தொகுப்பு
(இ)ரகசியம்
வாழும் வரை தெரியாத ரகசியம்
மரணித்த பின்பே தெரியும்!!
“உண்மையாகவே உன்னை
நேசித்தவர்கள் யார் ?”
My Instagram; yes_prabhu
My Dear Friends!!
Plz visit & follow my Instagram
Here my IG Name
yes_prabhu
Thank you
மீண்டும் பிரபுவின்
அனைத்து உடன் பிறப்புகளுக்கும் வணக்கம்..நான் மீண்டும் வலைப்பதிவில் எழுதப் போகிறேன். 😉
நான் பார்த்த சென்னை (காட்சி 18) விரைவில் வெளியாகும்.
iPhone 5Se மார்ச் 18 ஆம் திகதி சந்தைக்கு வருகிறது
!!!!! பொங்கலோ பொங்கல் !!!!!💐💐💐💐💐💐💐💐💐
!!!!! பொங்கலோ பொங்கல் !!!!!💐💐💐💐💐💐💐💐💐
கரும்பைப்போல் தித்திக்க,சர்க்கரை பொங்கலைப்போல் சுவையா இருக்க, வாழ்க்கையில் எல்லாச்செல்வங்கள் பெற்று வளமுடன் வாழ ஸ்ரீ அருள்மிகு நயினாதீவு நாகபூசணி அம்மன் அருளை வேண்டி வாழ்த்துகிறேன்.
✌🏻️yes_prabhu 🏃🏻
தற்கொலை செய்வது அவ்வளவு சுலபமா என்ன ???
தற்கொலை செய்யப் போறீங்களா.அப்ப இந்தப் பதிவப் பாருங்க. சந்தோசமா வாழுங்க.
நன்றி மகா அக்கா.
இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்
ஆத்திர அவசரத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் ஒன்று தான் இந்த தற்கொலை! அது என்ன தேங்காய் சட்னி செய்வது போல் அத்துணை சுலபமா?? தற்கொலை செய்ய முடிவெடுத்தவுடன் என்ன செய்யணும் என்று கூட சத்தியமாக எனக்கெல்லாம் தெரியாது! ஏதோ திரைப்படங்களை பார்க்க போய் , தூக்கு மாட்டி கொள்வது , தூக்க மாத்திரை சாப்பிடுறது , கையில் நரம்பை வெட்டி கொள்வது , மலை உச்சிக்கு சென்று குதிப்பது , நம் வாகனத்தை வேகமாக ஓட்டி சென்று எதிரே வரும் வாகனம் மீது மோத விடுவது, பூச்சி மருந்து , காலாவதியான மருந்து , பாத்ரூம் கிளீனர் , ஆசிட் ஆகியவற்றை குடிப்பது , நம்மை நாமே மண்ணென்னை ஊற்றி கொளுத்தி கொள்வது , ஆழமான நீர் நிலைகளில் சென்று விழுந்து உயிரை விடுவது போன்ற வழிகள் அரை குறையாய் தெரியும்! இப்படி அரைகுறையாக தெரிந்து கொள்வது தான் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு… வாழ்க்கையை வாழ வழி தெரியாதோர் , சாவை அடைய வழி தேடுகின்றனர்! இத்தகைய மன நிலையில் உள்ளவரிடம் போய் .. ஏ.. பிளீஸ் பா.. தற்கொலை எல்லாம் செய்யனும்னு நினைக்காத.. அப்படி இப்படின்னு அறிவுரை கொடுத்தால் எல்லாம் வேலைக்கு ஆகாது! வாழ்க்கையை வாழ பயந்தவர்களுக்கு சாவின் மீது பயத்தை குடுக்க வேண்டும் .. அத்தகைய விழிப்புணர்ச்சியை மக்கள் மனதில் உண்டாக்கவே இந்த மிரட்டல் பதிவு! வேறு எந்த நோக்கமும்…
View original post 1,377 more words
டெங்கு காய்ச்சல் வந்தால் சமாளிப்பது எப்படி
அருமையான இந்தப் பதிவை அனைவரும் படித்துப் பயன் பெறுக.நன்றி அக்கா.
இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்
டெங்கு காய்ச்சல் என்பது மிக மோசமான டெங்கு வைரசால் , கொசுவின் மூலமாக பரவக் கூடியது!இந்த காய்ச்சல் வந்தால் தோன்றும் முதல் அறிகுறிகள் , தலைவலி , கை , கால் மற்றும் உடம்பு வலி ,மற்றும் மிக கடுமையான காய்ச்சல்! இக் காய்ச்சல் வந்த சிலருக்கு , தோலில் ஆங்காங்கே, தட்டம்மை போது வரும் தடிப்புகள் போல தடிப்புகள் உண்டாகும். ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டு விட்டால் , மிக கொடூரமான , இரத்தபெருக்குடன் கூடிய டெங்கு காய்ச்சலாக மாறி ,உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடும்! முறையாக நோயாளிகளை , கவனிக்காத பட்சத்தில், இரத்தபெருக்கு உண்டாகும்! இரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை , மிக குறைந்து போகும்!
டெங்கு காய்ச்சலுக்கு இன்று வரை தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை! அதனால் , இக்காய்ச்சல் வந்தால் , மிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்! இது ஏடிஸ் என்ற பெயரால் அழைக்கப்படும் ஒரு வகை கொசுவால் பரவக்கூடியது! டெங்கு வராமல் தங்களை காத்து கொள்ள நினைப்பவர்கள் , கொசு தன்னை கடிக்காமல் பார்த்து கொள்ள வேண்டியது ரொம்பவே அவசியம்!
பொதுவாக , டெங்கு காய்ச்சலால் அவதி படுபவருக்கு , மருந்து என்று எதுவும் கிடையாது! மிதமான டெங்கு காய்ச்சலால் அவதிபடுபவருக்கு , வாய் வழியாக அல்லது நரம்பு வழியாக நீர்சத்து உடம்பின் உள்ளே ஏற்றப்படும்! அவ்வாறு நீர்ச்சத்து ஏற்றப்படுவதனால் , உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்! மிக கடுமையான டெங்குவால்…
View original post 1,204 more words
அண்மைய பின்னூட்டங்கள்