நான் பார்த்த சென்னை (காட்சி 3)
மெரினா கடற்கரை சென்னையின் அடையாளங்களில் ஒன்று.சென்னை வரும் எவரும் பார்க்க விரும்பும் முதல் இடம் மெரினா கடற்கரை.வாடகை வண்டியை பிடித்து அங்கு சென்றேன்.வளசரவாக்கத்திலிருந்து 14KM தூரம்.31 நிமிடப் பயணம்.மெரினா கடற்கரையை ஒரு சுற்றுலா மையம் என்றோ ,மக்கள் ஒன்று கூடும் இடம் என்றோ இலகுவில் கூறிவிட முடியாது.அதன் பரிணாமம் மிகப்பெரியது.ஒரு கடற்கரையை நம்பி பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த முடியுமா என்று வியந்து போனேன்.பல்வேறு பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வியாபாரத்தை ஒரு கடற்கரையை நம்பி நடத்துவது வியப்பின் உச்சம். சாதாரண பூ மாலைகள் விற்கும் மங்கையர்கள் தொடக்கம் சுய தொழில் வியாபாரிகள் வரை பல்வேறு பிரிவைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் தொழிலை நடாத்துவது உலகின் வேறு எங்கும் காண முடியாத காட்சியாகவே இருக்கும்.மெரினா கடற்கரை என்னை மட்டும் வியப்பில் ஆழ்த்தவில்லை.இங்கு வரும் வெளிநாட்டவர்களையும் நிச்சயம் வியப்பில் ஆழ்த்தும்.
மக்களின் கவனத்தை எப்போதும் தன்னகத்தே வைத்துக் கொண்டிருப்பதால் ஊர்வலங்கள்,ஆர்ப்பாட்டங்கள்,விழிப்புணர்வு ஊர்வலங்கள்,மரதன் போட்டிகள் என ஒட்டு மொத்த நிகழ்வுகளின் மேடையாகவும் இது திகழுகின்றது.
மெரினா கடற்கரையை காலார நடந்து கொண்டே அங்கு நடக்கும் காட்சிகளை பார்த்தேன்.சுண்டல் விற்கும் சிறுவர்கள் ,கச்சான் விற்கும் வயோதிபர்கள் ,தின்பண்டங்கள் விற்கும் இளையவர்கள் ,மாங்காய் விற்கும் பெரியவர்கள்,சாகசம் காட்டும் மழலைகள் ,பூமாலைகள் விற்கும் மங்கையர்கள்,சிறிய பெட்டிக்கடைகள் போட்டு அரிசிகளில் பெயர் எழுதிக் கொடுக்கும் திறன் கொண்ட பாடசாலை செல்லும் வயது கொண்ட மாணவர்கள் ,சிறிய அங்காடிகள்,பெரிய கடைகள்,குளிர்களி நிலையங்கள் என விரியும் இந்தப் பட்டியல் அப்பப்பா…இன்னும் சொல்ல இந்தப் பதிவு போதாது.
சென்னையின் முக்கிய பகுதியான இக்கடற்கரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடைபெறுகின்றன. இந்தியாவின் பெரிய ஓட்டமாகிய சென்னை மாரத்தானும் இங்கு நடைபெறும். ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்பர். பொங்கல் திருநாளில் மக்கள் தங்கள் உறவினர்களுடன் கூடி மகிழும் இடமும் இதுவே. சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாட்களில் அரசுத் துறைகளின் அணிவரிசை நடைபெறும்.மெரினா கடற்கரையை ஒட்டிய காமராசர் சாலை ஆறுவழிப் பாதையாகும். கடற்கரையின் எதிர்புறம் கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் ஆகிய தொடர்வண்டி நிலையங்களும், விவேகானந்தர் இல்லம், சாந்தோம் ஆகிய பேருந்து நிறுத்தங்களும் உள்ளன. அண்ணா சதுக்கத்தில் இருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு பேருந்து வசதிகளும் உள்ளன. சுற்றுலா பேருந்துகள் இங்கு நின்றே செல்லும்.
எம்.ஜி.ஆர். சமாதி
அதே போல் மக்கள் தலைவர்களின் வித்துடல்களும் இந்த மெரினாவை சுற்றியே இருக்கின்றன.தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். அவர்களின் சமாதி,அண்ணா அவர்களின் சமாதி என்பன இங்கு உள்ளன.
எம்.ஜி.ஆர். சமாதி
அவ்வாறு நடந்து கொண்டே எம்.ஜி.ஆர். சமாதியை அடைந்தேன்.நிசப்த அமைதி குடி கொள்ளும் அவ்விடத்தில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் அவரது கல்லறையை தரிசித்து சென்று கொண்டிருந்தார்கள்.அவரது கல்லறையில் காதை வைத்தால் அவரது மணிக்கூட்டின் சத்தம் இப்பொழுதும் கேட்கும் என்று அருகில் உள்ளவர்கள் சொல்ல நானும் காதை வைத்துப்பார்த்தேன்.ஆனால் எனக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை.
அண்ணா சமாதி
அண்ணா அவர்களின் சமாதிக்கு கீழே எழுதியிருந்த வாசகம் என்னை வெகுவாக கவர்ந்தது.
எதையும் தாங்கும் இதயம் இங்கு தூங்குகிறது.
இதை கண்டிப்பாக திரு.மு.கருணாநிதி அவர்கள் தான் எழுதியிருக்க வேண்டும்.
நான் பார்த்த சென்னை (காட்சி 4) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.
மெரினாவில் இவ்வளவு ஆச்சரியங்களா?!
LikeLike
ஒருமுறை சென்று பாருங்கள் வருண்.
நன்றி கூறுகின்றேன் வருண்.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி வருண்.
LikeLike
மெரினாவிற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக செல்ல வேண்டும்.நன்றி பிரபு.
LikeLike
சென்று பாருங்கள் குமரன்.
நன்றி கூறுகின்றேன் குமரன்.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி குமரன்.
LikeLike
சென்னைக்கு ஒருக்கா போக வேண்டும்.
அடுத்த பதிவை விரைவாக போடுங்க தலைவா.
LikeLike
உங்கள் ஆர்வத்திற்கு நன்றி ரவி.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி ரவி.
LikeLike
சுவையான விஷயங்கள். அவ்விடமே இருப்பவர்களுக்கு யாராவது வந்து போகும் நபர்களுக்கு அழைத்துப் போய் காட்டுவதுடன் ஸரி
LikeLiked by 1 person
சென்னைக்கு வரும் அனைவரும் செல்ல வேண்டிய இடம் மெரினா.
நன்றி அம்மா.அன்புடன்…
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி சொல்லுகிறேன்.
LikeLike
சென்னை மெரினா கடற்கரை பற்றி அழகாக தொகுத்து , அற்புதமாக எழுதி இருக்கிறீகள் பிரபு சார்! உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙂
LikeLiked by 1 person
மிக்க நன்றி மஹா மேடம்.மிகவும் மகிழ்ச்சி .
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி மஹா மேடம்.
LikeLiked by 1 person
மிக கவனிப்பாக வாசிக்கிறேன்.
நன்றாக உள்ளது.
மிக்க நன்றி பிரபு.
LikeLiked by 1 person
நன்றி சகோதரி.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி கோவை கவி.
LikeLike