தொகுப்பு

Archive for the ‘விஞ்ஞானம்’ Category

இப்படியும் ஒரு புகைப்படமா?


இறை நம்பிக்கை மூலம் வலிகளிலிருந்து விடுதலை அதிநவீன விஞ்ஞான தொழில்நுட்பம் மூலம் நிரூபிப்பு


gods

இறை நம்பிக்கை மூலம் வலிகளிலிருந்து நிவாரணம் பெற முடியும் என்பது விஞ்ஞானபூர்வமாக கண்டறியப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி பரிசோதனையின் பிரகாரம் இறை நம்பிக்கையுடைய 12 றோமன் கத்தோலிக்கர்களுக்கு கன்னி மரியாளின் உருவப் படத்தையும் 12 நாஸ்திகர்களுக்கு அவர்கள் லியோனார்டோ டாவின்சியின் 13 ஆம் நூற்றாண்டுப் படத்தையும் வழங்கி, அவர்கள் அதனைப் பார்த்துக் கொண்டிருக்கையில் மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டது.

இதன்போது மேற்படி மின் அதிர்ச்சியால் இறை நம்பிக்கையுடைய கத்தோலிக்கர்கள் பெரிதாக வலியை அனுபவம் செய்யவில்லை என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் மன விஞ்ஞான நிலைய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இப் பரிசோதனைக்காக பிந்திய மூளை இயக்க மதிப்பீட்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மின் அதிர்ச்சியின்போது இறை நம்பிக்கையுடையவர்களின் வலிகளை உணரும் மூளையின் பகுதி இயல்பு நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையின்போது, பங்கேற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் அரை மணித்தியால நேரத்தில் 20 மின் அதிர்ச்சிகள் வீதம் வழங்கப்பட்டது

பறக்கும் கார் கண்டுபிடிப்பு


terrafugia-transition-plane

A U.S. company has realized the longstanding fantasy of a flying car.

Terrafugia Inc.’s “roadable aircraft,” named Transition, completed its first flight at Plattsburgh, N.Y., on Wednesday, the company said.

“It’s what aviation enthusiasts have been striving for since 1918,” CEO Carl Dietrich said in a news release.

But with an expected price tag of $194,000 US by the time the first one is delivered to a user in 2011, it’s not likely to reach a mass market. The Transition is aimed at giving sport and private pilots convenient ground transportation.

According to the company, the two-seat vehicle can take off and land at smaller airports, and the pilot can convert it to a roadworthy vehicle by retracting the wings from inside the cockpit in less than 30 seconds.

Terrafugia — Latin for “escape from land” — can drive at regular speeds on the ground and do about 180 km/h in the air. Its tank holds enough unleaded gas for four hours of cruising. It fits in a garage, has front-wheel drive for the surface and a pusher propeller for flight.

The Transition requires a U.S. sport pilot licence to fly, but the company website said that could take as little as 20 hours of flight time in a Transition-specific course.

A “full vehicle parachute” is available.

Users would have to file a flight plan on trips between larger airports.

Terrafugia, based in Woburn, Mass., near Boston, was founded by five pilots who are graduates of Massachusetts Institute of Technology, and is backed by private investors.

மேலதிக விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

http://www.cbc.ca/consumer/story/2009/03/20/flying-car.html

பிரிவுகள்:ALL POSTS, விஞ்ஞானம் குறிச்சொற்கள்:

உலக வெப்பமுறுதல் விளைவு எதிர்பார்த்ததை விட தீவிரமானது


earthஎதிர்பார்த்ததை விட உலக வெப்பமுறுதலால் ஏற்படும், சுற்றுச்சூழல்களுக்கு பாதமாக அமையும் விளைவுகள் தீவிரமானதாக இருக்கும் என்று உலக வெப்பமுறுதல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள முதன்மை விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

2000 – 2007 வரையான காலப்பகுதியில் திரட்டப்பட்ட புதிய தரவுகளின் படி, வளிமண்டலத்தில் நிகர அளவில் அதிகரித்து வரும் காபனீரொக்சைட் மற்றும் மெதேன் வாயுக்களை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையினால் இந்த நிலை தோன்றி இருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

குறிப்பாக இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் பெருமளவு சுவட்டு எரிபொருட்களை மின்சாரத் தேவைக்காக எரித்து வருகின்றன. இச் செயற்பாடு அதிகளவு காபனீரொக்சைட்டை வளிமண்டலத்துக்குள் வெளித்தள்ளுக்கின்றது.

அயனமண்டலக் காடுகள் உலர்ந்து வருகின்றன என்றும் இதனால் காட்டுத்தீ போன்றவை ஏற்பட்டு பெருமளவு தாவரங்கள் அழிக்கப்படுகின்றன. பூமி மேற்பரப்பில் சராசரி வெப்பநிலை அதிகரித்திருப்பதால் துருவப் பனிப்படிவுகளும் விரைந்து உருகி வருகின்றன. அத்துடன் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும் சூறாவளிகளும் அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உருவாக்கப்படுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

பிரிவுகள்:ALL POSTS, உலகம், விஞ்ஞானம் குறிச்சொற்கள்:

ரகசியமாக கண்காணிக்க வேண்டுமா?


wireless_camஇப்போது நீங்கள் யாரையாவது ரகசியமாக அவருக்கு தெரியாமல் அவருடை நடவடிக்கையை கண்காணிக்க வேண்டுமா? இதோ வந்துவிட்டது ஒயர்லெஸ் வீடியோ கேமரா. இதன் மூலம் நீங்கள் எங்கிருந்தபடியும் கண்காணிக்கலாம். தேவைப்பட்ட இடத்தில் பசை போட்டு, இந்த கேமராவை ஒட்டி விட்டால் மட்டுமே போதுமானது.

நெட்வொர்க் வசதி மூலம், எங்கிருந்தும் வீடியோவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க முடியும். நவேடாவில் உள்ள லாஸ் வேகாசில் நடந்த நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில், இந்த நவீன வீடியோ கேமரா காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்த கேமராவைப் பயன்படுத்துவோர், எங்கிருந்தபடியும், தங்கள் குடும்பத்தில், நிறுவனத்தில் நடப்பவற்றை கண்காணிக்க முடியும். தற்போது, சோதனை முறையில் பரிசோதிக்கப்பட்டு வரும் இந்த கேமரா, இன்னும் ஆறு மாதத்தில் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இந்த கேமராவின் தொழில் நுட்ப முறை, ‘அவாக்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த கேமரா மிகவும் சிறிய வடிவிலானது; பேட்டரியில் செயல்படக் கூடியது. ஒயர்லெஸ் வீடியோ கேமராவாகவும், புகைப்படக் கருவியாகவும் இதை பயன்படுத்தலாம். இதை சுவர்களிலோ, வேறு இடங்களிலோ பசை போட்டு ஒட்டி வைத்து விட்டால் போதுமானது.

இணைய தளத்தின் அடிப்படையில், இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளைக் கண்காணிக்க முடியும். இதை தினமும், 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும் என்பது இன்னொரு சிறப்பம்சம். இதை பொருத்துவது மிக மிக எளிதானது. இதை பொருத்துவதற்கு ஒயர்கள் தேவையில்லை; புதிதாக சாப்ட்வேர் இணைக்கத் தேவையில்லை.

மனிதனைப் போலவே உணர்ச்சிவசப்படும் இயந்திர மனிதன்


robot2robot மனிதனைப் போலவே உணர்ச்சிவசப்படும் இயந்திர மனிதன் “ரோபாட்”உருவாக்கப்படுவது உறுதியாகி விட்டது! ஆண், பெண் “ரோபாட்”உருவாக்குவது சுலபமாகி விடும் மணமக்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது; பெண் ரோபாட்டை திருமணம் செய்து கொள்ளலாம். அதுக்கு கூட ரோபாட் தயார் தான்.

அதற்கேற்ப உணர்ச்சிப்பூர்வமான குணங்கள் அதனிடம் இருக்கும்.-என்ன
தலை சுத்துதா… பிரிட்டன் விஞ்ஞானி டேவிட் லெவி என்பவர் தான் இப்படி சொல்லியிருக்கிறார். கலிகாலம் முத்திப்போச்சு…ன்னு பெரியவர்கள் சொல்லி வருகின்றரே… அது உண்மை தான் போலிருக்கிறதே…’ என்று நினைக்கிறீர்களா… சரி தான் போலும்! வீட்டில், ஆபீசில், தொழிற்சாலையில் வேலைகளை செய்ய ரோபாட்’ பயன்படுத்தப்படுகிறது. பல துறைகளிலும் மனிதர்களுக்கு ஈடாக வேலை செய்யும் திறன் படைத்த கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்துடன் கூடிய `ரோபாட்’களை ஜப்பான், அமெரிக்கா உட்பட சில நாட்டு
விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். மனிதர்களை போல ரோபாட்’டையும் உணர்வுபூர்வமானதாக உருவாக்க முடியும்; அதனால், கேள்விக்கு பதில் சொல்ல முடியும்.

இப்போது, மனிதர்களை போலவே, அதற்கும் முக்கிய உறுப்புகளை
உருவாக்கி, அவற்றை செயல் பட வைக்க முடியும்; அவற்றால் `செக்ஸ்’ வைக்கவும் முடியும் என்று அதிர்ச்சி தரத்தக்க ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார் டேவிட் லெவி. கடந்த பல ஆண்டாக ஆராய்ச்சிகளை செய்து வரும் இவர், robot_almost_human_sfwஉணர்வுபூர்வ ரோபாட்’ உருவாக்குவது பற்றி கூறுகையில், `ஒரு மனிதனின்
வாழ்க்கையில் செக்ஸ் முக்கிய பங்காற்றுகிறது. செக்ஸ் விஷயத்தில் ஒருவர் முழு திருப்தி கொண்டிருந்தால், அவரால் எதையும் சாதிக்க முடியும்; நீண்ட நாள் வாழ முடியும். “இப்போது கிடைக்கும் செக்ஸ்” பொம்மைகள், வெறும் சாதனம் தான்.

ஆனால், விருப்பு வெறுப் பின்றி மனிதனை போலவே செக்ஸ் தரும்
`ரோபாட்’ டை உருவாக்கும் காலம் வெகுதுாரத்தில் இல்லை என்று கூறியுள்ளார். பிரிட்டனை சேர்ந்த லெவி, பிரபல செஸ் விளையாட்டு சேம்பியன்; அவருக்கு `ரோபாட்’டில் அதிக ஈடுபாடு. ஜப்பானிய விஞ்ஞானிகள் உருவாக்கும் `ரோபாட்’களை பார்த்து, அவருக்கு இதில் கவனம் திரும்பியது. பல வகை `ரோபாட்’களை உருவாக்கிய இவர் பார்வை, மனிதனை போலவே, `புசுபுசு’ தோல் கொண்டதும், உணர்வுபூர்வமான `ரோபாட்’டை உருவாக்க சபதம் எடுத்தார். இவரது
இந்த ஆராய்ச்சி இன்னும் வெற்றி பெறவில்லை. ஆனால், அதற்கான வழிவகைகளில் வெற்றி கண்டு வருகிறார்.

`எனது ஆராய்ச்சி ஒரு தூண்டுகோல் தான். இது
உலகில் விரைவில் வரத்தான் போகிறது’ என்று கூறியுள்ளார்.

செயற்கைக்கோள்:ஈரான் சாதனை


satellite_iranஈரான் தானே தயாரித்த முதல் செயற்கைக்கோளை தனது ராக்கெட் மூலம் செவ்வாய்க்கிழமை செலுத்தி சாதனை படைத்துள்ளது.இந்த செயற்கைக்கோளுக்கு”ஒமிட்”என்று பெயரிடப்பட்டுள்ளது.

செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதை அந்நாட்டு அதிபர் மொஹ்முத் அகமது நிஜாத் தொலைக்காட்சியில் இதை அறிவித்தார்.

தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஈரான் ஏற்கெனவே செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.தற்போது செயற்கைக்கோளை செலுத்தும் திறனைப் பெற்றுவிட்டதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

சொந்தமாக கம்ப்யூட்டர் வேண்டாம் – வருகிறது கூகுள் ஜி&டிரைவ்


google_drive2லேப்டாப் வாங்காமல் அவசரப்பட்டு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வாங்கி விட்டீர்களா? லேப்டாப் இருந்தாலும் அதை மறந்து விட்டு வெளியே செல்கிறீர்களா? எதுவானாலும் இனி கவலையில்லை.

இருந்த இடத்தில் இருந்து உங்கள் கம்ப்யூட்டரில் டேட்டாக்களை தொடர்பு கொள்ளும் ஜி&டிரைவ் வசதியை கூகுள் விரைவில் அறிமுகம் செய்கிறது.

கம்ப்யூட்டர் யுகத்தில் புதிய புரட்சி ஏற்படுத்தக்கூடிய இந்த வசதி பற்றி அமெரிக்க தொழில்நுட்ப செய்திக்கான வெப்சைட் கூறுகையில், ÔÔஉங்கள் கம்ப்யூட்டர் ஹார்டிரைவை தூக்கி எறியுங்கள். கூகுள் ஜி&டிரைவ் விரைவில் வருகிறதுÕÕ என்கிறது.

அதாவது, நமது கம்ப்யூட்டரில் நாம் வைத்திருக்கும் அத்தனை டேட்டாக்களையும் இன்டர்நெட்டில் கூகுள் ஏற்படுத்தித் தரும் இடத்திலும் ஸ்டோர் செய்து வைக்கலாம். அதன்மூலம், இருக்கும் இடத்தில் இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர் இருந்தால் போதும். ஜி&டிரைவ் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டேட்டாக்களை நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்.

இந்த வசதியில் இமெயில், போட்டோக்கள், இசை, தகவல் பைல்கள் என சகலமானவற்றையும் தொடர்பு கொள்ள முடியும். கூகுள் இப்போது அளித்து வரும் வசதிகளுடன் கூடுதலாக இந்த சேவையும் கிடைக்கப் போகிறது.
googlegdriveஇந்த வசதி அறிமுகமாகி பிரபலமாகி விட்டால் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் உட்பட இப்போதைய டெஸ்க்டாப் சிஸ்டம்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்கின்றனர் கம்ப்யூட்டர் துறை நிபுணர்கள்.

எனினும், கூகுள் ஜி&டிரைவை நம்பி அதிகளவு தனிப்பட்ட மற்றும் வர்த்தக டேட்டாக்களை ஸ்டோர் செய்வது சரியாக இருக்காது. உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் அளவு டேட்டாக்களுக்கு ஜி&டிரைவில் பாதுகாப்பு கிடைக்காது என்றும் சிலர் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி தொடர்பு கொண்டபோது கூகுள் தரப்பில் கருத்து தெரிவிக்க மறுத்தனர்.

செவ்வாய்க் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான தடயம் கிடைத்தது


marsசெவ்வாய் கிரகத்தில் மீத்தேன் வாயு இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த வாயுவை உயிரினங்கள் தான் உற்பத்தி செய்யமுடியும் என்பதால் அங்கு உயிரினங்கள் வாழ்கின்றன என்பது தெரியவந்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

பூமியில் காணப்படும் மீத்தேனின் 90 சதவீதம் வாழும் உயிரினங்களால் வெளிப்படுத்தப்படுபவை. எனவே செவ்வாய்க் கிரகத்திலும் உயிரினங்கள் தான் அதை வெளிப்படுத்தி இருக்கவேண்டும். நுண்ணுயிரிகள் மூலம் வெளிப்படுத்தப்படும் வாயுவாக இது இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

பிரிவுகள்:ALL POSTS, விஞ்ஞானம் குறிச்சொற்கள்:

உடலை மெலிய வைக்கும் செல்போன்


new-phone_செல்போன் என்றாலே தகவல் தொடர்பு சாதனம் என்பது தான் இதுவரை நமக்கு ஞாபகத்துக்கு வரும்.ஆனால் இனிமேல் அதை ஒரு எடை குறைக்கும் சாதனம் என்றும் சொல்ல வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா?,உண்மை தான்.உடல் பருத்து அவதிக்குள்ளாகும் சிலரின் நிலையை கவனத்தில் கொண்ட  விஞ்ஞானிகள் எடையைக்குறைக்கும் செல்போனை கண்டுபிடித்துள்ளனர்.அமெரிக்காவின் பிரிகொம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தான் இது மாதிரியான வித்தியாசமான செல்போனை கண்டுபிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
தங்களது கண்டுபிடிப்பு குறித்து கூறும் விஞ்ஞானிகள் நிறைகூடியவர்களுக்கு மட்டுமல்லாது உடலை எப்போதும் மெல்லியதாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கும் இந்த செல்போன்வரப்பிரசாதமே என்கின்றனர்.விஞ்ஞானிகள் தாங்கள் கண்டுபிடித்துள்ள எடை குறைக்கும்  செல்போனை 120 பேரை பயன் படுத்த வைத்து சோதனை நடத்தினர்.
இதில் அனைவரது உடல் எடையும்  செல்போனை பயன் படுத்துவதற்கு முன்பு இருந்ததை விட கணிசமாகக் குறைந்தது.சில பெண்கள் தாங்கள் விரும்பியவாறு மெலிந்து அழகு தேவதைகளாகினர்.இந்த நவீன ரக எடை குறைக்கும் செல்போனை ஒருவர் பயன்படுத்தும் போது பசி குறைந்து உடலில் வளர்ச்சியில் மாற்றம் துரிதமாக நடைபெறும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

%d bloggers like this: