நான் பார்த்த சென்னை
நான் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற இரண்டாவது வெளிநாடுப் பயணம் இந்தியா.2012ம் ஆண்டு இது நடந்தது.அங்கு தமிழர்கள் மிகப்பெரும்பான்மையாக வாழும் தமிழ்நாட்டுக்கு நான் சென்றேன்.அங்கு நான் சென்று தங்கிய நகரம் சென்னை. ஒரு மாத காலம் மாத்திரமே தங்கியிருந்தேன். எனது உறவினர் கனடாவில் இருந்து அவருடைய திருமணத்திற்காக சென்னை வந்திருந்தார். அவரால் அங்கு (யாழ்ப்பாணத்தில்) திருமணம் செய்ய முடியவில்லை.காரணம், யாழ்ப்பாணத்தில் வசதி வாய்ப்புக்கள் குறைவாக இருந்த காலம் அது.எனவே அவரது மனைவியாக வரப்போகின்றவரும் யாழ்ப்பாணத்தில் இருந்து அங்கு (சென்னை ) சென்றார்.அதன் நிமித்தம் நானும் எனது உறவினர்களும் அங்கு சென்றோம்.
சரி ஏன் அங்கு போனேன் என்ற காரணத்தை உங்களுக்கு கூறி விட்டேன்.
இனி சுருக்கமாக சென்னை பற்றிய சில தகவல்களை பகிர்ந்து விட்டு நான் பார்த்த சென்னையை பற்றி கூறலாம் என்று நினைக்கின்றேன்.
*படத்திற்கும் நான் இருந்த காலப்பகுதிக்கும் தொடர்பில்லை.
சென்னை (chennai) தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராசு (Madras) என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாகக் கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.
சென்னையின் பொருளாதாரம் பலதரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது. ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. மேலும் ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரிப்பாகங்கள் உற்பத்தியிலும் நாட்டின் 35 விழுக்காடு சென்னையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
நியூயார்க் டைம்ஸ் இதழின் 2014-லில் செல்ல வேண்டிய உலகின் 52 இடங்களின் பட்டியலில், சென்னை 26வது இடத்தைப் பெற்றுள்ளது.
சரி இனி நான் பார்த்த சென்னையை பற்றி கூறுகின்றேன்.
அது அடுத்த பதிவில் ….
im waiting bro.ur blog is awesome.
LikeLike
நன்றி கதிர்.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி கதிர்.
LikeLike
beautiful web and hard work.
LikeLike
நன்றி கூறுகின்றேன் வருண்.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி வருண்.
LikeLike
I will read..Best wishes.
LikeLike
உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி சகோதரி.
உங்கள் ஆதரவிற்கு என் நன்றிகள்.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி கோவை கவி.
LikeLike
அழகான தமிழில் ஒரு வலைத்தளத்தை இப்ப தான் பாக்கிறன்.
நன்றி பிரபு.
LikeLike
நன்றி கூறுகின்றேன் மலாய் தமிழன்.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி மலாய் தமிழன்.
LikeLike
எங்கள் சென்னையை பற்றி என்ன சொல்ல போகிறீர்கள் என்று படிக்க ஆவலாக இருக்கிறது 🙂
LikeLike
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி மஹா மேடம்.எந்தவித கற்பனையும் இன்றி நான் எவ்வாறு பார்த்தேனோ அவ்வாறே பதிவிட முடிவு செய்துள்ளேன்.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி மஹா மேடம்.
LikeLiked by 1 person