தொகுப்பு

Archive for the ‘ALL POSTS’ Category

iPhone 5Se மார்ச் 18 ஆம் திகதி சந்தைக்கு வருகிறது


இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை


banana

இரவு உணவுக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிடுவதை பலரும் பழக்கமாக கொண்டிருப்பார்கள்.

என்னதான் ருசியான உணவை சாப்பிட்டாலும், கடைசியில் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால்தான் பலருக்கு உணவு உண்டதற்கான திருப்தி கிடைக்கும்.

ஆனால், இரவில் வாழைப்பழத்தை சாப்பிடுவதால் சில உடல்நலப்பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

ஏனெனில், அதில் உள்ள Fructose என்ற சர்க்கரை சத்து கொழுப்பாக மாறி நமது உடலில் நிரந்தரமாக தங்கி விடும். இதன் காரணமாக உடலில் கலோரி அதிகமாகும். உடல் எடை அதிகரிக்கும்.

ஒரு சிலர் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதை பழக்கமாக கொண்டவர்கள் சாப்பிட்ட உடனே வாழைப்பழம் சாப்பிடக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் கழித்து சாப்பிடலாம்.

இரவு உணவிற்குப் பின் வாழைப்பழம் சாப்பிடுவதால், சாப்பிட்ட உணவு விரைவாக செரிமானம் ஆகும், காலைக்கடன்களை எந்தவித சிரமமும் இல்லாமல் செய்ய முடியும்.

வயிற்று உபாதை காரணமாக காலைக்கடன்களை முடிக்க சிரமப்படுபவர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள்,பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பு

வயதானவர்களும், நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

பிரிவுகள்:ALL POSTS குறிச்சொற்கள்:

நான் பார்த்த சென்னை (காட்சி 12)


மஹாபலிபுரம்
mahabalipuram
கடற்கரையோரம் ஓர் புராதன சிற்பக்கலையை பார்க்க விரும்பினால் இது தான் உங்களின் சரியான தேர்வாக இருக்கும்.மஹாபலிபுரம் என்ற பெயருடன் தற்போது அறியப்படும் ‘மாமல்லபுரம்’ நகரம் சென்னையை ஒட்டி தெற்கே காஞ்சிபுரம் மாவட்டத்தின் அங்கமாக வீற்றிருக்கிறது. இந்நகரம் 7 ம் நூற்றாண்டில் பல்லவ வம்சத்தின் துறைமுக நகரமாகவும் சிற்பக்கலை கேந்திரமாகவும் மஹோன்னத கீர்த்தியுடன் திகழ்ந்திருக்கிறது என்று இங்குள்ளவர்கள் கூறுகின்றார்கள். இன்று தமிழ்நாட்டின் மிக முக்கியமான சிற்பக்கலை சார்ந்த வரலாற்று சுற்றுலாத்தலமாக உலகளாவிய அளவில் புகழ் பெற்றிருக்கும் இந்த நகரம் சர்வதேச ‘யுனெஸ்கோ’ அமைப்பின் மூலம் உலகப்பாரம்பரிய ஸ்தலங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
பெயர்க்காரணம்
மஹாபலி என்னும் அசுரகுல அரசன் இப்பகுதியை புராண காலத்தில் ஆண்டு வந்ததாகவும் பின்னர் மஹாவிஷ்ணு அவனை வதம் செய்ததாகவும் ஐதீகக்கதைகள் கூறுகின்றன.
எனவே இவ்வூருக்கு மஹாபலிபுரம் என்ற ஆதிப்பெயர் இருந்து வந்தததாக நம்பப்படுகிறது. மஹேந்திரவர்ம பல்லவரின் மகனாகிய முதலாம் நரசிம்மருக்கு மாமல்லர் என்ற பெயர் உண்டு.
ஒரு துறைமுக நகராக விளங்கிய இந்த நகரை கலைநகராக மாற்றிய அவரது பெயரே பின்னாளில் மாமல்லபுரம் என்று இதற்கு வழங்கப்பட்டதாக கருதப்படுகிறது. ‘மல்லை’ என்ற பெயரிலும் தற்போது இது சுருக்கமாக குறிப்பிடப்படுகிறது.
வரலாற்றுப்பின்னணி
திராவிட பூமியில் சேர, சோழ, பாண்டியர்களுக்கு அடுத்தபடியாக பல்லவ ராஜவம்ச மன்னர்கள் 3ம் நூற்றாண்டிலிருந்தே பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில் தமிழ் நாட்டின் வடகோடியை ஆண்டு வந்துள்ளனர்.
இந்த வம்சத்தின் வழித்தோன்றல்களாக வந்த பிற்காலப்பல்லவர்கள் காலத்தில்தான் இந்த மாமல்லபுரம் ஒரு முக்கிய நகரமாக உருமாறி கோலோச்சியிருக்கிறது.
மஹேந்திரவர்ம பல்லவர் மற்றும் நரசிம்மவர்ம பல்லவர் ஆகிய இரு மன்னர்கள் இன்றும் நாம் மாமல்லபுரத்தில் காணும் சிற்பக்கலை பொக்கிஷங்களின் பின்னணியோடு நெருங்கிய தொடர்புடையவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள் காலத்தில் கலை, இலக்கியம், கவிதை, நாடகம் போன்ற கலைகள் யாவும் போற்றி வளர்க்கப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன.
நிஜக்கதையா, வரலாறா, கற்பனையா என்றெல்லாம் பிரித்தறிய முடியாத வண்ணம் தமிழின் ஆகச்சிறந்த எழுத்தாளர் கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் எனும் அற்புதமான புதினத்தின் ‘கதைக்களத்தில்’ மாமல்லபுரம் இடம் பெற்றிருப்பதை வாசித்தவர் அறிவர்.
அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிகழ்வுகள் வெறும் கற்பனையாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதை இந்த நகரில் மிச்சமிருக்கும் சிற்பச்சான்றுகள் உரைக்கின்றன. மற்ற எல்லா தமிழ் நகரங்களையும் போன்றே தொகுக்கப்படாத வரலாறும், எழுதப்படாத கீர்த்தியும்தான் மாமல்லபுரத்திற்கும் என்றாலும், இங்கு வரலாறு கல்லில் வடிக்கப்பட்ட கம்பீர கலைச்சின்னங்களில் பிரம்மாண்டமாக வாழ்கிறது.
இதுதான் மாமல்லபுரத்தின் பெருமை. எனவே, கலாரசிகர்களுக்கு நவீன இரைச்சல்களை விலக்கி உளிகளின் ஓசையையும், பல்லவ மன்னர்களின் நோக்கையும் கற்பனை செய்வதில் நிச்சயம் சிரமம் இருக்க முடியாது.
சூழலை முயன்று விலக்கி சிற்பக்கலை நேர்த்தியை தரிசிக்க வேண்டியிருப்பது காலத்தின் கட்டாயமன்றி வேறில்லை. எனினும் காலத்தை ஊடறுத்து நம் முன் மௌனக்கதை பேசும் மாமல்லபுரம் சிற்பப்படைப்புகள் நம்மை பெருமையுடன் கண் கலங்க சக்தி கொண்டவை -அதாவது வரலாற்றுக்கண் கொண்டு நோக்கும்போது.
ஒரு மஹோன்னத பாரம்பரிய ஸ்தலமாக இந்த நகரை போற்றி பாதுகாத்து அதை அவ்வண்ணமே பார்வையாளர்களும் அணுக தார்மீக நெறியூக்கம் செய்ய இயலாத மாயச்சூழலில், வரலாற்று சின்னங்களும் அவை வீற்றிருக்கும் ஏதோ ஒரு வகையில் பொலிவிழந்து காட்சியளிப்பது ஒரு இமாலய சோகம்.
யாவும் விட்டுச்சென்றனர் நம் முன்னோர், எனில் அவற்றை எவ்வகையில் நாம் காக்கின்றோம் என்பதே பெரும்பான்மை தமிழ் உள்ளங்களில் ஊமைக்கேள்வியாய் வீற்றிருக்கிறது.
18ம் நூற்றாண்டு வரையில் மஹாபலிபுரத்தின் வரலாற்று கலைச்சின்னங்கள் வெளியுலகிற்கு தெரிந்திருக்கவேயில்லை. ஏனெனில் இந்த படைப்புகளை ரகசியமாக உருவாக்குவதென்பதும் முதலாம் நரசிம்மர் மற்றும் ராஜசிம்மர் ஆகியோரது நோக்கமாக இருந்திருக்கிறது.
வரலாற்றுச்சின்னங்கள், கோயில்கள் மற்றும் சிற்பப்படைப்புகள்
கலை ரசிகர்கள் மற்றும் வரலாற்றுப்பிரியர்களை பிரமிக்க வைக்கும் ஏராளமான அம்சங்கள் மாமல்லபுரத்தில் நிறைந்துள்ளன. இங்குள்ள சின்னங்களை மண்டபங்கள், கோயில்கள், ரதக்கோயில்கள் என்று பல வகையாக பிரிக்கலாம்.
பஞ்ச பாண்டவ ரதங்கள், வராக மண்டபம் மற்றும் கடற்கரை கோயில் ஆகியவை இங்குள்ள குறிப்பிடத்தக்க அம்சங்களாகும். மேலும், மாமல்லபுரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் சோழமண்டல் கலைக்கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஓவியங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
கடற்கரையை ஒட்டியே மாமல்லபுரம் கலை நகரம் பல்லவ மன்னர்களால் எழுப்பப்பட்டிருப்பது இதன் மற்றொரு விசேஷ அம்சமாகும். வெளிநாட்டுப்பயணிகள் பலர் இந்த கடற்கரையில் காலை முதல் மாலை வரை ஓய்வெடுப்பதையும், நகர் முழுதும் சுற்றித்திரிவதையும் பயணிகள் பார்க்க முடியும். நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் ஒரு துர்க்கையம்மன் கோயிலும் அமைந்துள்ளது.
இங்கு பல அழகிய சிலைகளை பார்க்கலாம். புலிக்குகை மற்றும் முதலைப்பண்ணை போன்றவை பயணிகள் விரும்பக்கூடிய இதர சிற்றுலாத்தலங்களாக அமைந்துள்ளன.
மாமல்லபுரத்திற்கு எப்படி செல்லலாம்?
சென்னைக்கு மிக அருகாமையிலும் பாண்டிச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் பாதையிலும் அமைந்துள்ளதால் மிக சுலபமாக இந்த வரலாற்று நகருக்கு விஜயம் செய்யலாம். செங்கல்பட்டு வரை ரயிலில் சென்று அங்கிருந்து பேருந்து அல்லது டாக்சி மூலமாகவும் இங்கு வரலாம்.

எனக்கு மிகவும் பிடித்த இடம் என்று இதைக்கூறுவேன்.எனது உறவினர்களுக்கும் மஹாபலிபுரம் மிகவும் பிடித்தமான இடம் என்று கூறுவார்கள்.இந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு எனது நன்றிகள்.

நான் பார்த்த சென்னை (காட்சி 13) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, சென்னை

ஆங்கிலம் ஒரு மாதத்தில் மிகச் சரளமாக பேச ,எழுத


பிரிவுகள்:ALL POSTS

நான் பார்த்த சென்னை (காட்சி 11)


chennai1

‘கைதி கிச்சன்’

சென்னை சென்றால் கண்டிப்பாக மறக்காமல் செல்ல வேண்டிய மிகவும் முக்கிய இடம் இது என்றால் யாரும் மறுக்க மாட்டார்கள்.அது என்ன?அது தான் ‘கைதி கிச்சன்’.என்னது ‘கைதி கிச்சன்’ ஆ ஆ ஆ….என்று யோசிக்கிறீர்களா. தப்பே இல்லை,யோசிக்க விட்டால் தான் பிரச்சனை. புதுமைகளுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை உணர்ந்து, மக்கள் செல்ல பயப்படும் அல்லது விரும்பாத ஒரு இடத்தை செயற்கையாக உருவாக்கி வெற்றியும் கண்டிருக்கிறார் இதன் உரிமையாளர்.

சென்னை, மயிலாப்பூரில் உள்ள ‘கைதி கிச்சன்’ செல்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் என்பது நிச்சயம்.தமிழ் நாட்டைச் சேர்ந்த நண்பர் ஒருவர் தான் இதைப்பற்றி எனக்குச் சொன்னார்.நான் நம்பவில்லை.அழைத்தே சென்று விட்டார்.நான் சிறைச்சாலைக்கு வந்து விட்டேனோ என்று ஆரம்பத்தில் யோசித்தேன்.பிறகு வியப்புடன் நம்பினேன்.என்ன நீங்களும் நம்பவில்லைத் தானே!!!!நம்பித் தான் ஆகனும்.

chennai

முழுக்க முழுக்க சிறை போன்ற அமைப்பில் உள்ள இந்த உணவகத்தின் வாசல், வேலூர் ஜெயில் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பரிமாறும் “கைதி” கணேசன் சொன்னார். மன்னிக்கவும் திரு.கணேசன் சொன்னார். உணவகத்தில், சிறைக்கூண்டில் (செல்லுக்குள்) அமர்ந்துதான் உண்ண வேண்டும். போலீஸ்(காவல்துறை) உடை அணிந்தவர்தான் கேள்வி (ஆர்டர்) எடுப்பார். உணவு பரிமாறுபவர், கைதி உடையில் இருப்பார். ஆங்காங்கே கைவிலங்குகள், துப்பாக்கிகள் என்று அசத்தியுள்ளனர் ‘கைதி கிச்சன்’ நிர்வாகத்தினர்.

‘கைதி கிச்சன்’ முழுமையான சைவ உணவகம். சைவத்தில் இத்தனை வகைகளா என்று ஆச்சரியப்பட வைப்பது இன்னுமொரு ஆச்சர்யம். உணவகத்தில் மெக்ஸிகன், மங்கோலியன், பர்மீஸ், தந்தூரி, சைனீஸ், இத்தாலியன், நார்த் இந்தியன் என அனைத்து வகை உணவுகளும் உண்டு. லிட்டி சொக்கா, பர்மீஸ் கௌசுவே, மங்கோலியன் சூப், க்ரீக் காட்டேஜ் சீஸ் சத்தே, தந்தூரி ஸ்மோக்கி பார்பிக்யு இவை எல்லாம் விசேட உணவுகள்.வாடிக்கையாளர்கள் இவற்றை எல்லாம் வாய்விட்டுப் பாராட்டிச் செல்வதுடன், சிறைக்கூண்டில் (ஜெயில் செல்லில்) புகைப்படம் எடுத்துக் கொள்வதிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். மதியத்தைவிட, இரவு நேரங்களில்தான் களை கட்டுகிறதாம் கூட்டம்.

என்ன!இப்பவே செல்லத் தயாரா?!இந்த உணவகத்தைப் பற்றித் தெரியாதவர்களை அழைத்துச் செல்லும் போது விபரமாக சொல்லி அழைத்துச் செல்லுங்கள்.ஹி..ஹி…ஹி……

நான் பார்த்த சென்னை (காட்சி 12) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, சென்னை குறிச்சொற்கள்:

நான் பார்த்த சென்னை (காட்சி 10)


முட்டுக்காடு

muttukadu
மிகவும் அழகான இடம்.சென்னையில் இருந்து சுமார் 40கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் முட்டுக்காடு படகு சவாரி சிறப்பாக இருக்கும். இங்கு பெடல் படகுகள் மோட்டார் படகுகள் என அனைத்து வகையான படகுகளும் இருக்கின்றன. பரந்து விரிந்த ஏரியில் ஜாலியாக படகு சவாரி செய்யும் அனுபவமே தனிதான்.அனைவரும் மிகவும் விரும்பி வந்து செல்லும் இடமாக இது உள்ளது.சென்னைக்கு மீண்டும் நான் வந்தால்,மீண்டும் செல்ல ஆசை.

மாயாஜால்

Mayajaal

மாயாஜால் (Mayajaal) என்பது சென்னையிலுள்ள ஒரு பொழுதுபோக்கு மையமாகும். இது கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கானத்தூரில் அமைந்துள்ளது. இது பல்பொருள் அங்காடி, விளையாட்டு மையம், ஓய்வகம் மற்றும் பல்வகை திரையரங்குகள் கொண்ட இடமாகும். இங்கு 16 பல்வகை திரையரங்குகள் உள்ளன. இதுவே ஆசியாவிலேயே மிக அதிகமான பல்வகை திரையரங்குகள் கொண்ட இடமாகும். விளையாட்டு மையம் 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக இங்கு பணி புரியும் பழனிச்சாமி என்பவர் என்னிடம் கூறினார்.ஓய்வகம் 2005 ஆம் ஆண்டு நாற்பது அறைகளுடன் திறக்கப்பட்டதாக கூறுகின்றார்கள்.முப்பதாயிரம் சதுர அடிகள் கொண்ட பல்பொருள் அங்காடி 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாம்.

 

தட்சிணசித்ரா

தட்சிணசித்ரா
தட்சிணசித்ரா
தட்சிணசித்ரா

 

முட்டுக்காடு செல்லும் வழியில் இருக்கும் இடம் தட்சிணசித்ரா. கைவினைப் பொருட்கள் இங்கு அதிகமாக இருக்கும். மேலும், தமிழ்நாடு மற்றும் மற்ற தென்னிந்திய மாநிலங்களின் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் இடமாக அமைந்திருக்கிருக்கின்றது தட்சிணசித்ரா. சென்னைக்கு சென்றால் பார்க்க வேண்டிய முக்கிய இடம் இதுவாகும்.

நான் பார்த்த சென்னை (காட்சி 11) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, சென்னை குறிச்சொற்கள்:

நான் பார்த்த சென்னை (காட்சி 8)


சென்னையில் நான் பார்த்த,கேட்ட ,அறிந்த சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.சென்னை பல விடயங்களை தன்னுள் புதைத்து வைத்துள்ளதை அங்கு சென்று அறிந்தால் மட்டுமே விளங்கிக் கொள்ளலாம்.சென்னையில் நான் பலருடன் உரையாடியிருக்கின்றேன்.அவை உண்மையானவையாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.நான் அறிந்த,தெரிந்த சில விடயங்களைக் கூறுகின்றேன்.

முதலில் சென்னையை பார்ப்பவர்கள் தமிழர்களின் தலைநகரம் என்று கருதுவார்கள்.ஆனால் உண்மையில் தமிழர்கள் 50 விழுக்காடுக்கும் குறைவாகவே சென்னையில் வாழ்கிறார்கள். மலையாளிகள்,தெலுங்கர்கள் போன்ற வேற்று இனத்தவர்களே மிகுதி 50 விழுக்காட்டையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.கன்னட இனத்தவர்கள் மிகக் குறைவாக வாழ்கின்றார்கள்.வெளி மாநில தொழிலாளர்கள் மிக அதிகமாகவே தொழில் புரிகின்றனர்.

Chennai

சென்னையில் பெண்கள் பெரும்பாலும் வீடுகளிலும் சேலைதான் அணிகின்றனர். ஆனால்,யாழ்ப்பாணத்தில் வெளியில் செல்வதென்றால் மட்டுமே சேலை அணிவார்கள். பெண்களும் சரி,ஆண்களும் சரி உந்துருளியில் செல்லும் போது தலைக்கவசம் அணிவதே இல்லை. பதிலாக,வெளிப்புற தூசு,வாகனப் புகையில் இருந்து பாதுகாப்பதற்காக பெண்கள் ஒருவித கைக்குட்டை வடிவிலான துணியை தலையைச் சுற்றி அணிகிறார்கள்.

Chennai

பொதுவாக சென்னை ஆண்கள் திருமணம் தொடர்பாக இருவேறு மனநிலையில் இருக்கின்றனர்.ஒருசாரார் சென்னைக்கு வெளியே பெண் எடுப்பதை விரும்புகின்றனர். நவீன சென்னை பெண்களின் ஆண் ஆதிக்கத்தை எதிர்க்கும் அல்லது சமஉரிமை கோரும் பண்புகள் இவர்களுக்கு சலனத்தை அல்லது சினத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

இன்னொரு சாரார் சென்னை பெண்களை விரும்புகின்றனர்.சென்னைக்கு வெளியே பெண் எடுத்தால் அவருக்கு சமையல் மட்டுமே தெரியும்,வெளி உலகம் தெரியாது, வெளி உலகம் தெரியாத பெண்ணுக்கு சென்னையில் மதிப்பு கிடையாது,பிள்ளைகளை வளர்ப்பது சிரமம் போன்ற பல காரணங்கள் இதில் காணப்படுகின்றன.

Chennai

சென்னையில் வெயில் மிக அதிகம்.சென்னைக்கு வந்த எவரும் கதைக்கும் முதல் விடயம்,”என்ன வெயில் இப்படிக் கொளுத்துதே”.ஆனால் மழை அதைவிட மோசம் என்று சென்னை வாசிகள் கூறுகின்றனர்.மழை வந்தால் சென்னை நரகமாக காட்சியளிக்கும் என்கிறார்கள் அனுபவித்த பலர். பாம்புகளும் கூடவே வருமாம்.

Chennai

சென்னையில் நாய்த் தொல்லையும் அதிகம்.என்னுடன் வந்த உறவினர் கடி வாங்கியது தனிக் கதை. அதிகமான கட்டாக் காலி நாய்கள் திரிகின்றன.இரவில் சிறிய ஒழுங்கைகளில் நடமாடுவதென்றால் நான்கு பேரை கூடிச் செல்ல வேண்டும்.இல்லாவிட்டால் நாயிடம் கண்டிப்பாக கடி வாங்க வேண்டி வரும்.

Chennai

காய்கறி,பழங்கள் தவிர சென்னையில் பொருட்களின் விலை மிக அதிகம். தொழிலாளர்களுக்கான ஊதியமும் இங்கு குறைவு.தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்பவர்கள் கை நிறைய சம்பாதிக்கிறார்கள்.

Chennai

==============================================================================================================================

நான் பார்த்த சென்னை (காட்சி 9) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, சென்னை குறிச்சொற்கள்:

மாறி வரும் உலகம்!நிஜ திருமண தம்பதிகளின் திரைப்பட பாடல் வடிவிலான திருமண காணொளி.


பிரிவுகள்:ALL POSTS, உலகம், காணொளி

இன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை

பிரிவுகள்:ALL POSTS

‘கிராமத்துப் பொண்ணு’ நெருப்பென்று சொன்னியேடா!


பிரிவுகள்:ALL POSTS, காணொளி
%d bloggers like this: