நான் பார்த்த சென்னை (காட்சி 10)
முட்டுக்காடு
மிகவும் அழகான இடம்.சென்னையில் இருந்து சுமார் 40கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் முட்டுக்காடு படகு சவாரி சிறப்பாக இருக்கும். இங்கு பெடல் படகுகள் மோட்டார் படகுகள் என அனைத்து வகையான படகுகளும் இருக்கின்றன. பரந்து விரிந்த ஏரியில் ஜாலியாக படகு சவாரி செய்யும் அனுபவமே தனிதான்.அனைவரும் மிகவும் விரும்பி வந்து செல்லும் இடமாக இது உள்ளது.சென்னைக்கு மீண்டும் நான் வந்தால்,மீண்டும் செல்ல ஆசை.
மாயாஜால்
மாயாஜால் (Mayajaal) என்பது சென்னையிலுள்ள ஒரு பொழுதுபோக்கு மையமாகும். இது கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள கானத்தூரில் அமைந்துள்ளது. இது பல்பொருள் அங்காடி, விளையாட்டு மையம், ஓய்வகம் மற்றும் பல்வகை திரையரங்குகள் கொண்ட இடமாகும். இங்கு 16 பல்வகை திரையரங்குகள் உள்ளன. இதுவே ஆசியாவிலேயே மிக அதிகமான பல்வகை திரையரங்குகள் கொண்ட இடமாகும். விளையாட்டு மையம் 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக இங்கு பணி புரியும் பழனிச்சாமி என்பவர் என்னிடம் கூறினார்.ஓய்வகம் 2005 ஆம் ஆண்டு நாற்பது அறைகளுடன் திறக்கப்பட்டதாக கூறுகின்றார்கள்.முப்பதாயிரம் சதுர அடிகள் கொண்ட பல்பொருள் அங்காடி 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாம்.
தட்சிணசித்ரா
முட்டுக்காடு செல்லும் வழியில் இருக்கும் இடம் தட்சிணசித்ரா. கைவினைப் பொருட்கள் இங்கு அதிகமாக இருக்கும். மேலும், தமிழ்நாடு மற்றும் மற்ற தென்னிந்திய மாநிலங்களின் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் இடமாக அமைந்திருக்கிருக்கின்றது தட்சிணசித்ரா. சென்னைக்கு சென்றால் பார்க்க வேண்டிய முக்கிய இடம் இதுவாகும்.
நான் பார்த்த சென்னை (காட்சி 11) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.
நன்று .
ஆனால் மிகவும் சுருக்கி விட்டதாகத் தொன்றுகிறது.
ஒருவேளை நேரமின்மையுமாகலாம்.
நன்றி.
LikeLiked by 1 person
உண்மை தான் சகோதரி.நானும் யோசித்தேன்.இனி விபரமாக எழுதுகிறேன்.
நன்றி சகோதரி.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி கோவை கவி.
LikeLike