தொகுப்பு

Posts Tagged ‘ஐஸ்வர்யாராய்’

அம்மா ஆகப்போகும் ஐஸ்வர்யாராய்


ஆம் நண்பர்களே! முன்னால் உலக அழகியும் நடிகையும் ஆன ஐஸ்வர்யாராய் அம்மா ஆகப்போகிறார்.இந்த தகவலை அமிதாப் பச்சன் நேற்று உறுதிப்படுத்தினார்.”நான் தாத்தா ஆகப் போகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன்.

இதுகுறித்து அமிதாப் தனது டிவிட்டர் இணையதள பக்கத்தில் எழுதுகையில், செய்தி, செய்தி, செய்தி! நான் தாத்தாவாகப் போகிறேன். ஐஸ்வர்யா ராய் தாய்மயடைந்துள்ளார். மிகவும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது என்று உற்சாகத்துடன் அமிதாப் கூறியுள்ளார்.

மேலும், இந்த செய்தியை வெளியிட்ட அரை மணி நேரத்திற்குள் வாழ்த்துகள் தெரிவித்து 3 ஆயிரத்துக்கம் மேற்பட்ட டிவிட்டர் செய்திகள் வந்து குவிந்து விட்டதாகவும், இந்த வாழ்த்துகள், ஆசிர்வாதங்களைப் பார்த்து தான் நெகிழ்ந்துள்ளதாகவும் அமிதாப் கூறியுள்ளார்.

உங்கள் நாட்டில் இவ்வளவு பிரச்சனை இருக்கும் போது இந்த தகவலுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்.இதை செய்தியாக நீங்களும் அறிந்து கொள்ளுங்கள் என்பதே என் பதில்.

பிரிவுகள்:ALL POSTS, குழந்தை, சினிமா குறிச்சொற்கள்:

ராவணா படப்பிடிப்பில் கேரவேன் பறிமுதல்


ravana

அபிஷேக் பச்சன், விக்ரம், ஐஸ்வர்யாராய் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வருகிறது ராவணா படம்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்துவருகிறது. ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன் மற்றும் விக்ரம் ஆகியோர் தங்குவதற்கு கேரவேன்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.இந்த கேரவேன்களுக்கு உரிய வரியை கட்டாமல் இயக்கி வருவதாக வட்டார போக்குவரத்து அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஒரு கேரவேன் வாகனத்தின் என்ஜின் எண் திருத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த வாகனத்தின் ஒரிஜினல் ஆவணங்களை சோதனை செய்த போது வாகனத்தின் என்ஜின் எண்ணுக்கும் ஆவணத்தில உள்ள எண்ணுக்கும் தொடர்பு இல்லாமல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கேரவேனை அதிகாரிகள் கேரவேனை எடுத்துச் சென்றுவிட்டனர்.கேரவேன்கள் இல்லாததால் ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  

செல்வாக்கு குறைந்து செல்லும் ஐஸ்வர்யாராய்


abh-ashகத்ரீனா,தீபிகா படுகோன் வரவால் ஐஸ்வர்யாராயின் செல்வாக்கு குறைவடைந்து செல்வதாக கூறப்படுகின்றது.முன்பு சினிமாவிலும் விளம்பர உலகிலும் அசைக்க முடியாத இடத்தில் இருந்த இவருடைய இடம் கத்ரீனா,தீபிகா படுகோன் ஆகியோரின் கைக்கு சென்றுள்ளது.இவரிடம் இருந்த விளம்பர நட்சத்திர அந்தஸ்து கத்ரீனாவிடம் வழங்கப்பட்டுள்ளது.இவருடைய சினிமா வாய்ப்புக்களும் குறைவடைந்துள்ளது. இவர் தற்பொழுது எந்திரன்,ராமாயணம் ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரிவுகள்:ALL POSTS, ஊடகம், சினிமா குறிச்சொற்கள்:
%d bloggers like this: