தொகுப்பு
எந்த மொழியையும் இலகுவாக கற்றுக்கொள்வதற்கு
புதிதாக ஒரு மொழி கற்க வேண்டும் என்றால் அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவரிடம் நாம் நேரிடையாக பேசினால் போதும் வெகு சீக்கிரத்தில் அந்த மொழியை கற்றுவிடலாம்.
ஓன்லைன் மூலம் எந்த மொழியையும் நேரடியாக எளிதாக கற்கலாம், நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
புதிய மொழி கற்க வேண்டும் என்றால் அதற்காக பணம் செலவு செய்து அந்த மொழி பயிற்சி அளிப்பவரிடம் சென்று தான் கற்றுக்கொள்வது வழக்கம். ஆனால் ஓன்லைன் மூலம் எந்த மொழியையும் இலவசமாக நேரடியாக கற்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று நம் தாய்மொழி என்ன என்பதையும், நாம் என்ன மொழி கற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதையும் கொடுத்து புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு உள்நுழையவும், நம் கற்றுக்கொள்ள விரும்பும் மொழி பேசுபவர்கள் பல பேர் நேரடியாக ஓன்லைனில் இருப்பார்கள்.
இதில் நாம் விரும்பியவருடன் நேரடியாக வீடியோ சாட்டில் பேசலாம். நம் தாய்மொழியை மற்றவருக்கு கற்றும் கொடுக்கலாம். முதலில் தத்தி தத்தி பேச ஆரம்பிக்கும் நாம் சில நாட்களில் அந்த மொழியில் வல்லவர்களாகி விடலாம், கூடவே நமக்கு நல்ல நண்பர்களும் கிடைக்க வாய்ப்பு உண்டு.
இதற்கென்று இத்தளம் கட்டணம் ஏதுவும் வசூலிக்கவில்லை, இலவசமாகவே இந்த சேவை அளித்து வருகிறது.
புதுமைகள் பல நிறைந்த புத்தக சேவை தளம்
புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, ஆனால் அதற்கான நேரம் தான் இல்லை என்று கூறுபவர்களுக்கு என்றே பிரத்தியேகமான இணையதளம் ஒன்று அறிமுகமாகியுள்ளது.
புக்ஸ் என்பது அந்த இணையதளத்தின் பெயர். புத்தகங்களை குறிக்கும் ஆங்கில சொல்லான புக்ஸில் ‘கே’ விற்கு பதிலாக கியூ என்னும் எழுத்து இடம் பெறும் வகையில் இதன் பெயர் அமைந்துள்ளது. பெயரில் மட்டும் அல்ல செயல்பாட்டிலும் இதே புதுமை இருக்கிறது.
படிப்பதை இன்னும் செயல் திறனோடு மேற்கொள்ளுங்கள் என்று சொல்லும் இந்த தளம் வாசிப்பதன் மூலம் தேவைப்படும் அறிவை சுலபமாகவும், இலவசமாகவும் பெறுங்கள் என்கிறது.
புத்தகத்தில் உள்ளவற்றை சுலபமாக தெரிந்து கொள்வது என்பது சரி. ஆனால் இலவசமாக தெரிந்து கொள்வது என்றால் என்ன பொருள் என்று குழப்பம் ஏற்படலாம்.
இலவசமாக படிப்பது என்றால் படிக்காமலேயே படிப்பது என்று வைத்து கொள்ளுங்களேன். படிக்காமல் படிப்பது எப்படி என்று மீண்டும் குழப்பம் ஏற்பட்டால் முழு புத்தகத்தையும் படிக்காமல் அதன் சாரம்சத்தை மட்டும் சில வரிகளில் தெரிந்து கொள்வது என்று பொருள்.
புத்தகங்களின் சாரம்சம் அல்லது அதன் முக்கிய பகுதியை சுருக்கமாக தருவதுண்டு அல்லவா, அதே போல இந்த சேவை புனை கதை அல்லாத எந்த புத்தகத்தையும் முக்கிய வரிகளாக சுருக்கி தந்துவிடுகிறது.அதாவது மேற்கோள்கள் போல அளிக்கிறது.
புத்தகத்தை முழுவதும் படிக்க முடியாவிட்டாலும் பரவயில்லை, அதன் சாரம்சத்தை தெரிந்து கொள்ள முடிந்தால் நல்லது என்று கருதுபவர்களுக்கு புத்தகத்தின் உள்ளடக்க சுருக்கம் மிகவும் பயனுள்ளது. ஆனால் இதையும் கூட படிக்க முடியாமல் திணறுபவர்கள் இருக்கின்றனர்.
அதே நேரத்தில் எதையுமே ரத்தின சுருக்கமாக சில வரிகளில் சொல்லும் போது எல்லோரையும் கவரவே செய்யும் தானே.
அதை தான் இந்த தளம் வாசிப்பதை புதுமையானதகாவும் புத்திசாலித்தனமானதாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்கிறது. அதற்கேற்ப புத்தகங்களில் உள்ளவற்றை கிரகித்து கொள்வதற்கான புதுமையான வழியை உருவாக்கியிருப்பதகாவும் பெருமைப்பட்டு கொள்கிறது.
புனை கதை அல்லாத புத்தகங்களின் உள்ளடக்கத்தை முக்கிய பகுதிகளை பகிர்ந்து கொள்வதன் மூலம் இதனை சாத்தியமாக்கும் வழியையும் இந்த தளம் வழங்குகிறது.
இப்படி பகிரப்பட்ட புத்தகங்களின் முக்கிய வரிகளை முகப்பு பக்கத்தில் இடம் பெற்றுள்ள புத்தக பட்டியலில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த பட்டியலில் உள்ள புத்தகத்தை கிளிக் செய்தால் அந்த புத்தகத்திற்கான தனி பக்கம் வருகிறது.
அதில் அந்த புத்தகத்தின் முக்கிய வரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வரிகளை படித்தாலே புத்தகத்தின் ஆதார அம்சம் என்னவென்று புரிந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம். ஒரு சில வரிகளில் ஒரு புத்தகத்தை படித்து விடுவது என்பது சிறந்த விடயம் தானே.
புத்தக பிரியர்கள் தாங்கள் படித்த புத்தககங்களில் இருந்தும் முக்கிய வரிகளை இப்படி பகிர்ந்து கொள்ளலாம். ஏற்கனவே இடம்பெற்றுள்ள புத்தகத்தை படித்தவர்கள் தாங்கள் முக்கியமாக கருதும் வரிகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
புத்தகம் படிப்பதென்பது ஒரு தவம்.அந்த தவத்தின் மூலம் பெறக்கூடிய அறிவையும் புரிதலையும் ஒரு சில வரிகளில் பெற முடியுமா? என்று தெரியவில்லை. ஆனால் பக்கம் பக்கமாக படிக்க முடியாதவர்களுக்கு புத்தகம் படிப்பதன் ஆர்வத்தையும் அதன் பலனையும் தரக்கூடியது என்னும் விதத்தில் இந்த சேவையை வரவேற்கலாம்.
புத்தகங்களை பார்த்தாலே ஓடுபவர்களில் பலரை புத்த்க உலகின் பக்கம் இந்த சேவை இழுத்து வரக்கூடும். மேலும் எதையுமே சில வரிகளில் தெரிந்து கொள்ள துடிக்கும் டிவிட்டர் தலைமுறைக்கு இந்த சேவை மிகவும் தேவை என்றும் சொல்லலாம்.
அதோடு இங்கு சமர்பிக்கப்படும் பட்டியலில் இருந்து புதிய புத்தகங்களை தெரிந்து கொள்ளலாம். அதன் சாரம்ச வரிகளை கொண்டு அந்த புத்தகத்தை படிக்கலாமா என்று முடிவு செய்து கொள்ளலாம். அந்த வகையில் தீவிர புத்தக புழுக்களுக்கும் இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும்.
இப்போது தான் துவக்கப்பட்டுள்ளதால் தற்போது இந்த தளத்தில் உள்ள புத்தக பட்டியல் பெரிதாக இல்லை. ஆனால் அமைப்பும் உள்ளடக்கமும் கவரக்கூடியதாகவே இருக்கின்றன. பலரும் பயன்படுத்த துவங்கினால் இந்த தளம் சுவாரஸ்யம் மிகுந்ததாக உருவாகலாம்.
நன்றி-இணையம்.
இலங்கைத் தமிழ் அழகான தமிழ் – நடிகர் விஜய்
இலங்கைத் தமிழ் மிகவும் அழகான தமிழ் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.இந்தியத் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் வழங்கிய பேட்டியின் போது இலங்கைத் தமிழர்கள் தொடர்பாக கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.அப்போது இந்தியத் தமிழர்கள் உட்பட நான்கு இலங்கைத் தமிழர்களும் கலந்து கொண்டனர். இலங்கைத் தமிழர்கள் விஜய்யுடன் கேள்விகளைக் கேட்டு உரையாடினர்.அப்போதே விஜய் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த விஜய் ,நீங்கள்(இலங்கைத் தமிழர்கள்) கதைப்பதை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.இலங்கைத் தமிழ் மிகவும் அழகான தமிழ்.அவ்வளவு இனிமை.நானும் இந்த அழகான தமிழை என் மனைவி மூலம் ஒவ்வொரு நாளும் கேட்டு ரசிக்கின்றேன்.
இவ்வாறு விஜய் தெரிவித்தார்.
குறிப்பு: விஜய் சொல்லித்தான் இலங்கைத் தமிழின் அழகு பற்றித்தெரிய வேண்டுமா என்று படிக்கும் நீங்கள் கேட்கலாம்.இலங்கைத் தமிழின் அழகு உலகம் அறிந்தது.அதிலும் யாழ்ப்பாணத் தமிழின் அழகு அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் முதற் கொண்டு பில் கேட்ஸ் வரை அனைவருக்கும் தெரியும்.
புகைப் பிடிக்க வேண்டாம் என்பதற்கு மிகச் சிறந்த விளம்பரங்கள்
இந்த புகைப்படங்களை பார்த்த பின்பு யாரும் புகைப் பிடிக்க மாட்டார்கள்.அவ்வாறு யாராவது புகைப் பிடிப்பீர்களே ஆனால், நிச்சயம் நீங்கள் மனநல மருத்துவரை சந்திப்பது நல்லது.
யாழ்ப்பாணத்தில் தமிழ் ஒலிபரப்பு சேவைகளை ஆரம்பிக்க அமெரிக்கா, சீனா திட்டம்
சீனாவும், அமெரிக்காவும் ஆசிய நாடுகளுக்கான தமிழ் ஒலிபரப்பு சேவை ஒன்றை யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு விரைவில் தொடங்க உள்ளது.
அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட இருக்கும் தமிழ் வானொலிச்சேவை இலங்கை நேயர்களுக்காக 24 மணிநேர எப்.எம் சேவையையும், தமிழ்நாடு, மலேசியா சிங்கப்பூர் மற்றும் இதர ஆசிய நாடுகளில் உள்ள தமிழ் நேயர்களுக்காக எட்டு மணி நேர சிற்றலை ஒலிபரப்பையும் நடத்த உள்ளதாக தெரியவருகிறது.
அதேவேளை சீனா தன்னுடைய சர்வதேச ஒலிபரப்பான ஏ.எம். மற்றும் எப்.எம் வானொலிகளை இலங்கை, மியன்மார் உட்பட ஏழு நாடுகளுக்கு விரிவுபடுத்த உள்ளதாக சீன சர்வதேச வானொலி நிலைய இயக்குனர் வாங் ஜெங்னி யான் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களை இலக்கு வைத்து சீனாவும், அமெரிக்காவும் இந்த தமிழ் ஒலிப்பரப்பு சேவைகளை ஆரம்பிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கான பூர்வாங்கப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
யாழில் சீனர்கள் வந்து செல்கின்றமை மிகவும் அதிகரித்துள்ள நிலையில் சீனா அமெரிக்காவிடமிருந்து இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கையின் முதல் தர தமிழ் தேசிய சஞ்சிகை “இருக்கிறம்”
இலங்கையில் பல தமிழ் சஞ்சிகைகள் வெளிவருகின்றன. இருக்கிறம், புதுயுகம், கலைக்கேசரி, சுகநலம் என்பன அவற்றில் குறிப்பிடத்தக்க சிலவாகும். இன்று எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரே சஞ்சிகை இருக்கிறம் ஆகும்.
இருக்கிறம் மிக மிக சிறப்பாக யதார்த்தங்கள் பலவற்றை உள்வாங்கி வெளி வருகின்றது.
உண்மைச்செய்திகள், துணிச்சல், அலசல், சமூக அக்கறை இவற்றின் மறுபெயர் இருக்கிறம் என்றால் அது மிகையாகாது. பக்க வடிவமைப்பு,தரம் ,நியாய விலை சொல்லிக்கொண்டே போகலாம்.
இப்பொழுது இந்தியா உட்பட ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிஸ் போன்ற நாடுகளிலும் கிடைக்கின்றது.
இலங்கையின் முதல் தர தேசிய தமிழ் சஞ்சிகை இருக்கிறம் என்றால் அது மிகையல்ல.
இருக்கிறம் சஞ்சிகையின் இணையத்தள முகவரி இதோ..
இலங்கையில் தமிழ் தொலைக்காட்சிகள்
இலங்கையில் தமிழ் தொலைக்காட்சிகள் பற்றிய ஒரு பார்வை
இலங்கையில் 5 தமிழ் தொலைக்காட்சிகள் இயங்குகின்றன.
இவற்றின் பெயர்கள் பின்வருமாறு.
1.வசந்தம் தொலைக்காட்சி
2.சக்தி தொலைக்காட்சி
3.நேத்ரா தொலைக்காட்சி
4.வெற்றி தொலைக்காட்சி
5.தமிழ் ஒளி தொலைக்காட்சி
தமிழ் தொலைக்காட்சிகளை எடுத்துக்கொண்டால் அவற்றில் தற்போது முன்னிலை வகிப்பது வசந்தம் தொலைக்காட்சி ஆகும்.மிகவும் நல்ல நிகழ்ச்சிகளை வழங்கும் இவர்கள் அதிகளவான பார்வையாளர்களையும் கொண்டுள்ளார்கள்.வசந்தம் தொலைக்காட்சி செய்திகளில் நடுநிலைமை காட்டாமை ஏனோ?எனினும் சொந்தமாக நிகழ்சிகளை தயாரித்து வழங்கும் அழகும் புதுமையான நிகழ்ச்சிகளும் பார்ப்போரை கவரவே செய்கின்றன.
அடுத்து சக்தி தொலைக்காட்சியை குறிப்பிடலாம் .பிரமாண்டத்திற்கு பெயர் பெற்ற இவர்கள் தமிழ் மொழியைக் கொல்லவென்றே திட்டமிட்டிருக்கிறார்கள் போலத்தெரிகிறது.எவ்வாறு இந்தியாவில் சன் தொலைக்காட்சி தமிழை அழிக்கிறதோ அவ்வாறு தான் இலங்கையில் சக்தி தொலைக்காட்சியும்.எனினும் இலங்கையில் உள்ள சுமார் முப்பது சிங்களத் தொலைக்காட்சிகளோடு போட்டியிட்டு முன்னிலை வகிப்பது சாதாரண விடயமல்ல.
இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் சன் தொலைக்காட்சி,விஜய் தொலைக்காட்சி போன்றவற்றை மிஞ்சும் வகையில் எந்தவகையிலும் சளைக்காமல் புதுமைகளை நிகழ்த்துவது சாதனைக்குரியது.
உதாரணமாக சூப்பர் ஸ்டார்ஸ் ,சூப்பர் சிங்கர்ஸ் . கிளாசிகல் டான்ஸ், கிராண்ட் மாஸ்டர் என்பவற்றைக்குறிப்பிடலாம்.பாருங்கள் நண்பர்களே எங்காவது தமிழில் நிகழ்ச்சியின் பெயர் இருக்கின்றதா என்று.
இவர்களின் ஒரே வருத்தம் என்ன தெரியுமா? யாழ்ப்பாணத் தமிழர்கள் இவர்களைப் புறக்கணித்தது தான்.தமிழை கொன்றால் யாழ்ப்பாணத் தமிழர்கள் விடுவார்களா என்ன!
அடுத்ததாக தமிழ் ஒளி தொலைக்காட்சியை குறிப்பிடலாம்.சர்வதேசம் எங்கும் செய்மதி ஊடாக ஒளிபரப்புச் செய்கின்றார்கள்.யாழ்ப்பாணத்தமிழ் இவர்களின் நிகழ்ச்சிகளில் கொஞ்சி விளையாடும்.தென்னாபிரிக்காவில் அதிக பார்வையாளர்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.
வெற்றி ,நேத்ரா தொலைக்காட்சிகளும் குறிப்பிடத்தக்க அளவு சிறப்பான நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.
தமிழ் தொலைக்காட்சிகள் தமிழர்களால் நடத்தப்படுகின்றன. இவற்றின் உரிமையாளர்கள் தமிழர்கள்.
இதேநேரம் பகுதி நேரத்தமிழ் தொலைக்காட்சிகள் சிலவும் இயங்குகின்றன.
1.மக்ஸ் தொலைக்காட்சி
2.ரி.என்.எல். தொலைக்காட்சி
3.ஸ்வர்ண வாகினி தொலைக்காட்சி
4.ஐ தொலைக்காட்சி
பகுதி நேரத்தமிழ் தொலைக்காட்சிகள் சிங்களத்தில் முதன்மை நிகழ்ச்சிகளை வழங்குவதால் தமிழ் நிகழ்ச்சிகள் குறைவாகவே ஒளிபரப்புச் செய்யப்படுகின்றன.பகுதி நேரத்தொலைக்காட்சிகள் சிங்களவர்களால் நடத்தப்படுகின்றது.இவற்றின் உரிமையாளர்கள் சிங்களவர்கள்.
ரஜினியும் கமலும் இணைகிறார்களா?
இந்திய சினிமா வரலாற்றில் அதிக செலவில் எடுக்கப்பட்ட படம் என பெயரெடுத்திருப்பது ‘எந்திரன்’ திரைப்படம். ஷங்கரின் இயக்கத்தில் கலாநிதி மாறன் 160 கோடி செலவில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ‘எந்திரன்’ திரைப்படம்.
உலகளாவிய ரீதியில் பல சாதனைகளை முறியடித்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கலாநிதி மாறன் அடுத்த படத் தயாரிப்பு பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டார். அடுத்தப் படத்திற்கு கலாநிதி மாறன் ஒதுக்கியிருக்கும் தொகை 500 கோடி இந்திய ரூபாய். அதாவது இலங்கை மதிப்பில் 1,250 கோடி ரூபாய்..!
இவ்வளவு செலவில் உருவாகும் படத்தினை இயக்கவிருப்பவரும் இயக்குநர் ஷங்கர்தான். 500 கோடி ரூபாய் செலவில் உருவாகவிருக்கும் இத்திரைப்படத்தில் இரண்டு திரையுலக ஜாம்பவான்கள் இணையவிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலக நாயகன் கமல்ஹாசனும் இப்படத்தின் மூலம் 30 வருடங்களுக்குப் பிறகு திரையில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் சிறப்பம்சம். ரஜினி-கமல் கூட்டணியில் அக்காலத்தில் வெளிவந்த படங்கள் சக்கைபோடு போட்டதை யாரும் எளிதில் மறந்துவிடமாட்டார்கள். மீண்டும் அவர்களை ஒன்றிணைய வைப்பதென்பது எல்லா இயக்குநர்களுக்கும் கனவாகவே இருந்தது. அந்த கனவினை நிஜமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இத்திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்த்தமுள்ள விளம்பரம் (தகவல்)
நூறு ஆண்டுகளுக்கு முன் குடியேறிய பெண்மணிக்கு அமெரிக்கக் குடியுரிமை
காஸியா மச்சுரே என்ற பெண்மணி மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்கா சென்று நூறு ஆண்டுகளின் பின்னர் அவரது 101 ஆவது வயதில் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுள்ளார்.
இந்த வயதிலாவது தமக்கு குடியுரிமை கிடைக்கப் பெற்றமையையிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இவர் 1909 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு சென்று 101ஆவது ஆண்டு நிறைவு தினத்தில் அவருக்கு குடியுரிமை கிடைத்துள்ளது. நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் தாம் வாக்களிக்கவிருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மாநிலமான டெக்ஸாசில் சமஷ்டி நீதிமன்றத்தில் குடியுரிமை வழங்கும் வைபவம் இடம்பெற்றது. 100 வயதுக்கு மேற்பட்ட 15 குடியேற்றவாசிகளின் குடியுரிமை பெற்றவர்களில் இவரும் ஒருவர்.
http://edition.cnn.com/2010/LIVING/10/11/101woman.citizen.document/
நன்றி: இணையம்.
அண்மைய பின்னூட்டங்கள்