிகள் வாங்குவதற்காகப் பலர் தொலை தூரங்களிலிருந்தும் இப் பகுதிக்கு வருகிறார்கள். இதனால் பல தங்கு விடுதிகளும், உணவு விடுதிகளும் இங்கே பெருமளவில் உள்ளன.தியாகராஜ நகரில் பல புத்தக வெளியீட்டு நிறுவனங்களும் உள்ளன.சரி, தி.நகர் பற்றிய அறிமுகத்தை தந்து விட்டேன்.சரி,நான் ஏன் தி.நகருக்கு வந்திருக்கிறேன் என்று கூறவில்லையே.ஓம்…ஓம்..நீங்கள் அனுமானிப்பது சரி.ஆடைகளை கொள்வனவு செய்யத் தான் வந்திருக்கின்றேன்.வளசரவாக்கத்தில் இருந்து அண்ணா பிரதான வீதி(சாலை) ஊடாக தி.நகரை 26 நிமிடத்தில் அடைய முடியும்.தூரம் 9.3 km.

T_NAGAR

எங்கே நல்ல துணி வகைகள் வாங்கலாம் என்று கேட்டால் தி.நகர் என்று சின்னப் பிள்ளையும் கையைக் காட்டிச் சொல்லுகின்றது.தி.நகர் சென்னையின் இதயம்.இந்தியாவின் மிகப் பிரபல்யம் வாய்ந்த ஆடையகங்கள் இங்கு தான் உள்ளது.போத்தீஸ் ,தி சென்னை சில்க்ஸ்,சரவணா ஸ்டோர்ஸ் போன்றவை அவற்றுள் சில.எல்லா ஆடையகங்களையும் ஒரு பார்வை பார்த்தேன்.நான் இப்பொழுது போத்தீஸ்க்கு முன்னால் நிற்கின்றேன்.இலங்கையில் HOUSE OF FASHIONS எவ்வாறு பிரமாண்டமானதோ அவ்வாறு தான் போத்தீஸ் உள்ளது.என்னடா முகப்பையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்,உள்ள போவன் என்று நீங்கள் சொல்லுவது எனக்கு கேட்கின்றது.

House-of-Fashion--Location-101-D.S.-Senanayake-Mw-Colombo-08

 

இவ்வளவு சனத்துக்கு நடுவில போறது பயங்கர கஷ்டமா இருக்கு.என்னடா கரைச்சலா போச்சு.இடமும் தெரியாது வலமும் தெரியாது.யாரிட்ட கேட்கலாம்.ம்..நேரா முகாமையாளரிடமே கேட்கலாம்.

வணக்கம் ஐயா!நான் இலங்கையில் இருந்து வந்திருக்கிறேன்.சில துணிவகைகள் கொள்வனவு செய்ய வேண்டும்.உதவி செய்வீர்களா.

முகாமையாளர்:இதோ,இப்ப கூப்பிடுறன் உதவியாளரை. முருகேசு..முருகேசு..
முருகேசு அரக்கப் பரக்க ஓடியாரார்.

இந்தா.இவர் நம்மட விருந்தாளி.இவருக்கு என்ன வேணுமோ எல்லாத்தையும் எடுத்துக் கொடு.

புடைவை, புடவை, அல்லது சேலை (அ) “‘சீலை'” (sari) என்பது, தெற்காசியப் பெண்கள் உடுத்தும் மரபுவழி ஆடையாகும்.

 

தமிழில் சேலை அல்லது புடவை என்றும், ஹிந்தி, குஜராத்தி, மராட்டி ஆகிய மொழிகளில் சாடி என்றும், கன்னடத்திலும், தெலுங்கிலும் முறையே சீரே, சீரா என்றும் அழைக்கப்படுகின்றது.

பொதுவாக இதன் நீளம் 4 – 5 யார் வரை இருக்கும். சில புடவைகள் 9 யார்கள் வரை இருப்பதுண்டு. பல நிறங்களிலும், பலவகையான வடிவுருக்களைத் தாங்கியும் வரும் புடவைகள், செவ்வக வடிவம் கொண்ட தைக்கப்படாத உடையாகும்.மடிப்புகளுடன் உடலை சுற்றியவாறு கிரேக்க பாணியில் உடுதபடுகிறது.பருத்தி நூல், பட்டு நூல், மற்றும் பலவிதமான செயற்கை இழைகளையும் கொண்டு நெய்யப்படுகின்ற புடவைகள், தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களின் மெல்லிய இழைகளைப் பயன்படுத்தி அழகூட்டப்படுவதுண்டு.

கீழே உள்ள தளத்தில் மிகவும் மலிவாக புடவைகளை வெறும் 100 ரூபாவில் பெற முடிகின்றது.ஆனால் வேறு தளங்களில் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது.மிகத் தரமான வேலைப் பாடுகள் அதில் இருப்பது தெரிகின்றது.தேவையான ஆடைகளை கொள்வனவு செய்து கொண்டிருக்கின்றேன்.

pothys

சிறிது நேரத்தில் முருகேசு எனக்கு சீனிப் பொங்கலும்,தேநீரும் கொண்டு வந்து தருகின்றார்.நன்றி முருகேசு.கிட்டத்தட்ட 120 பேர் பணி புரிவதாக சொன்னார்.சம்பளம் 8000 ரூபா என்றும் சொன்னார்.உண்மைத் தகவல் சரியாகத் தெரியவில்லை.அவர் சொன்னதை நான் சொல்லுகிறேன்.இலங்கைத் தமிழ் மக்களை விசாரித்தார்.அதற்கும் நன்றி முருகேசு.

pothys

Pothys

No 15, Nageswara Rao Road, Opp. Doraiswami Subway, T Nagar, Chennai, Tamil Nadu 600017, India

http://pothys.com/

சென்னை வரும் எல்லோரும் ஒருமுறை செல்ல வேண்டிய ஆடையகம் போத்தீஸ்.

நான் பார்த்த சென்னை (காட்சி 6) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, உலகம் குறிச்சொற்கள்:

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் பார்க்க வேண்டிய காணொளி


கட்டாயம் பார்க்கவும்!

பிரிவுகள்:உலகம்

நான் பார்த்த சென்னை (காட்சி 2)


முதலில் எங்கு செல்வது என்பதில் குழப்பம்.சாப்பாட்டை ஒரு பிடி பிடித்து விட்டு அடுத்து என்ன செய்வது என்று தீர்மானம் எடுத்தோம்.எங்கே சாப்பிடுவது? அது அடுத்த குழப்பம். வீட்டில் சமைப்பதா? வெளியில் சாப்பிடுவதா? வீட்டில் சமைக்க நேரம் எல்லாம் சரிப்பட்டு வராது.ஒரு வெளி நாட்டுக்கு வந்திருக்கின்றோம்.இங்கே உள்ள சாப்பாடுகளை ருசி பார்க்க வேண்டாமா?அதுவும் சரிதான் என்று எல்லோரும் ஒருமித்து தலை ஆட்டினார்கள்.

புதிய ஆந்திரா உணவகம்

unavagamவளசரவாக்கத்தில் அதிகமான உணவகங்கள் இருக்கின்றன.புதிய ஆந்திரா உணவகத்தில் நல்ல ருசியான, தரமான உணவுகள் கிடைக்கும் என்று அயல் வீட்டுக்காரர் சொன்னார். என்னங்கடா நடக்குது !அதுக்குள்ளயா பக்கத்துக்கு வீட்டுக்காரர சிநேகிதம் பிடிப்பீர்கள் என்று நீங்கள் முனுமுனுப்பது நல்லாக் கேட்குது.அவர் எங்களுக்கு வீடு எடுத்துத் தந்தவரின் நண்பர்.அதனால் பழகுவதில் சிக்கல் ஏற்படவில்லை.

food

நான் இருக்கும் வீட்டிலிருந்து 1.5 KM தூரத்தில் அமைந்துள்ளது ஆந்திரா உணவகம்.ஆந்திரா உணவகத்திற்கு முன்னால் பிரதான வீதி.எந்நேரமும் வாகனப் போக்குவரத்து இடம்பெறும் நெடிய வீதி.எங்கும் வீதிச் சமிக்சைகளை காணவில்லை.அந்த வீதியைக் கடப்பதற்கு பட்ட பாடு இருக்கின்றதே! அப்பப்பா!முடியலை.இட்லி சாப்பிடுவதாக உத்தேசம்.சாப்பாடு சொல்லி வேலை இல்லை.அவ்வளவு ருசி ஒரு குறையைத் தவிர.

சாப்பாடு அந்தமாதிரி.ஆனால் எங்களுக்கு திருப்தி கொஞ்சம் குறைவு.காரணம், ஈழத் தமிழர்கள் காரம் மிக அதிகமாக உணவில் எடுத்துக் கொள்வார்கள்.இந்தியத் தமிழர்கள் அதற்கு எதிர்மாறானவர்கள்.அதனால் ஒரு நன்மை அவர்களுக்கு இருக்கிறது.இந்தியாவில் தெலுங்கு மக்கள் அதிக காரம் எடுப்பார்களாம்.அதனால் அவர்களுக்கு தமிழ் நாட்டு மக்களை விட வயிற்றுப் புண் அதிகம் ஏற்படுகின்றதாம்.இதை எங்கள் வீட்டுக்கு   அருகில் உள்ள கடைக்காரர் சொன்னார்.

ஆச்சி மசாலா

Powder

என்ன பண்ணுவது சாப்பாட்டில் காரம் இல்லை.வீட்டில் சமைப்போம் என்று அடுத்த நாள் திட்டம் போட்டோம்.மிளகாய்த்தூள் எதுவும் நாங்கள் கொண்டுவரவில்லை.கடையில் விசாரித்த போது ஆச்சி மசாலா கிடைத்தது.கோழி,ஆடு,மீன் என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கிடைக்கின்றது.சக்தி மசாலா என்ற பெயரில் இன்னொரு மசாலாத் தூளும் கிடைக்கின்றது.

food

வீட்டிற்கு முன் வந்த மீன் காரரிடம் இறாலும் மீனும் வாங்கினோம்.நகர் பகுதியில் மீன் காரர் வீடு தேடி வந்தது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.மிளகாய் தூளுக்கு பதில் ஆச்சி மசாலாவை பயன்படுத்தினோம்.நாங்கள் எதிர்பார்த்த காரம் இல்லை . சோற்றுடன் சீனியைப் போட்டுச் சாப்பிடுவது போல் இருந்தது.சீனியை தமிழ்நாட்டில் சர்க்கரை என்று அழைக்கிறார்கள். சாப்பாடு சொதப்பியது.காரணம்,காரம் மட்டுமே.தமிழ் நாட்டு மக்கள் இந்த உணவை சாப்பிட்டிருந்தால் இந்த உணவை மணியாக இருக்கு என்று சொல்லியிருப்பார்கள்.மணியாக என்றால் அருமையாக இருக்கின்றது என்று அர்த்தம்.இலங்கையில் உணவு சுவையாக இருந்தால் மணியாக இருக்கு என்று சொல்லுவார்கள்.

வளசரவாக்கத்தில் உள்ள பிரபல்யமான உணவகங்கள்
IFC Indram Food Court
29/45, Sridevikuppam Main Road, Valasaravakkam, Chennai.
Gama Gamaa
Shop No.156, Arcot Rd, Valasaravakkam, Chennai.
Suryan AC Restaurant
State Highway 113, Thandavamoorthy Nagar, Valasaravakkam, Chennai.
Pandian Chettinadu Restaurant
163, Arcot Road, Venkateswara Nagar, Valasaravakkam, Chennai.
Friends Park
Shop No.1, Arcot Rd, Valasaravakkam, Chennai.
New Andhra Meals Hotel
Indira Nagar, Valasaravakkam, Chennai.
நான் பார்த்த சென்னை (காட்சி 3) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

 

நான் பார்த்த சென்னை அறிமுகத்தை பார்க்க.

நான் பார்த்த சென்னை

நான் பார்த்த சென்னை (காட்சி 1) பார்க்க.

நான் பார்த்த சென்னை (காட்சி 1)

——————————————————————————————————-

logo_1378541_web

PRABUWIN MEDIA பெருமையுடன் வழங்கும் குறும்படம் மிக விரைவில்..
பிரிவுகள்:ALL POSTS, உலகம் குறிச்சொற்கள்:

நான் பார்த்த சென்னை (காட்சி 1)


சென்னை வானூர்தி நிலையத்தில்

chennai airport

 Srilankan Airlines வானூர்தி மூலம் சென்னை வானூர்தி நிலையத்தை வந்தடைந்தேன்.சிங்காரச் சென்னை என்று திரைப்படங்களில் அறியப்பட்ட எங்கள் தமிழ் உறவுகள் வாழும் அழகான சென்னைக்கு வந்துவிட்டேன் என்ற திருப்தி. குடிவரவு, குடியகல்வு பரிசோதகர் எனது கடவுச் சீட்டை பார்த்து எதற்காக வந்தீர்கள்,எங்கு தங்கப் போகின்றீர்கள் போன்ற விபரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார்.அனைத்தையும் சரி பார்த்த பின்பு வெளியே செல்வதற்கான அனுமதியைத் தந்தார்.

chennai airport

வெளியில் வந்ததும் நூற்றுக் கணக்கான வாடகை வண்டிகள் பயணிகளை எதிர் பார்த்துக் கொண்டிருந்தன.நான் ஏற்கனவே வண்டியை பதிவு செய்திருந்ததனால் எனக்கான வண்டி வந்திருந்தது.அலைபேசி மூலம் என்னை உறுதிப்படுத்திவிட்டு வண்டியில் பயணித்தேன்.

போகும் போதே சென்னையின் நிஜ வடிவத்தை தரிசித்துக் கொண்டு சென்றேன். வீதியெங்கும் பிரமாண்டமான விளம்பரங்கள், மதில்கள் அனைத்திலும் அரசியல் தலைவர்களின் புகழ் மாலை விளம்பரங்கள் வர்ணத் தீட்டப் பட்டு இருந்தன.குறிப்பாக “வாழ்த்த வயதில்லை வணங்குகின்றோம்” போன்றன.இவை நகரின் அழகை சற்று குறைத்து விட்டனவோ என்ற அபிப்பிராயம் என் மனதில் தோன்றியது.வீதியில் செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவைகளாகவே இருந்தன.

Chennai

நான் எங்கே தங்கப் போகின்றேன் என்பதை இன்னும் கூறவில்லையே.ம்.. கூறுகின்றேன்.வளசரவாக்கம்,இந்த இடத்தை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறேன். (மீனம்பாக்கம்) விமான நிலையத்தில் இருந்து வளசரவாக்கம் 31 நிமிடப் பயணம்.10.9 km. அப்பாடா! நேரம் போனதே தெரியவில்லை .வீட்டை அடைந்து விட்டேன்.

வளசரவாக்கம்

Chennai

வீடு வளசரவாக்கத்தில் வசிக்கும் யாழ்ப்பாணத் தமிழர் வாடகைக்கு பெற்றுத் தந்தார்.

வீடு அமைந்துள்ள இடம்
கிருஷ்ணா நகர் (வேலன் நகருக்கு அருகாமையில்)
வளசரவாக்கம்
சென்னை .
ஒரு நாள் வாடகை 3500/= இந்திய ரூபா.

நான் ஒரு மாதம் தங்கப் போகின்றேன்.4 அறைகள் ,3 குளியலறை, ஒரு விறாந்தை உள்ளடங்கிய ஒரு மேற் தளத்தை கொண்ட வீடு . இங்கு தான் உறவினர்களும் தங்கப் போகின்றார்கள்.தனி வீடு எடுத்ததில் திருப்தியுடன் கூடிய மகிழ்ச்சி.

அன்று இரவே உறவினர்களும் வந்து விட்டார்கள். அப்பாடா! .எல்லோரும் வந்தாச்சு.இனி சென்னையை சுற்றிப் பார்க்க வேண்டியது தான்.

காட்சி 2 அடுத்த பதிவில் ….

நான் பார்த்த சென்னை அறிமுகத்தை பார்க்க.

நான் பார்த்த சென்னை

பிரிவுகள்:ALL POSTS, உலகம், prabuwin குறிச்சொற்கள்:

உலகைக் கலக்கும் ஒபாமா மகளின் ஒளிப்படம்.


அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தலை மகள் மலியாவின்  ஒளிப்படம் ஒன்று இணையத்தளம் வழியாக பரவி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமது மகள்கள் குறித்து மிகவும் கட்டுப்பாட்டுடன்  உள்ளார் ஒபாமா. அதுமட்டுமன்றி அவர்கள் குறித்த செய்திகள் எதுவும் தவறாக வந்து விடக் கூடாது என்பதில் தாயார் மிஷல் மிகக் கவனமாக உள்ளார்.

ஆனால் அதையும் மீறி 16 வயதான  தலை  மகள் மலியா ஒபாமா கூந்தலை சரி செய்தபடி காட்சியளிக்கும்  ஒளிப்படம் ஒன்று INSTAGRAM மூலமாக வெளியாகியுள்ளது. மலியாவின் படங்கள் ஏற்கனவே இணையத்தில் உள்ள போதிலும் குறித்த படம் அவரது அறைக்குள் எடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

படத்தில் மிகவும் சாதாரணமான முறையில் மலியா அணிந்துள்ள சட்டையில் புரூக்லினை தளமாகக் கொண்ட இசைக் குழுவொன்றின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் INSTAGRAM கணக்கின் ஊடாகவே படம் வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.இருப்பினும் இந்தப் படம் யாரால், எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. எப்படி வெளியானது என்றும் தெரியவில்லை. இந்த ஒளிப்படம் குறித்து இதுவரை வெள்ளை மாளிகை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

maliya

பிரிவுகள்:ALL POSTS, உலகம் குறிச்சொற்கள்:

உலகின் மிகவும் வடிவான 9 வயது சிறுமி


The-most-beautiful-girl-in-the-world-Kristina-Pimenova-14

உலகின் மிகவும் வடிவான பெண் 9 வயது சிறுமி என்றால் நம்ப முடிகின்றதா?நம்பித்தான் ஆக வேண்டும்.இந்த சிறுமியின் தாயார் தனது INSTAGRAM ல் தனது மகளின் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.அந்த புகைப்படம் உலகம் முழுவதும் லட்சக் கணக்கான மக்களை கவர, உலகின் பிரபல விளம்பர நிறுவனங்கள் இந்த சிறுமியை தங்களது விளம்பரங்களில் தோன்றுவதற்காக கோடிக்கணக்கில் பேரம் பேசுகின்றன. GOOGLE தேடு தளத்தில் அதிகம் தேடப்பட்ட நபராகவும் இந்த சிறுமி இடம் பிடித்துள்ளார்.

http://www.womendailymagazine.com/beautiful-girl-world-kristina-pimenova/

பிரிவுகள்:ALL POSTS, உலகம் குறிச்சொற்கள்:

பாரிய வெற்றி பெற்றுள்ள “யாழ்ப்பாண கொலைவெறி’


தாத்தா முதல் டாடா வரை ‘கொலவெறி’க்கு அடிமையாக ஆகிவிட்டார்கள். தமிழ்நாட்டு தனுஷ் கொடி இன்று இந்தி வரை பறக்கக் காரணமும் இந்தக் ‘கொலவெறி’ தான்!

இதேபாடலை எம்.ஜி.ஆர். பாடினால் எப்படி இருக்கும் … சிவாஜி உச்சரித்தால் எப்படி இருக்கும் என்று உடான்ஸ் பாட்டுக்கள்  இணையத்தில் உலவும் வேளையில், யாழ்ப்பாணத்தில் இருந்து அழகுத் தமிழ் ‘கொலைவெறிப் பாடல்’ ஒன்று வந்திருக்கிறது. தமிழ் உணர்வாளர்களும் புலம்பெயர் ஈழத் தமிழர்களும் இந்தப் பாடலால் உச்சி குளிர்ந்து கிடக்கிறார்கள்.

‘என் தமிழ் மொழி மேல் உனக்கேன் இந்தக் கொலைவெறிடா’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் வரிகளே, சூட்டைக் கிளப்புகின்றன. இந்தப் பாடல் இணையதளத்தில் வெளியான மூன்று நாட்களுக்குள் 2.24 லட்சம் பேர் கேட்டு ரசித்திருக்​கிறார்கள்.

4.26 நிமிடங்கள் ஓடுகிறது இந்த வீடியோ பாடல். போர் முடிந்த ஈழத்தில், நொந்துகிடக்கும் தமிழ் மக்களின் நெஞ்சைத் தொடும் பாடலாக இது அமைந்திருக்கிறது. யாழ் நகரத்தின் வரவேற்பு வளைவு, நல்லூர் முருகன் கோயில், மரியாள் பேராலயம், யாழ்ப்பாணத்தின் மையத்தில் உள்ள தமிழ்ப் பெரியவர்களின் சிலைகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தி, தாய் மண்ணைத் தரிசிக்க முடியாத புலம்பெயர் தமிழர்களைப் பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது.

யாழ் நகரைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் இந்தப் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பாடலை இயற்றி, பாடி, இசையமைத்த எஸ்.ஜெ.ஸ்டாலினுக்கு, உலக அளவில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. எஸ்.ஜெ.ஸ்டாலினிடம் பேசினோம்.

பாடல்…

”இசையில் எனக்கு ஆர்வம் அதிகம். வீட்டிலேயே  ஸ்டுடியோ வைத்து, குறும்படங்கள், நாடகங்கள், வானொலி நிகழ்வுகளுக்காக நண்பர்களுடன் சேர்ந்து இசை அமைக்கிறோம். ‘தனுஷ்’ பாடல் மெட்டில், பலரும் பலவிதமாக பாடல்களை உருவாக்கி இணைய தளங்களில் வெளியிட்டதைப் பார்த்தோம். என்னுடைய நீண்டகால ஆதங்கத்தை கலந்து நாங்களும் ஒரு பாடல் செய்தோம். இந்தப் பாடல் காட்சிக்கான ஒளிப்பதிவு, படத்தொகுப்புகளை என் நண்பர்கள் வர்ணன், அமலன் ஆகியோர் செய்தார்கள். ‘கொலவெறி – யாழ்ப்பாணம் வெர்ஷன்’ என்று பெயரிட்டு, ஈழத்தமிழர் பார்வையிடும் சமூக இணையதளங்களில் பரீட்சார்த்த முயற்சியாக வெளியிட்டோம். நீண்டகாலமாகவே தமிழ்க் கலைப் படைப்புகளில் தமிழ்மொழிக் கொலையும் வேற்றுமொழிக் கலப்பும் நீடிப்பது கண்டு மனதில் பெரும் ஆதங்கம் இருந்துவந்தது. வேற்றுமொழிக் கலப்புடன் வரும் பாடல்களுக்கு மட்டுமில்லாமல் தனித் தமிழில் மட்டுமே இயற்றப்படும் பாடல்களுக்கும் மக்கள் வரவேற்பு அளிப்பார்கள் என்பதை இந்தப் பாடலுக்குக் கிடைத்த  அமோக வரவேற்பின் மூலம் அறியமுடிகிறது” என்றார்.

தமிழுக்கு மரியாதை!

– ஜூனியர் விகடன்-

தமிழ்நாட்டில் உள்ள நாளிதழ்கள் ,சஞ்சிகைகள்,இணையதளங்கள் அனைத்தும் இப்பாடலை பாராட்டி எழுதியுள்ளன.இலங்கையின் அனைத்து தொலைக்காட்சி,வானொலிகளிலும் இப்பாடல் ஓயாது ஒளி,ஒலி பரப்பாகிக் கொண்டிருக்கின்றன.புலம் பெயர் நாடுகளும் இப்பாடல் பட்டயக் கிளப்பிக் கொண்டு இருக்கின்றது.

தொடர்புடைய சுட்டிகள் :

http://news.vikatan.com/index.php?nid=5972

http://www.vikatan.com/article.php?aid=14784&sid=415&mid=2&

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%22%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%27&artid=535458&SectionID=131&MainSectionID=131&SectionName=World&SEO=

தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள “என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா” இவ் இசைக் காணொளியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நகரின் தோற்றத்தினை காண்பிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் யாழில் முதன் முதலாக அதி உயர் வடிவத்தில் (1080p HD)தயாரிக்கப்பட்டுள்ளது.

கொலவெறிப்பாடலின் வரிகளை முற்றிலுமாக மாற்றியமைத்து இசைக்கு மேலும் மெருகூட்டிய பாடலின் பரிணாமம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இளம் இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஸ்ரலின் அவர்கள் பாடல் வரிகளை எழுதி, பாடலையும்  பாடியுள்ளார். அண்மையில் இவர் இசையமைத்த ‘தண்ணீர்’ குறும்படம் 2011ற்கான  சிறந்த குறும்பட இசை விருதை வெண்றமை குறிப்பித்தக்கது.

இப்பாடல் காணொளியை ‘யாழ் மியூசிக்’ நிறுவனம் தயாரித்துள்ளதுடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட இவ் இசை நிறுவனம் தொடர்ந்தும் எம்மவர் படைப்புக்களையும், கலைஞர்களையும் அடையாளப்படுத்தும் படைப்புக்களை தாயாரித்து வருகின்றது.

உலகின் மிகப்பெரிய நாய்


பிரிவுகள்:ALL POSTS, உலகம், புகைப்படங்கள் குறிச்சொற்கள்:

2050 ம் ஆண்டில் வானவூர்தி


2050 ம் ஆண்டு இந்த வடிவிலான  (வெளிப்படையான)வானவூர்திகளில் நாங்கள் பயணம் செய்ய முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.உங்களுக்கு பயமில்லை என்றால் நீங்கள் இதை மிகவும் விரும்புவீர்கள்.

பிரிவுகள்:ALL POSTS, உலகம், புகைப்படங்கள் குறிச்சொற்கள்:
%d bloggers like this: