தொகுப்பு

Posts Tagged ‘இணையதளம்’

உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ள உதவும் இணையதளம்


பிரபலங்கள் மட்டும் தான் பேட்டி கொடுக்க வேண்டுமா என்ன, நீங்களும் தான் பேட்டி தரலாம் என்கிறது டைப்கேஸ்ட் இணையதளம்.

பேட்டி தர விருப்பம் தான் ஆனால் பேட்டிக்கான கேள்விகளை கேட்க யாராவது வேண்டாமா என்று கேட்டால் அதற்கான வழியையும் இந்த தளமே காட்டுகிறது. மிகவும் சுவாரஸ்யமான சேவை தான். எளிமையானதும் கூட.

யார் வேண்டுமானாலும் உங்களை பேட்டி காண வழி செய்யும் சேவை என்று பெருமை பட்டு கொள்லும் டைப்காஸ்ட் ஒருவர் தனது ரசிகராலோ நண்பர்களாலோ அல்லது வாசகர்களாலோ பேட்டி காணப்பட வழி செய்கிறது. அதிலும் எப்படி தெரியுமா நேரடி பேட்டிக்கு வழி செய்கிறது.

பேட்டிக்கு நான் தயார் என ஆர்வம் கொள்பவர்கள் இந்த தளத்தில் உறுப்பினராக வேண்டும். பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் சம்ர்பித்து உறுப்பினரான பின் பேட்டிக்கான பக்கம் அளிக்கப்படுகிறது.

அந்த பக்கத்தில் பேட்டிக்கான தலைப்பு மற்றும் விளக்கத்தை குறிப்பிட்டு பேட்டிக்கு ஆயுத்தமாகலாம். பேட்டி காணப்பட விரும்பும் நேரத்தையும் குறிப்பிடலாம்.(எப்போது வேண்டுமானாலும் நேரத்தை மாற்றிக் கொள்ளலாம்).

இதன் பிறகு உங்கள் வலைப்பதிவினிலோ அல்லது முகநூல்  பக்கத்திலோ  இந்த இணைப்பை சமர்பித்து நண்பர்களையும் வாசகர்களையும் கேள்வி கேட்க அழைக்கலாம். குறிப்பிட்ட நாள் அன்று அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். கேள்விகளை வாக்குகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் வசதியும் உள்ளது.

வலைபதிவாளர்கள், மாணவர்கள் என்று யார் வேண்டுமானாலும் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். ஒரு பயனுள்ள பதிவை எழுதிய பின் அந்த மைய பொருள் தொடர்பாக விவாதிக்க விரும்புகிறவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். பேட்டியை வலைப்பதிவிலும் இடம் பெறச்செய்யலாம்.

அதே போல குறிப்பிட்ட தலைப்பு குறித்து நண்பர்களோடு கருத்துக்களை பகிர இரும்பினாலும் இதனை பயன்படுத்தலாம். மாணவர்கள் ஆசிரியர்களோடு உரையாடவோ அல்லது ஆசிரியர்கள் மாணவர்களோடு உரையாடவோ இதனை பயன்படுத்தலாம்.

கேள்விகளுக்கு பதில் அளிக்க தயாராக இருக்கும் எவர் வேண்டுமாலும் இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். வலைப்பதிவுகளும், டிவிட்டர் போன்ற சாதனங்களும் கருத்துக்களை வெளியிடும் வாய்ப்பை எல்லோருக்கும் ஏற்படுத்தி தந்துள்ள நிலையில் டைப்கேஸ்ட் சேவை பதிவர்களும் பேஸ்புக் பயனாளிகளும் பேட்டி காணப்படும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

வலைப்பதிவில் பின்னூட்டம் மூலம் அல்லது முகநூலில் கருத்துக்கள் மூலம் உரையாடுவதை விட இப்படி பேட்டி வழியே கருத்துக்களை பகிர்ந்து கொள்வது சிறந்ததாக இருக்கும். இணையத்தின் ஆற்றலை பயன்படுத்தி கொள்ளும் புதுமையான முயற்சி. ஆனால் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்று தெரியவில்லை.

இணையதள முகவரி

http://gotypecast.com/

பிரிவுகள்:ALL POSTS, தொழில்நுட்பம் குறிச்சொற்கள்:

இலக்கை அடைய நினைப்பவர்களுக்கு உதவும் இணையதளம்


இன்று நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று தினந்தோறும் இந்த கேள்வியை தான் ஒரு இணையதளம் கேட்கிறது

அந்த கேள்விக்கு பொறுப்பாக நாள் தவறாமல் பதில் அளித்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையே மாறிவிட வாய்ப்பிருக்கிறது. நீங்கள் நினைத்ததை முடிப்பவராகலாம்.

இணையதளம் கேட்கும் கேள்விகெல்லாம் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்று ஆவேசபடவோ குழப்பமடையவோ வேண்டாம். காரணம் இந்த இணையதளம் உங்கள் நலனில் அக்கறை கொண்டு தான் கேள்வி கேட்கிறது. தவிர இந்த தளத்தின் நோக்கத்தை அறிந்து கொண்டால் நீங்களும் ஆர்வத்தோடு இந்த கேள்விக்கு பதில் அளிக்கவே விரும்புவீர்கள்.

திட்டமிடல் சேவையை வழங்கும் ஐ டன் திஸ் எனும் தளம் தான் “இன்று என்ன செய்தீர்கள்?” என்ற கேள்வியை உரிமையோடு கேட்கிறது. இதற்கு பதில் அளிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையை திறம்பட நிர்வகித்து கொள்ள முடியும் என்றும் சொல்கிறது. இந்த கருத்தை நீங்களும் ஏற்று கொள்வீர்கள்.

எப்படி என்றால் திட்டமிட்டு செய்லபடுவதில் உள்ள இயல்பான சிக்கலுக்கு இந்த தளம் அழகான எளிமையான தீர்வை முன்வைக்கிறது.

தினசரி வாழ்க்கையை திட்டமிட உதவும் இணைய சேவைகள் பல இருக்கின்றன. ஆனால் திட்டமிடல் என்பது பாதி கிணறு தாண்டுவது போல தான். திட்டமிட்டதை திட்டமிட்டபடியே செய்து முடித்தால் தான் வெற்றிப்படிகளில் ஏற முடியும்.

வரிசையாக செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டு அவற்றை செய்து முடிக்கும் உறுதியோ உக்கமோ இல்லாவிடில் எந்த பயனும் இல்லையே. இந்த இடத்தில் தான் அ டன் திஸ் இணையசேவை கைகொடுக்கிறது.

செய்ய நினைப்பவற்றை செய்து முடிக்க உதவுகிறது இந்த சேவை. அதிக அதிக்கம் செலுத்தாமல், அழுத்ததையும் ஏற்படுத்தாமல் எளிமையாக இதற்கு உதவுகிறது.

இந்த தளத்தில் உறுப்பினரானதுமே உங்களுக்காக ஒரு நாட்காட்டி பக்கத்தை உருவாக்கி தருகிறது. அந்த நாட்காட்டியில் நீங்கள் குறித்து வைக்க வேண்டியதில்லை. அந்த பொறுப்பை இந்த தளமே ஏற்று கொள்கிறது.

உறுப்பினரானவுடன் இன்று என்னவெல்லாம் செய்தீர்கள்? என்று கேள்வியோடு ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைக்கும். அன்றைய தினம் செய்ததை எல்லாம் நினைவுபடுத்தி பதில் அனுப்பி வைத்தீர்கள் என்றால் மறுநாள் உங்கள் சார்பாக நாட்காட்டியில் அந்த செயல்களை குறித்து வைக்கும்.

இப்படியாக தினமும் மின்னஞ்சலுக்கு பதில் அளித்தீர்கள் என்றால் நாட்காட்டியில் உங்கள் செயல்கள் பதிவாகி கொண்டே இருக்கும்.

ஒரு கட்டத்தில் திரும்பி பார்த்தீர்கள் என்றால் உங்கள் செய்லகளுக்காக டைரி போல இந்த நாட்காட்டி அமைந்திருக்கும். நீங்கள் செய்தது செய்யாதது எல்லாவற்றையும் இந்த நாட்காட்டியை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

நினைத்ததையெல்லாம் செய்து முடித்திருந்தால் இந்த நாட்காட்டி விவரங்களை பார்க்கும் போதே உற்சாகமாக இருக்கும். இல்லை என்றால் குற்ற உணர்வு வாட்டி எடுத்து முடிக்கி விடும். குறிப்பிட்ட இலக்கை அடைய நினைப்பவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும்.

http://www.idonethis.com

நன்றி: இணையம்.

 

பிரிவுகள்:ALL POSTS, தொழில்நுட்பம் குறிச்சொற்கள்:

ஆடுகள தகவல்களுக்காக ஒரு இணையதளம்


உலகில் எந்த விளையாட்டு நடந்தாலும் அது தொடர்பான  புள்ளிவிபரங்களை தரும் இணையதளம் ஒன்று உள்ளது.இதன் தள முகவரி www.livescore.com ஆகும்.

இங்கே சென்று உங்களுக்கு பிடித்தமான விளையாட்டுக்களின் புள்ளிவிபரங்களை உடனுக்குடன் அறிய முடியும்.

பிரிவுகள்:ALL POSTS, விளையாட்டு குறிச்சொற்கள்:

புகைப்படம் எடுக்க கற்றுக்கொடுக்கும் இணையதளம்


மின் இலக்க வடிவ முறை (டிஜிட்டல் ) புகைப்படக்கருவிகள் வந்த பின்னர் சிறுவர்கள் கூட இப்போது புகைப்படம் எடுக்கத் தொடங்கி விட்டனர்.எனவே இவர்களுக்குச் சிறந்த முறையில் புகைப்படம் எடுப்பது குறித்துக் கற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.சிறுவர்கள் மட்டுமின்றி, தொழில் ரீதியாக  இல்லாமல்  புகைப்படம் எடுக்கும் அனைவருக்கும் நல்ல வகையில் புகைப்படம் எடுப்பது குறித்த தகவல்கள் தேவைப்படுகின்றது.
இதற்கான தளம் ஒன்று இணையத்தில் உள்ளது.

இதன் முகவரி http://www.betterphoto.com
இந்த தளத்தில் நுழைந்தவுடன் மிக எளிய முறையில் நுணுக்கங்கள் தரப்படுவதனைக் காணலாம்.பல  வகையான புகைப்படங்களைக் காட்டியே, இளைஞர்களுக்கு புகைப்படம்எடுப்பது குறித்த தகவல்கள் மனதில் பதிய வைக்கப்படுகின்றன.குறிப்புகள், அதிகமாக தொழில்நுட்ப  ரீதியாக இல்லாமல், எளிமையாக இருப்பதுவும் இவற்றின் சிறப்பாகும்.

வேடிக்கையான புகைப்படங்களை எப்படி எடுப்பது என்று காட்டுவதன் மூலம் பார்ப்பவர்களின் ஆர்வம் தூண்டப்பட்டு, தகவல்கள் தரப்படுவது இந்த தளத்தின் இன்னொரு சிறப்பாகும்.கேள்வி பதில் பகுதியில் சாதாரணமாக ஒருவருக்கு ஏற்படும் சந்தேகங்கள் அனைத்தும் தெளிவாக்கப்படுகின்றன.

நீங்கள் புகைப்படம் எடுப்பது குறித்து அறிய விரும்பவில்லை என்றாலும், இதில் உள்ள ஆர்வம் ஊட்டும் தகவல் களுக்காகவும், சிறப்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்காகவும் இந்த தளத்தினை ஒருமுறை பார்வையிடுங்கள்.

பிரிவுகள்:ALL POSTS, தொழில்நுட்பம் குறிச்சொற்கள்:,
%d bloggers like this: