தொகுப்பு

Posts Tagged ‘ராவணா’

ராவணா படப்பிடிப்பில் கேரவேன் பறிமுதல்


ravana

அபிஷேக் பச்சன், விக்ரம், ஐஸ்வர்யாராய் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வருகிறது ராவணா படம்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்துவருகிறது. ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன் மற்றும் விக்ரம் ஆகியோர் தங்குவதற்கு கேரவேன்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.இந்த கேரவேன்களுக்கு உரிய வரியை கட்டாமல் இயக்கி வருவதாக வட்டார போக்குவரத்து அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஒரு கேரவேன் வாகனத்தின் என்ஜின் எண் திருத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அந்த வாகனத்தின் ஒரிஜினல் ஆவணங்களை சோதனை செய்த போது வாகனத்தின் என்ஜின் எண்ணுக்கும் ஆவணத்தில உள்ள எண்ணுக்கும் தொடர்பு இல்லாமல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கேரவேனை அதிகாரிகள் கேரவேனை எடுத்துச் சென்றுவிட்டனர்.கேரவேன்கள் இல்லாததால் ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  
%d bloggers like this: