தொகுப்பு

Archive for the ‘அரசியல்’ Category

யார் முட்டாள்கள்?


இன்று முட்டாள்கள் தினம் என்பது அனைவருக்கும் தெரியும். இன்று பலரும் ஏமாற்றப்பட்டிருப்பார்கள். உண்மையில் முட்டாள்கள் என்பவர் யார்? தினமும் ஏமாற்றுபவரே உண்மையில் முட்டாள் ஆவார்.அப்படிப்பட்ட முட்டாள்கள் யார் என்று கீழே பார்க்கலாம்.

1. மக்களை ஏமாளிகள் என நினைத்து ஏமாற்றும் அரசியல்வாதிகள் முட்டாள்கள்.

2. மக்களை அடிமைகளாக நடத்தும் அரசாங்கம் முட்டாள்.

3. பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்கத் தெரியாத பெற்றோர் முட்டாள்.

4. ஆபத்தில் உதவாத நண்பன் முட்டாள்.

5. துன்பத்தில் இணையாத உறவினன் முட்டாள்.

6. நல்ல கல்வியை புகட்டாத ஆசான் முட்டாள்.

7. எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லும் சமூகம் முட்டாள்.

எனவே முட்டாள்கள் தினம் இவர்களுக்கு மட்டுமே உரித்தான தினம்.

பிரிவுகள்:ALL POSTS, அரசியல் குறிச்சொற்கள்:

சுவிஸ் உள்ளூராட்சி தேர்தலில் இலங்கைத் தமிழனுக்கு மாபெரும் வெற்றி!


சுவிற்சர்லாந்தின் லவுசான் மாநகர சபைத் தேர்தலில் அமோக வெற்றி ஈட்டிய இலங்கைத் தமிழர் தம்பிப்பிள்ளை நமசிவாயம் கடந்த செவ்வாய்க்கிழமை சம்பிரதாயபூர்வமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் அச்சுவேலியை சொந்த இடமாகக் கொண்டவர்.

அண்மையில் இடம்பெற்று முடிந்த தேர்தல் மூலம் இம்மாநகர சபைக்கு 100 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்களில் நமசிவாயம் 18 ஆவது இடத்தில் உள்ளார்.

வெற்றி பெற்ற அனைவரும் சத்தியப் பிரமாணம் செய்கின்றமைக்காக அரச மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டு மாநில ஆளுனர் சில்வியான் கிளையன் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

லவுசான் மாநகர சபை உறுப்பினராக நமசிவாயம் இரண்டாவது தடவையாக தெரிவாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் துணைப் பிரதமராக இலங்கைத் தமிழர்


இலங்கைத் தமிழர்கள் அரசியலில் பிரகாசிக்கும் காலமாக இந்தக் காலம் உள்ளது.
ஆம்,இந்த மாத தொடக்கத்தில் யாழ்ப்பாணம் அச்சுவேலியில் பிறந்த ராதிகா சிற்சபைஈசன் கனடா பாராளுமன்ற உறுப்பினரானார்.

கடந்த 13ம் திகதி தமிழக சட்டசபைத்  தேர்தலில் யாழ்ப்பாணத்தில் பிறந்த அருண்  பாண்டியன் சட்ட மன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

தற்போது (கடந்த 7ம் திகதி) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  தர்மன் சண்முகரத்தினம் துணை பிரதமராகியுள்ளார்.

இவை இலங்கைத் தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

   இனி தர்மன் சண்முகரத்தினம் பற்றி பார்ப்போம்.

1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது பாட்டனார் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தர்மனின் தந்தை கே. சண்முகரத்தினம் மருத்துவப் பேராசிரியராவார். ஆங்கிலோ-சீனக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் லண்டன் பொருளியக் கல்லூரியில் பொருளியலில் பட்டம் பெற்றார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுமாணிப் பட்டமும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொதுப்பணித் துறையில் முதுமாணிப் பட்டமும் பெற்றார்.

தர்மன் சப்பானிய-சீன வழக்கறிஞரான ஜேன் யுமிக்கோ இட்டோகி என்பவரைத் திருமணம் புரிந்தார்[3]. இவர்களுக்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்ணுமாக நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

துணைப் பிரதமராக தர்மன் சண்முகரத்தினம்

சிங்கப்பூரில் கடந்த 7ம் திகதி, நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
சிங்கப்பூரின் முதல் பிரதமரும், அந்நாட்டின் தந்தை என அழைக்கப்படும் லீ குவான் யூ, அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து அமைச்சரவையிலிருந்து விலகினார்.
இதே போல, மற்றொரு முன்னாள் பிரதமரான கோ சோக் டாங்கும் அமைச்சரவையிலிருந்து விலகினார். இதையடுத்து, 14 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை பிரதமர் லீ ஹிசின் லூங்ன் உருவாக்கியுள்ளார். லீ ஹிசின் லூங்ன், முன்னாள் பிரதமர் குவான் யூவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 14 பேரில், ஏழு பேர் புதிய முகங்கள். தமிழரான கே.சண்முகம் சட்டத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது இவருக்கு மேலதிகமாக வெளிவிவகார அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரான தர்மன் சண்முகரத்தினம் துணை பிரதமராகியுள்ளார். இவர், நிதி மற்றும் மனித சக்தித் துறைகளை கவனிக்க உள்ளார்.

     இலங்கைத் தமிழர்களைப் பற்றி தர்மன் சண்முகரத்தினம்

இலங்கைத் தமிழர்களைப் பற்றி தர்மன் சண்முகரத்தினம் அடிக்கடி குறிப்பிடுவார்.தான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன் என்பதில் மிகவும் பெருமை கொள்வதாகவும், ஆனால் எனது மக்களின் நிலை என்னை கண் கலங்க வைப்பதாகவும் கூறுவார்.யாழ்ப்பாண மக்கள் படிப்பில் மிகவும் உயர்ந்தவர்கள் எனவும் அதனாலேயே தன்னால் படிப்பில் பிரகாசிக்க முடிந்ததாகவும் கூறுவார்.
இறுதியாக 2004ம் ஆண்டு ஆழிப்பேரலை  தாக்கிய போது இலங்கை வந்திருந்தார்.

எப்போது வெள்ளைமாளிகைக்குள் போனார்கள் எப்போது வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறினார்கள்


அமெரிக்க ஜனாதிபதிகளும் அவர்களின் மனைவிமாரும் வெள்ளைமாளிகைக்குள் போன போது இருந்த தோற்றத்தையும், வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறியபோது இருந்த தோற்றத்தையும்  இந்த நிழல்படங்கள் காட்டுகின்றன.

இன்று சர்வதேச அகதிகள் தினம்


இன்று 20 ம் திகதி சர்வதேச அகதிகள் தினம் நினைவு கூறப்படுகின்றது. அகதிகளின் மறுபெயர் இலங்கைத்தமிழர்கள் என்றால் அது தவறில்லை.

உலகின் 54 நாடுகளில் இலங்கைத்தமிழர்கள்அகதிகளாக வாழ்கின்றார்கள்.உலகின் அதிக நாடுகளில் அகதிகளாக வாழும் ஒரே இனம் இலங்கைத்தமிழர்கள் என்று ஐ.நா வின் சேவை அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது.

தற்போது கூட இலங்கைத்தமிழர்கள் முல்வேளிகளுக்குள் வாழ்ந்து வருகின்றார்கள்.அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

பிரிவுகள்:ALL POSTS, அரசியல், உலகம் குறிச்சொற்கள்:

கனடா தேர்தலில் இலங்கைத்தமிழர் போட்டி!


கனடாவில் வரும் ஐப்பசி  மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் சான் தயாபரன் என்னும் இலங்கைத்தமிழர் போட்டியிடுகிறார்.இதற்கான அறிவிப்பை கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ரிம் கியூடாக் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.ஒன்ராரியோ மாநிலத்தில் உள்ள மாக்கம் யூனியன்வில் தொகுதியில் தயாபரன் போட்டியிடுகிறார்.

மார்க்கம் தொகுதியில் மட்டும் 3 லட்சம் இலங்கைத்தமிழர்கள் வசிக்கின்றனர்.இவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ளதாக கனேடியத்தொலைக்காட்சிகள் அறிவித்துள்ளன.
வாழ்த்துக்கள் தயாபரன்.

பிரிவுகள்:ALL POSTS, அரசியல், உலகம்

அமெரிக்காவின் சிறந்த அதிபர் : ஒபாமாவுக்கு 15 ஆவது இடம்


அமெரிக்காவின் சிறந்த அதிபர் பட்டியலில் பராக் ஒபாமா 15 ஆவது இடத்தில் உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட இது தொடர்பான கருத்துக்கணிப்பில், ஒபாமாவுக்கு முன்பு அதிபராக பதவி வகித்த ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்கு 39 ஆவது இடம் அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 43 பேர் கொண்ட அமெரிக்க அதிபர்கள் பட்டியலில் ரொனால்டு ரீகனைவிட 3 இடங்கள் முன்னணியில் உள்ளார் ஒபாமா.ரீகனுக்கு 18 ஆவது இடமே அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவுகள்:ALL POSTS, அரசியல், உலகம்

டேவிட் கேமரூன் தனது குடும்பத்தினருடன்


விஜய்யுடன் மல்லுகட்டும் தனுஷ் -காய் நகர்த்தும் ரஜினி?


vijay_dhanush 

காங்கிரசில் சேரப்போகிறார் விஜய். இதுதான் தமிழ்நாட்டை பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கும் செய்தி. வேட்டைக்காரன் ரிலீசுக்கு முன்பே இந்த வைபவம் நடந்து விடும் போலிருக்கிறது.
அதற்கு கட்டியம் கூறுவது போல அமைந்திருக்கிறது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் பதில். விஜய் காங்கிரசில் சேரப் போவதாக கூறப்படுகிறதே? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு “அவர் வந்தால் எங்களுக்கு பெரிய சந்தோஷம்” என்று பதிலளித்திருக்கிறார் அவர். சில தினங்களுக்கு முன் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தாராம் விஜய். இதை தொடர்ந்துதான் தீப்பிடித்திருக்கிறது காங்கிரஸ் வட்டாரங்களில்.
விஜய் ரசிகர்களை குறி வைத்திருக்கும் இளைஞர் காங்கிரஸ் அப்படியே ரஜினி ரசிகர்களுக்கும் வலை வீசி வருகிறது. இந்த லட்சணத்தில் விஜயின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட மறைமுகமாக முயல்கிறார் ரஜினி என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். அழகிய தமிழ் மகன் ரிலீஸ் நேரத்தில்தான் பொல்லாதவன் வந்தது. பொல்லாதவன் ஹிட். அ.த.ம தோல்வி.வில்லு ரிலீஸ் நேரத்தில்தான் படிக்காதவன் வந்தது. தனுஷ் படம் ஹிட். விஜய் படம் தோல்வி. இந்த நிலையில் வேட்டைக்காரன் ரிலீஸ் நேரத்தில் தனுஷின் குட்டி வெளியிடப்படலாம். மறைமுகமாக நகர்த்தப்படும் இந்த காய்கள் ஒவ்வொன்றும் ரஜினியால் நகர்த்தப்படுகிறது என்பதுதான் கோடம்பாக்கத்தில் உலா வரும் பரபரப்பு செய்தி. அப்படியென்றால் மாப்பிள்ளை எப்போது வருமாம்? சந்தேகமே வேண்டாம். அந்த நேரத்தில் தனுஷின் மாப்பிள்ளை வரும் என்கிறார்கள் இந்த செய்தியை கிளப்பிவிடுகிற புண்ணியவான்கள்.

சிம்பு-தனுஷ் போட்டி என்று வெளியில் பேசப்படுவதை விட, தனுஷ் விஜய் போட்டி என்று பேசப்படுவதைதான் விரும்புகிறாராம் மாமனார். அதனால்தான் இந்த ராஜதந்திரம் என்று கூறப்படுகிறது. போகிற வேகத்தில், விஜய் காங்சிரசில் சேர்ந்தால் தனுஷ் பி.ஜே.பி யில் சேருவார் என்று புரளியை கிளப்பி விட்றாதீங்க சாமீகளா…

பிரிவுகள்:ALL POSTS, அரசியல், சினிமா குறிச்சொற்கள்:,

எந்திரனுக்கு பிறகு ரஜினிகா‌ந்‌த் அரசியல் பிரவேசம்


sivaji-rajinikanth

”ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து ‘எந்திரன்’ படத்துக்குப் பிறகு முடிவெடுக்கப்படும்” என அவரது சகோதர‌ர் சத்யநாராயண ராவ் கூ‌றினா‌ர்.

திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூரில் உள்ள பாப்பாத்தியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடிப் பெருக்கு விழாவில் அன்னதானம் வழங்க வந்த அவர் கூறுகை‌யி‌ல், எங்கேயோ பிறந்து, தமிழகம் வந்து அனைவரின் மனதிலும் ரஜினி நீங்காத இடம் பிடித்துவிட்டார்.

மக்கள் விரும்பினால் அவர் அரசியலுக்கு வருவார். இது குறித்து ‘எந்திரன்’ படம் வெளிவந்த பிறகு விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும்.

தற்போது கிருஷ்ணகிரி அருகே நாச்சியார்குப்பத்தில் எங்கள் தாய், தந்தை நினைவாக திருமண மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. ‘எந்திரன்’ படம் வெளிவந்த பிறகு மணி மண்டபம் கட்ட இருக்கிறோம் என்று ச‌த்யநாராயணரா‌வ் கூ‌றினா‌ர்.

பிரிவுகள்:ALL POSTS, அரசியல், சினிமா குறிச்சொற்கள்: