தொகுப்பு
உடலில் சோர்வு ஏன் ஏற்படுகிறது?
சில நபர்கள் வெகு சீக்கிரமாக சோர்வடைந்து விடுவர். அதிக வேலைப்பளு, தூக்கமின்மை போன்ற காரணங்களால் சோர்வு ஏற்படுகிறது.
தூக்கமின்மை: குழந்தைகளுக்கு எட்டு முதல் பத்து மணி நேரமும், பெரியவர்களுக்கு ஆறு முதல் எட்டு மணி நேர தூக்கம் அவசியம்.
தூக்கத்தில் மூச்சுவிட மறத்தல்: இந்த நிலை மிகவும் குண்டான, புகை பழக்கம் உள்ளவர்களுக்கு வரும். உறக்கத்தில் அடிக்கடி மூச்சு நின்று நின்று வருவதால் இவர்கள் நாள் முழுதும் சோர்வாகவே இருப்பார்கள். எட்டு மணி நேரம் தூங்கினாலும் இரண்டு மணி நேரம் தூங்கிய உணர்வே இருக்கும்.
மாறுபட்ட உணவு: காலை உணவு சாப்பிடாமல் இருத்தல், சரிவிகித உணவு உண்ணாமை, நேரம் தவறி சாப்பிடுதல், அதிகபடியான அசைவ உணவு, உணவு அலர்ஜி இதற்கு மருத்துவம் கட்டாய காலை உணவு, பழங்கள், அளவுடன் அசைவம், அலர்ஜி உள்ள உணவை தவிர்த்தல்.
ரத்த சோகை: பெண்களுக்கு, குழந்தைகளின் சோர்வுக்கு மிக முக்கிய காரணம் இதற்கு இரும்புச் சத்துள்ள உணவை உட்கொள்ள வேண்டும்.
தேநீர்: கொஞ்சம் கொஞ்சமாக நிறைய தடவை குடிக்கும் தேநீர் ரீ போன்றவை முதலில் ஒரு தற்காலிக உற்சாகம் தந்து பின் இறுதியில் சோர்வையே தரும்.
நீரிழிவு நோய்: 35 வயதை கடந்தாலே இதுவும் ஒரு சோர்வுக்கு ஒரு காரணம்.
உடலில் நீர், உப்பு பற்றாகுறை: போதிய அளவில் நீர் குடிக்காமல் இருப்பது மற்றும் வியர்வையில் நீர், உப்பு இழப்பு இதற்குரிய மருத்துவம். ஒரு நாளைக்கு 3 லிட்டர் நீர் குடித்து வர வேண்டும்.
நாள்தோறும் பால் அருந்தினால் பார்வை குறைபாடு ஏற்படாது
நியூயார்க் நகரில் அமைந்துள்ள பவலோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏமி மில்லன் என்பவர் தலைமையில் வயது தொடர்பான பார்வை குறைபாடு பற்றி ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
பெரும்பாலும் 50 வயதினை நெருங்கும் பெண்களை பாதிக்கும் இக்குறைபாடு சாதாரணமாக செய்யும் வேலைகளான வாசித்தல், வாகனம் ஓட்டுதல் மற்றும் தெரிந்தவர்களின் முகத்தை அடையாளம் காணுதல் போன்றவற்றை கூட செய்ய இயலாத நிலைக்கு அவர்களை தள்ளி விடுகிறது.
பிரிட்டனில் வருடத்திற்கு ஏறத்தாழ 2 லட்சம் பேர் இக்குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 1313 பெண்களிடம் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் டி வைட்டமின் அதிகம் நிறைந்த உணவை உட்கொள்வோர் மற்றும் உடலில் டி வைட்டமின் அளவு அதிகமாக உள்ளோர் ஆகியோரிடம் இக்குறைபாடு அதிகமாக காணப்படவில்லை என்பது தெரியவந்தது.
குறிப்பாக பால் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட வெண்ணெய் மற்றும் தானியம் ஆகியவற்றை அதிகம் எடுத்து கொள்வது நன்மை பயக்கிறது. சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவதும் நன்மையையே தருகிறது. ஏனெனில் வைட்டமின் டி உற்பத்தியில் தோல் முக்கிய பணியாற்றுகிறது.
எனவே பால் மற்றும் அதிலிருந்து பெறப்படும் வெண்ணெய் போன்ற உணவு பொருள்களை பயன்படுத்துவது இக்குறைபாட்டை தவிர்க்க பெரிதும் உதவுகிறது என அந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.
மேலும் மீனில் இருந்து பெறப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு பயன் தரும் என்பதும் முன்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளைப்பூண்டின் மருத்துவ குணங்கள்
அல்லியம் சடைவம் என்பது இதன் அறிவியல் பெயர். இதை உடைத்தால் சிறுசிறு பற்கள் போன்ற பகுதிகள் வெளிவரும்.
இதை நசுக்கினால் ஒரு வாசம் வரும். இதுதான் மருந்து தயாரிக்க மிகவும் உதவி புரிகிறது. இது நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறது.
ஜீரணக்கோளாறுகளை பூண்டு நன்றாக குணப்படுத்திவிடும். பூண்டு பற்களை நேராகவோ அல்லது கேப்சூல் மற்றும் மாத்திரைகளாகவோ பயன்படுத்தலாம்.
இதன் எண்ணெயை கேப்சூலாக்கி கார்லிக் பெர்ல் என்ற பெயரில் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. குடல் பூச்சிகளை வெளியேற்றுகிறது. மார்பு வலி மற்றும் மூச்சுக்குழல் அழற்சிக்கு சிறந்த மருந்து இது.
சளி, ப்ளூ காய்ச்சல், காது வலிக்கும் பயன்படுகிறது. ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் சீனியின் அளவைக் குறைக்க பயன்படுகிறது.
புகைப்பிடிக்க வேண்டாம்
உணவு செரிமானப் பணி
உணவு உண்டதும், உணவு செரிமானப் பணி துவங்குகிறது. உணவுகளை செரிக்கும் போது வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலமும், பெப்சினும் சுரக்கின்றன. இவை மிகவும் சக்தி வாய்ந்த அமிலங்களாகும்.
சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பாட்டுக்கு நடுவேயும் தண்ணீர் குடிப்பதால் இந்த அமிலங்கள் சுரப்பதில் தாமதம் ஏற்படும். அதனால்தான் சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.
பொதுவாக இரைப் பையைச் சூழ்ந்துள்ள சளிச்சவ்வு, இந்த சக்தி வாய்ந்த அமிலங்கள் இரைப்பைக்குக் கேடு விளைவிக்காத வண்ணம் பாதுகாக்கின்றன.
ஆனால் மசாலா அல்லது அதிகமான கார உணவு, புகையிலையை உண்ணும்போது இந்த அமிலங்கள் அதிகமாக சுரந்து, இரைப்பை சுவர்கள் மற்றும் திசுக்களை புண்ணாக்குகின்றன.
இதைத் தான் அல்சர் என்று அழைக்கிறோம்.
நார்சத்து, கீரைகள் அவசியம்
நார்ச்சத்து உள்ள உணவுகள் பெருங்குடலில் புற்று நோய் வராமல் தடுக்கும். கோதுமை, சோளம், கேழ்வரகு, கம்பு முதலியன நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களில் அடங்கும். கீரைகளில் கால்சியம், சோடியம், க்ளோரைன் எனப்படும் உலோகச்சத்து அதிகம் உண்டு.
கீரையில் சக்கரை கிடையாது ஆகவே நீரிழவு நோயாளிகளுக்கும் இது உகந்தது. பூண்டும் மிகவும் நல்லது.
கூடிய வரையில் ஆரோக்கிய உணவுப்பழக்கம் மேற்கொள்ளுதல் வியாதிகளை வர விடாமல் தடுக்கும்.
வியாதி வந்த பின் அதற்கேற்ற உணவுகளை கட்டுப்பாட்டுடன் சாப்பிடுவதைக் காட்டிலும், வருவதற்கு முன் ஆரோக்கியமான உணவுகளை உண்பதே சிறந்தது.
ஆண்களுக்கு எங்கும் சோதனை தான்; பெண்களே நோய் எதிர்ப்பு சக்தி கூடியவர்கள்
இயற்கையாகவே பெண்களுக்கு ஆண்களை விட நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போரிடும் ஆற்றல் அதிகம் என்று கனடிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பரினாம வளர்ச்சியில் இயற்கை பெண்ணுக்கு அளித்துள்ள முக்கிய பொறுப்பான வளமான சந்ததியை உருவாக்குதல் என்ற நோக்கத்தை திறம்பட நிவர்த்தி செய்ய பெண்களை நோய்களின் தாக்கத்திலின்றும் பாதுகாக்க வேண்டியது முக்கியமாகிறது.
அதற்காகவே அமைந்தது போல பெண்களின் பெண்மைக்கு முக்கிய காரணமான ஈஸ்ரோஜன் (Oestrogen) எனும் ஓமோன் (female sex hormone) அவர்களில் நோய்களுக்கு எதிராகப் போராடும் சக்தியையும் அதிகரிக்கச் செய்வது இந்த ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஓமோன், Caspase-12 எனும் நோய் எதிர்ப்புத் தாக்கத்தை குறைக்கும் நொதியத்தை (enzyme) உருவாக்கும் Caspase-12 மரபணு அலகின் தொழிற்பாட்டை தடுப்பதன் மூலம் பெண்களில் குறித்த நொதியத்தின் உருவாக்கத்தை நிறுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
ஆனால் ஆண்களில் மேற்குறிப்பிட்ட ஓமோன் இல்லாத காரணத்தால் அவர்கள் தடிமன் போன்ற நோய்களை உருவாக்கும் வைரஸ் நோய்கிருமிகளின் தாக்கத்திற்கு எதிராகவும், பக்ரீரிய நோய்க்கிருமிகளின் தாக்கத்திற்கு எதிராகவும் பெண்களை விட கடுமையாகப் போராட வேண்டி இருக்கும் என்கிறது இந்த ஆய்வு.
இயற்கையில் மட்டுமன்றி சுகாதார வாழ்விலும் ஆண்களை விட பெண்களுக்கே அநேக மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாகவும் முன்கூட்டியும் கிரமமாகவும் வழங்கப்படுகின்றன. பல நோய்கள் ஆண்களைப் அதிக அளவில் பீடிக்க அவர்கள் மீது கட்டாய கிரமமான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமையும் ஒரு காரணமாகும்.
இதன் காரணமாகவோ என்னவோ இன்றைய நவீன மருத்துவ உலகில் பெண்களின் சராசரி ஆயுள் காலம் ஆண்களை விட அதிகம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
புகைப்பிடிக்காதவர்கள் நீண்ட நாள் வாழலாம்:ஆய்வுத் தகவல்
புகைப்பிடிக்காதவர்கள் நீண்ட நாள் வாழலாம் என பிரிட்டன் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. புகைபிடிக்காதவர்கள் உடல்நிலை குறித்து ஓஸ்லோ பல்கலைக்கழகமும், நார்வே பொதுசுகாதார நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை ஸ்டாக்ஹோமில் வெளியிடப்பட்டது.
முப்பது ஆண்டுகளாக நார்வே நாட்டு மக்களில் புகைப்பழக்கம் உள்ள நடுத்தர வயது ஆண், பெண்களிடம் 1974 முதல் தொடர்ந்து நடத்திய ஆய்வில், புகைப்பிடிக்காதவர்கள் நீண்ட நாள் வாழமுடியும் என்றும், இவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் தெரியவந்துள்ளது.
ஆய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ஓஸ்லோ பல்கலைக்கழக ஆசிரியர் ஹாகோன் மேயர் புகைபிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த படத்தினை வெளியிட்டிருப்பதாகக் கூறினார்.
பன்றி காய்ச்சல் பரவுவது எப்படி?
பன்றி காய்ச்சல் “சுவைன் புளூ” என்ற வைரசால் பரவுகிறது. இது “ஆர் தோமைசோ வெரிடேட்” என்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. “சுவைன் புளூ” வைரசிலேயே 5 வகை உள்ளன. அதில் இப்போது பரவியுள்ள வைரசை “எச்-1, என்-1” என்று பட்டியலிட்டு உள்ளனர்.
இந்த வைரஸ் பன்றி மற்றும் கோழிகளில் பரவி இருக்கும். எனவே பன்றி, கோழி பண்ணைகளில் பணியாற்றுபவர்களுக்கு விலங்குகளில் இருந்து பரவி வருகிறது.
வைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும். உடனே காய்ச்சல் வரும், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, பசியின்மை போன்றவை வரும். முதல் 5 நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போல இருக்கும். பின்னர் காய்ச்சல் கடுமையாகும். தாங்க முடியாத உடல்வலி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும்.
இந்த நோய் ஏற்பட்டு இருப்பதை சாதாரண முறை சோதனைகளால் கண்டு பிடிக்க முடியாது. பல்வேறு கட்ட சோதனை நடத்தினால்தான் தெரியவரும்.
நோய் தாக்கியவரிடம் இருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் வேகமாக பரவும். சளி மூலம் அதிக அளவில் பரவும். நோய் தாக்கியவர் உமிழ் நீர், சளியை தொட்டு விட்டு கை கழுவாமல் மற்றவரை தொட்டால் அதன் மூலமும் பரவி விடும். எனவே நோய் தாக்கியவரை தனிமை படுத்தினால்தான் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.
பன்றி காய்ச்சல் நோய் முதன் முதலில் பரவியது 1918-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 1976-ல் அமெரிக்க படைவீரர்களை நோய் தாக்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்சில் பரவியது.
இந்த நோயை தடுக்க தடுப்பூசி உள்ளது. வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்தாலும் குணமாகும். முதலிலேயே கண்டு பிடித்து சிகிச்சை அளித்துவிட்டால் உயிரிழப்பு ஏற்படாது. வேறு நோய் என்று கருதி அலட்சியப்படுத்தினாலும் நோயை முற்றவிட்டாலும் ஆபத்து ஏற்படும்.
பன்றி காய்ச்சல் முதன் முதலில் 1918-ம் ஆண்டு ஸ்பெயினில் பரவியது. பின்னர் உலகம் முழுவதும் பரவி 10 கோடி பேர் பலியானார்கள்.
1968-ம் ஆண்டு ஹாங்காங்ஙகில் பரவி உலகம் முழுவதும் தொற்றியது. இதில் 10 லட்சம் பேர் பலியானார்கள்.
நோய் அறிகுறிகள்
* இடைவிடாத காய்ச்சல்
* மூக்கில் நீர்வடிதல்
* தொண்டையில் வலி
* வயிற்று போக்கு
* மயக்கம்
* பசியின்மை
* சளி தொல்லை
* சாப்பாடு மீது வெறுப்பு
* வாந்தி எடுத்தல்
இளம் வயதிலேயே மூளை செயல்பாடு குறைவு?
பொதுவாக வயதான காலத்தில்தான் மூளை செயல்பாடு குறையக் கூடும். ஆனால் இளம் வயதிலேயே அதாவது 25-30 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் மூளை செயல்பாடு குறைவது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான 20 ஆயிரம் பேரிடம் அவர்களின் மூளை செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நினைவாற்றல், மூளைத் திறன், சரியான முறையில் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து சுமார் 7 ஆண்டுகள் வரை இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
புதிர்களை கண்டறிதல், மூளை செயல்பாடு, கதைகளில் உள்ள வார்த்தகள் மற்றும் தகவல்களை நினைவு கூர்தல், அடையாளச் சின்னங்களை சேகரித்தல் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
சில திறன்கள் 20 வயது முதல் 30 வயதுக்குள்ளாகவே குறையத் தொடங்கியிருப்பது கண்டறியப்பட்டது.
சுமார் 27 வயதுக்குள்ளாகவே புதிர்களுக்குத் தீர்வு காணும் திறன் குறைவது கண்டறியப்பட்டுள்ளது. 37 வயதில் நினைவாற்றல் ஏறக்குறைய அனைவருக்குமே குறையத் தொடங்கி விடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
என்றாலும் எல்லா இளைஞர்களுமே மூளை செயல்பாடு இளம் வயதிலேயே குறையும் என்று கவலை கொள்ளத் தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்கு வயதான காலத்திலும் மூளை அதிதீவிரமாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
மொழி தொடர்பான வார்த்தைகள் மற்றும் பொது அறிவானது வயது அதிகரிக்கும் போது, கூடவே அதிகரிக்கிறது என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஒருசில மனோரீதியான செயல்பாடுகள் 30 வயதிற்கு முன்பாக குறைந்த போதிலும், அறிவு வளர்ச்சி மேலும் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது.
அண்மைய பின்னூட்டங்கள்