தொகுப்பு
நான் சூர்யா மாதிரி இருந்தா…
பையன்: நான் உன்னைக் காதலிக்கிறேன்.
பெண்: நான் சூர்யா மாதிரி பையனத் தான் காதலிப்பன்.
பையன்: நான் சூர்யா மாதிரி இருந்தா உன்னை ஏன் காதலிக்கப் போறன்!!!!!!!!
இலங்கைத் தமிழ் மாணவர்களின் துயரத்தைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுத சூர்யா!
இலங்கையை விட்டு தமிழகத்தில் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தமிழ்நாடு ஏதிலி முகாமில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் மாணவ மாணவிகளுக்கு அகரம் அறக்கட்டளை உதவி புரிந்து வருகின்றது.
குறித்த மாணவர்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சியில் இலங்கைத் தமிழ் மாணவர்கள் தமது கஷ்டங்களை சொல்லும் போது அகரம் அறக்கட்டளை உரிமையாளர்களான சூர்யா மற்றும் சிவகுமார் உட்பட பலர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
********************************************************************************************
சூர்யாவுக்கு பொருத்தமில்லாத கதை
சமீபகாலமாக தொடர்ந்து வித்தியாசமான படங்களையும் சூப்பர் ஹிட் படங்களையும் கொடுத்து வந்த சூர்யாவுக்கு ‘ஆதவன்’ முந்தைய படங்களுக்கு ஒப்புமைப்படுத்திப் பார்க்கும் போது சற்றே உதறல் அடிக்கிறது.
‘கஜினி’, ‘வாரணம் ஆயிரம்’ படங்களைத் தொர்ந்து வித்தியாசமான கதை களங்களை சூர்யாவிடம் எதிர்பார்த்த போது ‘அயன்’ வந்தது. பழைய கதைதான் என்றாலும் வேகமான திரைக்கதையால் படம் ஹிட்டானது. ஆனால் ‘ஆதவன்’ முற்றிலும் எல்லாவற்றிலும் கோட்டை விட்டிருக்கிறது. ஏற்கனவே பல தடவைகள் தாறுமாறாக அரைக்கப்பட்ட கதை இப்போது ‘ஆதவன்’ என்ற பெயரில் வெளிவந்துள்ளது. படம் பார்க்க வந்த ரசிகர்களில் பலரும் ‘வெத்துப் படம் இது’ என்று சொல்கிற அளவுக்கு புலம்ப வைத்த இந்த படம் முழுக்க முழுக்க சூர்யாவுக்கு சம்பந்தமில்லாத கதையைக் கொண்டு உள்ளது. ஒருவேளை சூர்யா அறிமுகமான புதிதில் இந்தப் படம் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
தீபாவளிக்கு வருகிறான் ஆதவன்
அயன் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடித்து வரும் படம் ஆதவன்.
படத்துக்குப் படம் வித்தியாசமான வேடங்களில் நடிப்பதைத்தான் நான் விரும்புகிறேன் -சூர்யா
வாரணம் ஆயிரம் என்ற சின்ன சறுக்கலுக்குப் பின் வெளிவந்த அயன் படம் சூப்பர் டூப்பராகிவிட்டதில் ஏக சந்தோஷத்திலிருக்கிறார் சூர்யா. |
இந்தப் படம் வீடொக்கடே என்ற தலைப்பில் தெலுங்கிலும் வெளியாகிறது. சூர்யாவுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் படத்தை தாங்களே நேரடியாக வெளியிடுகிறார்கள் ஏவிஎம் நிறுவனத்தினர். அதுமட்டுமல்ல, தான் நல்ல படங்கள் என்று நம்புவதை இனி தெலுங்கிலும் சேர்த்தே ரிலீஸ் செய்யப் போகிறாராம் சூர்யா.
“படத்துக்குப் படம் வித்தியாசமான வேடங்களில் நடிப்பதைத்தான் நான் விரும்புகிறேன். திரும்பத் திரும்ப ஒரே மாதிரி கதைகளில் நடிப்பதை விரும்பவில்லை…” எனும் சூர்யாவுக்கு, இப்போது முன்பை விட அதிகமாக ரசிகர்கள் பெருகியிருக்கிறார்களாம். “ரசிகர்கள் என்னை உற்சாகப்படுத்துகிறார்கள். பதிலுக்கு அவர்களுக்கு நல்ல படங்கள் தர விரும்புகிறேன். எனக்கும் ரசிகர்களுக்கும் உள்ள தொடர்பு இவ்வளவுதான். வேறு எந்த நோக்கமும் எனக்கில்லை. எனக்குப் பெண் ரசிகைகள் முக்கியம். என்னை அவர்கள் வீட்டில் ஒருவனாக நினைக்கத் துவங்கியதால்தான் இத்தனை ஆதரவு கிடைத்துள்ளது. பெண்கள் ஆதரவு இல்லாவிட்டால் நிலைப்பது கஷ்டம்” என்கிறார் சூர்யா. |
அண்மைய பின்னூட்டங்கள்