தொகுப்பு

Archive for the ‘காதல்’ Category

உங்கள் காதலை அளவிட விருப்பமா?


காதல் புனிதமானது. புதிரானதும் கூட. ஆனால் என்றும் புதிதானது. காதலிப்பவர்களுக்கு இடையில் உள்ள உறவு எப்படி இருக்கிறது என்பதை அளவிட இங்கு ஒரு சுயபரிசோதனை கேள்வி-பதில் தரப்பட்டுள்ளது.

இதன் மூலம் உங்கள் காதலின் ஆழத்தை அளவிட்டுக் கொள்ளலாம்.

புதிதாக காதலிக்கத் தொடங்கினால் உங்கள் துணையை எப்படி கவர்ந்திழுக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

1. உங்கள் காதலரை சந்தித்தால் எதைப்பற்றிப் பேசிக் கொண்டு இருப்பீர்கள்?

அ. பணச் செலவு, சமுதாய நிலவரம், உயர்ந்த வாழ்க்கை கனவுகள் பற்றி…
ஆ. காதலரின் திறமைகள், வளர்ச்சி பற்றி..
இ. நீ நல்ல பையன்/ பொண்ணு போன்ற புகழ்ச்சி

2. உங்கள் காதலியை எங்கு அழைத்துச் செல்ல விரும்புகிறீர்கள்?

அ. புதிதாக தொடங்கப்பட்ட ரெஸ்டாரண்ட், கிளப்
ஆ. பாதுகாப்பான மற்றும் பேசிக் கொண்டிருக்க வசதியான சிற்றுண்டி சாலை, பார்க்
இ. குடும்ப உணவகத்துக்கு நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் அழைத்துச் செல்வேன்.

3. பெற்றோருடன் சென்றிருக்கும்போது தற்செயலாக உங்கள் காதலரை சந்திக்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?

அ. ஜாடை செய்வேன், ஆனால் யாரென்று காட்டிக்கொள்ள மாட்டேன்.
ஆ. நான் உன்னை இங்கு சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை என்று வியப்பு காட்டுவேன்.
இ. ஏற்கனவே தெரிந்தவர்போல அவரிடமும் பேசுவேன்.

4. அவர் உங்களுக்குத்தான் என்று நிச்சயமானால் உங்கள் முதல் திட்டம் என்ன?

அ. தொட்டுத் தொட்டுப் பேசுவேன், உறவு வைத்துக் கொள்ள சம்மதமா என்று கேட்பேன்.
ஆ. கைகளை பின்னிக்கொண்டு ஷாப்பிங் அழைத்துச் செல்வேன். நண்பர்கள் முன் அழைத்துச் சென்று உரிமை கொண்டாடுவேன்.
இ. என்னைப் பற்றி அவள் இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைச் சொல்வேன். சில விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்ய வேண்டி இருப்பதை விளக்குவேன்.
5. உங்கள் பிறந்த நாள் விழாவுக்கு உறவினர்களை அழைக்கிறீர்கள், அப்போது…

அ. எல்லோரையும் அழைப்பதுபோல் காதலரையும் அழைப்பேன். ஆனால் கண்டுகொள்ள மாட்டேன்..
ஆ. நிச்சயம் அவருடன் தனியாக இருக்கும்படி திட்டமிடுவேன்.
இ. உறவினர்களுடன் இருந்தாலும் அவ்வப்போது அவளை தனியே சந்தித்து பேசுவேன்.

6. காதலி எந்த விதத்தில் உங்களுக்குப் பொருத்தமானவர் என்று நினைக்கிறீர்கள்?

அ. பார்வைக்கு அழகானவர், படுக்கைக்கு பொருத்தமானவர்.
ஆ. எங்களுக்கு இடையில் உணர்வுப்பூர்வமான தொடர்பு உள்ளது. என்னை புரிந்து கொண்டு செயல்படுவார்.
இ. எங்கள் குடும்பத்துக்கு பொருத்தமானவர்.

7. காதலரை நினைவூட்டும் மிகப்பெரிய விஷயம் எது?

அ. மற்ற காதலர்களின் நெருக்கங்களை காணும்போது.
ஆ. அவர் என்னுடன் பேசிய பேச்சுக்கள், பகிர்ந்து கொண்ட எஸ்.எம்.எஸ்.களை பார்க்கும் போது…
இ. விழாக்களில் எடுத்த புகைப்படங்ககளை பார்க்கும் போது…

* உங்கள் பதில்களில் மிகுதியாக `அ’ விடை இருக்குமானால்…

உங்கள் காதலில் மோகம் மிகுந்திருக்கிறது. ஈர்ப்பால் மட்டும் உங்கள் காதல் அரும்பி இருக்கிறது. உடல் சார்ந்த தேவைக்காக நேசிக்கும் உங்கள் மனநிலை மாற வேண்டும். உடல் சார்ந்த உறவு மட்டும் காதலுமல்ல, வாழ்க்கையும் அல்ல. உண்மையான காதல் என்பது எல்லாவற்றுக்கும் முன்னுரிமை கொடுக்கும். விட்டுக்கொடுக்கும். எதிர்பார்ப்பும், நம்பிக்கை குறைவும் இருக்காது. உங்கள் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் நல்ல காதலும், சிறந்த உறவுகளும் அமையும்.

* “ஆ” விடை அதிகமாக வருபவர்களுக்கு…

மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு உங்கள் காதல் ஆச்சரியமானது. அன்பு வழியில் அனுபவப்பூர்வமாக பயணிக்கிறீர்கள். சரியான புரிதலுடன் கூடிய விட்டுக்கொடுத்தலும், எல்லையில்லா நேசமும் உங்கள் காதலை மேலும் பெருகச் செய்யும். பாராட்டுக்கள்.

* விடைகளில் `இ’ மிகுந்திருக்கும் உங்களுக்கு…

ஒரு ஈர்ப்புடன் பழகும் முதல் நிலையில் இருக்கிறீர்கள். காதலில் இது இரண்டும் கெட்டான் நிலை. அவர் மீது விருப்பம் இருந்தாலும் அது காதலா என்பது சந்தேகமே. பல விஷயங்களை எதிர்பார்க்கிறீர்கள், பழகுகிறீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு ஈடானால் மட்டும் நீங்கள் இன்னும் நெருக்கம் காட்டுவீர்கள். நேசம் என்பது எதிர்பார்ப்புடன் வருவதல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்வது நல்லது.

குறிப்பு: இணையத்தில் இருந்து பெறப்பட்டது.
                     நன்றி இணையம்.

பிரிவுகள்:ALL POSTS, காதல் குறிச்சொற்கள்:

காதலர் தினம்


உலக காதலர்களுக்கு காதலர் தின

நல்வாழ்த்துக்கள்

 


பிரிவுகள்:ALL POSTS, காதல் குறிச்சொற்கள்:

ஆண்கள் காதலை சொல்லும் போது பெண்கள் சொல்லும் 12 பதில்கள்


1.நோ ஐடியா

2.நண்பர்களாக இருக்கலாம்

3.செருப்பு பிஞ்சிடும்

4.நான் காதலை வெறுக்கிறேன்

5.நான் உன்னை வெறுக்கிறேன்

6.பெற்றோர் திட்டுவாங்க

7.காதலில் நம்பிக்கை இல்லை

8.யோசிக்க நேரம் வேண்டும்

9.உங்களோட மாத வருமானம் என்ன?

10.மன்னிக்கவும் அண்ணா

11.நான் என்னுடைய பெற்றோர மட்டும் தான் காதலிக்கிறேன்

12.நீங்க எனக்கு அப்பா மாதிரி  …

வாசகர் சொன்ன ஒரு பதிலையும் சேர்த்துள்ளேன்.

13.ஆண்கள் மேல் நம்பிக்கை இல்லை.

பிரிவுகள்:ALL POSTS, காதல் குறிச்சொற்கள்:,

கமலஹாசனின் மகள் இலங்கை வாலிபனுடன் காதல்


கமல்ஹாசன் மகள் அக்ஷரா, இலங்கை வாலிபர் ஜேஸன் ஜெயசீலன் என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட படம், இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் & சரிகா தம்பதிக்கு 2 மகள்கள். மூத்த மகள் ஸ்ருதி. படங்களில் நடித்து வருவதுடன், இசை அமைப்பாளராகவும் உள்ளார். இந்தியில் ‘லக்’ என்ற படம் மூலம் அறிமுகமானார். தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக ‘7ம் அறிவு’ என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இவரது தங்கை அக்ஷரா மும்பையில் அம்மா சரிகாவுடன் வசிக்கிறார். ‘சொசைட்டி’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். நடன இயக்குனராவும் உள்ளார்.

இலங்கை வாலிபர் ஜேஸன் ஜெயசீலன்(20) என்பவருடன் அக்ஷரா கடந்த ஒரு வருடமாக நட்புடன் பழகி வருவதாக தெரிகிறது. இந்த நட்பு காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான் என்றாலும் இருவரும் காதலிக்கிறார்கள் என்பது அவர்களது குடும்பத்துக்கே இப்போதுதான் தெரியவந்திருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.

இருவரும் வெளியில் ஜோடியாக செல்வதுடன், நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோவை இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளனர். அடிக்கடி நெட்டிலும் சாட் செய்து கொள்ளும் இவர்கள் அக்ஷு மற்றும் ஜேய்ன் என்ற புனைப்பெயர்களில் காதல் சம்பாஷணைகளை பரிமாறிக் கொள்வதாக தெரிகிறது.

பிரிவுகள்:ALL POSTS, காதல், சினிமா

காதலிக்கும் போது பெண்கள் சொல்லும் கருத்துக்களுக்கு உண்மையான அர்த்தங்கள்


(1).நான் உன்னைக்காதலிக்கிறேன்டா
{உனக்கு ஆப்பு உறுதிடா}

(2).நான் உன்னை மிஸ் பண்ணுறேன்
{உன்ன தொலைச்சு காட்டப்போறன்டா}

(3).  நீ தான் என் வாழ்க்கை டா
{  உன் உயிர் என் கையிலடா}

(4).நீ என் செல்லம் டா
{டேய் நீ என்ட வீட்டு நாய் டா}

(5).நான் உன்னை திருமணம் செய்ய வேண்டும்
{உனக்கு மரண தண்டனை டா}

ஆண்களே! தயவு  செய்து கவனமாக இருங்கள்………

பிரிவுகள்:ALL POSTS, காதல் குறிச்சொற்கள்:

அசின்-டோணி ‘லவ்’?


dhoniasinஇதுவரை லட்சுமிராய் பக்கம் வீசிக் கொண்டிருந்த டோணி காற்று இப்போது அசின் பக்கம் வீச ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள் பாலிவுட்டில் பரபரப்பாய்.

லட்சுமிராய்க்கும் தனக்கும் இனம்புரியாத நெருக்கம் என்றும் அது காதலா இல்லையா தெரியாது என்றெல்லாம் தத்துவஞானிகளுக்கு மட்டுமே புரியும் வகையில் பேசி வந்தார் டோணி. டோணி சென்னை வந்தால் லட்சுமிராயுடன்தான் விருந்து சாப்பிடுவார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அசினுடன் ஒரு விளம்பரப் படத்தில் நடித்தாராம் டோணி. அவ்வளவுதான்… அன்றுமுதல் பிஸின் மாதிரி டோணியுடன் ஒட்டிக் கொண்டாராம் அஸின்.

இருவரும் செல்லில் மணிக்கணக்கில் பேசுவது என்று தொடங்கிய பழக்கம், பிறந்த நாளுக்கு அசினை தனியாக அழைத்து விருந்து கொடுக்கும் அளவுக்கு முன்னேற்றம் கண்டது. அத்துடன் நிற்கவில்லையாம் இப்போது.

இந்த நெருக்கம் இருவரையும் காதலில் பிணைத்து விட்டதாக பரபரப்புடன் பேசுகிறார்கள் பாலிவுட்டில்!

அஜித்-ஷாலினி திருமண புகைப்படங்கள்


1

2

3

4

5

6

7

8

பிரிவுகள்:ALL POSTS, காதல், சினிமா, புகைப்படங்கள் குறிச்சொற்கள்:

பிரபுதேவாவை ரகசிய திருமணம் செய்யவில்லை நயன்தாரா மறுப்பு


nayan and prabhudeva

நயன்தாராவும் பிரபுதேவாவும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக நேற்று ஐதராபாத் டெலிவிஷன்களில் செய்தி ஒளிபரப்பானது.
ஏற்கனவே இருவருக்கும் காதல் என கிசுகிசு பரவியதால் இச்செய்தியை திரையுலகினரும் ரசிகர்களும் உண்மை என்று நம்பினர்.
“வில்லு” படப்பிடிப்பில்தான் இருவரும் நட்பானார்கள். அப்படத்தை பிரபுதேவா இயக்கினார். நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். இருவருக்கும் காதல் மலர்ந்தது. படப்பிடிப்பில் ஒரே ஓட்டலில் தங்கினர். இந்த காதல் விஷயம் பற்றி பிரபுதேவாவிடம் கேட்டபோது, அது என் தனிப்பட்ட விஷயம். அதை பற்றி பேச விரும்பவில்லை என்று கூறி விட்டார். காதலை அவர் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக டெலிவிஷன்கள் செய்தி பரப்பின. இந்த தகவல் உண்மைதானா என்று அறிய நயன்தாராவையும் பிரபுதேவாவையும் நேற்று இரவு தொடர்பு கொள்ள முயன்றபோது அவர்கள் செல்போன் “ஸ்விச் ஆப்” செய்யப்பட்டு இருந்தன.இதற்கிடையில் இன்று அந்த செய்திக்கு நயன்தாரா மறுப்பு தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறியதாவது:-

எனக்கு ரகசிய திருமணம் நடந்து விட்டதாக வெளியான செய்தி பற்றி நானும் கேள்விப்பட்டேன். திருமணம் என்பது விளையாட்டான விஷயம் இல்லை. நான் இப்போது ஐதராபாத்திலேயே இல்லை. அப்படி இருக்க அந்த ஊரில் ரகசிய திருமணம் நடந்தது என்பது எப்படி சாத்தியமாகும்?

எனக்கு எதையும் வெளிப்படையாக பேசும் குணம் உண்டு. மறைத்து வைக்கத் தெரியாது. இது எல்லோருக்கும் தெரியும். நான் திருமணம் செய்ய முடிவு எடுத்தால் அதை ரகசியமாக செய்ய மாட்டேன். பத்திரிகைகளுக்கு பகிரங்கமாக அறிவித்து விட்டுத்தான் செய்வேன்.

எனக்கு திருமணம் நடந்தால் அது பெற்றோர் ஆசியுடன் தான் நடைபெறும். ரகசிய திருமணமாக நடக்காது. இவ்வாறு நயன்தாரா கூறினார்.

பிரபுதேவாவை காதலிப்பது உண்மையா? என்பன போன்ற மேலும் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்து விட்டார்.

சூர்யா,ஜோதிகா திருமண புகைப்படங்கள்


1

2

3

4

5

பிரிவுகள்:ALL POSTS, காதல், சினிமா, புகைப்படங்கள் குறிச்சொற்கள்:,

டோணி-காதல்- கடுப்பில் லஷ்மி ராய்


lakshmirai_and_ms_dhoni1

தனக்கும் டோணிக்கும் காதல் என்று கூறுவது முட்டாள்தனமானது. நான் அவரது தோழி மட்டுமே என்று கூறியுள்ளார் லட்சுமிராய்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணிக்கும் தனக்கும் காதல் என்று வரும் செய்திகளை ஆரம்பத்தில் மறுக்காமல் சிரித்து மழுப்பி வந்தார் லட்சுமி ராய்.ஆனால் இப்போது இந்த செய்திகளை கடுமையாக மறுத்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், டோனியுடன் என்னை இணைத்து புதிது புதிதாக புரளிகள் கிளம்புகின்றன. ஆரம்பத்தில் இந்தச் செய்திகள் எனக்கு சிரிப்பாகவும், பின்னர் சலிப்பாகவும் இருந்தன. இப்போது இவற்றைப் படித்தால் கோபமாக வருகிறது.

எனக்கு கிரிக்கெட் பிடிக்கும். டோனியும் நானும் நட்பாக பழகுகிறோம். அவ்வளவுதான். மற்றபடி இருவரும் காதலிக்கிறோம் என்பது முட்டாள் தனம், என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளைக் காண ஆரம்பத்தில் தென் ஆப்ரிக்கா போகும் முடிவிலிருந்தாராம் லட்சுமி ராய். ஆனால் இப்போது முடிவை மாற்றிக் கொண்டாராம்.

தமிழில் இப்போது வாமணன், நான் அவனில்லை-2, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய படங்களில் நடிக்கும் லட்சுமிராய், பகுஜன் சமாஜ் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரத்திலும் இறங்கியுள்ளார்.

%d bloggers like this: