பருவமழை என்பது யாதெனின்
பல வியத்தகு தகவல்களை உள்ளடக்கிய இந்தப் பதிவை “இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்” வலைப் பதிவிலிருந்து மீள் பிரசுரம் செய்கின்றேன்.இயற்கையை அறிபவனே/அறிபவளே வாழ்க்கையை ரசிக்கின்றான்/ரசிக்கின்றாள்.
நன்றி மஹா அக்கா.
இல்லத்தரசியின் பார்வையில் அறிவியல்
மழையை விரும்பாதவர் இவ்வுலகில் யாவரும் இலர்! கார் மேகத்தை கண்டு விட்டாலே , மயில் தன் அழகிய தோகையை விரித்து நடனம் ஆடுமாம்! அது சரி , அது என்ன கார் மேகம்? கார் மேகம் என்றால் கருத்த மழை மேகம்! பொதுவாக , மேகம் , வெள்ளை நிறத்தில் அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும்! மழை காலங்களில் மட்டும் , இந்த மேகத்துக்கு யார் கருப்பு வண்ணம் அடித்து விடுகிறார்கள் என்ற ஐயம் மேலிடுகிறது அல்லவா! கார் வண்ண மேகத்தின் ரகசியத்தை முதலில் அறிந்து கொள்வோம்!
அதற்கு முன்னே ,மேகம் என்பது என்ன என்று முதலில் அறிந்து கொள்வோம். சிறு சிறு தண்ணீர் துளிகள் மற்றும் சிறு சிறு பனிக்கட்டி படிகங்களும் பெருந்திரலாக காற்றில் மிதப்பதே மேகம்!சிறு சிறு தண்ணீர் துளிகளும் , பனிக்கட்டி படிகங்களும் எப்படி மேகமாக உருவாகுகிறது?? ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.. ஒரு கேள்வி எழுந்தால் , அதற்கு விடை இல்லாமலா இருக்கும்.. கேளுங்கள்.. சூரியனின் வெப்பத்தை தாங்க மாட்டாமல் , நிலத்தில் இருக்கும் தண்ணீர் , கடல் , குளம் , ஆறு ஆகியவற்றில் இருக்கும் தண்ணீர் , மரங்கள் , செடிகள் , கொடிகள் வெளியிடும் தண்ணீர் என்று அனைத்தும் ஆவியாகி விடுகின்றன.. இவ்வாறு ஆவியாகும் நீரில் , சிலது , விண்ணோக்கி பயணப்படுகின்றன !அவ்வாறு மேலெழும்பும் நீராவி , மேலே மேலே செல்ல செல்ல…
View original post 1,037 more words
எடுத்துப் போட்ட பிரபுவிற்கும் மகாவிற்கும் வாழ்த்துகள்.
நன்று..நன்று…மிக நன்று. I read original also Thank you.
LikeLiked by 1 person