இல்லம் > prabuwin > ஆடு போச்சே!

ஆடு போச்சே!


goat

போன ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல அசைவ உணவகம் ஒன்றுக்கு சென்றேன்.என்ன சாப்பிடுவது என்று ஒரே யோசனை.சரி ஆடு சாப்பிட்டு நீண்ட நாளாகி விட்டது என்று ஆட்டுச் சாப்பாடு தாங்கோ என்று உணவு பரிமாறுபவரிடம் கேட்டேன்.
சாப்பாடு வந்ததும் சுவைத்து சாப்பிடத் தொடங்கினேன்.அந்த நேரம் பார்த்து ஒரு குடும்பம் சாப்பிட வந்தது.எனக்கு பக்கத்து மேசையில் அவர்கள் இருந்தார்கள்.அவர்களுடன் அவர்களுடைய 4 வயது மகனும் வந்திருந்தான். நண்டு,கனவாய்,கோழி,ஆடு என்று விதம் விதமான உணவுகளை அவர்கள் கேட்டிருந்தார்கள்.உணவுகள் அனைத்தும் வந்ததும் அந்த சின்னப் பொடியன் ஐயோ ஆடு பாவம்,ஆடு பாவம் என்றான்.

அப்ப அவன்ட அம்மா சாப்பிடச் சொல்லி கட்டாயப் படுத்தினா.ஆனால் அவன் ஆடு பாவம் ,ஆடு பாவம் நான் சாப்பிட மாட்டன் என்று சொல்லி அடம் பிடித்தான்.கடை முதலாளி வந்து ஆடு மட்டும் தான் பாவமா! கோழி பாவமில்லையா?என்று கேட்டார்.அவனோ ஆடு பாவம் என்று சொல்லி சாப்பிட மறுத்தான்.இறுதியாக ஆடு வேண்டாம் என்று அவனுடைய தந்தை அதை திருப்பிக் கொடுத்து விட்டார்.
சரி இனி என்ன ஆடு தானே பாவம்!மற்ற தெல்லாம் பாவமில்லை என்ற நினைப்பில் எல்லாவற்றையும் ஒரு பிடி பிடித்தான் அந்தப் பொடியன்.

எனக்கு சிரிப்பு ஒரு பக்கம்,நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.அவன் எதேச்சையாக எனது பக்கம் தலையைத் திருப்பினான்.ஆடு விட்ட சாபமோ என்னவோ,எனது சாப்பாடுக்கு அவன் வில்லன் ஆனான்.அவன் மீண்டும் ஆடு பாவம், ஆடு பாவம் என்று கத்தத் தொடங்கினான். பிறகென்ன எல்லோர் பார்வையும் என் மேல் விழுந்தது.அவனது தாய் எவ்வளவோ சமாதானப் படுத்திப் பார்த்தார்.அவன் அசைய வில்லை.முதலாளி தம்பி வேணுமென்றால் உங்களுக்கு ஆட்டை பொதி செய்து தரவா என்று கேட்டார்.எனக்கோ தர்மசங்கடமாகப் போயிற்று.
நான் திருப்தியாக சாப்பிட்டன் என்று முதலாளியிடம் (பொய்) சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு அகன்று விட்டேன்.

ஆடு போச்சே!

………………………………………………………………………………………………………………………………………..

………………………………………………………………………………………………………………………………………..

நான் பார்த்த சென்னை (காட்சி 8) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:prabuwin
  1. 10:57 முப இல் 2015/04/13

    ஹா ஹா ஹா .. என்ன கொடுமை பிரபு இது! கடைசியில் ஆடு பாவமோ இல்லையோ நீங்க தான் பாவம்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙂

    Liked by 1 person

    • 3:05 பிப இல் 2015/04/13

      உண்மைதான் மஹா மேடம்.அந்த சம்பவத்தை நினைக்கும் போது சிரிப்பு வருவதையும் தவிர்க்க முடியவில்லை.
      உங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி மேடம்.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி மஹா மேடம்.

      Liked by 1 person

  2. chollukireen
    3:18 பிப இல் 2015/04/14

    ஆட்டை அடிக்கடி பார்த்திருப்பானோ என்னவோ? ஸ்கூல் போகும் வயதுமில்லை. பாவம் புண்ணியம் புரியும் வயதுமில்லை. உங்கள் பணமும் பாவம்,அந்தப் பையனின் பாவம் என்ற வார்த்தைக்கு அர்த்தமும் பாவம்தான்.
    சிரித்து மகிழ எங்களுக்கு ஒரு பதிவு கிடைத்தது.. அழகான வர்ணனை.
    புத்தாண்டு வாழ்த்துகள் உங்கள் குடும்பத்தாருக்கும், உங்களுக்கும்.அன்புடன்

    Liked by 1 person

    • 1:23 பிப இல் 2015/04/15

      நன்றி அம்மா.இந்தப் பதிவு உங்களை மகிழ்ச்சிப் படுத்தியதில் எனக்கும் நிறையவே மகிழ்ச்சி.
      “ஆட்டை அடிக்கடி பார்த்திருப்பானோ என்னவோ?”
      அப்படித் தான் நானும் நினைக்கின்றேன்.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி சொல்லுகிறேன்.

      Like

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக