தொகுப்பு

Posts Tagged ‘இலங்கை’

இலங்கையில் தமிழ் தொலைக்காட்சிகள்


இலங்கையில்  தமிழ் தொலைக்காட்சிகள் பற்றிய ஒரு பார்வை

இலங்கையில் 5 தமிழ் தொலைக்காட்சிகள் இயங்குகின்றன.
இவற்றின்  பெயர்கள் பின்வருமாறு.

1.வசந்தம் தொலைக்காட்சி
2.சக்தி தொலைக்காட்சி
3.நேத்ரா தொலைக்காட்சி
4.வெற்றி தொலைக்காட்சி
5.தமிழ் ஒளி தொலைக்காட்சி

தமிழ் தொலைக்காட்சிகளை எடுத்துக்கொண்டால் அவற்றில் தற்போது முன்னிலை வகிப்பது வசந்தம் தொலைக்காட்சி ஆகும்.மிகவும் நல்ல நிகழ்ச்சிகளை வழங்கும் இவர்கள் அதிகளவான பார்வையாளர்களையும் கொண்டுள்ளார்கள்.வசந்தம் தொலைக்காட்சி செய்திகளில் நடுநிலைமை காட்டாமை ஏனோ?எனினும் சொந்தமாக நிகழ்சிகளை தயாரித்து வழங்கும் அழகும் புதுமையான நிகழ்ச்சிகளும் பார்ப்போரை கவரவே செய்கின்றன.

அடுத்து சக்தி தொலைக்காட்சியை குறிப்பிடலாம் .பிரமாண்டத்திற்கு பெயர் பெற்ற இவர்கள் தமிழ் மொழியைக் கொல்லவென்றே திட்டமிட்டிருக்கிறார்கள் போலத்தெரிகிறது.எவ்வாறு இந்தியாவில் சன் தொலைக்காட்சி தமிழை அழிக்கிறதோ அவ்வாறு தான் இலங்கையில் சக்தி தொலைக்காட்சியும்.எனினும் இலங்கையில் உள்ள சுமார் முப்பது சிங்களத் தொலைக்காட்சிகளோடு போட்டியிட்டு முன்னிலை வகிப்பது சாதாரண விடயமல்ல.
இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் சன் தொலைக்காட்சி,விஜய் தொலைக்காட்சி போன்றவற்றை மிஞ்சும் வகையில்    எந்தவகையிலும் சளைக்காமல் புதுமைகளை நிகழ்த்துவது சாதனைக்குரியது.
உதாரணமாக சூப்பர் ஸ்டார்ஸ் ,சூப்பர் சிங்கர்ஸ் . கிளாசிகல் டான்ஸ், கிராண்ட் மாஸ்டர்   என்பவற்றைக்குறிப்பிடலாம்.பாருங்கள் நண்பர்களே எங்காவது தமிழில் நிகழ்ச்சியின் பெயர் இருக்கின்றதா  என்று.
இவர்களின் ஒரே வருத்தம் என்ன தெரியுமா? யாழ்ப்பாணத் தமிழர்கள் இவர்களைப் புறக்கணித்தது தான்.தமிழை கொன்றால் யாழ்ப்பாணத் தமிழர்கள் விடுவார்களா என்ன!அடுத்ததாக தமிழ் ஒளி தொலைக்காட்சியை குறிப்பிடலாம்.சர்வதேசம் எங்கும் செய்மதி ஊடாக ஒளிபரப்புச் செய்கின்றார்கள்.யாழ்ப்பாணத்தமிழ் இவர்களின் நிகழ்ச்சிகளில் கொஞ்சி விளையாடும்.தென்னாபிரிக்காவில் அதிக பார்வையாளர்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.

வெற்றி ,நேத்ரா தொலைக்காட்சிகளும் குறிப்பிடத்தக்க அளவு சிறப்பான நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.

தமிழ் தொலைக்காட்சிகள் தமிழர்களால் நடத்தப்படுகின்றன. இவற்றின்  உரிமையாளர்கள் தமிழர்கள்.

இதேநேரம் பகுதி நேரத்தமிழ் தொலைக்காட்சிகள் சிலவும் இயங்குகின்றன.
1.மக்ஸ் தொலைக்காட்சி
2.ரி.என்.எல். தொலைக்காட்சி
3.ஸ்வர்ண வாகினி தொலைக்காட்சி
4.தொலைக்காட்சி

பகுதி நேரத்தமிழ் தொலைக்காட்சிகள் சிங்களத்தில் முதன்மை நிகழ்ச்சிகளை வழங்குவதால் தமிழ் நிகழ்ச்சிகள் குறைவாகவே ஒளிபரப்புச் செய்யப்படுகின்றன.பகுதி நேரத்தொலைக்காட்சிகள் சிங்களவர்களால் நடத்தப்படுகின்றது.இவற்றின்  உரிமையாளர்கள் சிங்களவர்கள்.

பிரிவுகள்:ALL POSTS, ஊடகம் குறிச்சொற்கள்:,

இலங்கை நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கவலை


obama

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையில் நடக்கும் மோதலில் அகப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலைமை குறித்து தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

இன்று வெள்ளை மாளிகையில் அவர் ஆற்றிய செய்தி ஊடகங்களுக்கான உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் தம்வசம் உள்ள ஆயுதங்களை களைந்து தாம் பிடித்து வைத்திருக்கும் பொதுமக்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ள ஒபாமா அவர்கள், அங்குள்ள மனித அவலத்துக்கு தீர்வுகாண இலங்கை அரசாங்கம் பல நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.

”விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை கைவிட்டு, தம்வசம் உள்ள மக்களை வெளியேறிச் செல்ல அனுமதிக்க வேண்டும். மக்களை பலவந்தமாக படைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதும் மற்றும் அவர்களை மனித கேடயமாக பயன்படுத்துவதும் மிகவும் கண்டிக்கத்தக்கவையாகும். இப்படியான நடவடிக்கைகள் அவற்றைச் செய்வோரை தனிமைப்படுத்த மாத்திரமே உதவும்.” என்றார் ஒபாமா.

அதேவேளை இந்த மனித அவலத்தை ஒழிக்க இலங்கை அரசாங்கமும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கிறார்.

முதலாவதாக பல நூற்றுக்கணக்கான உயிர்களையும், மருத்துவமனைகளையும் பலிகொண்ட கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை அரசாங்கம் நிறுத்த வேண்டும். மோதல் பகுதியில் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற தனது உறுதிமொழியை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும்.

இரண்டாவதாக, மோதல் பகுதியில் அகப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்களது உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்கு உதவக்கூடிய உதவிகளை வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் உதவிக்குழுக்களை உள்ளே செல்ல அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.

அத்துடன், மூன்றாவதாக இந்த மோதலில் இடம்பெயர்ந்துள்ள ஒரு இலட்சத்து தொண்ணூறாயிரம் மக்களுக்கு உதவுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையையும், செஞ்சிலுவைச் சங்கத்தையும் அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.” என்றார் அதிபர் ஒபாமா.

இலங்கை மக்கள் துயருறுகின்ற இந்த வேளையில், அவர்களுக்கு உதவுவதற்கு சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட அமெரிக்க தயாராக இருக்கிறது. நாம் இனிமேலும் தாமதிக்கலாம் என்று நான் கருதவில்லை. அங்கு மேலும் மனிதாபிமான அவலங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு நாம் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் வந்துள்ளது.” என்றார் ஒபாமா.

”இவற்றுக்கு எல்லாம் அப்பால், இலங்கை மக்கள் எல்லாரையும் அங்கீகரித்து, அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலான நிரந்தர சமாதனம் ஒன்று இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அதிகரிக்கின்ற மனித இழப்புகளும், மறுவாழ்வு முகாம்களில் போதுமான வசதிகள் இல்லாமையும், இலங்கையில் மக்கள் எதிர்பார்க்கின்ற அமைதியை பெறுவதை மேலும் கடினமாக்கவே உதவும்.” என்று கூறினார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

பிரிவுகள்:ALL POSTS, அரசியல், அவலம், உலகம், ஊடகம் குறிச்சொற்கள்:,

நோர்வே அரசு இலங்கையிடம் மன்னிப்புக் கோரியுள்ளது – நோர்வை நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிருந்து இலங்கை அரசாங்கம் நீக்கியது


norve-kodiy

இலங்கை சமாதான நடவடிக்கைகளில் அனுசரணை வழங்கி நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து சிறீலங்கா நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வமான கடிதத்தினை சிறீலங்காவுக்கான நோர்வேத் தூதுவரிடம் இன்று திங்கட்கிழமை கையளித்துள்ளது.
1. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள சிறீலங்காத் தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டமை2. நோர்வே ஒஸ்லோவில் அமைந்துள்ள தூதரகத்திற்கு பாதுகாப்பை வழங்குமாறு சிறீலங்காவினால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதும் அதனை நோர்வேயின் அரசாங்கம் அதனை அலட்சியப்படுத்தியமை

3. நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பன்னாட்டு உறவுச் செயலுரித்தாளர் செல்வராஜா பத்மநாதன் மற்றும் ஐக்கிய நாடுகளின் ஜக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஜோன் ஹொல்ம்ஸ் ஆகிய இருவரும் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தமை

ஆகிய உடனடிக் காரணங்களை முன் வைத்து நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து விலக்குவதாக அறிவித்துள்ளது.

சிறீலங்கா அரசாங்கம், தமிழீழ விதலைப் புலிகள், ஐ.நா மற்றும் ஏனைய நாடுகளுடனான தொடர்பாளராக நோர்வே செயற்பட்டு வந்துள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் இத் தீர்மானத்தினால் நோர்வே தனது ஏற்பாட்டாளர் நிலை, தொடர்பாளர் நிலை மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையிடம் மன்னிப்புக் கோரியுள்ளது

நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலுள்ள இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டதையிட்டு நோர்வே அரசு இலங்கையிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.

நோர்வே ஒஸ்லோவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் மக்கள் இலங்கைத் தூதரகத்தைத் தாக்கியிருப்பதையிட்டு நோர்வே அரசாங்கம் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

தூதரகத்துக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சர் ஜொனாஸ் கார் ஸ்டோறி தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

ஞாயிறுன்று தமிழ் போராட்டக்காரர்கள் இலங்கைத் தூதரகத்தினுள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் அங்குள்ள பொருட்களையும் ஜன்னல் கதவுகளையும் சேதப்படுத்தினர் என ஒஸ்லோ பொலிஸார் தெரிவித்தனர். எனினும் எவரும் கைது செய்யப்படவில்லை.

பிரிவுகள்:ALL POSTS, அரசியல், உலகம் குறிச்சொற்கள்:,

இலங்கை இனப்பிரச்சனையில் மத்திய அரசு


பிரிவுகள்:ALL POSTS, அரசியல், உலகம் குறிச்சொற்கள்:
%d bloggers like this: