தொகுப்பு

Archive for the ‘சிறுகதை’ Category

ஒரு குழந்தையின் காத்திருப்பு! (சிறுகதை)கமலா ஒரு நிறைமாதக்கர்ப்பிணி.கிளிநொச்சியில் வாழ்கின்றாள்.குண்டுச்சத்தங்களால் குலுங்கிகொண்டிருக்கின்றது கிளிநொச்சி நகரம்.கமலா தனது குழந்தையின் வரவுக்காய் காத்திருக்கின்றாள்.கமலாவின் கணவன் பவித்ரன் போர் நிறுத்தப்படாதா என்று  ஏங்கிக்கொண்டிருக்கிறான்.
உணவுத்தட்டுப்பாடு ஒருபுறம், குண்டுகள் எப்போது வந்து வெடிக்கும் என்று சொல்லமுடியாததால் பதுங்குகுழியை விட்டு வெளியே வர முடியாதது மறுபுறம்,மருத்துவமனைக்குச்செல்வதற்கு வாகனவசதி பெறுவது எப்படி என்று பலவற்றை யோசித்துக்கொண்டிருக்கிறான்.
கமலா பிரசவவலியால் அலறத்தொடங்குகிறாள். பவித்ரன் தன்னிலை மறந்து மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பதுங்குகுழியிலிருந்து வெளியே வருகின்றான்.விரைந்து வாகனம் பெற  ஓடுகின்றான். தெருச்சந்திகள் எங்கும் அலைகின்றான்.எங்கும் வாகனங்கள் பெற முடியாத நிலை.குண்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பவித்ரன் செல்வீச்சுக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே  மடிகின்றான்.
கமலா பிரசவவலியையும் பொருட்படுத்தாது கணவனின் வரவுக்காக காத்திருக்கின்றாள்.முடிவில் தனக்கு தானே பிரசவம் பார்த்தாள்.அழகிய ஆண் மகனை பெற்றெடுத்தாள்.தனது கணவனை காணவில்லை என்ற ஏக்கத்தில் தனது இயலாமையையும் பொருட்படுத்தாது குழந்தையை அப்படியே விட்டுவிட்டு பதுங்குகுழியை விட்டு வெளியே வருகின்றாள்.எங்கோ இருந்து வந்த செல் அவளைப்பதம் பார்க்க மரணிக்கின்றாள் அந்தக்கன்னித்தாய்.
தாயையும் இழந்து தகப்பனையும் இழந்து பதுங்குகுழிக்குள் அழுது  கொண்டிருக்கும் இந்த ஆண் மகவு யாருக்காக காத்திருக்கின்றது?

 

குறிப்பு:என்னால் எழுதப்பட்ட முதல் சிறுகதை இதுவாகும்.

பிரிவுகள்:ALL POSTS, சிறுகதை குறிச்சொற்கள்:
%d bloggers like this: