இல்லம் > அரசியல், இலங்கைத் தமிழர்கள், உலகம் > சிங்கப்பூர் துணைப் பிரதமராக இலங்கைத் தமிழர்

சிங்கப்பூர் துணைப் பிரதமராக இலங்கைத் தமிழர்


இலங்கைத் தமிழர்கள் அரசியலில் பிரகாசிக்கும் காலமாக இந்தக் காலம் உள்ளது.
ஆம்,இந்த மாத தொடக்கத்தில் யாழ்ப்பாணம் அச்சுவேலியில் பிறந்த ராதிகா சிற்சபைஈசன் கனடா பாராளுமன்ற உறுப்பினரானார்.

கடந்த 13ம் திகதி தமிழக சட்டசபைத்  தேர்தலில் யாழ்ப்பாணத்தில் பிறந்த அருண்  பாண்டியன் சட்ட மன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

தற்போது (கடந்த 7ம் திகதி) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  தர்மன் சண்முகரத்தினம் துணை பிரதமராகியுள்ளார்.

இவை இலங்கைத் தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

   இனி தர்மன் சண்முகரத்தினம் பற்றி பார்ப்போம்.

1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது பாட்டனார் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தர்மனின் தந்தை கே. சண்முகரத்தினம் மருத்துவப் பேராசிரியராவார். ஆங்கிலோ-சீனக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் லண்டன் பொருளியக் கல்லூரியில் பொருளியலில் பட்டம் பெற்றார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுமாணிப் பட்டமும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொதுப்பணித் துறையில் முதுமாணிப் பட்டமும் பெற்றார்.

தர்மன் சப்பானிய-சீன வழக்கறிஞரான ஜேன் யுமிக்கோ இட்டோகி என்பவரைத் திருமணம் புரிந்தார்[3]. இவர்களுக்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்ணுமாக நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

துணைப் பிரதமராக தர்மன் சண்முகரத்தினம்

சிங்கப்பூரில் கடந்த 7ம் திகதி, நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
சிங்கப்பூரின் முதல் பிரதமரும், அந்நாட்டின் தந்தை என அழைக்கப்படும் லீ குவான் யூ, அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து அமைச்சரவையிலிருந்து விலகினார்.
இதே போல, மற்றொரு முன்னாள் பிரதமரான கோ சோக் டாங்கும் அமைச்சரவையிலிருந்து விலகினார். இதையடுத்து, 14 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை பிரதமர் லீ ஹிசின் லூங்ன் உருவாக்கியுள்ளார். லீ ஹிசின் லூங்ன், முன்னாள் பிரதமர் குவான் யூவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 14 பேரில், ஏழு பேர் புதிய முகங்கள். தமிழரான கே.சண்முகம் சட்டத்துறை அமைச்சராக இருந்தார். தற்போது இவருக்கு மேலதிகமாக வெளிவிவகார அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரான தர்மன் சண்முகரத்தினம் துணை பிரதமராகியுள்ளார். இவர், நிதி மற்றும் மனித சக்தித் துறைகளை கவனிக்க உள்ளார்.

     இலங்கைத் தமிழர்களைப் பற்றி தர்மன் சண்முகரத்தினம்

இலங்கைத் தமிழர்களைப் பற்றி தர்மன் சண்முகரத்தினம் அடிக்கடி குறிப்பிடுவார்.தான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன் என்பதில் மிகவும் பெருமை கொள்வதாகவும், ஆனால் எனது மக்களின் நிலை என்னை கண் கலங்க வைப்பதாகவும் கூறுவார்.யாழ்ப்பாண மக்கள் படிப்பில் மிகவும் உயர்ந்தவர்கள் எனவும் அதனாலேயே தன்னால் படிப்பில் பிரகாசிக்க முடிந்ததாகவும் கூறுவார்.
இறுதியாக 2004ம் ஆண்டு ஆழிப்பேரலை  தாக்கிய போது இலங்கை வந்திருந்தார்.

  1. 8:35 பிப இல் 2011/05/22

    I heard about this in GTV tv here. Good nallathu nadakkaddum…we hope that.

    Like

    • 10:24 முப இல் 2011/05/24

      நிச்சயமாக சகோதரி.நல்லது நடக்கின்றன.

      நன்றி சகோதரி.

      உங்கள் வருகைக்கும்
      கருத்துக்கும்
      நன்றி கோவை கவி.

      Like

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக