தொகுப்பு

Archive for the ‘ALL POSTS’ Category

நான் பார்த்த சென்னை (காட்சி 7)


Chennai_
கோயம்பேடு என்ற வார்த்தையை பலரும் திரைப்படங்கள் மூலம் அறிந்திருப்போம். கோயம்பேடு சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும். இங்கு மிகப்பெரிய காய்கறிச் சந்தையும் உள்ளது.ஆசியாவின் மிகப்பெரும் காய்கறிச் சந்தை என்ற தனிச்சிறப்பை இன்றும் தக்க வைத்துள்ள கோயம்பேடு சந்தை சென்னையின் தனித்துவ அடையாளமாக திகழ்கின்றது.ஆனால் அதன் தனித்துவம் சென்று பார்த்தால் மட்டுமே தெரிய வரும்.
KOYEMBEDU
கோயம்பேட்டில் கோயட்டி என்ற ஒரு குருட்டு நாரை இருந்ததாம். இது தன் பக்தியால், இறக்கும்போதும் இறைநாமம்ஓதிச் சிவலோகப் பிராப்தி அடைந்ததாம்! அதனால் அந்த நாரையின் பெயரால் ‘கோயட்டிபுரம்’ என்று இந்த இடம் முதலில் அழைக்கப்பட்டு, பின் அது ‘கோட்டிபுரம்’ என்றாகி நாளடைவில் ‘கோயம்பேடு’ என மருவியதாம்.
Chennai__Bus_Terminus

KOYEMBEDU
திருமணத்திற்கு தேவையான காய்கறிகளையும் மற்றும் இதர பொருட்களை வாங்கவும் உறவினர்களுடன் பயணமானேன்.அங்கு சென்று சேர்ந்தவுடன் சற்று ஆடித் தான் போனேன்.நான் இதுவரை பார்க்காத ஒரு சந்தையை நேரில் கண்டேன்.இதுவரை நான் கண்டிராத காய்கறிகளையும்,பழங்களையும் அங்கு தான் கண்டேன்.காய்கறிகள் மிகவும் மலிவு விலையில் கிடைத்தமை ஆச்சரியம்.எனக்கு பழங்களில் மாதுளம் பழமும்,அன்ன முன்னா என்ற பழமும் மிகவும் பிடித்த பழங்கள்.யாழ்ப்பாணத்தில் ஒரு மாதுளம் பழம் குறைந்தது முன்னூறு ரூபா வரும்.ஆனால் இன்று ஐந்து ரூபாவில் கிடைக்கின்றது.நம்புங்கள் நண்பர்களே!

வழுதுணங்காய்,பிசிக்கங்காய்,சாத்தாவாரிசிறகவரை,செங்கிழங்கு,காராமணி,களாக்காய் போன்ற காய்கறிகளை கோயம்பேடு சந்தையில் முதன் முதலாக கண்டேன்.
அம்பிரலங்காய்,பஞ்சலிப்பழம்,சீமையிலுப்பை,கடார நாரந்தை, சாத்துக்கொடி, பேயத்தி, பம்பரமாசு,லன்சியம்,மண்டரின் நாரந்தை, மசுக்குட்டிப்பழம்,இளஞ்செம்புற்றுப் பழம் போன்ற பழங்களையும் கோயம்பேடு சந்தையில் தான் முதன் முதலாக கண்டேன்.இந்த சந்தையின் பிரதான வணிகம் காய்கறி என்ற போதும் பல வியாபாரமும் மும்முரமாக நடக்கின்றது.

முக்கியமான விடயத்தை கூற மறந்திட்டன்.ஓம்..அதுதான் மாலை வியாபாரம்.மாலை என்றவுடன் குழம்பிப் போய் விடாதீர்கள்.கிழக்குத் திசையில் உதிக்கின்ற சூரியன் மேற்குத் திசையில் மறைகிறது, இந்த மறைதல் நேரத்தை, மாலை எனலாம்.அல்லது மாலை என்னும் சிற்றிலக்கிய வகை.அல்லது முத்தாரத்தை முத்துமாலை என்பர்.அல்லது கழுத்தில் அணியக்கூடிய மலர்களால் ஆன தொகுப்பும், மாலை எனப்படும்.நான் கூறுவது கழுத்தில் அணியக்கூடிய மலர்களால் ஆன தொகுப்பையே கூறுகின்றேன்.
koyambedu_

தமிழர் வாழ்க்கையில் பூக்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் ஆழ்ந்த பரிசீலனைக்குரியது. பரந்துபட்ட நிலவெளியைப் பூக்களின் பெயரால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பூக்களின் பெயரால் அடை யாளப்படுத்திய பண்டைத் தமிழரின் ஆழ்மனத்தினுள் பூக்கள் தொன்மங்களாக உறைந்திருந்தன. குறிஞ்சிப் பாட்டில் கபிலர் 99 பூக்களைப் பற்றி விவரிப்பது வெறுமனே தகவல் அல்ல. பூக்கள் மீதான தமிழரின் காதல் என்றுதான் அதைக் கருத வேண்டும்.

தமிழரின் வாழ்க்கையில் மலர்கள் எல்லாக் காலகட்டங்களிலும் நடைபெறும் சிறப்பு நிகழ்வு களில் முதன்மையிடம் வகிக்கின்றன. குழந்தை பிறப்பு முதலாக இறப்பு வரை எல்லா நிலைகளிலும் பூக்கள் இல்லாமல் எதுவுமில்லை. தாயின் வயிற்றில் குழந்தை கருவானதும், ஏழாவது மாதம் நடை பெறும் வளைகாப்பு நிகழ்ச்சியில் பெண்ணின் தலையிலிருந்து தொங்கும் சடையைப் பூக்களால் அலங்கரிக்கப்படுகிறது. மேலும் அவளது கழுத்தில் மாலையை அணிவித்து, கைகளில் வளையல் அணி விக்கும் சடங்கு நடைபெறுகின்றது.

குழந்தை பிறந்து சில மாதங்களில் தலை முடியை மழிக்கும் சடங்கில், கழுத்தில் மலர் மாலை அணிவிப்பது முக்கியமான சடங்கு. ஒரு வயதுக் குழந்தையின் தலைமுடியைச் சின்னக் குடுமியாக்கி, அதில் பூச்சரத்தை வளையமாக வைத்தால்தான் சில தாய்மார்களுக்குத் திருப்தி. பெண் வயதுக்கு வந்தவுடன் செய்யப்படும் சடங்கு களில், தாய் மாமா அவளுக்கு மலர் மாலை சூடுகின்றார். அந்தச் சிறுமியின் தலைமுடியை நீளமான சவுரி முடியை இணைத்துப் பின்னி, அதில் தாழை மலரின் மடல்களை அழகாக வைத்துத் தைப்பதுடன், அந்த அலங்காரம் ஆள் உயரக் கண்ணாடியில் தெரியுமாறு நிழற்படம் எடுத்து வீட்டில் தொங்கவிடுவது எண்பதுகளில் கூட நிலவியது.

இளம்பெண் பருவமடைவதனைப் ‘பூப் படைதல்’ என்ற சொல்லால் குறிப்பது கிராமிய வழக்கு. பூப்புனித நீராட்டு விழா என்ற பெயரில் அழைப்பிதழ் அச்சடித்து, ஊரைக் கூட்டி விருந்து போட்டு விமரிசையாகக் கொண்டாடுவது மதுரைப் பக்கத்துக் கிராமங்களில் இன்றும் நடைபெறு கின்றது.

பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் ‘பூ வைத்தல்’ சடங்கு குறிப்பிடத்தக்கது. பெண் பிடித்துவிட்டது, அவளை விரைவில் மணமகளாக ஏற்றுக் கொள் கின்றோம் என்று உறுதியளிக்கும் வகையில் பையனின் தாயார், சகோதரிகள் அப்பெண்ணின் தலையில் பூவைச் சூடுவது, ஒருவகையில் ஆரவாரம் அற்றது. தங்கள் குடும்பத்திற்கு மணமகளாக வரவிருக்கும் இளம் பெண்ணின் தலையில் பூவைச் சூடுதல் மூலம் தங்களுடைய உரிமையை உறுதி செய்துகொள்வது இன்றும் வழக்கினிலுள்ளது.

திருமண நாளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மலர் மாலைகள் அணிவித்துக் கையில் பூச்செண்டுகள் தரப்படுகின்றன. மணமேடையில் உற்றார் உறவினர் முன்னிலையில், திருமணம் என்ற உறவு எங்களுக்குள் ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் மாப்பிள்ளையும் பெண்ணும் பரஸ்பரம் மாலைகளை மூன்று தடவைகள் மாற்றிக் கொள்கின்றனர். திருமண நாளில் மணப்பெண்ணுக்குத் தலைமுடி தெரியாத அளவுக்கு பூச்சரத்தைச் சூடுவதன் மூலம், அந்தப் பெண்ணின் மனதில் குதூகலத்தை ஏற்றுகின்றனர்.

தமிழகத்தில் குடும்பப் பெண் அல்லது சுமங்கலி எனப்படுபவளின் அடையாளமாக மஞ்சள், குங்குமம், வளையல் போன்றவற்றுள் பூக்களும் குறிக்கப் பெறுகின்றன. பெண் தலையில் பூவைச் சூடுவதற்கும் குடும்பப் பெண்ணுக்குமான உறவு ஆய்விற்குரியது. பண்டைக் காலத்தில் இளம் பெண்கள் பூச்சூடும் வழக்கம் இல்லாமல் இருந்திருக்கவேண்டும். ஏதோ ஒரு காலகட்டத்தில் திருமணமான பெண் எனக் குறிப்பதற்குப் பூவானது குறியீடாக மாற்றப்பட்டு இருக்கலாம். இன்று நெற்றியின் உச்சி வகிட்டினில் குங்குமத்தை இட்டுக் கொள்வது, பெங்காலி, கன்னடப் பெண்களிடமிருந்து 90களுக்குப் பின்னர் தான் தமிழகத்திற்குப் பரவியுள்ளது.

கோயம்பேடு சந்தையில் பல வகைப்பட்ட மாலை வகைகள் கிடைக்கின்றன.மாலை என்றவுடன் அதன் வகைகள் பற்றியும் ஒரு சிந்தனை வரும். அதிலும் திருமண மாலைகள் விசேடமானது.சாமந்திப்பூ திருமண மாலைகள்,மந்தாரைப்பூ திருமண மாலைகள்,சம்பங்கிப்பூ திருமண மாலைகள்,ரோஜா பூவிதழ் திருமண மாலைகள்,ரோஜாப்பூ திருமண மாலைகள் என்பன அவற்றில் விசேடமானவை.அது தவிர நடிகர்கள்,நடிகைகள் தங்கள் திருமணத்தில் பயன்படுத்திய மாலைகளும் இங்கு கிடைக்கின்றன.
சாமந்திப் பூச்சரங்களின் மாலை

koyambedu_

சென்னை சென்றால்,இப்படிப் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள கோயம்பேடு சந்தையை பார்க்க மறக்காதீர்கள்.

நான் பார்த்த சென்னை (காட்சி 8) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, சென்னை குறிச்சொற்கள்:

மரணத்தைக் கூட வென்று காட்டிய தாயின் அன்பு!….


ஒரு தாயின் அன்பு மரணத்தைக் கூட வெல்லும் ஆற்றல் படைத்தது என்பதை இந்தக் காணொளி மிகத் தெளிவாக காட்சிப் படுத்துகின்றது.கண்கலங்க வைக்கும் காணொளியை நீங்களும் ஒரு முறை பாருங்கள்.கண்டிப்பாக அழும் நீங்கள் இறுதியில் ஆனந்தக் கண்ணீர் சொரிவீர்கள்.

 

 

 

நான் பார்த்த சென்னை (காட்சி 7) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, குழந்தை

நான் தான் பிரபு


prabu

நீண்ட நாட்களாக பல பிரபுவின் வாசகர்கள் மின்னஞ்சல் மூலம் கேட்கும் ஒரே கேள்வி,ஏன் உங்களை வெளிப்படுத்தவில்லை என்பது தான்.நானும் அதில் ஆர்வம் காட்டாமல் இருந்தேன். ஆனாலும் என்னை வெளிப்படுத்தினால் தான் என்ன என்று ஒரு யோசனை.அது தான் இந்த வெளிப்படுத்தல் புகைப்படம்.

பிரிவுகள்:ALL POSTS, prabuwin

நான் பார்த்த சென்னை (காட்சி 6)


police
சென்னையில் என்னை மிகவும் கவர்ந்த விடயம் அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் சுதந்திரம்.நான் சென்னையின் பல இடங்களையும் சுற்றிப் பார்த்திருக்கிறேன். எங்கும் நான் ராணுவத்தை காணவேயில்லை.ஆங்காங்கே போக்குவரத்து காவல்துறையினரை மட்டுமே கண்டேன்.மிகவும் சுதந்திரமாக கருத்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பத்திரிகைகள் மிகவும் சுதந்திரமாக செயற்படுகின்றன.மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப் படுகின்றது.ஒரு மனிதனின் தேவைகளில் உணவு,உடை, உறையுள்,சுதந்திரம் என்பன மிக முக்கியமானவை. சென்னைக்கு வரும் எந்த யாழ்ப்பாணத் தமிழனும் அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கின்ற சுதந்திரத்தை இட்டு ஏக்கப் பெருமூச்சு விடவே செய்வான்.
chennai
ஆனால் பெண்கள் இங்கே சுதந்திரமாக இருக்கின்றார்கள் என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன்.நான் விருகம்பாக்கத்தில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றேன்.அங்கே பல சிறு வயதுடைய பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.அன்று ஞாயிற்றுக் கிழமை வேறு.
இரண்டு பெண்களுக்கு இடையில் இவ்வாறு உரையாடல் நடை பெறுகின்றது.

பெண்:அம்மாவுக்கு காய்ச்சல்.ஒருக்கா கதைக்க வேண்டும்.
பெண் :துரையிட்ட கேள்.
(அலைபேசி கூட இல்லாத ஏழைப் பெண்கள் இவர்கள்)
பெண்:அம்மா வேலை செய்யிற இடத்திற்கு ஒருக்கா பேசணும்(கதைக்கனும்)
முதலாளி:பொய் வேலையைப் பாரு.
பெண்:அம்மா காய்ச்சலிலும் வேலைக்குப் போயிருக்கு.ஒரு நிமிடம் பேசணும்.
முதலாளி;இந்தா பேசு.(அந்தப் பெண்ணின் கன்னத்தை முதலாளி கிள்ளுகிறார்.அந்தப் பெண் கதைத்துக் கொண்டு இருக்கும் போது கன்னத்தை எந்த வித தயக்கமும் இன்றி தடவுகிறார்.அந்தப் பெண் கையறு நிலையில் இருக்கிறார்.)

படபடப்புடன் கதைத்த(பேசிய) அந்தப் பெண் அலைபேசியை கொடுக்கிறார்.

ஏழைப் பெண்களின் நிலை இது தான்.இவ்வாறு எத்தனை பெண்களுக்கு நடக்கின்றதுவோ?! கடவுளுக்குத் தான் வெளிச்சம்.
police
இதைப் படித்துக்கொண்டிருக்கும் நீங்கள், நீங்கள் என்ன பூவா பறித்துக் கொண்டிருந்தீர்கள் என்று என்னைப் பார்த்து கேட்கலாம்.நான் கடுமையாக கோபம் அடைந்தேன். காவல்துறையிடம் முறையிடலாமா என்று எனது உறவினரிடம் கேட்டேன்.அந்தப் பெண் தனது வேலையை காப்பாற்றுவதற்காக, காவல்துறையிடம் அவ்வாறு நடக்க வில்லை என்று சொன்னால் என்ன செய்வாய் என்று கேட்டார்.அமைதியானேன்.
MTC-Bus-plying-in-Tambaram-to-Thiruvanmiyur-route-
பேரூந்துகளிலும் பெண்களின் நிலை அதோ கதி தான்.பெண்களிடம் தங்கள் கோழைத்தனத்தை காட்ட பலர் பேரூந்துகளையே பயன்படுத்துகிறார்கள்.அதுவும் இரவில் சென்னையில் பயணம் செய்வது என்றால் மிகவும் கடினம்.இரவில் மிக அதிகமான பயணிகள் பேரூந்துகளில் பயணிப்பதால் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.பேரூந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு உள்ள ஒரே ஆறுதல், இருக்கையில் ஒரு பெண்ணுக்கு அருகில் இருக்கை இருந்தாலும் ஒரு ஆண் அமர முடியாது என்பது தான்.
pleasure
ஒரு பெண் உந்துருளியில் சென்றால் அந்த பெண்ணை பின் தொடர்ந்து நான்கு உந்துருளிகளில் ஆண்கள் செல்கிறார்கள்.செல்வது மட்டுமில்லை கிண்டல் ,கேலி வேற.ஏன் ஒரு பெண் உந்துருளி ஓடக் கூடாதா.உண்மையை சொல்லப் போனால், உந்துருளியை பாதுகாப்பாக ஓட்டுபவர்கள் பெண்கள் என்று தான் சொல்ல வேண்டும்.


நான் பார்த்த சென்னை (காட்சி 7) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, சென்னை குறிச்சொற்கள்:

எனக்கொரு ஆசை


Man-and-Nature
சூரியன் போல்
இருக்க ஆசை
அவை நேரம் தவறி
நான் பார்த்ததில்லை
பிரபஞ்சம் போல்
விரிய ஆசை
எப்பொழுதுமே அவை
ஒரு வட்டத்திற்குள் சுருக்கியதில்லை
காற்று போல் இருக்க
ஆசை
தன்னால் தான் உயிரினம் வாழுகின்றதென்ற
ஆணவம் கொண்டதில்லை
மரங்கள் போல் துணிவாக
இருக்க ஆசை
கல்லெறி விழும் என்று பயந்து
காய்க்காமல் விட்டதில்லை
நாய் போல்
பிறக்க ஆசை
செய்ந்நன்றி என்றும்
மறந்ததில்லை
புறா போல்
இருக்க ஆசை
கோயில்,தேவாலயம் ,மசூதியில் வசித்து
எம்மதமும் சம்மதம் என்று வியப்பூட்டுபவை
மரணத்தை
வாழ்த்த ஆசை
நீதியின் முன் எல்லோரும் சமம்
என்று சொல்லுபவை.

 

—————————————————————————————————————————

நான் பார்த்த சென்னை (காட்சி 6) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, கவிதை குறிச்சொற்கள்:

சுத்தி சுத்தி போனேன்


நான் பார்த்த சென்னை (காட்சி 5)


T_NAGAR

தியாகராய நகர் அல்லது தி.நகர் என்பது சென்னையின் மிக முக்கியமான மற்றும் பெரிய பகுதி. இது ஒரு முக்கியமான வணிகப்பகுதி. நகரின் மையத்தில் அமைந்துள்ளது. திராவிட இயக்கத்தவரில் முக்கியமானவரும் நீதிக்கட்சியைத் ஆரம்பித்தவர்களில் ஒருவருமான சர் பி.தியாகராயாவின் நினைவாக இப்பெயர் இடப்பட்டதாக அங்குள்ளவர்கள் கூறினார்கள்.

பாண்டி பஜாரும், உஸ்மான் சாலையும், ரங்கநாதன் தெருவும் தான் தி.நகரின் மிக முக்கியமான வணிகமையங்கள். ஆடைகள், அணிவகைகள், விளையாட்டுப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் இங்கு மிகக்குறைந்த விலையில் கிடைக்கும். இப்பகுதியில், பல்வேறுவகைச் சேலைகள் உட்பட்ட ஆடைகள், தங்க, வைர நகைகள் முதலியவற்றுக்கான, பல மாடிகளைக் கொண்ட மிகப் பெரிய விற்பனை நிலையங்களுடன், நடைபாதைக் கடைகளும் போட்டி போட்டுக்கொண்டு செயற்படுவதைக் காணலாம். விடுமுறை நாட்களிலும், பொங்கல் போன்ற திருவிழாக் காலங்களிலும் இந்தப்பகுதியில் கூட்டம் நிரம்பி வழியும்.
திருமணம் முதலியவற்றுக்காக ஆடை அணிகள் வாங்குவதற்காகப் பலர் தொலை தூரங்களிலிருந்தும் இப் பகுதிக்கு வருகிறார்கள். இதனால் பல தங்கு விடுதிகளும், உணவு விடுதிகளும் இங்கே பெருமளவில் உள்ளன.தியாகராஜ நகரில் பல புத்தக வெளியீட்டு நிறுவனங்களும் உள்ளன.சரி, தி.நகர் பற்றிய அறிமுகத்தை தந்து விட்டேன்.சரி,நான் ஏன் தி.நகருக்கு வந்திருக்கிறேன் என்று கூறவில்லையே.ஓம்…ஓம்..நீங்கள் அனுமானிப்பது சரி.ஆடைகளை கொள்வனவு செய்யத் தான் வந்திருக்கின்றேன்.வளசரவாக்கத்தில் இருந்து அண்ணா பிரதான வீதி(சாலை) ஊடாக தி.நகரை 26 நிமிடத்தில் அடைய முடியும்.தூரம் 9.3 km.

T_NAGAR

எங்கே நல்ல துணி வகைகள் வாங்கலாம் என்று கேட்டால் தி.நகர் என்று சின்னப் பிள்ளையும் கையைக் காட்டிச் சொல்லுகின்றது.தி.நகர் சென்னையின் இதயம்.இந்தியாவின் மிகப் பிரபல்யம் வாய்ந்த ஆடையகங்கள் இங்கு தான் உள்ளது.போத்தீஸ் ,தி சென்னை சில்க்ஸ்,சரவணா ஸ்டோர்ஸ் போன்றவை அவற்றுள் சில.எல்லா ஆடையகங்களையும் ஒரு பார்வை பார்த்தேன்.நான் இப்பொழுது போத்தீஸ்க்கு முன்னால் நிற்கின்றேன்.இலங்கையில் HOUSE OF FASHIONS எவ்வாறு பிரமாண்டமானதோ அவ்வாறு தான் போத்தீஸ் உள்ளது.என்னடா முகப்பையே பார்த்துக் கொண்டிருக்கிறாய்,உள்ள போவன் என்று நீங்கள் சொல்லுவது எனக்கு கேட்கின்றது.

House-of-Fashion--Location-101-D.S.-Senanayake-Mw-Colombo-08

 

இவ்வளவு சனத்துக்கு நடுவில போறது பயங்கர கஷ்டமா இருக்கு.என்னடா கரைச்சலா போச்சு.இடமும் தெரியாது வலமும் தெரியாது.யாரிட்ட கேட்கலாம்.ம்..நேரா முகாமையாளரிடமே கேட்கலாம்.

வணக்கம் ஐயா!நான் இலங்கையில் இருந்து வந்திருக்கிறேன்.சில துணிவகைகள் கொள்வனவு செய்ய வேண்டும்.உதவி செய்வீர்களா.

முகாமையாளர்:இதோ,இப்ப கூப்பிடுறன் உதவியாளரை. முருகேசு..முருகேசு..
முருகேசு அரக்கப் பரக்க ஓடியாரார்.

இந்தா.இவர் நம்மட விருந்தாளி.இவருக்கு என்ன வேணுமோ எல்லாத்தையும் எடுத்துக் கொடு.

புடைவை, புடவை, அல்லது சேலை (அ) “‘சீலை'” (sari) என்பது, தெற்காசியப் பெண்கள் உடுத்தும் மரபுவழி ஆடையாகும்.

 

தமிழில் சேலை அல்லது புடவை என்றும், ஹிந்தி, குஜராத்தி, மராட்டி ஆகிய மொழிகளில் சாடி என்றும், கன்னடத்திலும், தெலுங்கிலும் முறையே சீரே, சீரா என்றும் அழைக்கப்படுகின்றது.

பொதுவாக இதன் நீளம் 4 – 5 யார் வரை இருக்கும். சில புடவைகள் 9 யார்கள் வரை இருப்பதுண்டு. பல நிறங்களிலும், பலவகையான வடிவுருக்களைத் தாங்கியும் வரும் புடவைகள், செவ்வக வடிவம் கொண்ட தைக்கப்படாத உடையாகும்.மடிப்புகளுடன் உடலை சுற்றியவாறு கிரேக்க பாணியில் உடுதபடுகிறது.பருத்தி நூல், பட்டு நூல், மற்றும் பலவிதமான செயற்கை இழைகளையும் கொண்டு நெய்யப்படுகின்ற புடவைகள், தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்களின் மெல்லிய இழைகளைப் பயன்படுத்தி அழகூட்டப்படுவதுண்டு.

கீழே உள்ள தளத்தில் மிகவும் மலிவாக புடவைகளை வெறும் 100 ரூபாவில் பெற முடிகின்றது.ஆனால் வேறு தளங்களில் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது.மிகத் தரமான வேலைப் பாடுகள் அதில் இருப்பது தெரிகின்றது.தேவையான ஆடைகளை கொள்வனவு செய்து கொண்டிருக்கின்றேன்.

pothys

சிறிது நேரத்தில் முருகேசு எனக்கு சீனிப் பொங்கலும்,தேநீரும் கொண்டு வந்து தருகின்றார்.நன்றி முருகேசு.கிட்டத்தட்ட 120 பேர் பணி புரிவதாக சொன்னார்.சம்பளம் 8000 ரூபா என்றும் சொன்னார்.உண்மைத் தகவல் சரியாகத் தெரியவில்லை.அவர் சொன்னதை நான் சொல்லுகிறேன்.இலங்கைத் தமிழ் மக்களை விசாரித்தார்.அதற்கும் நன்றி முருகேசு.

pothys

Pothys

No 15, Nageswara Rao Road, Opp. Doraiswami Subway, T Nagar, Chennai, Tamil Nadu 600017, India

http://pothys.com/

சென்னை வரும் எல்லோரும் ஒருமுறை செல்ல வேண்டிய ஆடையகம் போத்தீஸ்.

நான் பார்த்த சென்னை (காட்சி 6) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, உலகம் குறிச்சொற்கள்:

உலகையே அழ வைத்த இரண்டு வயது குழந்தையின் கண்ணீர்


“youtube” சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள காணொளி ஒன்று பார்ப்பவர்கள் எல்லோரையும் அழ வைத்துள்ளது. பெற்றோரின் திருமண பாடலை கேட்கும் போதெல்லாம் இரண்டு வயது இந்த குழந்தை அழத் தொடங்கி விடுகின்றதாம்.இந்த காணொளி குறித்து பல தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.இந்தக் குழந்தையின் தாய் ஒரு வருடத்திற்கு முன் இறந்து விட்டதாகவும்,அந்த குழந்தையின் தாய் பாடிய குரலை கேட்கும் போதெல்லாம் இந்த குழந்தை இவ்வாறு அழுவதாகவும் பல இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து பலரும் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருவதனால் உண்மை எதுவென்பதில் குழப்பம் நீடித்து வருகின்றது.உலகம் முழுவதும், இந்தக் குழந்தைக்காக அனுதாபக் குரல்கள் தொடர்ச்சியாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த காணொளியை இதுவரை 52 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

பிரபுவின் வேண்டுகோள்!

காரணம் எதுவாக இருப்பினும் ஒரு பிஞ்சு குழந்தையை அழ வைக்காதீர்கள்.தயவு செய்து உங்கள் மகிழ்ச்சிக்காக குழந்தைகளின் மன வளர்ச்சியை இளவயதில் கொன்று விடாதீர்கள்.எவ்வாறான உலகில் நாங்கள் வாழ்கிறோம் என்பதில் வெட்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.தொடர்புடைய செய்திகள்.

http://www.dailymail.co.uk/femail/article-2564835/A-hopeless-romantic-tender-age-two-The-adorable-moment-toddler-cries-hears-parents-wedding-song.html#comments

https://www.google.com/search?q=Baby+cries+at+parent%27s+wedding+song+&ie=utf-8&oe=utf-8#q=Baby+cries+at+parent%27s+wedding+song+who+lost+her+mother

பிரிவுகள்:ALL POSTS, காணொளி, குழந்தை குறிச்சொற்கள்:

கூகுள் எந்திர நாய் (ரோபோ நாய்)


தொழில்நுட்பங்களில் முன்னணியில் திகழும் கூகுள் நிறுவனம்,நான்கு கால்களில் மேடுபள்ளங்கள் நிறைந்த கடினமான பகுதிகளில் கூட நடந்து செல்லகூடிய திறன் படைத்ததாக  எந்திர நாயை (ரோபோ நாய்) உருவாக்கியுள்ளது.இந்த எந்திர நாயின் பெயர் எல்.எஸ் 3 . அதாவது லெக்ட் ஸ்குவாட் சப்போர்ட் சிஸ்டம்(Legged Squad Support System) என்பதன் சுருக்கம்.

வீரர்களின் ஆயுதங்களை தூக்கிச்செல்வது, மற்ற கனமான பொருட்களை சுமந்து செல்வது ஆகிய பணிகளை இதனால் செய்ய முடியும்.

போர்க்களம் மற்றும் மீட்பு பணிகளுக்கான இடங்களில் இந்த ரோபோ நாய் அச்சமின்றி நடந்து சென்று சொன்ன வேலையை செய்யும். மேலும் கீழே விழுந்தாலும் தானாக சமாளித்து நிற்கும் தன்மை கொண்டது.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வேலைப்பளு காரணமாக, நான் பார்த்த சென்னை (காட்சி 5) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

 

பிரிவுகள்:ALL POSTS, அறிவியல் குறிச்சொற்கள்:

நிலவை நேரில் பார்க்க ஆசை


moon

நிலவை நேரில் பார்க்க
ஆசைப்பட்டேன்!
கனவிலே பார்க்கலாம்
என்றார் அம்மா!
நீ கனவிலே
வந்தாய்!
ஆயிரம் நிலவுகளை
நேரில் கண்டேன்!

பிரிவுகள்:ALL POSTS, கவிதை குறிச்சொற்கள்:
%d bloggers like this: