தொகுப்பு

Posts Tagged ‘ஒரே நாளில்’

திரைக்கு வந்த இலங்கைத் தமிழ்த் திரைப்படம் ‘ஒரே நாளில்’


பிரிலியன்ட் கிரியேஷன் நிறுவனத்தினால் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தயாரிக்கப்பட்டு வந்த “ஒரேநாளில்’ என்ற திரைப்படம்.
இந்தப் படம்  கடந்த 30 ம் திகதி முதல் நாட்டின் பல்வேறு திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டுள்ளது . இலங்கையின் கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகவே இது எல்லோராலும் பார்க்கப்படுகின்றது.
ஏனென்றால் இலங்கையின் தமிழ் சினிமா என்பது நம்நாட்டில் எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. நம்நாட்டிலும் தமிழ் சினிமா தயாரிக்கும் காலம் வராதா? என்ற ஏக்கம் இலங்கையின் ரசிகர்கள், கலைஞர்கள் மத்தியில் கேள்விக்குறியாகவே இருந்து வந்துள்ளது.

அந்த வகையில் சுமார் இருபது வருடங்களுக்கு பின் முழுக்க முழுக்க நூறு சதவீதம் இலங்கைக் கலைஞர்களை கொண்டே ஒரு பிரமாண்டமான திரைப்படத்தை எம்நாட்டிலும் தயாரிக்கமுடியும் என்று நிரூபித்துள்ளது பிரிலியன்ட் கிரியேஷன் நிறுவனம்.

அழகிய நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ள இத்திரைப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்றவற்றை புதுமுக இயக்குனராகிய நம் நாட்டை சேர்ந்த ஏ.ஆர்.எம்.றஸீம் மேற்கொண்டுள்ளார். இசையை சீ.சுதர்சனும் பாடல்களை இயக்குனர் றஸீம், உதவி இயக்குனர் ப.சிவகாந்தன், கவிஞர் ஆர்.உதயகுமார் ஆகியோர் எழுதியும் மெட்டமைத்துள்ளனர்.

இத்திரைப்படம் இலங்கையின் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு வரலாற்றுப் பதிவு என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் அண்மையில் “ஒரேநாளில்” திரைப்படமானது பத்திரிகையாளர்கள், கலைஞர்களுக்காக திரையரங்கில் காண்பிக்கப்பட்டது. திரைப்படத்தை பார்த்த அனைவரும் இலங்கையின் தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு திரைப்படம் வரவில்லை என்றும் தெரிவித்தனர்.

இத்திரைப்படம் இலங்கையின் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தளிக்கும் என்பதுடன் எமது நாட்டில் புதிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் திரைப்படம் மிகப்பெரும் வெற்றிபெறும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரிவுகள்:ALL POSTS, சினிமா குறிச்சொற்கள்:
%d bloggers like this: