தொகுப்பு
iPhone 5Se மார்ச் 18 ஆம் திகதி சந்தைக்கு வருகிறது
வியக்க வைக்கும் புதுமை
What a amazing idea and show. Speechless
உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளம்
பிரபலங்கள் மட்டும் தான் பேட்டி கொடுக்க வேண்டுமா என்ன, நீங்களும் தான் பேட்டி தரலாம் என்கிறது டைப்கேஸ்ட் இணையதளம்.
பேட்டி தர விருப்பம் தான் ஆனால் பேட்டிக்கான கேள்விகளை கேட்க யாராவது வேண்டாமா என்று கேட்டால் அதற்கான வழியையும் இந்த தளமே காட்டுகிறது. மிகவும் சுவாரஸ்யமான சேவை தான். எளிமையானதும் கூட.
யார் வேண்டுமானாலும் உங்களை பேட்டி காண வழி செய்யும் சேவை என்று பெருமை பட்டு கொள்லும் டைப்காஸ்ட் ஒருவர் தனது ரசிகராலோ நண்பர்களாலோ அல்லது வாசகர்களாலோ பேட்டி காணப்பட வழி செய்கிறது. அதிலும் எப்படி தெரியுமா நேரடி பேட்டிக்கு வழி செய்கிறது.
பேட்டிக்கு நான் தயார் என ஆர்வம் கொள்பவர்கள் இந்த தளத்தில் உறுப்பினராக வேண்டும். பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் சம்ர்பித்து உறுப்பினரான பின் பேட்டிக்கான பக்கம் அளிக்கப்படுகிறது.
அந்த பக்கத்தில் பேட்டிக்கான தலைப்பு மற்றும் விளக்கத்தை குறிப்பிட்டு பேட்டிக்கு ஆயுத்தமாகலாம். பேட்டி காணப்பட விரும்பும் நேரத்தையும் குறிப்பிடலாம்.(எப்போது வேண்டுமானாலும் நேரத்தை மாற்றிக் கொள்ளலாம்).
இதன் பிறகு உங்கள் வலைப்பதிவினிலோ அல்லது முகநூல் பக்கத்திலோ இந்த இணைப்பை சமர்பித்து நண்பர்களையும் வாசகர்களையும் கேள்வி கேட்க அழைக்கலாம். குறிப்பிட்ட நாள் அன்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். கேள்விகளை வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் வசதியும் உள்ளது.
வலைபதிவாளர்கள், மாணவர்கள் என்று யார் வேண்டுமானாலும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு பயனுள்ள பதிவை எழுதிய பின் அந்த மைய பொருள் தொடர்பாக விவாதிக்க விரும்புகிறவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். பேட்டியை வலைப்பதிவிலும் இடம் பெறச்செய்யலாம்.
அதே போல குறிப்பிட்ட தலைப்பு குறித்து நண்பர்களோடு கருத்துக்களை பகிர இரும்பினாலும் இதனை பயன்படுத்தலாம். மாணவர்கள் ஆசிரியர்களோடு உரையாடவோ அல்லது ஆசிரியர்கள் மாணவர்களோடு உரையாடவோ இதனை பயன்படுத்தலாம்.
கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக இருக்கும் எவர் வேண்டுமாலும் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். வலைப்பதிவுகளும், டிவிட்டர் போன்ற சாதனங்களும் கருத்துக்களை வெளியிடும் வாய்ப்பை எல்லோருக்கும் ஏற்படுத்தி தந்துள்ள நிலையில் டைப்கேஸ்ட் சேவை பதிவர்களும் பேஸ்புக் பயனாளிகளும் பேட்டி காணப்படும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
வலைப்பதிவில் பின்னூட்டம் மூலம் அல்லது முகநூலில் கருத்துக்கள் மூலம் உரையாடுவதை விட இப்படி பேட்டி வழியே கருத்துக்களை பகிர்ந்து கொள்வது சிறந்ததாக இருக்கும். இணையத்தின் ஆற்றலை பயன்படுத்தி கொள்ளும் புதுமையான முயற்சி. ஆனால் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று தெரியவில்லை.
மறந்து போன இணையங்களை தேடுவதற்கு
“அடடா அந்த இணையதளத்தின் முகவரியை குறித்து வைக்காமல் போய் விட்டோமே” என்று பெரும்பாலான இணையவாசிகள் புலம்பும் வசனம் தான் இது.
அதாவது சில தினங்களுக்கு முன் தான் ஒரு இணையதளத்தை பார்த்திருப்போம். அதன் பிறகு அந்த தளம் மீண்டும் நினைவுக்கு வரும் போது அதன் முகவரி மட்டும் கண்ணாமூச்சி காட்டும். எவ்வளவே முயன்றாலும் அந்த தளத்தின் முகவரியை நினைவில் கொண்டு வர முடியாமல் போகும்.
இது போன்ற நேரங்களில் கை கொடுப்பதற்காக என்றே புக்மார்கிங் சேவை தளங்கள் இருக்கின்றன. எந்த தளத்தின் முகவரியையும் மறந்து விட்டு தேடி தடுமாறாமல் இருக்க தளங்களை பார்க்கும் போதே புக்மார்கிங் தளங்களில் குறித்து வைப்பது நல்ல விஷயம் தான்.
ஆனால் புக்மார்கிங் செய்யப்பட்ட தளங்கள் என்பது பரணில் போடப்பட்ட பொருட்கள் போல ஆகிவிடுவதுண்டு. சேமித்து வைத்ததோடு பலரும் அவற்றை திரும்பிகூட பார்ப்பதில்லை. தாமதமான நீதி பயனற்றது என்பதை போல பராமரிக்கப்படாத புக்மார்கிங் தளங்களாலும் பயனில்லை.
இந்த சங்கடத்தை தவிர்க்கும் வகையில் புதியதொரு புக்மார்கிங் வசதி அறிமுகமாகியுள்ளது. உண்மையிலேயே புதுமையான புக்மார்கிங் சேவை தான் இது. காரணம் ரீகால் என்னும் அந்த வசதியில் புக்மார்கிங் செய்யாமலேயே புக்மார்கிங் வசதியை பயன்படுத்தலாம்.
அதாவது நாம் பார்க்கும் தளங்களை குறித்து வைக்காமலேயே அவை மீண்டும் தேவைப்படும் போது அழகாக தேடி எடுத்து விடலாம். அதெப்படி புக்மார்கிங் செய்யாமலேயே தளங்களை கண்டுபிடிக்க முடியும் என்றால் ரீகால் இணையவாசிகள் சார்பில் அவர்கள் விஜயம் செய்யும் எல்லா இணைய பக்கங்களையும் குறித்து வைத்து கொண்டு கேட்கும் போது எடுத்து தந்துவிடும்.
கூகுளின் பிரபலமான குரோம் பிரவுசருக்கான விரிவாக்க வசதியாக உருவாக்கப்பட்டுள்ள ரீகாலை ஒருமுறை பொருத்தி கொண்டு விட்டால் அதன் பிறகு அது ஒரு விசுவாசமான உதவியாளரை போல நாம் செல்லும் எல்லா இணையதளங்களையும் குறித்து வைத்து கொள்ளும்.
வெறும் முகவரியை மட்டும் அல்லாமல் இணையதளத்தில் உள்ள விஷயங்கள் அனைத்தையும் சேமித்து கொள்கிறது. ஒருவரது இணைய சுவடுகள் முழுவதையும் ரீகால் தனது சேமிப்பில் நிறுத்து வைத்து கொள்கிறது.
பின்னர் எப்போது தேவை என்றாலும் நாம் பார்த்த இணையதளத்தை தேடி கண்டுபிடித்து தருகிறது. தேடியந்திரத்தில் தேடுவது போலவே நாம் பார்த்ததளம் தொடர்பாக நினைவில் உள்ள ஏதாவது ஒரு விஷயத்தை குறிச்சொல்லாக பயன்படுத்தி தேடிக்கொள்ளும் வசதியும் உள்ளது.
இலக்கை அடைய நினைப்பவர்களுக்கு உதவும் இணையதளம்
இன்று நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று தினந்தோறும் இந்த கேள்வியை தான் ஒரு இணையதளம் கேட்கிறது
அந்த கேள்விக்கு பொறுப்பாக நாள் தவறாமல் பதில் அளித்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையே மாறிவிட வாய்ப்பிருக்கிறது. நீங்கள் நினைத்ததை முடிப்பவராகலாம்.
இணையதளம் கேட்கும் கேள்விகெல்லாம் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்று ஆவேசபடவோ குழப்பமடையவோ வேண்டாம். காரணம் இந்த இணையதளம் உங்கள் நலனில் அக்கறை கொண்டு தான் கேள்வி கேட்கிறது. தவிர இந்த தளத்தின் நோக்கத்தை அறிந்து கொண்டால் நீங்களும் ஆர்வத்தோடு இந்த கேள்விக்கு பதில் அளிக்கவே விரும்புவீர்கள்.
திட்டமிடல் சேவையை வழங்கும் ஐ டன் திஸ் எனும் தளம் தான் “இன்று என்ன செய்தீர்கள்?” என்ற கேள்வியை உரிமையோடு கேட்கிறது. இதற்கு பதில் அளிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையை திறம்பட நிர்வகித்து கொள்ள முடியும் என்றும் சொல்கிறது. இந்த கருத்தை நீங்களும் ஏற்று கொள்வீர்கள்.
எப்படி என்றால் திட்டமிட்டு செய்லபடுவதில் உள்ள இயல்பான சிக்கலுக்கு இந்த தளம் அழகான எளிமையான தீர்வை முன்வைக்கிறது.
தினசரி வாழ்க்கையை திட்டமிட உதவும் இணைய சேவைகள் பல இருக்கின்றன. ஆனால் திட்டமிடல் என்பது பாதி கிணறு தாண்டுவது போல தான். திட்டமிட்டதை திட்டமிட்டபடியே செய்து முடித்தால் தான் வெற்றிப்படிகளில் ஏற முடியும்.
வரிசையாக செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டு அவற்றை செய்து முடிக்கும் உறுதியோ உக்கமோ இல்லாவிடில் எந்த பயனும் இல்லையே. இந்த இடத்தில் தான் அ டன் திஸ் இணையசேவை கைகொடுக்கிறது.
செய்ய நினைப்பவற்றை செய்து முடிக்க உதவுகிறது இந்த சேவை. அதிக அதிக்கம் செலுத்தாமல், அழுத்ததையும் ஏற்படுத்தாமல் எளிமையாக இதற்கு உதவுகிறது.
இந்த தளத்தில் உறுப்பினரானதுமே உங்களுக்காக ஒரு நாட்காட்டி பக்கத்தை உருவாக்கி தருகிறது. அந்த நாட்காட்டியில் நீங்கள் குறித்து வைக்க வேண்டியதில்லை. அந்த பொறுப்பை இந்த தளமே ஏற்று கொள்கிறது.
உறுப்பினரானவுடன் இன்று என்னவெல்லாம் செய்தீர்கள்? என்று கேள்வியோடு ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைக்கும். அன்றைய தினம் செய்ததை எல்லாம் நினைவுபடுத்தி பதில் அனுப்பி வைத்தீர்கள் என்றால் மறுநாள் உங்கள் சார்பாக நாட்காட்டியில் அந்த செயல்களை குறித்து வைக்கும்.
இப்படியாக தினமும் மின்னஞ்சலுக்கு பதில் அளித்தீர்கள் என்றால் நாட்காட்டியில் உங்கள் செயல்கள் பதிவாகி கொண்டே இருக்கும்.
ஒரு கட்டத்தில் திரும்பி பார்த்தீர்கள் என்றால் உங்கள் செய்லகளுக்காக டைரி போல இந்த நாட்காட்டி அமைந்திருக்கும். நீங்கள் செய்தது செய்யாதது எல்லாவற்றையும் இந்த நாட்காட்டியை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
நினைத்ததையெல்லாம் செய்து முடித்திருந்தால் இந்த நாட்காட்டி விவரங்களை பார்க்கும் போதே உற்சாகமாக இருக்கும். இல்லை என்றால் குற்ற உணர்வு வாட்டி எடுத்து முடிக்கி விடும். குறிப்பிட்ட இலக்கை அடைய நினைப்பவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும்.
நன்றி: இணையம்.
புகைப்படம் எடுக்க கற்றுக்கொடுக்கும் இணையதளம்
மின் இலக்க வடிவ முறை (டிஜிட்டல் ) புகைப்படக்கருவிகள் வந்த பின்னர் சிறுவர்கள் கூட இப்போது புகைப்படம் எடுக்கத் தொடங்கி விட்டனர்.எனவே இவர்களுக்குச் சிறந்த முறையில் புகைப்படம் எடுப்பது குறித்துக் கற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.சிறுவர்கள் மட்டுமின்றி, தொழில் ரீதியாக இல்லாமல் புகைப்படம் எடுக்கும் அனைவருக்கும் நல்ல வகையில் புகைப்படம் எடுப்பது குறித்த தகவல்கள் தேவைப்படுகின்றது.
இதற்கான தளம் ஒன்று இணையத்தில் உள்ளது.
இதன் முகவரி http://www.betterphoto.com
இந்த தளத்தில் நுழைந்தவுடன் மிக எளிய முறையில் நுணுக்கங்கள் தரப்படுவதனைக் காணலாம்.பல வகையான புகைப்படங்களைக் காட்டியே, இளைஞர்களுக்கு புகைப்படம்எடுப்பது குறித்த தகவல்கள் மனதில் பதிய வைக்கப்படுகின்றன.குறிப்புகள், அதிகமாக தொழில்நுட்ப ரீதியாக இல்லாமல், எளிமையாக இருப்பதுவும் இவற்றின் சிறப்பாகும்.
வேடிக்கையான புகைப்படங்களை எப்படி எடுப்பது என்று காட்டுவதன் மூலம் பார்ப்பவர்களின் ஆர்வம் தூண்டப்பட்டு, தகவல்கள் தரப்படுவது இந்த தளத்தின் இன்னொரு சிறப்பாகும்.கேள்வி பதில் பகுதியில் சாதாரணமாக ஒருவருக்கு ஏற்படும் சந்தேகங்கள் அனைத்தும் தெளிவாக்கப்படுகின்றன.
நீங்கள் புகைப்படம் எடுப்பது குறித்து அறிய விரும்பவில்லை என்றாலும், இதில் உள்ள ஆர்வம் ஊட்டும் தகவல் களுக்காகவும், சிறப்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்காகவும் இந்த தளத்தினை ஒருமுறை பார்வையிடுங்கள்.
நல்ல புகைப்படங்களை தரும் இணையத்தளம்
படங்கள், புகைப்படங்கள் விதம் விதமாய்ப் பெற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் புகைப்பட மெருகூட்டல் வரை கலைஞர்களுக்கான புகைப்படங்கள் மற்றும் படங்களைத் தரும் ஓர் அருமையான இணையத்தளம் உள்ளது.இந்த தளத்தின் பெயர் open photo.இது ஒரு புகைப்படங்களின் இருப்பு நிலை என்றே கூறலாம். வியக்கத்தக்க பல புகைப்படங்கள், கலைப்படங்கள் இதில் காட்டப்படுகின்றன. புகைப்படங்களின் வகை குறித்து இதில் தேடி படங்களைப் பெறலாம்.
ஏதேனும் ஒரு புகைப்படத்தில் சொடுக்கினால், அந்த வகைப்படங்கள் நமக்கு நிறையக் காட்டப்படும்.பெரும்பாலும் இலவசமாக தரவிறக்கம் செய்யக்கூடிய வகையில் தான் இவை இங்கு தரப்படுகின்றன.கட்டணம் செலுத்திக் கிடைக்கும் படங்களும் இதில் உள்ளன. இந்த தளம் காட்டும் வகைகள் பகுதியில் சொடுக்கினால் அனைத்து வகைகளும் அவற்றின் பெயருடன் பட்டியலிடப்படுகின்றன. தேவையான வகையினைத் தேடிப் பார்த்து புகைப்படங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு படத்திலும் சொடுக்குகையில் அதன் வலது பக்கத்தில் அந்த படத்திற்கான உரிமம் குறித்த தகவல்கள் காட்டப்படுவதனைக் காணலாம்.வெவ்வேறு வகையான உரிமங்கள் தரப்பட்டு , அவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்றும் காட்டப்பட்டுள்ளன. நம் இணையத்தளங்கள், மற்றும் நாம் தயாரிக்கும் சொந்த வாழ்த்து அட்டைகளில் பயன்படுத்த இந்த தளத்தில் பல வகையான படங்களைக் காணலாம்.
இந்த தளத்தின் முகவரி: http://www.openphoto.net
அண்மைய பின்னூட்டங்கள்