தொகுப்பு

Archive for the ‘இலங்கைத் தமிழ் பாடல்’ Category

சுத்தி சுத்தி போனேன்


பாரிய வெற்றி பெற்றுள்ள “யாழ்ப்பாண கொலைவெறி’


தாத்தா முதல் டாடா வரை ‘கொலவெறி’க்கு அடிமையாக ஆகிவிட்டார்கள். தமிழ்நாட்டு தனுஷ் கொடி இன்று இந்தி வரை பறக்கக் காரணமும் இந்தக் ‘கொலவெறி’ தான்!

இதேபாடலை எம்.ஜி.ஆர். பாடினால் எப்படி இருக்கும் … சிவாஜி உச்சரித்தால் எப்படி இருக்கும் என்று உடான்ஸ் பாட்டுக்கள்  இணையத்தில் உலவும் வேளையில், யாழ்ப்பாணத்தில் இருந்து அழகுத் தமிழ் ‘கொலைவெறிப் பாடல்’ ஒன்று வந்திருக்கிறது. தமிழ் உணர்வாளர்களும் புலம்பெயர் ஈழத் தமிழர்களும் இந்தப் பாடலால் உச்சி குளிர்ந்து கிடக்கிறார்கள்.

‘என் தமிழ் மொழி மேல் உனக்கேன் இந்தக் கொலைவெறிடா’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் வரிகளே, சூட்டைக் கிளப்புகின்றன. இந்தப் பாடல் இணையதளத்தில் வெளியான மூன்று நாட்களுக்குள் 2.24 லட்சம் பேர் கேட்டு ரசித்திருக்​கிறார்கள்.

4.26 நிமிடங்கள் ஓடுகிறது இந்த வீடியோ பாடல். போர் முடிந்த ஈழத்தில், நொந்துகிடக்கும் தமிழ் மக்களின் நெஞ்சைத் தொடும் பாடலாக இது அமைந்திருக்கிறது. யாழ் நகரத்தின் வரவேற்பு வளைவு, நல்லூர் முருகன் கோயில், மரியாள் பேராலயம், யாழ்ப்பாணத்தின் மையத்தில் உள்ள தமிழ்ப் பெரியவர்களின் சிலைகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்தி, தாய் மண்ணைத் தரிசிக்க முடியாத புலம்பெயர் தமிழர்களைப் பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது.

யாழ் நகரைச் சேர்ந்த மூன்று தமிழ் இளைஞர்கள் இந்தப் பாடலை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் பாடலை இயற்றி, பாடி, இசையமைத்த எஸ்.ஜெ.ஸ்டாலினுக்கு, உலக அளவில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. எஸ்.ஜெ.ஸ்டாலினிடம் பேசினோம்.

பாடல்…

”இசையில் எனக்கு ஆர்வம் அதிகம். வீட்டிலேயே  ஸ்டுடியோ வைத்து, குறும்படங்கள், நாடகங்கள், வானொலி நிகழ்வுகளுக்காக நண்பர்களுடன் சேர்ந்து இசை அமைக்கிறோம். ‘தனுஷ்’ பாடல் மெட்டில், பலரும் பலவிதமாக பாடல்களை உருவாக்கி இணைய தளங்களில் வெளியிட்டதைப் பார்த்தோம். என்னுடைய நீண்டகால ஆதங்கத்தை கலந்து நாங்களும் ஒரு பாடல் செய்தோம். இந்தப் பாடல் காட்சிக்கான ஒளிப்பதிவு, படத்தொகுப்புகளை என் நண்பர்கள் வர்ணன், அமலன் ஆகியோர் செய்தார்கள். ‘கொலவெறி – யாழ்ப்பாணம் வெர்ஷன்’ என்று பெயரிட்டு, ஈழத்தமிழர் பார்வையிடும் சமூக இணையதளங்களில் பரீட்சார்த்த முயற்சியாக வெளியிட்டோம். நீண்டகாலமாகவே தமிழ்க் கலைப் படைப்புகளில் தமிழ்மொழிக் கொலையும் வேற்றுமொழிக் கலப்பும் நீடிப்பது கண்டு மனதில் பெரும் ஆதங்கம் இருந்துவந்தது. வேற்றுமொழிக் கலப்புடன் வரும் பாடல்களுக்கு மட்டுமில்லாமல் தனித் தமிழில் மட்டுமே இயற்றப்படும் பாடல்களுக்கும் மக்கள் வரவேற்பு அளிப்பார்கள் என்பதை இந்தப் பாடலுக்குக் கிடைத்த  அமோக வரவேற்பின் மூலம் அறியமுடிகிறது” என்றார்.

தமிழுக்கு மரியாதை!

– ஜூனியர் விகடன்-

தமிழ்நாட்டில் உள்ள நாளிதழ்கள் ,சஞ்சிகைகள்,இணையதளங்கள் அனைத்தும் இப்பாடலை பாராட்டி எழுதியுள்ளன.இலங்கையின் அனைத்து தொலைக்காட்சி,வானொலிகளிலும் இப்பாடல் ஓயாது ஒளி,ஒலி பரப்பாகிக் கொண்டிருக்கின்றன.புலம் பெயர் நாடுகளும் இப்பாடல் பட்டயக் கிளப்பிக் கொண்டு இருக்கின்றது.

தொடர்புடைய சுட்டிகள் :

http://news.vikatan.com/index.php?nid=5972

http://www.vikatan.com/article.php?aid=14784&sid=415&mid=2&

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%22%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%27&artid=535458&SectionID=131&MainSectionID=131&SectionName=World&SEO=

தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ள “என் தமிழ் மொழிமேல் உனக்கேன் இந்த கொலவெறிடா” இவ் இசைக் காணொளியில் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி நகரின் தோற்றத்தினை காண்பிக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதுடன் யாழில் முதன் முதலாக அதி உயர் வடிவத்தில் (1080p HD)தயாரிக்கப்பட்டுள்ளது.

கொலவெறிப்பாடலின் வரிகளை முற்றிலுமாக மாற்றியமைத்து இசைக்கு மேலும் மெருகூட்டிய பாடலின் பரிணாமம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இளம் இசையமைப்பாளர் எஸ்.ஜே.ஸ்ரலின் அவர்கள் பாடல் வரிகளை எழுதி, பாடலையும்  பாடியுள்ளார். அண்மையில் இவர் இசையமைத்த ‘தண்ணீர்’ குறும்படம் 2011ற்கான  சிறந்த குறும்பட இசை விருதை வெண்றமை குறிப்பித்தக்கது.

இப்பாடல் காணொளியை ‘யாழ் மியூசிக்’ நிறுவனம் தயாரித்துள்ளதுடன் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட இவ் இசை நிறுவனம் தொடர்ந்தும் எம்மவர் படைப்புக்களையும், கலைஞர்களையும் அடையாளப்படுத்தும் படைப்புக்களை தாயாரித்து வருகின்றது.

நம் ஊரைப்போல வருமா?


பாடியவர் இசை நெறியாள்கை:கிருஷாந்த்

 

பிரிவுகள்:ALL POSTS, இலங்கைத் தமிழ் பாடல் குறிச்சொற்கள்:

கனவுகளே கனவுகளே


இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் வவுனியாவில் வெளிவந்த எதிர்பார்ப்பு குறும்படத்தில் உருவான பாடல் இது .

பாடலை பாடியவர் – கந்தப்பு ஜெயரூபன்

படத்தொகுப்பு -T.பிரியந்தன்

பாடல் வரிகள் – மாணிக்கம் ஜெகன்

பிரிவுகள்:ALL POSTS, இலங்கைத் தமிழ் பாடல் குறிச்சொற்கள்:

இலங்கைத் தமிழ் பாடல் – யாழ்ப்பாண நகரக்கதை


யாழ்ப்பாண நகரக்கதை என்னும்

தலைப்பில் வெளியிடப்பட்ட இலங்கைத்

தமிழ் பாடல் இதுவாகும்.

இப்பாடலை எழுதி இசையமைத்து பாடியது

இலங்கைத் தமிழரான கிரிஷாந்த்

என்பவராவார்.

யாழ் கலைஞர்கள் நடித்துள்ளனர்.