திருத்தணி – அழகன் முருகனின் ஆனந்தச் சிரிப்பு (85 km – 2Hrs, 5 min)

தமிழ் கடவுளான முருக பெருமானின் அறுபடை வீடுகளில் திருத்தணியும் ஒன்று. இந்துக் கடவுளான முருகன் வாசம் செய்யும் இந்த திருத்தணி தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.
திருத்தணியின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் இங்கு அமைந்திருக்கும் திரு சுப்பிரமணியசுவாமி ஆலயம் ஆகும். இந்த ஆலயத்திற்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். மேலும் சுற்றலா வருவோருக்கு விருந்தாக இங்கு பாயும் நந்தி ஆறும் இருக்கிறது.
குமர தீர்த்தா அதாவது சரவண பொய்கை என்று அழைக்கப்படும் புனித தீர்த்த குளமும் திருத்தணியில் அமைந்துள்ளது. இந்த சரவண பொய்கை ஏராளமான சக்திகளை தன்னுள் கொண்டிருக்கிறது என்று முருக பக்தர்கள் நம்புகின்றனர். முருகப் பெருமான் தீய எதிரிகளுக்கு எதிராக போரிட்டு வென்ற ஆறு இடங்களில் ஒரு இடமாக திருத்தணி நம்பப்படுகிறது.
முருகனின் மற்ற ஐந்து புனித தலங்களாக பழனியில் அமைந்திருக்கும் தண்டாயுதபாணி ஆலயம், திருச்செந்தூரில் அமைந்திருக்கும் செந்தில் ஆண்டவர் ஆலயம், திருப்பரங்குன்றத்தில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி ஆலயம், சுவாமி மலையில் அமைந்திருக்கும் சுவாமிநாத சுவாமி ஆலயம் மற்றும் பழமுதிர் சோலையில் அமைந்திருக்கும் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் போன்றவை உள்ளன.
இந்த ஆறு புண்ணிய தலங்களுக்கும் சென்று வேண்டி வந்தால் இறைவன் சுப்பிரமணிய சுவாமியின் அபரிவிதமான அருளைப் பெறலாம் என்று நம்பப்படுகிறது.
திருத்தணியில் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தைத் தவிர்த்து சந்தன வேணுகோபாலபுரம் ஆலயமும் கண்டிப்பாக பார்க்க வேண்டியது. இந்த ஆலயத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
வேலூர்
இந்த தங்கக்கோயிலில் வீற்றுள்ள மஹாலட்சுமி தேவியின் விக்கிரகம் ஆன்மீக யாத்ரீகர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்றாகும். வில்லபாக்கம், வள்ளிமலை, பாலாமதி, விரிச்சிபுரம், மேட்டுகுளம், மொர்தானா அணை மற்றும் பூமாலை வணிக வளாகம் போன்றவையும் வேலூரின் இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களாக அமைந்துள்ளன.
அசம்ஷன் கதீட்ரல் மற்றும் 150 வருடங்கள் பழமையான செயிண்ட் ஜான் சர்ச் போன்றவை வேலூர் நகரத்தின் முக்கியமான கிறித்துவ தேவாலயங்களாக அறியப்படுகின்றன.
இந்தியாவிலேயே பிரசித்தமான ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையம் ஒன்றும் வேலூர் நகரத்தில் இயங்குகிறது. சிஎம்சி என்று பிரசித்தமாக அழைக்கப்படும் வேலூர் மருத்துவக்கல்லூரி அல்லது கிறிஸ்டியன் மெடிகல் காலேஜ் வேலூரின் மற்றொரு அடையாளமாக திகழ்கிறது.
மேலும், வேலூருக்கு அருகிலுள்ள ஜவ்வாது மலைப்பகுதியில் அமிர்தி ஆற்றங்கரையில் அமிர்தி விலங்கியல் பூங்கா எனும் மற்றொரு முக்கியமான சுற்றுலாத்தலமும் அமைந்துள்ளது.
காவலூர் வானோக்கு மையம் ஆசியாவிலேயே மிகப்பெரிய வானியல் தொலைநோக்கியை கொண்டுள்ளது. பூமத்தியரேகைக்கு அருகில் அமைந்துள்ளதால் இந்த மையத்தில் பல முக்கியமான வானியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நான் பார்த்த சென்னை (காட்சி 16) விரைவில் வெளியாகும்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
ஹலோ பிரபு.. உன் வலைத்தளம் வந்து நாளாயிற்று! தற்சமயமாக Reader திறந்து பார்த்தேன்! ஒரே சென்னை பதிவுகளாக பதிந்து தள்ளி இருக்கிறாய்.. எல்லாவற்றையும் உடனே படித்து விட ஆசை தான்! ஆனால் அவசர அவசரமாக படிக்க விருப்பம் இல்லை.. ஒவ்வொன்றாக படிக்க மீண்டும் வருகிறேன்! நன்றி 🙂
LikeLiked by 1 person
நன்றி அக்கா.நான் கூட யோசித்தேன்,அக்காவைக் காணவில்லை என்று.எனக்கு ஒவ்வொரு நாளும் எழுத வேண்டும் என்ற ஆசை இருக்கின்றது.நேரம் தான் பிரச்சினை அக்கா.உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி அக்கா.அன்புடன் உங்கள் தம்பி பிரபு.
உங்கள் வருகைக்கும்
கருத்துக்கும்
நன்றி மகா அக்கா.
LikeLiked by 1 person
எனக்கும் அதே நேரம் தான் பிரச்சனையாக இருக்கிறது பிரபு 🙂
LikeLiked by 1 person
படம் அழகாக உள்ளது. சித்தப்பா முன்பு போய் எடுத்த படம் போல உள்ளது.
பார்த்த நினைவு வந்தது.
மிக பயனான பதிவு…
மிக்க நன்றி பிரபு..
தொடருவேன்.
LikeLiked by 1 person