தொகுப்பு

Posts Tagged ‘நண்பன்’

நண்பன் (சிறுகதை)“டேய் கதிர், ஏன் எதையோ இழந்த மாதிரி இருக்கிறாய்” “இல்லையடா அறிவு,நான் உதைபந்தாட்ட அணியில் சேரப்போகிறேன்.அதற்கு அம்மாவிடம் உதைபந்து வாங்க காசு கேட்டனான்.அம்மா வீட்டில கஷ்டம்,காசு இல்லை என்று சொல்லிட்டா.அதான் என்ன செய்வது என்றே தெரியவில்லை.”

டேய் கதிர், இதற்கெல்லாம் கவலைப்படாதே.உதைபந்து இல்லாம சேர முடியாதாடா.”இல்லை அறிவு, சேர விடமாட்டாங்கள் உதைபந்து அவசியம் தேவை.”

“அப்ப என்னடா செய்யப்போகிறாய் கதிர்” “டேய் அறிவு என்ன பண்ணுவது என்றே தெரியலைடா.என்னுடைய கனவே கலைந்து விட்டது.பிறந்தாலும் ஏழையாய் பிறக்கக்கூடாது அறிவு.”
சரி வா கதிர், நேரமாகிவிட்டது வீட்டுக்கு கிளம்புவோம்.சரி அறிவு,இன்னொரு நாளில் சந்திப்போம்.

(ஒரு வாரத்தின் பின்)

டேய் அறிவு, என்னடா உதைபந்தோட வாறாய்.புதுசா வாங்கினாயா?ஆமாம் கதிர்,இந்தா உனக்குத்தான் இதை வாங்கினான்.
டேய் அறிவு, என்னடா சொல்லுகிறாய்.
ஆமாம் கதிர், நீ உதைபந்தாட்ட அணியில் சேரவேண்டும்.உனது கனவு நிறைவேற வேண்டும்.அதுதான் உனக்காக வாங்கிக் கொண்டு வந்தனான்.

டேய் அறிவு,எங்காலயடா காசு உனக்கு?அதை விடு கதிர்,நீ போய் பாடசாலை அணியில் சேர்.டேய் அறிவு, நான் கேட்கிறேன் எங்கால உனக்கு காசு என்று?
இல்லை கதிர்,அம்மா என் பிறந்த நாளுக்கு உடுப்பு வாங்க காசு தந்தவா.அத வச்சுத்தான் உனக்கு உதைபந்து வாங்கித்தந்தனான்.

டேய் அறிவு, என்ன காரியம் பண்ணினாய்.எனக்காக நீ…அறிவு…எனக்கு அழுகை தாண்ட வருது.
டேய் கதிர்,அழுதது போதும் விடுடா.
டேய் அறிவு,நான் ஏழை இல்லையடா,எவன் ஒருவனுக்கு உன்னை மாதிரி நல்ல நண்பன் இல்லையோ!அவன் தான்டா ஏழை!

பிரிவுகள்:ALL POSTS, சிறுகதை குறிச்சொற்கள்:
%d bloggers like this: