தொகுப்பு

Archive for the ‘விளையாட்டு’ Category

துடுப்பாட்ட வீரர்களுடன் அவர்களுடைய குடும்பத்தினர்


இவர் யார்?


                                                                             !

                                                                                !

                                                                              !

                                                                                   !

                                                                            !

                                                                              !

                                                                                       !

                                                                              !

பிரிவுகள்:ALL POSTS, கிரிக்கெட், விளையாட்டு குறிச்சொற்கள்:

ஆடுகள தகவல்களுக்காக ஒரு இணையதளம்


உலகில் எந்த விளையாட்டு நடந்தாலும் அது தொடர்பான  புள்ளிவிபரங்களை தரும் இணையதளம் ஒன்று உள்ளது.இதன் தள முகவரி www.livescore.com ஆகும்.

இங்கே சென்று உங்களுக்கு பிடித்தமான விளையாட்டுக்களின் புள்ளிவிபரங்களை உடனுக்குடன் அறிய முடியும்.

பிரிவுகள்:ALL POSTS, விளையாட்டு குறிச்சொற்கள்:

மனைவிக்காக விட்டுக் கொடுத்த முரளிதரன்


முரளி பற்றி உலாவி வரும் புரளியால் இலங்கை ரசிகர்கள் மத்தியில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.முரளிதரனின் மனைவி மதிமலர் இந்தியத் தமிழர் என்பது அனைவரும் அறிந்த சங்கதி. முரளி இறுதிப் போட்டியில் இலக்குகள் எதனையும் வீழ்த்த வில்லை என்பது தெரிந்ததே!இவர் இலக்குகள் எதனையும் வீழ்த்தாததற்கு காரணம், இவரின் மனைவி இந்தியர் என்பதால் முரளி மனைவிக்காக விட்டுக் கொடுத்தார் என்று வதந்திகள் பரவலாக உலாவி வருகின்றன.
இந்த புரளிகள் பற்றிய  விடயங்கள் இன்று வானொலிகளிலும் விவாதிக்கப்பட்டன.

அடப் பாவிங்களா இப்படியும் கூட யோசிப்பாங்களா?!

பிரிவுகள்:ALL POSTS, கிரிக்கெட், விளையாட்டு குறிச்சொற்கள்:,

இன்று ராமர் எதிர் ராவணன் போர்


உலகம் இன்று மும்பையில் நடைபெறப்போகும் மிகப் பெரும் போரை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றது.
ஆம்,இன்று இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உலகக் கிண்ண  துடுப்பாட்ட இறுதிப் போட்டி நடை பெறுகின்றது.இந்தியாவில் இந்த மிகப்பெரும் சமரை ராமர் ராவணன் போராக நினைக்கிறார்கள்.ராமர் ராமாயணத்தில் ராவணனை வீழ்த்தி சீதையை மீட்டார்.அது போல் இன்றைய போட்டியிலும் இந்தியா இலங்கையை வெற்றி கொள்ள ராமர் துணையிருப்பார் என்று நம்புகிறார்கள்.அதே போல் சச்சினை அனுமானாக சித்தரிக்கிறார்கள். அனுமான் இலங்கையை எரித்தது போல, சச்சின் இலங்கையை துவம்சம் செய்வார் என்று நினைக்கிறார்கள்.

அது சரி,இலங்கை இது பற்றி என்ன நினைக்கிறது.ராவணனைக் கொன்ற ராமரை பலி தீர்க்குமா இலங்கை?! இன்று  இரவுக்குள் தெரிந்து விடும் பதில்.
இராவணன் ஒரு இலங்கைத் தமிழன். தமிழனாக உலகத் தமிழர்கள் பெருமை கொள்வோம்.

பிரிவுகள்:ALL POSTS, கிரிக்கெட், விளையாட்டு குறிச்சொற்கள்:,

இலங்கையின் துடுப்பாட்ட மைதானங்களிலிருந்து விடைபெற்றார் முரளிதரன்


நேற்று இலங்கையர்கள் அனைவருக்கும் சோகமும் மகிழ்ச்சியும் கலந்த நாள்.ஆம், தனது பந்து வீச்சால் உலகை கலக்கிய முரளிதரன் விடை பெற்றுக் கொண்ட நாள்.அனைவரின் கண்களும் ஒன்றாக அழுத அந்த தருணம் யாராலும் இலகுவில் மறக்கவே  முடியாது.

போரால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மக்களைத் தவிர அனைவரும் இந்தப் போட்டியை கண்டுகளிக்கத் தவற வில்லை.

இலங்கையின் துடுப்பாட்ட  மைதானங்களிலிருந்து இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முரளிதரன் நேற்று  விடைபெற்றுக் கொண்டார்.

உலகக் கிண்ண துடுப்பாட்ட  போட்டியுடன் துடுப்பாட்ட த்திலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளதாக முன்னதாகவே முரளிதரன் அறிவித்திருந்தார். அதன் காரணமாக  நேற்று அவர் விளையாடிய போட்டியே இலங்கை மண்ணில் அவர் விளையாடிய  கடைசிப் போட்டியாகும்.

எதிர்வரும் சித்திரை  இரண்டாம் திகதி மும்பையில்  நடைபெறும் உலகக் கிண்ண துடுப்பாட்டத்தின்  கடைசிப் போட்டிகளுடன் சர்வதேச  துடுப்பாட்ட அரங்கிலிருந்தும் முரளிதரன் முழுமையாக ஓய்வுபெற்று விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரிவுகள்:ALL POSTS, கிரிக்கெட், விளையாட்டு குறிச்சொற்கள்:

வன்னியில் போர் அழிவைப் பார்த்து அதிர்ந்துபோன துடுப்பாட்ட வீரர்கள்


இலங்கை துடுப்பாட்ட  அணி வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோருடன் முன்னாள் இங்கிலாந்து அணி வீரர்கள் இயன் பொத்தம் மற்றும் மைக்கல் வோன் ஆகியோர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வடக்கில் மாங்குளம் பிரதேசத்துக்குச் சென்றிருந்தனர்.

“பவுண்டேஷன் ஒஃப் குட்னஸ்’ என்ற அமைப்பொன்றின் மூலம் இலங்கை துடுப்பாட்ட  அணி வீரர்கள் ஆரம்பித்துள்ள சமுகப் பணியின் ஒரு கட்டமாக அவர்களின் பயணம் அமைந்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு சிறார்களிடம் துடுப்பாட்ட  திறமைகளை ஊக்குவிப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்ற தொனிப்பொருளில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இயன் பொத்தம், வடக்கில் போரினால் ஏற்பட்டுள்ள அழிவுகளைப் பார்த்துத் தான் அதிர்ந்து போனேன். இவ்வாறான அழிவு ஏற்பட்டிருக்கும் என நான் கனவில் கூட நினைத்துப்பார்க்க வில்லை.இவர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்.இங்குள்ள வீடுகள் முற்றாக தரைமட்டமாகியிருக்கின்றது. மிகப்பெரிய பரந்த வெளியாக எல்லாம் காட்சியளிக்கின்றது.அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியைக் காணவில்லை. இன்னும் பதினைந்து ஆண்டுகளில் இவர்களை முரளி,சங்கா போன்ற சிறந்த துடுப்பாட்ட வீரர்களாக பார்க்க விரும்புகிறேன்.
வடக்குச் சிறார்களிடமுள்ள திறமைகள் தம்மைக் கவர்ந்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த முப்பது வருடங்களாக தெற்கில் மக்கள் அனுபவித்த வசதிகள் வடக்கு,கிழக்கு மக்கள் அனுபவிக்கவில்லை என  இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்தார். அந்த வசதிகளை அவர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுப்பது தமது கடமையென்றும் அவர் கூறினார்.

பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள இலங்கைக்கு  மேற்குலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் என்று நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான முரளிதரன் கூறினார்

இந்த உதவிகள் மூலம் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏதேனும் நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஒரு தமிழனின் அரிய சாதனை


இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி பெரும் சாதனையை ஈட்டியுள்ளார். இச்செய்தி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் இந்த சாதனையை பெறுவதற்காக சற்று முன்னர் 800 வது விக்கெட்டாக இந்திய வீரர் பி.பி.ஓஜாவை வீழ்த்தி வெளியேற்றினார். இது அவர் விளையாடுகின்ற 133 வது டெஸ்ட் போட்டியாகும். இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் எட்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

அவரது சாதனையை பற்றி ரசிகர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் அவர் இன்றைய டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கு விடை கொடுப்பது அனைவரது மனதிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

காலியில் நடைபெறும் இலங்கை-இந்தியா வீரர்களுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற டெஸ்ட் போட்டியின் 5வது நாளான இன்று முரளிதரன் பெற்றுள்ள சாதனை இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டும்.

ஒரு தமிழனின் இச்சாதனை அனைத்து தமிழர்களும் கொண்டாட வேண்டிய அரிய சாதனையாகும்.

தோல்விக்காக தோ‌னியை விமர்சிப்பது நியாயமற்றது : முரளிதரன்


”20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தோல்விக்காக தோ‌னியை விமர்சிப்பது நியாயமற்றது” என்று இல‌‌ங்கை அ‌ணி‌யி‌ன் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறந்த அ‌ணி‌த் தலைவ‌ரிக‌ளில் தோனியும் ஒருவர் எ‌ன்று கூ‌றிய முர‌ளிதர‌ன், அவரது தலைமையில் ஐ.பி.எல்.கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது எ‌ன்றா‌ர்.

அது நடந்த ஒரு வாரத்துக்கு பின்னர் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி சூப்பர்8 சுற்றுடன் தோல்வி கண்டு வெளியேறியது எ‌ன்று‌ம் இந்தியாவில் வெற்றி பெற்றால் சிறந்த அணி என்று எல்லோரும் பாராட்டுவார்கள் எ‌ன்று‌ம் தோல்வி கண்டால் அனைவரும் தூற்றுவார்கள் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

ஒரு வாரத்தில் ஒரு அணி மோசமாகிவிடாது எ‌ன்று தெ‌‌ரி‌வி‌த்த முர‌ளி, இது போன்று மீடியாக்கள் தாழ்வாக விமர்சிக்க கூடாது எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

இந்திய அணி டெஸ்ட் போட்டியில் நம்பர் ஒன் இடத்தையும், ஒரு நாள் போட்டியில் 2வது இடத்தையும் வகிக்கிறது எ‌ன்று கூ‌றிய முர‌ளிதர‌ன், திறமை இல்லாவிட்டால் இந்த மாதிரி உயர்வான இடத்தை பிடிக்க முடியாது எ‌ன்றா‌ர்.

20 ஓவர் போட்டியில் அந்த நாளில் சிறப்பாக ஆடும் எந்தவொரு அணியும் வெல்லும் எ‌ன்று‌ம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் சரிவில் இருந்து மீண்டு வர நேரம் கிடைக்கும், ஆனால் 20 ஓவர் போட்டியில் இதுபோல் மீண்டு வர முடியாது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி முதல் 2 ஆட்டத்தில் வென்று விட்டு பின்னர் பிடியை தளர விட்டுவிட்டது எ‌ன்று‌ம் 20 ஓவர் போட்டியில் வெற்றிக்கு சற்று அதிர்ஷ்டமும் அவசியமாகும் எ‌ன்று‌ம் முர‌ளிதர‌ன் கூ‌றினா‌ர்.

ஆஸ்‌ட்ரேலிய அணி எல்லா ஆட்டத்திலும் வென்று விட்டு, கடைசியில் இறுதிப் போட்டியில் தோல்வி கண்டது எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்ட முர‌ளிதர‌ன், இது 20 ஓவர் போட்டியில் லேசான அதிர்ஷ்டமும் தேவை என்பதை உணர்த்துகிறது எ‌ன்றா‌ர்.

இரவு விருந்து நிகழ்ச்சிக்காக ஐ.பி.எல்.போட்டியை குற்றம் சொல்வது நியாயமாகாது எ‌ன்று‌ம் ஐ.பி.எல். இரவு விருந்தில் நான் ஒருபோதும் பங்கேற்றது கிடையாது. எனவே அதுபற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

எனது காயம் குணமாகி விட்டதா‌ல் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடுவேன் எ‌ன்று கூ‌றிய முர‌ளி, எனக்கு இப்போது என்ன கிடைத்து இருக்கிறதோ? அது கிடைக்கும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. நான் எல்லாம் அடைந்து விட்டேன். இருப்பினும் மேலும் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் எ‌ன்றா‌ர்.

அசின் விளையாடும் கிரிக்கெட்


களைகட்டி வரும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தற்போது எட்டு அணிகள் விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டில் மேலும் இரண்டு அணிகள் களமிறங்க காத்திருக்கின்றன.

அதில் ஒன்று கொச்சின் அணி. சமார் 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது.

இதன் விளம்பர அம்பாஸிடராக நடிகை அசின் தேர்வு செய்யப்பட்டு, சில கோடிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தனது மாநிலத்தின் அணி என்பதால் விளம்பரம் செய்வதில் மிகவும் பெருமையடைவதாக கூறி வருகிறார் அசின்.

அடுத்த ஆண்டுதான் கொச்சின் விளையாடும் என்றாலும், இப்போதிலிருந்தே விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

பிரிவுகள்:ALL POSTS, விளையாட்டு
%d bloggers like this: