தொகுப்பு

Archive for the ‘கவிதை’ Category

எனக்கொரு ஆசை


Man-and-Nature
சூரியன் போல்
இருக்க ஆசை
அவை நேரம் தவறி
நான் பார்த்ததில்லை
பிரபஞ்சம் போல்
விரிய ஆசை
எப்பொழுதுமே அவை
ஒரு வட்டத்திற்குள் சுருக்கியதில்லை
காற்று போல் இருக்க
ஆசை
தன்னால் தான் உயிரினம் வாழுகின்றதென்ற
ஆணவம் கொண்டதில்லை
மரங்கள் போல் துணிவாக
இருக்க ஆசை
கல்லெறி விழும் என்று பயந்து
காய்க்காமல் விட்டதில்லை
நாய் போல்
பிறக்க ஆசை
செய்ந்நன்றி என்றும்
மறந்ததில்லை
புறா போல்
இருக்க ஆசை
கோயில்,தேவாலயம் ,மசூதியில் வசித்து
எம்மதமும் சம்மதம் என்று வியப்பூட்டுபவை
மரணத்தை
வாழ்த்த ஆசை
நீதியின் முன் எல்லோரும் சமம்
என்று சொல்லுபவை.

 

—————————————————————————————————————————

நான் பார்த்த சென்னை (காட்சி 6) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, கவிதை குறிச்சொற்கள்:

நிலவை நேரில் பார்க்க ஆசை


moon

நிலவை நேரில் பார்க்க
ஆசைப்பட்டேன்!
கனவிலே பார்க்கலாம்
என்றார் அம்மா!
நீ கனவிலே
வந்தாய்!
ஆயிரம் நிலவுகளை
நேரில் கண்டேன்!

பிரிவுகள்:ALL POSTS, கவிதை குறிச்சொற்கள்:

நீ இருப்பது தெரியவில்லை


தேவலோகத்தில் சுயம்வரம்
அரசன் முன்னிலையில்
தேவலோக அழகிகள்!
வரிசையிலே
பார்வையாளராய்
நீ!
பாவம் அரசன்
நீ இருப்பது தெரியவில்லை
அவனுக்கு!

பிரிவுகள்:ALL POSTS, கவிதை குறிச்சொற்கள்:

விரைவில் தொடங்கு


எனக்கெதிராக
போரைத்
தொடங்கப்
போகிறாயாம்!
விரைவில்
தொடங்கு
எதிர்ப்பில்லாமல்
வென்று விடலாம்!

பிரிவுகள்:ALL POSTS, கவிதை

உன்னைக்கண்டால்


கடவுள் சொன்னான்
மனிதன் பாவமென்று!
உன்னைக்கண்டால்
கடவுளும் பாவம் தான்!!

பிரிவுகள்:ALL POSTS, கவிதை

உனது முடிவு


என் காதலுக்கு
அணிந்துரை எழுதிய
இறைவன்
முடிவுரை
தெரியாமல்
தடுமாறுகின்றான்
உனது முடிவு
எப்படி அமையுமென்று
அவனுக்கே தெரியாததால்!

பிரிவுகள்:ALL POSTS, கவிதை குறிச்சொற்கள்:

ஒரு கல்லறை பேசுகின்றது


உன்னைப்
பார்த்தேன்
உன்னில்
கலந்தேன்
என் காதலை
விண்ணப்பித்தேன்
காதலில்
ஜெயித்தேன்
உன்னோடு
ஐக்கியமானேன்
இரண்டறக்
கலந்தேன்
உன்னாலே
பிரிந்தேன்
உள்ளத்தால்
தவித்தேன்
முடிவற்றுக்
கிடந்தேன்
காதலில்
தோற்றேன்
வலியால்
துடித்தேன்
மாற்றான் மனைவியாக
கண்டேன்
இரண்டாக
உடைந்தேன்
என் காதலுக்கு
விடை தேடினேன்
எனக்கு முடிவுரை
எழுதினேன்
என்னை
அழித்தேன்
இறுதியில்
கல்லறையானேன்.

பிரிவுகள்:ALL POSTS, கவிதை

உன் பிறந்த நாள்


நாளை உன்
பிறந்த நாள்!
என்னை அழிக்க
கடவுள் உன்னை
பூமிக்கு
அனுப்பிய நாள்!!

பிரிவுகள்:ALL POSTS, கவிதை குறிச்சொற்கள்:

அழகிய நிலா!


என் நண்பனின்
கனவில்
வந்தது அழகிய நிலா!
நிலாவுக்குத்தெரியவில்லை
என் நண்பன்
சூரியன் என்று!!

பிரிவுகள்:ALL POSTS, கவிதை குறிச்சொற்கள்:

நாங்களும் சீக்கிரம் வருவோம்!


மடிந்து போன
உறவுகளுக்கு
ஒரு ஆறுதல்!
நாங்களும்
சீக்கிரம்
வருவோம்!!

பிரிவுகள்:ALL POSTS, கவிதை
%d bloggers like this: