தொகுப்பு

Archive for the ‘படைப்புக்கள்’ Category

பாரிய வெற்றி பெற்றுள்ள “யாழ்ப்பாண கொலைவெறி’


தாத்தா முதல் டாடா வரை ‘கொலவெறி’க்கு அடிமையாக ஆகிவிட்டார்கள். தமிழ்நாட்டு தனுஷ் கொடி இன்று இந்தி வரை பறக்கக் காரணமும் இந்தக் ‘கொலவெறி’ தான்!

இதேபாடலை எம்.ஜி.ஆர். பாடினால் எப்படி இருக்கும் … சிவாஜி உச்சரித்தால் எப்படி இருக்கும் என்று உடான்ஸ் பாட்டுக்கள்  இணையத்தில் உலவும் வேளையில், யாழ்ப்பாணத்தில் இருந்து அழகுத் தமிழ் ‘கொலைவெறிப் பாடல்’ ஒன்று வந்திருக்கிறது. தமிழ் உணர்வாளர்களும் புலம்பெயர் ஈழத் தமிழர்களும் இந்தப் பாடலால் உச்சி குளிர்ந்து கிடக்கிறார்கள்.

‘என் தமிழ் மொழி மேல் உனக்கேன் இந்தக் கொலைவெறிடா’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் வரிகளே, சூட்டைக் கிளப்புகின்றன. இந்தப் பாடல் இணையதளத்தில் வெளியான மூன்று நாட்களுக்குள் 2.24 லட்சம் பேர் கேட்டு ரசித்திருக்​கிறார்கள்.

4.26 நிமிடங்கள் ஓடுகிறது இந்த வீடியோ பாடல். போர் முடிந்த ஈழத்தில், நொந்துகிடக்கும் தமிழ் மக்களின் நெஞ்சைத் தொடும் பாடலாக இது அமைந்திருக்கிறது. யாழ் நகரத்தின் வரவேற்பு வளைவு, நல்லூர் முருகன் கோயில், மரியாள் பேராலயம், யாழ்ப்பாணத்தின் மையத்தில் உள்ள தமிழ்ப் பெரியவர்களின் சிலைகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தி, தாய் மண்ணைத் தரிசிக்க முடியாத புலம்பெயர் தமிழர்களைப் பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது.

யாழ் நகரைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் இந்தப் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பாடலை இயற்றி, பாடி, இசையமைத்த எஸ்.ஜெ.ஸ்டாலினுக்கு, உலக அளவில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. எஸ்.ஜெ.ஸ்டாலினிடம் பேசினோம்.

பாடல்…

”இசையில் எனக்கு ஆர்வம் அதிகம். வீட்டிலேயே  ஸ்டுடியோ வைத்து, குறும்படங்கள், நாடகங்கள், வானொலி நிகழ்வுகளுக்காக நண்பர்களுடன் சேர்ந்து இசை அமைக்கிறோம். ‘தனுஷ்’ பாடல் மெட்டில், பலரும் பலவிதமாக பாடல்களை உருவாக்கி இணைய தளங்களில் வெளியிட்டதைப் பார்த்தோம். என்னுடைய நீண்டகால ஆதங்கத்தை கலந்து நாங்களும் ஒரு பாடல் செய்தோம். இந்தப் பாடல் காட்சிக்கான ஒளிப்பதிவு, படத்தொகுப்புகளை என் நண்பர்கள் வர்ணன், அமலன் ஆகியோர் செய்தார்கள். ‘கொலவெறி – யாழ்ப்பாணம் வெர்ஷன்’ என்று பெயரிட்டு, ஈழத்தமிழர் பார்வையிடும் சமூக இணையதளங்களில் பரீட்சார்த்த முயற்சியாக வெளியிட்டோம். நீண்டகாலமாகவே தமிழ்க் கலைப் படைப்புகளில் தமிழ்மொழிக் கொலையும் வேற்றுமொழிக் கலப்பும் நீடிப்பது கண்டு மனதில் பெரும் ஆதங்கம் இருந்துவந்தது. வேற்றுமொழிக் கலப்புடன் வரும் பாடல்களுக்கு மட்டுமில்லாமல் தனித் தமிழில் மட்டுமே இயற்றப்படும் பாடல்களுக்கும் மக்கள் வரவேற்பு அளிப்பார்கள் என்பதை இந்தப் பாடலுக்குக் கிடைத்த  அமோக வரவேற்பின் மூலம் அறியமுடிகிறது” என்றார்.

தமிழுக்கு மரியாதை!

– ஜூனியர் விகடன்-

தமிழ்நாட்டில் உள்ள நாளிதழ்கள் ,சஞ்சிகைகள்,இணையதளங்கள் அனைத்தும் இப்பாடலை பாராட்டி எழுதியுள்ளன.இலங்கையின் அனைத்து தொலைக்காட்சி,வானொலிகளிலும் இப்பாடல் ஓயாது ஒளி,ஒலி பரப்பாகிக் கொண்டிருக்கின்றன.புலம் பெயர் நாடுகளும் இப்பாடல் பட்டயக் கிளப்பிக் கொண்டு இருக்கின்றது.

தொடர்புடைய சுட்டிகள் :

http://news.vikatan.com/index.php?nid=5972

http://www.vikatan.com/article.php?aid=14784&sid=415&mid=2&

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%22%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%27&artid=535458&SectionID=131&MainSectionID=131&SectionName=World&SEO=

தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள “என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா” இவ் இசைக் காணொளியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நகரின் தோற்றத்தினை காண்பிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் யாழில் முதன் முதலாக அதி உயர் வடிவத்தில் (1080p HD)தயாரிக்கப்பட்டுள்ளது.

கொலவெறிப்பாடலின் வரிகளை முற்றிலுமாக மாற்றியமைத்து இசைக்கு மேலும் மெருகூட்டிய பாடலின் பரிணாமம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இளம் இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஸ்ரலின் அவர்கள் பாடல் வரிகளை எழுதி, பாடலையும்  பாடியுள்ளார். அண்மையில் இவர் இசையமைத்த ‘தண்ணீர்’ குறும்படம் 2011ற்கான  சிறந்த குறும்பட இசை விருதை வெண்றமை குறிப்பித்தக்கது.

இப்பாடல் காணொளியை ‘யாழ் மியூசிக்’ நிறுவனம் தயாரித்துள்ளதுடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட இவ் இசை நிறுவனம் தொடர்ந்தும் எம்மவர் படைப்புக்களையும், கலைஞர்களையும் அடையாளப்படுத்தும் படைப்புக்களை தாயாரித்து வருகின்றது.

படைப்பாற்றல் விளம்பரங்கள்


இங்கிலாந்தில் சாதனை புரிந்த இலங்கைத் தமிழர்


 

யாழ். சாவகச்சேரியைச் சேர்ந்த டாக்டர் சிதம்பரநாதன் சபேசன், The Real Time Location System என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்திய ஈழத்தமிழர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த சாதனைக்காக UK ICT Pioneers விருது, Royal Academy of Engineering ERA Foundation Entrepreneurship ஆகிய இரு உயரிய விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவரது கண்டுபிடிப்பான radio real time tagging system, பல வர்த்தக ஸ்தாபனங்களுக்கும் எயர் லைன்ஸ் நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கான வருமானங்களை ஈட்டக்கூடிய வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.

இவரது கண்டுபிடிப்பான intelligent wirless passive sensor technology system விமான நிலையங்களில் பாதுகாப்பு சேவைகளுக்கு மிகவும் உபயோகமாக அமைந்துள்ளது.

இதன் மூலம் விமான நிலையத்தில் பயணிகளையும் பயணிகளின் உடைமைகளையும் தெளிவாக இனங்காட்டக்கூடியது.

சிதம்பரநாதன் சபேசன் யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவராவார்.

தொடர்புடைய செய்திகள்.

 

ஹொலிவூட்டுக்குள் காலடி எடுத்து வைத்த இலங்கைத் தமிழர்!


இலங்கைத் தமிழரும், படத் தயாரிப்பாளரான சந்திரன் இரத்தினம், புலிகளினால் கொழும்பு நகரம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவது போன்ற ஹொலிவூட் திரைப்படமொன்றை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் பெயர் ஏ கொமன் மான்.

ஒஸ்கார் விருது பெற்ற ஹொலிவூட் நடிகர் சேர் வென் கிங்ஸ்லி நடித்திருந்த பாத்திரம் ஒன்றை சார்ந்ததாக திரைக்கதை நகர்கின்றது. இப்படம் இலங்கை மற்றும் ஹொலிவூட் கூட்டுத் தயாரிப்பாக உருவாகி உள்ளது.

படத்தின் திரைக் கதை, இயக்கம் ஆகியவற்றை இலங்கைத் தமிழரான சந்திரன் இரத்தினம் மேற்கொண்டு உள்ளார். ஹொலிவூட் படம் ஒன்றை முதன் முதல் இயக்கி இருக்கின்ற இலங்கையர் என்கிற பெருமையை இப்படத்தின் மூலம் இவர் பெறுகின்றார். 27 நாட்களில் படப் பிடிப்பு பூர்த்தியாகி உள்ளது.

இவரது இயக்கம் மற்றும் இவரது திறமையை ஹொலிவூட் நடிகர் சேர் வென் கிங்ஸ்லி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அத்துடன் ஹொலிவூட் படம் ஒன்றை முதன் முதல் இயக்கி இருக்கின்ற முதல் தமிழர் என்கிற பெருமையையும் இப்படத்தின் மூலம் இவர் பெறுகின்றார்.

இந்த செய்திக்கு வட இந்திய ஊடகங்கள் முன்னுரிமை கொடுத்துள்ளன. அத்துடன் சீன ஊடகங்களும் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்.

http://articles.timesofindia.indiatimes.com/2011-05-31/news-interviews/29603829_1_chandran-rutnam-ben-kingsley-sri-lankan

 

“கிளி பூ”


கீழே உள்ள படங்களைப் பார்க்கும் நீங்கள் ஆச்சரியத்தின் விளிம்புக்கே சென்று விடுவீர்கள்.கீழே உள்ள படங்களில் நீங்கள் பார்ப்பது கிளி என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து போய்விடுவீர்கள்.

ஆமாம் நண்பர்களே!கீழே உள்ள படங்களில் நீங்கள் பார்ப்பதுஒரு பூவை ஆகும்.கீழே உள்ள பூ தாய்லாந்தில் உள்ளது.இதன் பெயர் என்ன தெரியுமா?!“கிளி பூ”. ஆமாம் கிளி வடிவில் உள்ளதால் அதனை “கிளி பூ” என அழைக்கிறார்கள்.

இந்த பூவை ஏற்றுமதி செய்ய தாய்லாந்து அரசு தடை விதித்துள்ளது. இதனை நீங்கள் பார்க்க மட்டுமே முடியும்.இறைவனின் படைப்பை என்ன என்று சொல்வது!இறைவன் மிகவும் பெரியவன்.

பிரிவுகள்:ALL POSTS, படைப்புக்கள், புகைப்படங்கள் குறிச்சொற்கள்:

அவதார் திரைப்படம் உருவான விதம்


Making of AVATAR <.> Using Advanced Motion Capture Technology

குறைந்த கட்டண கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தும் ஏர்டெல்


airtel

வெறுமனே டைப்பிங், சாட்டிங், இமெயில், பிரவுசிங் மட்டுமே மேற்கொள்வதற்காக ஒரு கம்ப்யூட்டரை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா?. அப்படியானால் இந்த செய்தியை தொடர்ந்து படியுங்கள்.

இந்தியாவின் மிகப் பெரிய செல்போன் நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் நிறுவனம் நெட் பிசி என்ற புதிய வகை சாதனைத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மிகவும் குறைந்த விலையிலான கம்ப்யூட்டராகும்.

இந்த கம்ப்யூட்டரை வின்டோஸ் எக்ஸ்பி மூலம் இயக்கலாம். இதன் விலை இந்திய மதிப்பில் ஜஸ்ட் ரூ. 5000 மட்டுமே.

இந்த குட்டி கம்ப்யூட்டரை இயக்க முதலில் புஎஸ்பி மோடம் அல்லது பிராட்பேன்ட் ஈத்தர்நெட் கேபிளுடன், இந்த நெட் பிசியை இணைக்க வேண்டும். அவ்வளவுதான், அப்படியே போய்க் கொண்டிருக்கலாம்.

இதன் எடை அரை கிலோதான். சைஸ், 11.5 செ.மீ x 11.5 செ.மீ. x 3.5 செ.மீ மட்டுமே. அதாவது இந்த சாதனத்தை, உங்களோட பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ‘ஜம்க்கா ஜம்க்கா’ என்று நடந்து போகலாம்.

இந்த குட்டியூண்டு கம்ப்யூட்டர் சாதனத்தில், கூகுள் டாக்குமென்ட்டுகள் ஏற்கனவே லோட் செய்யப்பட்டுள்ளன. எனவே இன்டர்நெட் இணைப்பு இல்லாமலும் கூட நீங்கள் இதில் ஒர்க் செய்ய முடியும்.

இதை தற்போது சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். எனவே நீங்கள் இந்த சாதனத்தை பயன்படுத்துவதாக இருந்தால் மாதந்தோறும் ஒரு தொகையை வாடகையாக செலுத்த வேண்டும். ஏர்டெல் பிராட்பேன்ட் இணைப்புக்கான பில்லுடன் சேர்த்து இந்தத் தொகையையும் கட்டலாம்.

பிளான்கள் என்னென்ன தெரியுமா..?

இந்த சாதனத்தை பயன்படுத்துவோருக்காக பல்வேறு பிளான்களையும் அறிவித்துள்ளனர்.

குறைந்த பயன்பாட்டுக் கட்டணம் ரூ. 700 ஆகும். இதில் ரூ. 200 சாப்ட்வேருக்கான வாடகைக் கட்டணம். மீதம் உள்ள ரூ. 500 பிராட்பேன்ட் இணைப்புக்கானது.

இந்த பிளானை தேர்வு செய்தால் உங்களுக்கு 256 கேபிஎஸ் வேகத்திலான 3ஜிபி டேட்டா பரிமாற்றம் கிடைக்கும், 10 ஜிபி ஆன்லைன் ஸ்டோரேஜ் கிடைக்கும், ஒரு ஸ்டான்டர்ட் மைக்ரோசாப்ட் ஆபிஸ் கிடைக்கும். அவுட்லுக்கும் உள்ளடங்கியிருக்கும்.

இந்த சாதனத்தில் உள்ள ஒரு குறை, வேறு எந்த புதிய சாப்ட்வேரையும் நீங்கள் இதில் ஏற்ற முடியாது என்பதுதான். எனவே கூகுள் குரோம், பயர்பாக்ஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாது. இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மட்டுமே பயன்படுத்த முடியும்.

வாங்கித்தான் பாருங்களேன்…

அழகான வர்ண ஓவியங்கள்


 

beautiful-paints

beautiful-paints1jpg1

beautiful-paints2jpg

beautiful-paints3jpg

beautiful-paints4jpg

beautiful-paints5jpg

beautiful-paints6jpg

பிரிவுகள்:ALL POSTS, படைப்புக்கள், புகைப்படங்கள் குறிச்சொற்கள்:

ஆஸ்கர் செய்வது எப்படி?


oscar_011

oscar_02

oscar_03

oscar_04

oscar_05

oscar_061

oscar_07

oscar_083

oscar_91

oscar_10

oscar_11

நம்பினால் நம்புங்க! தண்ணீரால் செய்யப்பட்ட பலூன் கண்டுபிடிச்சிட்டாங்க!!


baloon1

baloon1-2

baloon1-3

baloon1-41

baloon1-5

baloon1-6

பிரிவுகள்:ALL POSTS, படைப்புக்கள் குறிச்சொற்கள்: