தொகுப்பு

Posts Tagged ‘முரளிதரன்’

மனைவிக்காக விட்டுக் கொடுத்த முரளிதரன்


முரளி பற்றி உலாவி வரும் புரளியால் இலங்கை ரசிகர்கள் மத்தியில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.முரளிதரனின் மனைவி மதிமலர் இந்தியத் தமிழர் என்பது அனைவரும் அறிந்த சங்கதி. முரளி இறுதிப் போட்டியில் இலக்குகள் எதனையும் வீழ்த்த வில்லை என்பது தெரிந்ததே!இவர் இலக்குகள் எதனையும் வீழ்த்தாததற்கு காரணம், இவரின் மனைவி இந்தியர் என்பதால் முரளி மனைவிக்காக விட்டுக் கொடுத்தார் என்று வதந்திகள் பரவலாக உலாவி வருகின்றன.
இந்த புரளிகள் பற்றிய  விடயங்கள் இன்று வானொலிகளிலும் விவாதிக்கப்பட்டன.

அடப் பாவிங்களா இப்படியும் கூட யோசிப்பாங்களா?!

பிரிவுகள்:ALL POSTS, கிரிக்கெட், விளையாட்டு குறிச்சொற்கள்:,

இலங்கையின் துடுப்பாட்ட மைதானங்களிலிருந்து விடைபெற்றார் முரளிதரன்


நேற்று இலங்கையர்கள் அனைவருக்கும் சோகமும் மகிழ்ச்சியும் கலந்த நாள்.ஆம், தனது பந்து வீச்சால் உலகை கலக்கிய முரளிதரன் விடை பெற்றுக் கொண்ட நாள்.அனைவரின் கண்களும் ஒன்றாக அழுத அந்த தருணம் யாராலும் இலகுவில் மறக்கவே  முடியாது.

போரால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மக்களைத் தவிர அனைவரும் இந்தப் போட்டியை கண்டுகளிக்கத் தவற வில்லை.

இலங்கையின் துடுப்பாட்ட  மைதானங்களிலிருந்து இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முரளிதரன் நேற்று  விடைபெற்றுக் கொண்டார்.

உலகக் கிண்ண துடுப்பாட்ட  போட்டியுடன் துடுப்பாட்ட த்திலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளதாக முன்னதாகவே முரளிதரன் அறிவித்திருந்தார். அதன் காரணமாக  நேற்று அவர் விளையாடிய போட்டியே இலங்கை மண்ணில் அவர் விளையாடிய  கடைசிப் போட்டியாகும்.

எதிர்வரும் சித்திரை  இரண்டாம் திகதி மும்பையில்  நடைபெறும் உலகக் கிண்ண துடுப்பாட்டத்தின்  கடைசிப் போட்டிகளுடன் சர்வதேச  துடுப்பாட்ட அரங்கிலிருந்தும் முரளிதரன் முழுமையாக ஓய்வுபெற்று விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரிவுகள்:ALL POSTS, கிரிக்கெட், விளையாட்டு குறிச்சொற்கள்:

உலகக் கோப்பையுடன் ஓய்வு:முரளிதரன் திட்டம்


muralidharanடெஸ்ட் மற்றும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இரண்டிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்த இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 2011-உலகக் கோப்பை போட்டிகளை விளையாடி விட்டு ஓய்வு பெறலாம் என்று திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொழும்புவில் நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டியில் கௌதம் கம்பீர் விக்கெட்டை வீழ்த்தி முரளிதரன் 503-விக்கெட்டுகளைச் சாய்த்து வாசிம் அக்ரம் வைத்திருந்த உலக சாதனையை முறியடித்தார்.

“இது ஒரு மகத்தான் சாதனைதான்,கிரிக்கெட்டில் இது போன்ற சாதனையை நிகழ்த்திய மற்றொரு வீரர் தற்போது சச்சின் டெண்டுல்கர் மட்டுமே.இவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கான பேட்டிங் உலக சாதனையை தன் வசம் வைத்திருப்பவர்” என்றார் முரளி.

கிரிக்கெட் ஆட்டம் என்பது தன்னம்பிக்கை சார்ந்த விஷயம் என்று கூறிய முரளிதரன் தற்போது தோனி தலைமை இந்திய அணியிடம் அது நிறைய காணப்படுகிறது என்றார்.

இங்கிலாந்து அணியை 5-0 என்று வீழ்த்திய பிறகு இந்திய அணி வீரர்களின் தன்னம்பிக்கை தோனியின் தலைமையின் கீழ் சிறப்பாக இருந்து வருகிறது,இந்திய பேட்ஸ்மென்கள் தாங்கள் ஆட்டமிழந்துவிடுவோம் என்று பயப்படுவதில்லை.அவர்கள் எந்த வித ஸ்ட்ரோக்கை ஆடினாலும் நம்பிக்கையுடன் ஆடுகின்றனர்.

ஒரு வீரர் தன்னம்பிக்கையை இழக்கும்போது போராட்டம் துவங்குகிறது,தற்போது இந்திய அணியின் பேட்டிங் தன்னம்பிக்கையின் உச்சத்தில் உள்ளது.இதுபோன்ற மனோ நிலையில் செய்வதெல்லாம் சாதகாம முடிகிறது.இது கிரிக்கெட்டில் நடக்கக் கூடியதுதான்.

ஆஸ்ட்ரேலியா போல் இந்தியாவும் அடுத்த ஒரு 10-ஆண்டுகளுக்கு ஆதிக்கம் செலுத்தலாம்.ஆஸ்ட்ரேலியா தற்போது அதே வீரர்களுடன் தோல்விகளை சந்தித்து வருகிறது,காரணம் அவர்களது தன்னம்பிக்கை குறைந்து விட்டது.கிரிக்கெட் என்பது தன்னம்பிக்கைதான் என்று கூறுகிறார் முரளிதரன்.

பிரிவுகள்:ALL POSTS, கிரிக்கெட், விளையாட்டு குறிச்சொற்கள்:
%d bloggers like this: