தொகுப்பு

Archive for the ‘சினிமா’ Category

நான் சூர்யா மாதிரி இருந்தா…


பையன்: நான் உன்னைக் காதலிக்கிறேன்.

பெண்: நான் சூர்யா மாதிரி பையனத் தான் காதலிப்பன்.

பையன்: நான் சூர்யா மாதிரி இருந்தா உன்னை ஏன் காதலிக்கப் போறன்!!!!!!!!

 


 

பிரிவுகள்:ALL POSTS, சினிமா, நகைச்சுவை குறிச்சொற்கள்:

மூன்று (திரைவிமர்சனம்)


தனுஷ்,ஸ்ருதி நடிக்க ஜஸ்வர்யாவின் இயக்கத்தில் வெளியாகியுள்ள மூன்று ரசிகர் பலரிடமும் மாறுபட்ட விமர்சனங்களை சந்தித்துள்ளது. சிலர் ஜஸ்வர்யாவின் இயக்கத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். செல்வராகவனின் பாதிப்பு ஐஸ்வர்யாவிடம் இருப்பதாக சிலர் விமர்சித்துள்ளனர்.
தனுஷ் நடிப்பு மிகச் சிறப்பாக உள்ளதுடன் துணை கதாபாத்திரமான சிவகார்த்தியேனின் கலக்கல் நடிப்பும் பாராட்டும் படியாக உள்ளது.
ஸ்ருதி அழுகாச்சி முகத்திலேயே படம் முழுவதும் வருவது பார்வையாளர்களை சலிப்படைய வைத்துள்ளது.
படத்தின் பாடல்கள், சண்டைக்காட்சிகள்,இசை என்பன தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று நம்பலாம்.எனினும் முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளை கட்டாயம் தவிர்த்திருக்கலாம்.

மூன்று திரைப்படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.

பிரிவுகள்:ALL POSTS, சினிமா

தனுஷ் – ஸ்ருதி நெருக்கம் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினி கவலை


3 திரைப்படத்தில் தனுஷ் – ஸ்ருதி ஹாஸன் நெருக்கமாக நடித்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இதனால் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவர்களின் முயற்சி மற்றும் ரசிகர்களின் அன்பு பிரார்த்தனைகளால் நலம் பெற்று வந்த சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தில் மிகப்பெரிய சலசலப்பு உருவாகியுள்ளது.

தனுஷ் – ஸ்ருதி நெருக்கம் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினி அமைதியிழந்து தவிப்பதாகவும், அவரும் அவரது மனைவி லதா, இதுகுறித்து தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐஸ்வர்யா நிலையை நினைத்தால் எங்களுக்கு கவலையாக உள்ளது, உடனடியாக உங்கள் மகனுடன் பேசுங்கள்.

நிலைமையை சரி செய்ய முடியுமா அல்லது நாங்கள் வேறு வழியில் இதை கையாள வேண்டுமா என்று சற்று கோபத்துடனே ரஜினி தரப்பில் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தன்னைச் சந்திக்க வரும் நெருங்கிய நண்பர்களிடம் இந்த விவகாரத்தைச் சொல்லி வருத்தப்பட்டுகிறாராம் ரஜினி.

ஐஸ்வர்யா – தனுஷ் கொஞ்ச காலம் பிரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது, ஆனால் அனைத்தையும் பொறுத்துக் கொண்ட ரஜினியை மேலும் மேலும் வருத்தப்படவைக்கிறார் தனுஷ் என்று ரஜினியை அடிக்கடி சந்திக்கும் அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினையை விரைவில் சரி செய்வதாக கஸ்தூரி ராஜா உறுதியளித்துள்ளாராம்.

ஸ்ருதி ஹாஸன் ஏற்கெனவே மும்பையில் ஒருவரை காதலித்து, கொஞ்ச நாள் அவருடன் இருந்ததாகவும், பிறகு தெலுங்கு நடிகர் சித்தார்த்துடன் சில மாதங்கள் ஒன்றாக வாழ்ந்து பின்னர் அவரை விட்டுப் பிரிந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

சித்தார்த்தைப் பிரிந்த பிறகுதான் இந்த ‘3′ படத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி. அதுவும் ஏற்கெனவே ஒப்பந்தமான நடிகை அமலா பாலை நீக்கிவிட்டு ஸ்ருதியை ஒப்பந்தம் செய்துள்ளார் ஐஸ்வர்யா.

புத்தாண்டு தினத்தன்று மனைவி ஐஸ்வர்யாவின் பிறந்த நாளைக் கூட பொருட்படுத்தாமல், ஸ்ருதியுடன் மதுபான விருந்துக்கு சென்றுள்ளார் தனுஷ்.

தமன்னா, பூனம் பாஜ்வா என இளம் நடிகைகளின் மதுபான விருந்துகளிலும் தவறாமல் கலந்து கொள்வாராம். இதைக் கேள்விப்பட்ட ரஜினி பயங்கர கோபத்துடன் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரிவுகள்:ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:

தமிழ் ரசிகர்களை கொச்சைப் படுத்திய நடிகன் கார்த்தி


பிரிவுகள்:ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:

பாலு மகேந்திராவின் புதுப்படம்


தமிழ்த் திரையுலகின் சிறந்த ஒளிப்பதிவாளரான பாலு மகேந்திரா புதுப்படம் ஒன்றை இயக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

திரையுலகில் சிறந்த ஒளிப்பதிவாளராக மதிக்கப்படும் பாலு மகேந்திராவுக்கு சிறப்பு செய்ய பாலு மகேந்திரா ஹிட்ஸ்(Balu Mahendra Hits) என்ற நிகழ்ச்சியை சென்னை காமராஜர் அரங்கத்தில் திரையுலகத்தினர் நடத்தியுள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றிய கவிஞர் அறிவுமதி, இயக்குனர் சீனு ராமசாமி, படித்துறை பட இயக்குனர் சுகா, கவிஞர் நா.முத்துக்குமார் மற்றும் ஆடுகளம் பட நடிகர் ஜெயபாலன், பானு சந்தர் உள்பட பல திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு அவரை பாராட்டு மழையில் மூழ்கடித்து நெகிழ வைத்துள்ளார்கள்.

இந்த விழா குறித்து கவிஞர் அறிவுமதி கூறுகையில், பல்லவி அனு பல்லவி படத்தின் மூலம் எங்கள் இயக்குனர் பாலு மகேந்திராவிடம், மணிரத்னம் திரையுலக பாடம் பயின்றார். இயக்குனர் பாலு மகேந்திராவின் உதவியாளர் என்று மணிரத்னம் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

திரையுலக பிரபலங்களின் பாராட்டை ஏற்று பேசிய பாலு மகேந்திரா திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்த நான், என் நண்பர் ஒருவர் தந்த உற்சாகத்தில் படத்தை இயக்கி இயக்குனர் ஆனேன். தற்பொழுது புதுப்படத்தை இயக்கும் வேலையில் இறங்கியுள்ளேன் என்றார்.

பாலு மகேந்திரா இலங்கையின் மட்டக்களப்பு அமிர்தகளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரிவுகள்:ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:

திரைக்கு வந்த இலங்கைத் தமிழ்த் திரைப்படம் ‘ஒரே நாளில்’


பிரிலியன்ட் கிரியேஷன் நிறுவனத்தினால் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தயாரிக்கப்பட்டு வந்த “ஒரேநாளில்’ என்ற திரைப்படம்.
இந்தப் படம்  கடந்த 30 ம் திகதி முதல் நாட்டின் பல்வேறு திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டுள்ளது . இலங்கையின் கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகவே இது எல்லோராலும் பார்க்கப்படுகின்றது.
ஏனென்றால் இலங்கையின் தமிழ் சினிமா என்பது நம்நாட்டில் எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. நம்நாட்டிலும் தமிழ் சினிமா தயாரிக்கும் காலம் வராதா? என்ற ஏக்கம் இலங்கையின் ரசிகர்கள், கலைஞர்கள் மத்தியில் கேள்விக்குறியாகவே இருந்து வந்துள்ளது.

அந்த வகையில் சுமார் இருபது வருடங்களுக்கு பின் முழுக்க முழுக்க நூறு சதவீதம் இலங்கைக் கலைஞர்களை கொண்டே ஒரு பிரமாண்டமான திரைப்படத்தை எம்நாட்டிலும் தயாரிக்கமுடியும் என்று நிரூபித்துள்ளது பிரிலியன்ட் கிரியேஷன் நிறுவனம்.

அழகிய நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ள இத்திரைப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்றவற்றை புதுமுக இயக்குனராகிய நம் நாட்டை சேர்ந்த ஏ.ஆர்.எம்.றஸீம் மேற்கொண்டுள்ளார். இசையை சீ.சுதர்சனும் பாடல்களை இயக்குனர் றஸீம், உதவி இயக்குனர் ப.சிவகாந்தன், கவிஞர் ஆர்.உதயகுமார் ஆகியோர் எழுதியும் மெட்டமைத்துள்ளனர்.

இத்திரைப்படம் இலங்கையின் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு வரலாற்றுப் பதிவு என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் அண்மையில் “ஒரேநாளில்” திரைப்படமானது பத்திரிகையாளர்கள், கலைஞர்களுக்காக திரையரங்கில் காண்பிக்கப்பட்டது. திரைப்படத்தை பார்த்த அனைவரும் இலங்கையின் தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு திரைப்படம் வரவில்லை என்றும் தெரிவித்தனர்.

இத்திரைப்படம் இலங்கையின் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தளிக்கும் என்பதுடன் எமது நாட்டில் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் திரைப்படம் மிகப்பெரும் வெற்றிபெறும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரிவுகள்:ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:

நடிகர் கார்த்தி – ரஞ்சனி திருமண புகைப்படங்கள்


நடிகர் கார்த்தி – ரஞ்சனி திருமணம்


நடிகர் கார்த்தி – ரஞ்சனி திருமணம் கோவையில் இன்று காலை கோலாகமாக நடந்து முடிந்தது. இதில் திரையுலக பிரமுகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள், உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

நடிகர் கார்த்திக்கும் ஈரோடு அருகே உள்ள கிலாம்பாடியை சேர்ந்த சின்னசாமி – ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சினிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களின் திருமண நிகழ்ச்சி கோவை கொடிசியாவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கில் இன்று காலை நடந்தது.

மணமகள் ரஞ்சனி கழுத்தில் கார்த்தி தாலி கட்டினார். அப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் உற்சாகத்துடன் வாழ்த்து கோஷமிட்டு மணமக்களை வாழ்த்தினார்கள். முன்னதாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.

இதில் ஜோதிகா, நக்மா, அவரது தங்கை ரோஷினி, நடிகர் சிபி, நடிகர் ராஜேஷ், டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், சுராஜ், இசையமைப்பாளர்கள் கணேஷ், ஜி.வி.பிரகாஷ், மனிதநேய கல்வி அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, பேராசிரியர் சாலமன் பாப்பையா, நடிகர் சிவாஜியின் நண்பர் சேத்துமடை முத்துமாணிக்கம், கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி உள்பட பலர் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

கார்த்தி – ரஞ்சனி திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் வரும் 7ம்தேதி நடைபெறுகிறது. இதில் திரையுலக பிரமுகர்கள் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்த உள்ளனர். புதுமண தம்பதிகளுக்கு ரசிகர்கள் இங்கே வாழ்த்தை பகிர்ந்து கொள்ளலாம்.

பிரிவுகள்:ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:

இலங்கைத் தமிழ் மாணவர்களின் துயரத்தைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத சூர்யா!


இலங்கையை விட்டு தமிழகத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு ஏதிலி முகாமில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் மாணவ மாணவிகளுக்கு அகரம் அறக்கட்டளை உதவி புரிந்து வருகின்றது.

குறித்த மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் மாணவர்கள் தமது கஷ்டங்களை சொல்லும் போது அகரம் அறக்கட்டளை உரிமையாளர்களான சூர்யா மற்றும் சிவகுமார் உட்பட பலர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

********************************************************************************************

பிரிவுகள்:ALL POSTS, அவலம், சினிமா குறிச்சொற்கள்:

விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம்


நடிகர் விஜய் தமது பிறந்தநாளை முன்னிட்டு, எழும்பூர் மருத்துவ மனையில் ஜூன் 22இல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார்.

நடிகர் விஜய் தனது பிறந்த நாளை ஜூன் 22இல் கொண்டாடினார். இதையொட்டி பல்வேறு சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டார். எழும்பூர் அரசு தாய்சேய் மருத்துவ மனையில் பிறந்த குழந்தைகளுக்கு மனைவி சங்கீதாவுடன் நேரில் சென்று தங்கமோதிரம் அணிவித்தார். பரிசு பொருட்களும் வழங்கினார். இந்த மருத்துவமனையில் தான் விஜய் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார். மருத்துவர்கள், செவிலியர்கள்,ஊழியர்கள் விஜய்யை வரவேற்றனர். அவரை காண மருத்துவமனை முன் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டார்கள். கோடம்பாக்கத்தில் உள்ள தாய் சேய் நல அரசு மருத்துவ மனையில் பிறந்த குழந்தைகளுக்கும் மோதிரம் அணிவித்தார்.

தமிழகம் முழுவதும் 500 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கப்பட்டது. சாலிகிராமம் ஷோபா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார். ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று வாழ்த்தினர். நடிகர்கள் ஜீவா, தாமு, டைரக்டர்கள் ஷங்கர், ஏ.வெங்கடேஷ், பேரரசு, ராஜா, தயாரிப்பாளர்கள் ஆஸ்கார் ரவிச்சந்திரன், கலைப்புலி தாணு, ஆர்.பி. சவுத்ரி மோகன், நடராஜன் உள்ளிட்ட பலர் வாழ்த்தினர்.

பின்னர் ஏழைகளுக்கு புடவை, வேட்டிகளை விஜய் வழங்கினார். மாணவ- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும் வழங்கினார். ரசிகர்கள் 500 பேர் ரத்த தானம் செய்தனர். சாலிகிராமம் பாலலோக் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாமை விஜய் துவக்கி வைத்தார். மருத்துவர் மோகன் தலைமையில் இந்த முகாம் நடந்தது. இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 100 பேர் கண்தானம் செய்தனர்.

சின்மயா நகரில் உள்ள குழந்தை ஏசு கோவிலில் முதியோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு விஜய் இலவச மதிய உணவு வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், பாஸ்கர், ரவிராஜா, மக்கள் தொடர்பாளர் பி.டி. செல்வகுமார், ஆகியோர் செய்து இருந்தனர்.

திருவான்மியூரில் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் இ.சி.ஆர்.சரவணன் தலைமையில் நடந்த ரத்ததான முகாமை விஜய் துவங்கி வைத்தார். 160 பேர் கண் தானமும் செய்தனர். நீலாங் கரை ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் எம்.கே.முனு சாமி, உத்தண்டி அ.தி.மு.க. பிரமுகர் எம்.சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

நன்றி-இணையம்

பிரிவுகள்:ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:,
%d bloggers like this: